நான் ஏற்கனவே தேசவழமை சட்டதினால் உள்ள சிங்கள நிலப்பறிப்புக்களிற்கு உள்ள சிக்கல்களையும் அதனால் சிறிலங்கா அரசு தேசவழம சட்டத்தை இல்லாது செய்ய நடவடிக்கை செய்யும் என்ற குற்றச்சாட்டையும் ஊகித்து இங்கு எழுதியிருந்தேன். அதேபோல் சிறிலங்கா அரசின் சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் தெரிவித்த
1948 ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். அதன்பின்னர் தேசவழமைச் சட்டம் காரணமாக தழிழரும் சிங்களவரும் இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
என்ற கருத்தானது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்திள்ளது. தேசவழமைச்சட்டத்தை இல்லாது செய்வதினூடு தமிழர் பிரதேசங்களை சிங்களவர்கள் வாங்குவது சட்டபூர்வமாக்கப்படுவதோடு நிலப்பறிப்பறிப்பு நிகழ்த்துவதும் அங்கிகரிக்கப்பட்டுவிடும்.
ஆக்கிரமிப்புகளினூடு செய்யப்படும் அனைத்து அத்துமீறல்களுக்கும் தெசவழமைச்சட்டம் இல்லாது செய்யப்படின் சட்டத்தின்பால் அங்கிகாரம் செய்யபடுவது தவிர்க்கப்படமுடியாததே. அதிகார அத்துமீறல்கள் செய்யும் சிறிலங்கா அரசுக்கு மிரட்டி நிலத்தை சட்டபூர்வமாக வாங்கி சிங்கள உள்வாங்கலை மேற்கொள்வது மிக இலகுவானதே.
பாராளுமன்ற பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் என்ற ரீதியில் சிறுபான்மையினரின் தனித்துவங்களை குற்றம் சாட்டி சிதைத்து கொள்ள முனையும். இது குறித்த நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் கட்சிகள் சுயனநலமற்று மேற்கொள்ளுமா என்பது சந்தேகத்திற்குரியதே.
ஆனால் தமிழர்கள் கொண்டுள்ள சில சட்ட நிலமைகளை சிதைப்பதனூடு அல்லது இல்லாது செய்வதனூடு தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் மற்றும் அத்துமிறிய குடியேற்றங்களை சட்டத்திற்கு உட்பட்டவை போல் சர்வதேசத்திற்கு காட்ட சிறிலங்கா அரசு முயலும் என்பது வெளிப்படை உண்மை.
இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமையில் தமிழ்கட்சிகள் உள்ளர். மக்கள் மீது திணிக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக வாக்களித்த மக்களை திரட்டவேண்டிய கடமையில் அந்தந்த தமிழ் கட்சிகள் உள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் யாழ்ப்பாணத்துத் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்
என்று சிறிலங்கா அரசின் சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது தெரிவித்தமையானது தமிழர்கள், தமிழ் பெண்கள், மற்றும் தமிழ்ர் கலாச்சாரம் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே புரிந்து கொள்ள முடியும்.
ஆதி
24-10-10
No comments:
Post a Comment