Powered by Blogger.

Friday, December 3, 2010

வன்னியில் மக்கள் போராட்டங்களை அடக்க வருகிறார் மேர்வின் சில்வா



சிறிலங்கா அரசு அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் அத்தனை வழிகளையும் அடைத்து வருவதோடு காட்டுமிராண்டித்தனமாக வெளிப்படையாகவே நடந்து வருகிறது. பல்கலைக்களக மாணவர்களை மிக மோசமான அராஜக போக்கை கடைப்பிடித்த சிறிலங்கா அரசு மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமின்றி குண்டர்களை வைத்தும் தாக்கியது. களனி பல்கலை கழகத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு போராட்டம் அடக்கப்பட்டதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா அவர்கள் பொறுப்பேற்றது அனைவரும் அறிந்த விடையம். அதே போல் றுகுணு பல்கலை கழகத்தில் பொலிசாரால் துன்புறுத்தப்ட்டு மாணவன் ஓருவர் கொல்லப்பட்டதும் 3 மாணவிகள் பொலிசாரால் அங்க சேட்டைக்கு உள்ளாக்கபட்டதும் அனைவரும் அறிந்த விடையம். இதே போன்றதான அடக்குமுறையை சிறிலங்கா அரசு தமிழர் தாயகப்பிரதேசங்களிலும் மேற் கொள்வதற்கு திட்டமிட்டுவருகிறது.


உரிமைகளை கேட்டு தமிழர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடாத்தும் பட்சத்தில் அது உலக அரங்கில் மிகப்பெரிய சிக்கலுக்குள் தன்னை மாட்டிவிடும் என்பதை சிறிலங்கா அரசு தெளிவாக அறியும். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதேச செயலாளர் மாற்றத்திற்கு எதிராக மக்கள் திரண்டு கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் நடாத்தியிருந்தனர். அதை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தியிருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறிலங்கா இராணுவம் உலக அரங்கில் படுமோசமான ஒன்று என்பது தெளிவாகியுள்ள நிலையில் திரும்பவும் மக்களை அடக்குவதற்கு ராணுவத்தை பயன்படுத்துவதென்பது இலங்கை அரசை அரசியல் தனிமைப்படுத்தல் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அதனால்  இப்படிப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு குண்டர்களை பயன்படுத்த சிறிலங்கா அரசு முடிவெடுத்துள்ளதான அறிகிறேன். அந்த வகையில் வன்னி பிராந்தியத்திற்கு குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லை தீவு பிரதேசங்களுக்கான ஒருங்கமைப்பாளர்களை தெரிவு செய்வதற்காக அவர் ஆட்களை நியமித்து சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்ததாக அறிகிறேன்.
பிரதேசவாரியாக பிரபலமான ஒருவரையே ஒருங்கிணைப்பாளராக தெரிவு செய்யும் படி பணித்ததாகவும் அறிகிறேன். இந்த வகையில் சாதாரணமாக அனைவருக்கும் எழும் கேள்விதான் எனக்கும் எழுகிறது...
1)அபிவிருத்தி அமைச்சுடனோ கலாச்சாரா அமைச்சுடனோ அல்லது விளையாட்டு அமைச்சுடனோ சம்மந்தப்படாத மேர்வின் சில்வாவிற்கு வன்னியில் ஒருங்கிணைப்பாளர் எதற்கு.
2)மங்கள சமரவீர தமிழ் மக்களின் பிரதேசங்களில் செய்யப்படும் பெளத்த திணிப்பை விமர்சித்தபோது மேர்வின் சில்லா "மங்கள பிற்ந்த போது தெல்தெனியா பகுதியில் இருந்து பிள்ளை பெற வந்த தமிழ் பெண்ணிடம் பால்குடித்திருக்கிறார் போல" என்று தமிழ் தாய்களையும் தமிழ் பாலையும் கேவலமாக விமர்சித்த மேர்வின் சில்வாவிற்கு வன்னியில் ஓருங்கிணைப்பாளர் எதற்கு.


இவற்றிற்கு சாதாரணமான இலகு பதிகள்களே காணப்படுகின்றன.
1)தமிழ் பெண்களையும் தமிழ் கலாச்சாராத்தையும் கேவலப்படுத்துதல் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளை ஊக்குவிக்க சலுகைகளை வழங்குதல்.
2)தனது செயற்பாடுகளை விமர்சித்தாலோ அல்லது எதிர்தாலோ குண்டர்களை கொண்டு தாக்குதல். நாட்டுக்கு விரோதமாக செய்பட நினைத்தால் மக்கள் இப்படிதான் செய்வார்கள் என வெளிப்படையாக அச்சுறுத்தல்.
3)தமிழர்கள் இரண்டாம் தரப்பு பிரஜைகள் அவர்கள் உரிமை பற்றி பேமுடியாது என்ற சிங்கள சித்தாந்தத்தை தமிழீழபிரதேசத்தில் அரசியல் முறையில் (இராணுவ முறையன்று) நடைமுறைப்படுத்தல்.
4)அடாவடிதனங்கள் மூலம் நிலங்களை பறித்தல்.
போன்ற செற்பாடுகளுக்கே இன்று சிறிலங்கா அரசால் வன்னிப்பகுதிக்கு மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


இதனால் மக்கள் மேர்வின் சில்வாவின் ஒழுங்கமைபாளர்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும். உரிமை என்பது எமது உயிரிலும் மேலானது.


ஆதி
4-12-2010

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP