Powered by Blogger.

Thursday, June 26, 2014

ஜெயபாலனின் முகநூல் பதிவிற்கான பதில்

வணக்கம் திரு ஜெயபாலன் அவர்களே

இது பெரிய பதிவு. பொறுமையாக வாசியுங்கள். 

என்னைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதியிருக்கும் முகநூல் குறிப்பு மற்றும் விவாதங்கள் தொடர்பில் தனியாக வகைபிரித்து கையாளுவதே வாசிப்பவர்களுக்கு உங்கள் பற்றியதான தெளிவு வரும் என்று நினைக்கிறேன்.

அதற்கு முதல், இது வரை எனது எந்தப் பதிவுகளும் சிங்கள மக்களையோ இசுலாமியர்களையோ தமிழினத்தின் எதிரியாக எழுதப்பட்டிருக்கவில்லை. தமிழீழத் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழீழ சிங்களவர்கள் மற்றும் இசுலாமியர்கள் பங்கு பற்றுகிறார்கள் என்று கொண்டாடிய மண்ணைச் சேர்நதவன் நான். அது பற்றி நீங்கள் எனக்கு அதிகவகுப்பெடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

தவிர சிங்கள இலக்கிய மற்றும் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு எதிர்க்கோசம் எழுப்பும் சிறுபிள்ளைத்தனமும் இல்லை. படைப்பின் தார்பரியம் மற்றும் நோக்கம் கொண்டே அணுக வேண்டும் என்பது உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு  தெரியாத ஒன்றல்ல.

ஜெயபாலனின் முகநூல் பதிவு

ஆதி ஆதிதியன் அவர்களே எங்கள் மண் எங்கள் பிரச்சினைபற்றி ஒன்றும்தெரியாமல் எங்கள் ஆதரவு என வாழ்க வீழ்க கோசங்கள் போடுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு தெரியாதவற்றை நெடுமாறன் ஐயா போன்ற வ்டயம் தெரிந்த தமிழ் உணர்வாலர்களிடனமோ அல்லது ஈழம்பற்றிய அறிவுத் தேடல் உள்ள ஈழ ஆதரவு கல்லூரி மாணவர் இயக்க தலைவர்களிடம் இருந்தோ கற்றுக் கொள்ளுங்கள்.
இனியாவது களத்தில் இருக்கும் மக்களிடமிருந்து எங்கள் பிரச்சினைகளை அறிய முயற்ச்சி எடுங்கள். உங்கள் ஆதரவு எங்கள் மக்களுக்குத் தேவை. அதற்க்காக தமிழகத்தில் வைத்து எங்களை மிரட்ட முடியும் அதிகாரம் செய்ய முடியும் என கனவு கானாதீங்க. தமிழக மக்கள் ஈழத்து மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
என்னைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும். Please red atleast my interviews on military geography. of Eelam and South Asia. (<a>http://webcache.googleusercontent.com/search?q=cache%3Ahttp%3A%2F%2Fwww.thoguppukal.in%2F2011%2F02%2Fblog-post_9936.html</a>) (<a>https://groups.google.com/forum/#!msg/mintamil/SHJTipUQwnk/6XhzEIwp_2EJ</a>)

1996ல் விடுதலை அமைப்பு கேட்டுக்கொண்டதன் பெயரில் இராணுவபுவியியல் உட்பட பல பிரச்சினைகளில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்தவன் நான். இந்த பின்னணியால்தான் என்னை இலங்கையில் கைது செய்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் நோர்வே இலங்கை முஸ்லிம் தலைவர்களின் உடனடித் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் உலக தமிழக ஊடகங்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள். என்னைபற்றி 2006 தீராநதி பேட்டியையாவது வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்னர் நான் எழுதிய தோற்றுப்போனவர்களின் பாடல் கவிதையையாவது வாசியுங்க (<a>http://www.yarl.com/forum3/index.php?showtopic=66130</a>)

விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில் களத்தில் வாழும் மக்கள் நலனே எனது நிலைபாடாக இருந்தது. புலிகளும் என் ஆதரவையும் விமர்சனங்களையும் அங்க்கீகரித்தார்கள். இயக்குனர் பிரசன்ன விதானகேயுக்கு வன்னியில் நல்ல மதிப்பிருந்தது. இதனை பலரும் அறிவார்கள். நானும் அறிவேன். எங்கள் எதிரிகளை விட்டு விட்டு நண்பர்களையே எதிர்ப்பதில் ஏன் குறியாக இருக்கிறீங்க? . ஈழத்தின் பெயரைச் சொல்லி தமிழகத்தில் வன்னியின் நண்பர்களை மிரட்டும் அதிகாரத்தை யார் உங்களுக்குத் தந்தார்கள்?
கல்லூரி மானவர்களது போராட்டங்கள் பல்வேறு தமிழ் உணர்வாலர்களின் போராட்டங்கள் எங்களுக்கு நிறைய பலத்தை தருகிறது. அவர்களிடமிருந்தாவது கற்றுக்கொள்ளுங்கள். - ஜெயபாலன் 26-06-2014
(இதை அழிக்கவோ ஏதும் மாற்றமோ செய்ய மாட்டார் என நம்புகிறேன்)

இனி விடையத்திற்கு வருகிறேன்.

1) சிங்கள இராணுவத்தால் பாதிக்கபட்ட தமிழ்ப் பெண்கள் உச்சக்கட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்ய வேண்டும் அல்லது அதை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் நுட்பமாக எடுக்கபட்டிருக்கும் இன அழிப்புக் கருவியான "With you Without You" வை நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம்

 2) விடுதலைப்புலிகளின் இராணுவ புவியல் தொடர்பில் ஆராய்ச்சி செய்த உங்களின் "இன்றைய" பின்னணி


"With you Without You" சொல்லவருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

சிங்கள இராணுவத்தால் பாதிக்கபட்ட தமிழீழ பெண் ஏன் சாகவேண்டும்?

தன் இனத்தை தன் குடும்பத்தை அழித்த சிங்கள இராணுவனை அந்தப் பெண் கொன்றாள் என அந்த படத்தை எடுத்திருக்கலாமே. அழித்து மிஞ்சியவர்கள் மன அழுத்தத்தில் சாக வேண்டும் என திரைப்படம் மூலம் சொல்லுவது இன அழிப்பின் கருவி இல்லையா?

இந்த இன அழிப்பு நுட்ப அரசியல் உங்களைப்போன்ற மேதாவிகளுக்கு விளங்கவில்லையா?

பெண்ணியம் ஆணாதிக்கம் பேசும் உங்களுக்கு இந்த படத்தில் இருக்கும் நட்பமான அடக்குமுறை புரியவில்லையா என்ன. அது லீனாமணிமேகலைக்கு தெரியாதா என்ன?

2009 இன அழிப்பிற்கு பிறகு போரால் பாதிக்கபட்ட பெண்கள் குறித்தான எந்வொரு உளவியல் ஆய்வுகளையும் சிறிலங்கா அரசோ வெளிநாடுகளோ ஏன் தமிழர் அமைப்புகளோ செய்யாத நிலையில், போரால் பாதிக்கபட்ட பெண் தற்கொலை செய்வதாக காட்டும் சினிமா எவ்வளவு பெரிய நுட்பமான இன அழிப்பு பாத்திரம் என புரியவில்லையா உங்களுக்கு

சிங்கள இராணுவத்தால் பாதிக்கபட்ட ஒரு தமிழ்ப் பெண் இராணுவ வன்முறைகளின் தாக்கத்தின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்கிறாள் என்ற செய்தியை எப்படியான மனநிலையில் ஆதரிக்கிறீர்கள்? திரைப்படம் ஒரு "கலை" என்று கன்றாவித்தனமாக பதில் சொல்லாமல் நேரடியாக பதில் சொல்லுங்கள். போரால் பாதிக்கபட்ட தமிழ்ப் பெண் அந்தத் தாக்கத்தால் என்றாவது ஒரு நாள் தற்கொலை செய்வாள் என்று சிங்கள திரைப்படம் சொல்லும் செய்தியை நீங்கள் ஆதரிப்பதன் நோக்கம் என்ன?

2009 இன அழிப்பு போருக்கு பிறகு செய்திகளிலோ காவல் நிலைய பதிவேடுகளிலோ வராமல் எமது எத்தனை பெண்கள் தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டார்கள் என்ற கணக்கு உங்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை.

முகாமில் இராணுவ பாலியல் சித்திரவதைகள். மீளக் குடியமர்த்தபட்ட பின்னர் ஆண் துணையின்றி வாழும் பெண்களுக்கு பல வகையாலும் பாலியல் கொடுமைகள் என வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரத்தை எனது நிலம் தாங்கிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

பாடசாலைப் பெண்கள் இராணுவ காவலரன்களை ஒவ்வொரு தடவை கடந்து போகும் பொழும் கண்களாலும் வார்த்தைகளாலும் எப்படியெல்லாம் மானமங்கப்படுத்தப்படுகிறாள் என்பது உங்களைப் போன்றவர்களுக்கு விளங்கப்போவதில்லை.
போரால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் உளவியலை எதிர்கொள்ள முடியாது தற்கொலை செய்வார்கள் என்று சொல்லும் படத்திற்கு ஆதரவாக ஜெபாலனை கொம்புசீவி அனுப்பும் லீனாமணிமேகலை


விடுதலைப்புலிகளின் இராணுவபுவியியல் தகவல்களை யாரிம் கொடுத்தீர்கள்?

உயிரைப் பணயம் வைத்து நீங்கள் மாத்திரமல்ல கருணா உள்ளிட்ட பலர் வேலை செய்திருக்கிறார்கள். "இன்று" என்ன செய்கிறீர்கள் என்பதுதான் கேள்வி.

விடுதலைப்புலிகளின் இராணுவ புவியியல் சம்மந்தமான வேலை செய்த நீங்கள் அதன் தகவல்களை கைமாறியிருக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உறுதி. 2006 மற்றும் 2007 காலப் பகுதியில் நீங்கள் இந்தியாவில் றோ அதிகாரிகளை சந்தித்ததாக உங்கள் சகாக்களிடம் சொல்லியிருக்கிறீர்களே.

விடுதலைப்புலிகளின் இராணுவ புவியியல் கட்டமைப்பில் வேலை செய்ததாக பகிரங்கமாக சொல்லிய பின்னரும் சிறிலங்காவில் உங்களை எந்த விசாரணையுமின்றி வெளிவருவதற்கு அனுமதியளித்தார்கள் என்பதன் அர்த்தம் என்ன?

கடைசிநேரம் லைனுக்கு சாப்பாடு குடுத்தவனையே பிடிச்சு வருடக்கணக்கில் புனர்வாழ்வு என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் பொழுது உங்களை அதுவும் "இராணுவ புவியியலில்" வேலை செய்தவரை எப்படி எந்த சலனமும் இன்றி நடமாட விட்டார்கள்?

உங்கள் நண்பர் மற்றும் சிறிலங்கா அமைச்சாரக இருக்கும் ரஃப் ஹக்கீம் இந்த "இராணுவ புவியியல்" குறித்து எதுவும் வினவவில்லையா?

 விடுதலைப்புலிகளின் இராணுவ புவியயல் குறித்து நீங்கள் வைத்திருந்த தகவல்களை கட்டாயம் கைமாறியிருப்பீர்கள் என்பது வெளிப்படை உண்மை.

ஜெயபாலன் குறித்து அருள் எழிலன் அவிழ்த்திருக்கும் மிக முக்கியமான கருத்து


அருள் எழிலனின் கருத்துக்கு நாசுக்காக மழுப்பலுடன் வெளியேறும் ஜெயபாலன்


லீனாவின் ஆதரவு நிலைப்பாடு

லீனா மணிமேகலை தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் தமிழீழ மக்களின் நீதி வேண்டிய போராட்டங்கள் மற்றும் அணுகு முறைகளுக்கு எதிராகவும் மிக நுட்பமாக செயற்பட்டுவருகிறார்.

இன அழிப்பு போரில் தமிழ் மக்கள் எப்படி திட்டமிடப்பட்டு அழிக்கபட்டார்கள் என்று சனல்4 ஊடகம் ஆவணப்படம் தயாரித்து அய்.நாவில் வெளியிட அதற்கு போட்டியாக "இலங்கையில் தமிழர்கள் மட்டமல்ல எல்லோருமே கொல்லபட்டார்கள். நடந்தது தமிழர்களுக்கு மட்டும் எதிரான யுத்தமல்ல" என்று காட்டுவதற்கு அவசர அவசரமாக "வைட் வான்" என்ற ஆவணத்தை தயாரித்து நாசுக்காக அதை சனல்4 வரை கொண்டு போனார். இருந்தாலும் அதன் தாக்கத்தை தமிழீழ விடுதலை ஆர்வலர்கள் தடுத்திருக்கிறார்கள்.

குறிப்பு: ஈழத்தில் படமாக்கப்பட்டதாக லீனா சொல்லியிருப்பதன் பின்னணியில் அதில் பாவிக்கபட்ட சீருடைகள், ஆயுதங்கள் உட்பட பல விடையங்கள் அதன் பின்னணியையும் நோக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

நிலைப்பாடு

தமிழீழ விடுதலைப்போராட்டம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்தான ஆதரவு மற்றும் விமர்சனங்கள் கடந்த 2009 இற்கு பிறகு நிறையவே பல தரப்பிலிருந்து வெளிபட்டாகிவிட்டது.

வன்னியின் நண்பர்கள் வன்னியின் பெண்கள் தற்கொலை செய்ய வேண்டும் என்றோ தற்கொலை செய்வார்கள் என்றோ படம் எடுக்கப்போவதில்லை.

தமிழ் மக்களின் விடுதலையில் ஆத்ம ரீதியாக ஆதரவுடைய ஏராளமான சிங்கள நண்பர்கள் வன்னிக்கு இருக்கிறார்கள். இனம் அழியும் என்று சொல்லும் வியாபார புருசர்கள் உங்களுக்கு மட்டுமான நண்பர்களே தவிர இந்த புழுதியில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் சனங்களின் நண்பர்கள் அல்ல என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


உங்கள் போன்றவர்களை வாசிப்பதே போதுமான பாடம். இதில் புதிதாக யாரிடமும் கற்கவேண்டிய அவசியமில்லை.

ஆதி
26-06-2014



Friday, June 20, 2014

தமிழினமாக ஒன்றுதிரண்டுபார். அறிவு பணம் பலம் எல்லாமே எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது.

ஈழத்து தமிழ் இசுலாமியர்களே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களின் தேவை சிங்களத்திற்கு மடிந்துவிட்டது. தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை நியாயப்படுத்தி சிங்கள அரசுக்கு எதிராக அரபுநாடுகளின் வாக்கை பெற்றதோடு சிங்கள அரசின் தேவையும் முடிந்துவிட்டது.

வடக்கில் இருந்து புலிகள் வெளியேற்றினார்கள் என்ற ஒன்றைத்தான் இதுவரை முசுலீம் அரசியல்வாதிகள் வெறியாக அப்பாவி தமிழ் இசுலாமியர்களுக்கு ஊட்டி வந்தார்கள்.

வடக்கில் இருந்து வெளியேற்றியது தவறு என்பதற்காக அதற்கு எல்லா இசுலாமியர்களிடமும் புலிகள் அமைப்பு மன்னிப்புக் கோரியிருந்தது.

தவிர
1) விடுதலைப்புலிகள் அமைப்பில் தமிழ் இசுலாமியர்கள் இராணுவமாக இருந்திருக்கிறார்கள். வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள்.

2) விடுதலைப்புலிகள் இசுலாமியர்களின் கல்வியை அழிக்கும் இந்த இழி வேலையையும் செய்யவில்லை. இசுலாமிய மார்க்கத்தை அழிக்கும் எந்த இழிவேலையையும் செய்யவில்லை.

3)விடுதலைப்புலிகள் இசுலாமியர்களின் வர்த்தக நிலையங்களை அழிக்கும் இழி வேலைகளை செய்யவில்லை.


அது போக; காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலை தொடர்பில் இதுவரை புலிகள் மீது குற்ம்சாட்டப்பட்டு வந்தாலும் அந்த காலப்பகுதியில் அங்கு தளபதியாக இருந்த கருணாவை விசாரிக்கும் படி இசுலாமிய அமைச்சர்கள் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. இசுலாமிய அமைப்புகள் கோரிக்கை வைக்கவில்லை காரணம் என்ன!!!!

பிரித்தாழும் நுட்பத்தை சிங்கள முசுலீம் அரசியல் தலமைகள் திட்டமிட்டே செய்கின்றன. காத்தான்குடிக்கு கருணாவை விசாரித்தால் சத்திருக்கொண்டானுக்கு ஹிஸ்புல்லாவை விசாரிக்க வேண்டி வரும் என்று சிங்கள முசுலீம் தலமைகள் அஞ்சுகின்றன.

எல்லா அச்சமும் அரசியல் தலமைகளுக்கு தான். அப்பாவி தமிழ் இசுலாமிகள் தங்களை உணர வேண்டும். தமிழ் இசுலாமிகளின் பிரச்சினையை தமிழினம் இனப்பிரச்சினையாக கையாழும் என்ற நம்பிக்கை வரவேண்டும். தமிழின பிரச்சினையாக கையாள வேண்டும் என்று தமிழ் இசுலாமிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழினமாக ஒன்றுதிரண்டுபார். அறிவு பணம் பலம் எல்லாமே எங்களிடம் மட்டும்தான் இருக்கிறது. பள்ளிவாயல்களும் கோவில்களும் தேவாலையங்களும் தமிழீழப் பரப்பெங்கும் தமிழினமான போதனை செய்யும்.

தமிழ் இசுலாமிகளின் பிரச்சினையை தமிழின பிரச்சினையாக மாற்றுங்கள். முசுலீம் அரசியல்வாதிகளின் அரசியல் நாடகங்களை நம்பாதீர்கள்.

ஆதி
21-06-2014

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம்

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம்

ஈராக்கில சுன்னி முசுலீம் சீய்யா முசுலீம் என்று ஆளையாள் இறைச்சியடிச்சு சாப்புடுறாங்கள் இந்த கோவணத்தில சிறிலங்காவில் முசுலீமுகள் தாக்கபட்டால் உலகத்தில் உள்ள 178 கோடி முசுலீமுகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமாம் என்று தமிழ்நாட்டில் ஒருவர் கொக்கரிக்க எல்லோரும் அல்வாவு அக்குபர் என்று சத்தமிடுகிறார்கள்.

டேய் பரதேசி பயலுகளே. முசுலீம் முசுலீம் என்று வெறிபிடித்து அலையிறதால தானடா உங்கள எல்லாரும் ஒதுக்கிறானுகள்.

இந்தியாவில் மசூதியை இடிச்சுப் போட்டங்கள் என்பதற்காக உங்களுக்கு இசுலாமிய அரபு நாடுகள் அகதி அந்தஸ்து தரப்போவதில்லை. அல்லாவை தொழும் முசுலீம் தானே என்று அரபு நாட்டிற்கு செல்லும் இந்திய இலங்கை முசுலீமுகளை அரேபிகள் பாவம் பார்ப்பதில்லை.

குற்றச்சாட்டுகளில் சிக்குண்டு இந்திய சிறிலங்கா இசுலாமிகளை முசுலீம்தானே என்று அவர்கள் விடுதலை செய்வதில்லை. அவர்களை விடுதலை செய்யும் படி முசுலீம் அமைப்புகள் அரபு அரசுகளிடம் பேசுவதும் இல்லை.

இந்த கோவணத்தில் என்ன மயிருக்கடா முசுலீம் முசுலீம் என்று தொண்டைத்தண்ணி வற்றுமளவிற்கு கத்தி அல்லாவையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள்?

தமிழ்பேசும் இசுலாமியனுக்கு பிரச்சினை வந்தால் அதை தமிழினம் தேசிய பிரச்சினையாக கையாளும் என்ற நம்பிக்கைக்கு வாருங்கள்.

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம். இன்று இசுலாமியனாக இருந்து இந்துவாகவோ இந்துவாக இருந்து இசுலாமியனாகவோ மாறலாம் ஆனால் தமிழனாக இருந்து உன்னால் அரேபியாக மாற முடியாது என்ற உண்மையை ஞாபகம் வைத்திருங்கள்.

ஆதி
20-06-2014

Thursday, June 12, 2014

பிராந்திய அரசியலை தவறவிடுகிறோமா!!

தமிழீழ விடுதலைப்போராட்டமானது என்றுமில்லாத அளவிற்கு முற்று முழுதான இராஜதந்திர வலைப்பின்னலுக்குள் சிக்குண்டுகிடக்கிறது.

தமிழீழ மக்களின் அரசியலானது இரண்டு எதிர்மறையான தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
1) ஈழத்து அரசியல் - ஆசிய அரசியல் தளம்
2) புலம்பெயர் தமிழர் அரசியல் - மேற்கத்தைய அரசியல் தளம்

இந்த இரண்டு தளங்களிலும் தத்தமது பிராந்திய ஆதிக்க சக்திகளாக வல்லரசுகள் காணப்படுகின்றன.

ஆசிய அரசியல் தளத்தில் மாற்றத்தினை மேற்கத்தைய அரசியல் பின்புலங்களால் ஏற்படுத்தமுடியுமா என்பது சட்ட ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் ஆரயப்பட வேண்டிய முக்கியமான கருப்பொருள்.

2009 இனப்படுகொலையோடு தமிழீழ போராட்டத்தை பேரினவாத சிங்கள அரசும் வல்லாதிக்கங்களும் தமிழீழத்தில் இல்லாது செய்து 5 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழீழ விடுதலை சக்திகள் எவ்வகையான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய விடையம்.

விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தை மண்ணில் நடாத்திக்கொண்டிருந்தாலும் பிராந்திய அரசியல் மாற்றங்களை மிக அவதானமாக அவதானித்து ஆய்வுகளை மேற்கொண்டுவந்திருந்தமை தமிழீழ தேசியத்தலைவர் மற்றும் தளபதிகள் பொறுப்பாளர்களின் உரைகளில் இருந்து அவதானித்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள் மண்ணில் செயற்பாட்டுத் தளத்தில் இருந்த வேளையில் தமிழீழ விடுதலைக்கனா பிராந்திய ராஜதந்திரப் பலத்தை வல்லரசுகள் பல கோணங்களில் முடக்கியிருந்தாலும் மேற்கத்தைய அரசியல் தளத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட பலர் வலுவான ராஜதந்திர தொடர்புகளை வைத்திருந்தனர் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்று.


தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்குலக நாடுகளை இலக்கு வைத்தே நகர்ந்திருக்கிறார்கள். அகதி அந்தஸ்தை வழங்க கூடிய நாடுகள் மேற்குலகில் இருப்பது மற்றும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள் அதிகம் மேற்குலகில் காணப்படுவதே அதற்கான காரணம். இதனையொற்றியே புலம்பெயர் தமிழர் அரசியல் கட்டுமானங்கள் விரிபுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த சக்தி ஆசிய தளத்தில் எவ்வகையான தாக்கங்களை அல்லது ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் என்பது கேள்விக்குறியே.

ராஜதந்திரம் என்பது வெறுமனே எமக்கு என்ன தேவை என்று சொல்வதன்று. எமக்கு தேவையானதை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆராய வேண்டும், அதற்காக நாங்கள் இழக்க வேண்டிவருவதை ஆராய வேண்டும், அதற்காக நாங்கள் அடைமானம் வைக்க வேண்டியதை ஆராய வேண்டும். கடந்த 5 வருடங்களில் தமிழர் தரப்பில் இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளபட்டதா என்பது சந்தேகமே.

பிராந்தியத்தை பொறுத்தவரையில் தமிழீழ நிலப்பரப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நீட்சியானது மட்டுப்படத்தப்பட்ட ஒன்று. தமது அபிலாசைகளை மக்கள் தேர்தலோடு மட்டுப்படுத்தவேண்டிய அடக்கு முறைக்குள் இருக்கிறார்கள். அடுத்த சக்தியாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தங்களால் முடிந்த அளவு ஏன் உச்சக்கட்டமான போராட்டங்களை தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஆனால் இது தமிழீழ போராட்டத்தில் ராஜதந்திர ரீதியில் எமது இலக்கை நோக்கி எந்த அளவு தூரம் நகர்த்தியிருக்கிறது என்பதை தமிழீழ மக்கள் ஆய்வு செய்யவேண்டியது கட்டாயம்.

பிராந்திய வல்லரசுகள் ஏதாவது ஒன்றுடனாவது எமது நிலைப்பாட்டை, எமது விடுதலையின் தேவையை, புதிய நாடு உருவாகுவதில் உள்ள தாக்கங்கள் புதிதாக நாடு உருவாவதில் இருக்க கூடிய நன்மைகள் குறித்து பேசியிருக்கிறோமா!! என்பது குறித்து அக்கறை செலுத்துவது தமிழீழ விடுதலைப்போராட்ட அரசியல் தளத்தை விரிவுபடுத்தும் என்பதோடு நாம் எங்கே நிக்கிறோம் என்று எம்மை நாமே அளவீடு செய்யவும் உதவும்.

ஆசிய அரசியல் தளம் என்பது அரேபிய அரசியல் தளம் போல் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆதி
12-06-2014

























Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP