November 7, 2009
இன்று தமிழர்களாகிய எம் விடுதலைப்போராட்டமானது மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் பலம் வாய்ந்த எம் புலம்பெயர் தமிழர்களின் கைகளுக்கு கைமாற்றப்பட்டுள்ளதால் இந்த விடுதலைக்கான வேள்வி அணைந்துவிடாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. தேசியதலைவர் அவர்களின் சிந்தனைப்படி( "போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறது")..... எல்லாமே நல்ல படியாக நடக்கிறது என்ற திருப்தியாவது இறுதிப்போரில் கருகியும், உயிரோடு நசித்தும், குண்டுகளால் உடல் சிதைத்தும்... எதிரியால் கொல்லப்பட்ட எம் மக்களினதும் விடுதலைபோராளிகளினதும் ஆத்மாவை சிறிதளவேனும் சாந்தப்படுத்தும்.
இன்று எமது தேசியத்திற்கான நாடுகடந்த அரசாங்கம், அரசியல் கட்டமைப்புக்கள்... இப்படி உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகவழிமுறைகள் பின்பற்றப்படும் போதுதான் மக்களின் பலமும் வலுத்த ஆதரவும் மிக மிக பாரிய அளவில் தேவைப்படும் என்பதை அனைத்து தமிழ்மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
முகாம்களில் இருந்து ஒரு தொகுதி மக்கள் சிங்கள அரசால் விடுவிக்கப்பட்டும் இன்னும் சில மக்கள் தொகுதியினர் சொந்த இடங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் பெரும் தொகுதியினர் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஞாபகம் வைத்திருங்கள் மக்களே!!
விடுவிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சிங்கள அரசாங்கம் என்ன இழப்பீட்டை வழங்கியது???? வருமானத்திற்கான அனைத்து மூலதனத்தையும் அழித்துவிட்டு அவர்களை வெறும் கையோடு நடுத்தெருவில் விட்டால் அவர்களால் என்ன செய்யமுடியும்?????? அழித்த சொத்துக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டாமா????? இன்று சொந்த இடங்களுக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்களில் பல இளம் பருவத்தினர் கைது செய்யப்படுவதாகவும் அங்கிருந்து வரும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன....இப்படியிருக்க இதை கண்காணிப்பவர் யார்??? இன்னொரு பலமடங்கு பெரிதான செம்மணியை வன்னியில் உருவாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் பெரும் நாடகம் தான் இந்த சொந்த இடங்களில் குடியமர்த்தல் செயற்திட்டம்.
வேறு மாவட்ட மக்களுடன் முற்றாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தான் இன்று மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் காணப்படுகின்றனர். அவர்களை குடியமர்த்தினால் அவர்களை பார்ப்பதற்கு ஏன் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது??? வெளிநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது???? ஏன் சிங்கள எதிர்கட்சிக்கு மறுக்கப்பட்டுள்ளது????? இது பற்றி யாரிடம் முறையிடுவது???? இதை எந்த "மீறல்" சட்டத்தில் சேர்ப்பது?????
இதற்கு நிட்சயமாக விடை தெரியாத நிலையில்தான் இறுதி நிமிடங்களில் வெளியேறிய மக்கள் பலர் காணப்படுகிறோம்.
இப்படியான பல வெளிவராத பல இன்னல்களை எம் வன்னி மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இதை வெளியுலகத்திற்று கொண்டுவருவதும் தட்டிகேட்க கூடிய நிலையிலும் புலம்பெயர் எம் உறவுகள் நீங்கள தான் உள்ளீர்கள் அதனால் விழிப்புடன் இருங்கள்.
வீட்டுக்கொருவர்... பின் இருவர்... இறுதியில் அனைவரும்.... என்ற நிலையில் போராடி மனங்களும்.. ஆயுதம் ஏந்திய கரங்களும் மரத்துப்போய் கிடக்கிறது இங்கு. கடைசி வரை நாம் போராடியது எப்படி நகர்த்தப்படப்போகிறது என்ற ஏக்கமாய் கூட இருக்கலாம். வெளிநாடுகளில் செய்யப்பட்ட போராட்டங்களாலும் தொடர் எழுச்சிகளாலும் தான் இங்கு மக்கள் மனம் தளராமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
எம் புலம்பெயர் உறவுகளே!!!
இந்திய மற்றும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் சிங்களப்பேரிவாதத்தை பற்றியும் நீங்கள் நன்கறிவீர்கள். இந்தி மத்திய அரசானது எப்போதும் தமிழர்களுக்கான விடிவிற்கு சம்மதிக்காது என்றும் அறிவீர்கள். இந்திய தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் கொல்லப்படுவதை தடுக்கவோ தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த நாட்டில் இருந்து தண்ணீர் பெற்றுக்கொடுக்கவோ மாட்டாத இந்தியா, ஈழத்தில் தானே கொன்ற மற்றும் கொல்லப்போகும் தமிழ் மக்களுக்காக "விடிவு" என்ற சொல்லை கூட உச்சரிக்காது என்பது தான் உண்மை. எமது கரங்கள் தான் எமக்கு பலம். உலக நீதியில் எம் போராட்ட நியாயத்தை வெளிக்கொணர்ந்து அதனூடக எமது நாட்டை நிறுவக்கூடிய பாரிய போராட்டம் உங்கள் கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் வீட்டுக்கொருவர் வீதிக்கிறங்குங்கள். போதாவிடில் இருவராக இறங்குங்கள்.
கொசாவாவிற்கே நாடமைக்க முடியுமென்றால் பழம் பெரும் வீர இனமாம் தமிழருக்கு ஏன் நாடமைக்க முடியாது..????
ஈழத்தில் இருந்து
அன்புடன்
-ஆதி-
No comments:
Post a Comment