விடுதலைப்போராட்டங்களும் அதன் வழிமுறைகளும் பலதடவைகள் புரியாது போயுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் பெரும் இனப் படுகொலையும் அதன் பின் நடைபெறும் இனச் சிதைப்பும் இன்னமும் மர்மமாக்கப்பட்டுள்ளமையானது தமிழ் அரசியல் வாதிகளின் இயலாத்தன்மையும் பெரிய எழுத்தாளர்களுக்கு பணத்தின் மேல் உள்ள மோகமும் இன்றி வேறு எதுவாயும் இருக்கமுடியாது.
இங்கு முதலில் தமிழ் அரசியல்வாதிகளின் பிழைப்பரசியல் என்பது விபச்சாரத்திற்கு ஒப்பானது என்பதே வெளிப்படை உண்மை. அரசோடு சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல் தலமைகள் விடுதலைப்புலிகள் களத்தில் இருந்த காலத்தில் தாம் மக்களுக்காக போராடுவதாகவும் ஆனால் விடுதலைப்புலிகள் தமக்கு இடமளிக்கிறார்கள் இல்லை எனவும் அனுதாப அரசியல் நடத்தியது மட்டுமல்லாது தமிழினத்தின் உரிமைகளையும் அடகுவைத்தனர். இதன் மூலம் இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததென்ன??? இன்று விடுதலைப்புலிகளும் இல்லை புலிகளின் ஆயுதங்களும் இல்லையென்ற நிலையில் இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்லவருதென்ன???? வீதிபுனரமைப்பதும் கோயிலுக்கு நிறம் பூசுவதும் தமிழரின் உரிமையன்று.
கொத்துக்கொத்தாய் செத்து பிணமாய் வந்த இனத்தை காம இச்சையில் சிங்களம் சப்பி துப்பும் வரையில் இந்த அரசு ஆதவு கட்சிகள் என்ன செய்தன??? செய்து கொண்டிருக்கின்றன?? இவர்களும் சேர்ந்து தான் அட்டூழியங்களை கட்டவுள்த்துவிட்டிருந்தனர் என்பது வெளிப்படையுண்மையாகிய நிலையயில் தமிழர் நீதியை எங்கு தேடுவது.????
தமிழ்ர்களின் உரிமைகள் உடமைகள் என பேசியதால் அதிக ஆசனங்களுடன் நாடாளுமன்றத்திற்கு மக்களால் அனுப்பப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இதுவரை மக்களின் உரிமைகளின் நலனில் என்ன செய்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லி அரசில் செய்யவேண்டும். ஆயுதப்போராட்டம் இல்லாத இந்த வேளையில் சாத்திவீகப்போராட்ம் செய்து தமிழ் மக்கள் மேல் ஏவப்பட்டிருக்கும் வெளிப்படை மற்றும் உள் வன்முறைகள் பற்றி தட்டிக்கேட்கலாமே.??? தமிழ் தேசியக்கூட்டமைப்பு சாத்தீவீக போராட்டத்தை தொடங்கினால் வாக்களித்த அத்தனை தமிழ் மக்களும் ஆதரவு தரமாட்டார்களா என்ன??? வெறுமனே பணத்திற்கான அரசில் செய்து நிலங்களையும் இளம் பெண்களையும் இளைஞர்களையும் சிங்களத்திடம் காவு கொடுப்பதை விடுத்து தமிழ் அரசியல் வாதிகள் இனிமேலாவது உரிமைகளிற்கான அரசியல் செய்யவேண்டும் இல்லையேல் விலகவேண்டும்.
உரிமைகள் மேல் உணர்வுள்ள தலைமுறையை அரசியலில் நுளைத்து சாத்வீக போராட்டங்களை நடாத்தவேண்டும். வெறுமனே இந்தியாவுடன் பேச்சு..இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு என்பன தமது அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்கே அன்றி தமழ் மக்களுடைய உரிமைகள் பற்றியதல்ல. தமிழ் மக்களின் உரிமைகளிற்கு குரல் கொடுப்பதாயின் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கட்டும். அப்போது எல்லோரும் பார்ப்பார்கள். மாறாக குளிரூட்டப்பட்ட அறைகளில் நடக்கும் அந்தரங்க சந்திப்புகள் பற்றி மக்களுக்கு தெரியாது. மக்களிற்கான அரசியலை மக்கள் உரிமைக்கான அரசியலை மக்கள் மத்தியில் இருந்து செய்வதே மக்களின் தேவையும் பாதுகாப்பும்.
ஆதி
04-10-2010
No comments:
Post a Comment