அன்புக்குரிய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களே
எனது கட்டுரை இந்த கட்டுரைக்கு மின்னஞ்சல்களில் வந்த பல எதிர்வினைகளுக்கு நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
எனது இந்த கட்டுரையில் வடலி பதிப்பகத்தை கடுமையாக விமர்சித்திருப்பதாகவே பெரும்பாலான குற்றச்சாட்டுக்களும் ஏனைய சில இலங்கையில் நடாத்துவதை நியயப்படுத்துவதாகவும் இருந்தன. பொதுப்படையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கட்டுரையின் கருத்தூட்டல் பகுதியில் இடுவது வெளிப்படையானதாக இருக்கும்.தவிர தனிப்பட்ட ரீதியில் கூறப்படும் விமர்கனைங்களின் சாரம்சத்தை வைத்தே நான் பொதுப்படையாக பேச முடியும். அதுபோக என் கட்டுரை பற்றிய விமர்சனம் முன்வைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றிகள்.
குற்றச்சாட்டு
1) இலங்கைத் தமிழரின் மீள் எழுச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். அதை எதிர்பது நியாயமற்றது.
பதில்
என் கட்டுரையில் தெளிவாகவே விளக்கியுள்ளேன். அதாவது எழுத்தாளர் மற்றும் தனிமனித உரிமைகள் அதுவும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிக்கப்படாத பறிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் சிறுபான்மை எழுத்தாளர்கள் மாநாடு செய்யுமளவிற்கு உரிமை உள்ளது என்று அரசாங்கம் செய்யப்போகும் பொய்பிரச்சாரத்திற்கு இந்த மாநாடு உதவப்போகிறது. அதுபோக இந்த மாநாட்டிற்கான இணைப்பாளர் அவர்கள் மாநாட்டில் பேசப்படக்கூடிய அரசியல் பற்றி நிலையற்ற தன்மையிலையே காணப்படுகிறார். தமிழர் உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றி எந்த அளவிற்கு பேசுவதற்கு உரிமையும் எதிர்கால உத்தரவாதமும் உள்ளது என்பது தான் பிரச்சினை.
ஆக தமிழர் உரிமைகள் பற்றி அவா கொண்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர்களுக்கு மாநாடு நடத்துவதற்கான ஏதுவான இடம் சிறிலங்கா அல்ல. அது வெறும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவான பிரச்சார மாநாடாகவே அமையப்போகிறது.
2)வடலி வெளியீடுகளை அவதூறு செய்தது
பதில்
வடலி வெளியீடுகளை அவதூறு செய்யவில்லை. அவர்களது கொள்கைளை மட்டுமே சொல்லியிருந்தேன். அதாவது வடலி வெளியீடுகள் ஏறத்தாள முழுமையானவை புலி எதிர்பு பற்றியதாகவே இருக்கின்றது என்பது வெளிப்படை உண்மை. இங்கு புலி எதிர்பு என்பதில் பல சேதி உள்ளடங்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமித்து அதுவும் ஒரு தலமையின் கீழான விடுதலைப்புலிகள் அமைப்பாக மாற்றம் பெறும் காலப்பகுதியிலிருந்தும் சரி அதற்கு முந்தைய காலப்பகுதியிருந்தும் சரி சிறிலங்கா அரசோடு இணைந்திருந்த மற்றும் இணைந்திருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளோ, அரசியலாளர்களோ இது வரை தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசியிருக்கிறார்களா???
அல்லது விடுதலைப்புலிகளை சிறிலங்கா அரசு அழித்து விட்டதாக அறிவித்து ஒன்றரை வருடங்களாகி விட்டது. விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாத நிலையில் கூட இந்த அரசியல் வாதிகளால் தமிழர் உரிமைகள் பற்றி பேச முடிகிறதா அல்லது உரிமை மறுப்புகளை தட்டிக் கேட்க முடிகிறதா??? இல்லை.
இந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தில் காணப்படும் புலிகள் பற்றிய அரசியல் நம்பிக்கையை தகர்த்துவிட்டால், தமிழ் மக்கள் உரிமைகள் பற்றி சிந்திக்கவோ அல்லது அது பற்றி கேள்வியெழுப்ப மாட்டார்கள் என்பது சிறிலங்கா அரசுக்கு தெரியும்.
சிறிலங்கா அரசு பற்றிய எதிர்பு தமிழ் மக்களிடம் இருந்து வந்தாலும், அதே இடத்தில் இருந்து புலி எதிர்பு பிரச்சாரம் நடைபெற்று.... தமிழ் மக்களின் சிந்தனைகள் உரிமை பற்றியதில் இருந்து மாற வேண்டும் என்பதில் சிறிலங்கா அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. அதற்கு ஏற்றாற் போல் வடலி எழுத்தாளர்கள் தமது செவ்வனே செய்கிறார்கள். அதாவது அவர்கள் தமது புலி எதிர்ப்பு அரசியலை செய்கிறார்கள்.
இதை வெளிப்படையாக சொல்வது அவதூறா??
தமிழர் உரிமைகளை பேசமுடியாத அரசு சார் தமிழ் அரசியல் இருப்பதை விட பல தியாகங்களையும் குட்டி தமிழ் அரசையும் செய்து காட்டிய புலி அரசியலை மக்கள் விரும்புவது தவிர்க்கப்பட முடியாதது.
அதுபோக இன்னமும் என் கருத்துகள் அவதூறாக பட்டால் வடலி பதிப்பக்தாருக்கும் மற்றும் வடலி எழுத்தாளர்களுக்கும் என் வருத்தங்களை தெரிவி்த்து கொள்கிறேன்.
ஆதி
12-10-10
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment