Powered by Blogger.

Friday, November 12, 2010

இலங்கையில் சட்டத்தின் நெகிழ்வுத்தன்மை.... தப்பித்துக்கொள்ளும் சிங்களம்


சட்டத்தில் அனைவரும் சமம் என்பது பொதுவான  கோட்பாடு. குற்றங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கையாழும் முறமைகளும் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அது போக சட்டம் இலங்கையில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதே கவலையளிக்கிறது.

சிறிலங்காவில் பெரும்பான்மை சிங்களவர்களை அதிகம் கொண்டதும் பெரும்பான்மை இனத்தவரை ஜனாதிபதியுமாக கொண்ட அரசாங்கம் சிறுபான்மை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ள இனவன்முறைபற்றி யாவரும் அறிந்ததே. இன அழிப்பின் உச்சத்தை சட்டத்தின் நெகிழ்வுத்தன்மையை பாவித்து சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு மேற்கொள்ளும் படுகொலைகளய் கற்பழிப்புகளுக்கு எதிராக சாட்சி சொல்ல வருவதென்பது தற்கொலைக்கு சமனான ஒன்றாகியபோதும் இனத்தின் மேல் உள்ள பற்றால், இனியாருக்கும் இப்படி நடக்க கூடாது என்ற வைராக்கியத்தால் வரும் சாட்சியங்களின் சாட்சிகளை நீதிமன்றங்கள் சரியாக கையாண்டு குற்றவாழிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கிறதா என்பது சந்தேகமே.

சிறிலங்கா அரசால் முள்ளிவாக்காலில் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழின படுகொலைக்கு பிறகு எஞ்சிய மக்களை சிதைகக்கும் நடவடிக்கையில் நாசுக்காக ஈடுபட்டுவருகிறது. குடும்பங்களை அழிப்போம் என்று மிரட்டி தமிழ்பெண்களை கற்பழிப்பது. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை கடத்தி கொலைசெய்வது. அங்கிருக்கும் பெண்களை கற்பழிப்பது என்பது தினம் தினம் வன்னிப்பெரு நிலத்தில் சிங்கள ராணுவத்தால் செய்யப்பட்டுவருகிறது.

இதில் சில சம்பவங்களுக்கு நேரடிச்சாட்சியங்களும் உண்டு. இந்த சாட்சியங்களின் ஊடாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் சரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றனவா என்பதே இப்போதுள்ள கேள்வி.

விசுவமடுவில் தமிழ்பெண்ணை பாலியல்வன்முறைக்குட்படுத்திய ராணுவத்தினர் நான்குபேரும் சாட்சியங்களால் நீதிமன்னத்திற்கு முன்னால் இனம்காணப்பட்டவர்கள். அவர்களை பிணையில் விடுதலை செய்தது என்பது எந்தவகையில் நியாயம்??? குற்றவாழிக்கு பிணை வழங்க முடியும் என்ற சட்டத்தில் சரத்துகள் இருந்தாலும் பிணைவழங்கப்பட்ட ராணுவத்தினர் மீதான வழக்குகள் இனி இழுத்தடிப்பு செய்யப்பட்டு மூடப்பட்டுவிடும் என்பது தான் உண்மை. கற்பழிப்பில் ஈடுபட்ட தமது சகாக்களுக்கு பிணைவழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பபட்டுவிட்டனர் என்ற செய்தி வன்னியில் இருக்கு 2 இலட்சம் ராணுவத்தினருக்கும் உளவியல் ரீதியிலான உந்துதலை கொடுத்திருக்கும்.

மருத்துவமாது தர்ஷிகா படுகொலையுடன் தொடர்பென கருதப்பட்ட முக்கிய குற்றவாளியான சிங்கள வைத்தியர் தொடர்பான விசாரணை அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமை, விசுவமடு கற்பழிப்புடன் தொடர்புடைய ராணுவத்தினர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை, சாவகச்சேரியில் கொலைசெய்யப்பட்ட சிறுவனின் கொலையில் நேரடித்தொடர்புடைய ஈபிடிபி உறுப்பினர் விடுதலை செய்யப்ட்டமை.
 என்பவை தமிழ் மக்கள் மீது சட்டத்தினால் அரசு மேற்கொள்ளும் வன்முறைகளை எடுத்து காட்டுகிறது.

சமூகத்தை நெறிப்படுத்த வேண்டியது சட்டம். இந்த வகையில் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் ஒரு இனம் மீதான அடக்குமுறைகள் மறைமுகமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என்ற ரீதியில் அணுக வேண்டும். வன்முறையை பிரயோகிக்ககும் அரசின் குற்றங்களை சாட்சியங்களினூடாக வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும்.
வழக்கை முடிக்காமல் ராணுவத்தை பிணையில் வெளியில் விட்டதில் இருந்து என்னை இவன்தான் கற்பழித்தான் என்று மானம் சுயகெளவரவம் எதிர்கால நிலை என்பதை கருத்தில் கொள்ளாது நீதிமன்றத்தில் உள்ள நம்பிக்கையால் தன் இனத்தின் மீதுள்ள பற்றால் சாட்சியமாக வந்த பெண்ணிற்கு நீதிமன்று என்ன சொல்ல வருகிறது??

விசாரணையின்றி தமிழர்கள் தடுத்து வைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படும் தமிழர்கள் குறித்து விசாரணைசெய்ய குழு அமைக்கப்பட்டு கலைக்கப்படுவதும்,தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதும், தமிழ் நிலங்கள் பறிக்கபடுவதும்  அநீதி என்று தெரிந்தும் இதுவரை தமிழ் சட்டவாளர்களால் இதுகுறித்து கேள்வியெழுப்பமுடியவில்லை அல்லது புறக்கணிப்புகளை ஏன் செய்யவில்லை என்ற சந்தேகம் என்னில் நிலவுகிறது.. ஆனால் கிளிநொச்சியில் கற்பழிப்பில் ஈடுபட்ட ராணுவத்தையும், மருத்துவமாது தர்ஷிகா கொலை குற்றவாளியையும், சிறுவனை கொன்ற கொலையாளியையும் எப்படி சாதுர்யமாக இந்த தமிழ் சட்டவாளர்கள் தப்ப வைத்தார்களோ அப்போதே ஒன்று வெளிப்படை உண்மை... சட்டத்தின் நெகிழ்வுத்தன்மையினூடாக அரசு மேற்கொள்ளும் வன்முறைகளை செல்வாக்குகளின் அடிப்படையில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

இலங்கையில் நீதிமன்று என்பது சட்ட சோடினை செய்யப்பட்ட வன்முறை ஆயுதமே.

ஆதி

23-20-20

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP