Powered by Blogger.

Tuesday, November 23, 2010

மாவீரர் நாள் - கனவுகள் பலிக்கும் வரை போராடுவோம். இது சத்தியம்

தமிழீழ விடுதலைப்போராட்டமானது இன்று பல பரிமானங்களை தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாங்கள் தமிழீழ மக்கள்  என்று உலகெல்லாம் கோஷமிடக்கூடிய அளவிற்கு வியாபித்து நிற்கிறது போராட்டம். தமிழீழ மக்களின் பிரச்சினைகள் குறித்து உலக அரசுகள் பேசக்கூடிய அளவிற்கு போராட்டம் ராஜதந்திர ரீதியாக நகர்த்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை குறித்து ஆரம்பிக்கப்ட்ட எத்தனையோ இயக்கங்களில் ஒரு சிலவற்றை தவிர போராட்ட அமைப்பை வெறும் வியாபாரத்திற்கேதான் தோற்றுவித்தார்களா என்று எண்ணும் அளவிற்கு நடந்து கொண்டார்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.


இன்று தமிழீழ மக்களின் அபிலாசைகளை விடுதலையின் தேவைகளை உலகம் பூராவும் ஓங்கி ஒலிப்பதற்கு, ஏறத்தாள 33 000 விடுதலைப்புலிப் போராளிகள் மாவீரர் ஆகியுள்ளனர். சொந்தம், பந்தம், இன்பம், இளமை என அத்தனையையும் துறந்து தமிழீழ விடுதலைக்காய் போராடி களப்பலியாகியுள்ளனர்.


இந்த இடத்திலே நான் அறிந்த சில சம்பவங்களை சொல்லியாக வேண்டும்.


தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுடைய வீரச்சாவை சிந்தித்து பாருங்கள். தமிழீழ விடுதலைக்காய் மக்களோடு மக்களாக மக்கள் முன்னே வீரச்சாவடைந்தானே. அப்படிப்பட்ட போராளிகளை கொண்ட மக்கள் இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள்.




மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புலனாய்வு பிரிவு போராளி இராணுவத்திடம் அகப்பட்டுவிட்டார். அவரிடம் இருந்து செய்திகளை கறப்பதற்காக அவரை கட்டிலில் கட்டிவைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். தன்னிடம் இருக்கும் தகவல்களை தான் சித்திரவதை வேதனையில் சொன்னால் தமிழீழ போராட்டத்தில் சில முக்கிய விடயங்கள் தெரியவந்துவிடும் என்று சிந்தித்த போராளி கட்டில் சட்டத்தில் அடித்து தனது பல்லால் தனது நாக்கை துண்டித்திருக்கிறார்.. இப்படி 90 காலப்பகுதிகளில் பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள்.


இதே போல் கிளிநொச்சி மீட்டு நடவடிக்கையான ஓயாத அலைகள் 2 சமரின் போது கிளிநொச்சி மத்திய கல்லூரியில் போடப்பட்டிருந்த கொமான்டோ முட்கம்பி வேலியை தகர்த்து குறிப்பிட்ட நேரத்துக்குள் நகர வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அதை தகர்ப்பதற்குரிய வெடிபொருள் வெடிக்கவில்லை.... உடனே அதில் ஒரு போராளி அந்த கம்பிமேல் படுத்துக்கொண்டு தன் மீது ஏறி வேலியை கடக்கு மாறு கூடியுள்ளான். அத்தனை போராளிகளும் அந்த வேலியை கடந்து முடிக்கும் போது சொட்டச் சொட்ட ரத்தம் கசிந்து கொண்டிருந்த போராளி  பின் வீரச்சாவடைகிறான்.


காயமுற்ற போராளி தன்னை கொண்டு செல்வது சிரமம் எனவே என்னை கொன்றுவிட்டு ஆயுதத்தை எடுத்துச்செல்.. என்னை கொல்வதற்கு ரவையை வீணாக்காமல் கத்தியால் கொலை செய் என தன் தோழனிடமே கட்டளையிட்டான் ஒரு விடுதலைப்புலி வீரன்.


இப்படி பல...
தமிழீழ விடுதலைக்காக, மக்களின் சுதந்திரத்திற்காக, சுயநலமற்று வீரச்சாவை தழுவிக்கொண்ட தியாக தீபங்களை... எமது மாவீரச் செல்வங்களை எப்போதும் நாம் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம்.


இன்று முற்று முழுதாய் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து்ளள சிங்கள ராணுவம் மாவீரர் கல்லறைகள், நினைவுச்சின்னங்கள் என எல்லாவற்றையும் சிதைத்து அழித்து முடித்துள்ளது. கல்லறைகளை அழிக்க முடியுந்த ராணுவத்திற்கு நினைவு நாளை இல்லாது செய்ய முடியுமா?? முடியாதல்லவா.அங்கு தான் எமது விடுதலைக்கான போராட்டத்தின் வீரியமும் அது பற்றிய தேவைகளும் இருக்கின்றன.


விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்து முற்று முழுதாக உறங்கு நிலைக்கு சென்றுள்ள நிலையில் மக்கள் எப்படி விடுதலைக்கான போராட்டத்தை நகர்த்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான விடுதலையின் தேவை குறித்த விழிப்புணர்வுகள் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கப்படல் வேண்டும்.  தமிழீழ அரசை அமைப்பதற்கான சர்வதேச அங்கிகாரத்தை புலம் பெயர் தமிழர்கள் போராடிப் பெறவேண்டும். அத்தனை தமிழ் இளைஞர் யுவதிகளுக்கும் தமிழீழம் பற்றிய சிந்தனைகள் உருவாக்கப்படல் வேண்டும். தமிழீழ விடுதலை பற்றிய குரல்கள் ஒட்டுமொத்தமாக உலகம் பூராகவும் ஒலிக்க வேண்டும்.


தமிழ் மக்களின் விடிவிற்காய், தமிழீழ மண்ணின் விடிவிற்காய் வீரகாவியமான மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கங்களை செலுத்துவதோடு தமிழீழ விடுதலையின் தேவை குறித்த சிந்தனைகள், கோஷசங்கள் அனைத்து தமிழ் மக்களிடையேயும் ஓங்கி ஒலிக்க செய்வோம்..தமிழீழத்திற்காக எவ்வழியிலும் தொடர்ந்து போராடுவோம் எனவும் சத்தியம் செய்து கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்




ஆதி
24-11-10

Friday, November 12, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும் தமிழர் உரிமை எதிர்ப்பு நாசகார சக்திகளும் - எதிர்வினை

அன்புக்குரிய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களே
எனது கட்டுரை  இந்த கட்டுரைக்கு மின்னஞ்சல்களில் வந்த பல எதிர்வினைகளுக்கு நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.


எனது இந்த கட்டுரையில் வடலி பதிப்பகத்தை கடுமையாக விமர்சித்திருப்பதாகவே பெரும்பாலான குற்றச்சாட்டுக்களும் ஏனைய சில இலங்கையில் நடாத்துவதை நியயப்படுத்துவதாகவும் இருந்தன. பொதுப்படையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கட்டுரையின் கருத்தூட்டல் பகுதியில் இடுவது வெளிப்படையானதாக இருக்கும்.தவிர தனிப்பட்ட ரீதியில் கூறப்படும் விமர்கனைங்களின் சாரம்சத்தை வைத்தே நான் பொதுப்படையாக பேச முடியும். அதுபோக என் கட்டுரை பற்றிய விமர்சனம் முன்வைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றிகள்.


குற்றச்சாட்டு 

1) இலங்கைத் தமிழரின் மீள் எழுச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். அதை எதிர்பது நியாயமற்றது.

பதில்
என் கட்டுரையில் தெளிவாகவே விளக்கியுள்ளேன். அதாவது எழுத்தாளர் மற்றும் தனிமனித உரிமைகள் அதுவும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிக்கப்படாத பறிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் சிறுபான்மை எழுத்தாளர்கள் மாநாடு செய்யுமளவிற்கு உரிமை உள்ளது என்று அரசாங்கம் செய்யப்போகும் பொய்பிரச்சாரத்திற்கு இந்த மாநாடு உதவப்போகிறது. அதுபோக இந்த மாநாட்டிற்கான இணைப்பாளர் அவர்கள் மாநாட்டில் பேசப்படக்கூடிய அரசியல் பற்றி நிலையற்ற தன்மையிலையே காணப்படுகிறார். தமிழர் உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றி எந்த அளவிற்கு பேசுவதற்கு உரிமையும் எதிர்கால உத்தரவாதமும் உள்ளது என்பது தான் பிரச்சினை.
ஆக தமிழர் உரிமைகள் பற்றி அவா கொண்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர்களுக்கு மாநாடு நடத்துவதற்கான ஏதுவான இடம் சிறிலங்கா அல்ல. அது வெறும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவான பிரச்சார மாநாடாகவே அமையப்போகிறது.


2)வடலி வெளியீடுகளை அவதூறு செய்தது

பதில்
வடலி வெளியீடுகளை அவதூறு செய்யவில்லை. அவர்களது கொள்கைளை மட்டுமே சொல்லியிருந்தேன். அதாவது வடலி வெளியீடுகள் ஏறத்தாள முழுமையானவை புலி எதிர்பு பற்றியதாகவே இருக்கின்றது என்பது வெளிப்படை உண்மை. இங்கு புலி எதிர்பு என்பதில் பல சேதி உள்ளடங்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமித்து அதுவும் ஒரு தலமையின் கீழான விடுதலைப்புலிகள் அமைப்பாக மாற்றம் பெறும் காலப்பகுதியிலிருந்தும் சரி அதற்கு முந்தைய காலப்பகுதியிருந்தும் சரி சிறிலங்கா அரசோடு இணைந்திருந்த மற்றும் இணைந்திருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளோ, அரசியலாளர்களோ இது வரை தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசியிருக்கிறார்களா??? 
அல்லது விடுதலைப்புலிகளை சிறிலங்கா அரசு அழித்து விட்டதாக அறிவித்து ஒன்றரை வருடங்களாகி விட்டது. விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாத நிலையில் கூட இந்த அரசியல் வாதிகளால் தமிழர் உரிமைகள் பற்றி பேச முடிகிறதா அல்லது உரிமை மறுப்புகளை தட்டிக் கேட்க முடிகிறதா??? இல்லை. 

இந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தில் காணப்படும் புலிகள் பற்றிய அரசியல் நம்பிக்கையை தகர்த்துவிட்டால், தமிழ் மக்கள் உரிமைகள் பற்றி சிந்திக்கவோ அல்லது அது பற்றி கேள்வியெழுப்ப மாட்டார்கள் என்பது சிறிலங்கா அரசுக்கு தெரியும். 

சிறிலங்கா அரசு பற்றிய எதிர்பு தமிழ் மக்களிடம் இருந்து வந்தாலும், அதே இடத்தில் இருந்து புலி எதிர்பு பிரச்சாரம் நடைபெற்று.... தமிழ் மக்களின் சிந்தனைகள் உரிமை பற்றியதில் இருந்து மாற வேண்டும் என்பதில் சிறிலங்கா அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. அதற்கு ஏற்றாற் போல் வடலி எழுத்தாளர்கள் தமது செவ்வனே செய்கிறார்கள். அதாவது அவர்கள் தமது புலி எதிர்ப்பு அரசியலை செய்கிறார்கள். 
இதை வெளிப்படையாக சொல்வது அவதூறா??

தமிழர் உரிமைகளை பேசமுடியாத அரசு சார் தமிழ் அரசியல் இருப்பதை விட பல தியாகங்களையும் குட்டி தமிழ் அரசையும் செய்து காட்டிய புலி அரசியலை மக்கள் விரும்புவது தவிர்க்கப்பட முடியாதது.
அதுபோக இன்னமும் என் கருத்துகள் அவதூறாக பட்டால் வடலி பதிப்பக்தாருக்கும் மற்றும் வடலி எழுத்தாளர்களுக்கும் என் வருத்தங்களை தெரிவி்த்து கொள்கிறேன்.

ஆதி
12-10-10

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும் தமிழர் உரிமை எதிர்ப்பு நாசகார சக்திகளும்

தமிழும் அதன் தொன்மையும் எமது உயிர் மற்றும் உரிமையே. ஆனால் தமிழினமே அழிக்கப்ட்ட பூமியில், துடிக்க துடிக்க தமிழனை கொன்று புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் எக்காளமிட்டுக்கொண்டிருக்கும் சிங்கள அரசின் நாட்டில், இந்த தமிழ் எழுத்தாளர் மாநாடு தேவையா என்பது தான் பிரச்சினை. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்பது என்ன? எப்போது உருவானது? இது போகட்டும். விடையத்திற்கு வருவோம்.

எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் சுட்டுப்படுகொலை செய்யபட்டுக்கொண்டிருக்கும் போது,இதே தலை நகரில் எத்தனையோ இளைஞர் யுவதிகள் கடத்தப்ட்டுக்கொண்டிருக்கும் போது, எம் இனம் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கபட்டுக்கொண்டிருக்கும் போது, இலங்கை அரசிடம் குறைந்தபட்டசம் ஒரு அறிக்கை விடுப்பினூடாக சரி, மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் பற்றி கேள்வி எழுப்ப முடியாதிருந்த இந்த ஒன்றியம்... இப்போது தமிழர் உரிமை பற்றி பேசுவதற்கு சிறிலங்காவில் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று கூறுவது வேடிக்கைக்குரியதும் அதன் பின்னணியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சிங்கள அரசால் தமிழ் மக்கள் பிணங்களாக வேரறுக்கப்ட்டனர், முகாம்களில் கருவறுக்கப்ட்டுக் கொண்டிருக்கின்றனர், நிலங்கள் பறிக்கபட்டுக் கொண்டிருக்கிறது என்று மக்கள் ஒப்பாரி வைத்த வண்ணம் இருக்கின்றனர், ஆனால் மாநாட்டின் இலங்கைக்கான இணைப்பாளர் அவர்கள், ஆடிவேல் திருவிழா கொழும்பில் நடந்ததென்றம் நல்லூரில் திருவிழா நடந்ததென்றும் அதற்கு ராஜபக்ஸ வந்தாரென்றும் அதே போல் தான் இதுவும் ஒரு நிகழ்வென்று கூறுவது எழுத்தாளர் மாநாட்டின் நோக்கத்தை திசை திருப்புவதோடு அவரது உள்நோக்கின் வெளிப்படையான கருத்து.

எல்லாரும் அறிந்த தமிழ் எழுத்தாளர் திஸ்ஸநாயகம் சிங்கள அரசால் காட்டுமிராண்டித்தனமாக நடாத்தப்பட்டு இன்று நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் இது யாவரும் அறிந்த விடையம். தமிழர் உரிமைக் கோரிக்கைகளை அப்பட்டமாக எழுத முடியாது என்று சிறிலங்கா அரசே அவரை வெளிப்படையாக எச்சரித்திருந்தது. அந்த சர்தர்ப்பத்தில் இந்த ஒன்றியமும், திரு ஞானசேகரம் அவர்களும் எங்கிருந்தனர்?? தமிழர் உரிமைக் கோரிக்கைகளை அப்பட்டமாக பேச முடியாது என ஒரு சர்வதேச விருதுக்குரிய எழுத்தாளருக்கே இலங்கை அரசு சொல்லியுள்ள நிலையில், இலங்கை அரசை சர்வதேச மட்டத்தில் காப்பாற்றுவதற்கான ஆரம்ப கட்ட செயற்பாட்டையே இந்த ஏற்பாட்டாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்டை உண்மையாகிறது.

மாவீரர் நினைவு கட்டுரைகள்,தமிழர் உரிமை பற்றிய கட்டுரைகள், உலகின் எந்த பாகத்திலிருந்து வெளியாகினாலும் அச்த சஞ்சிகையில் சம்மந்தப்பட்ட பக்கங்கள் கிழிக்கப்ட்டே சிறிலங்காவிற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதற்கு ஏற்பாட்டை யார் செய்வார்கள் என்று அனைத்து தமிழ் மக்களுக்கும் புரியும்.

தமிழர் உரிமைபோராட்ட மற்றும் புலி எதிர்ப்பு சக்திகளின் மறைமுக அரசியல் பின்னணியில்தான் இந்த மாநாடு சிறிலங்காவில் நடாத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் பலவற்றை கூறலாம். தமிழர் உரிமை போராட்ட மற்றும் புலி எதிர்பு எழுத்தாளர்களின் வெளியீடுகளான வடலி வெளியீடுகளுக்கு எந்த பக்க வினைகளுமற்று சிறிலங்காவில் பரவவிடுவதற்கான ஏற்பாடுளிற்கு அரசு சார் தமிழ் கட்சிகளின் மறைமுக ஒத்துழைப்பபுகள் இருப்பதே சான்று. முற்று முழுதாக அவர்களின் செயற்பாடுகளினூடாகவே இந்த மாநாடு நடைபெறப்போகிறது என்ற சந்தேகம்தான், சிறிலங்காவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டினூடாக சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்கான அரசியல் செயற்பாட்டை வெளிக்காட்டுகிறது.

ஆய்வரங்கங்களில் பேசப்படும் விடயங்களில் அரசியல் பேசக் கூடாது என்று மாநாட்டு இலங்கை இணைப்பாளர் திரு ஞானசேகரம் அவர்கள் கூறியிருப்பதானது, அந்த மாநாட்டில் குறைந்த பட்டசம் தமிழ் எழுத்தாளர்களுக்கு... இலங்கை அரசால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உரிமை மறுப்புகளுக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ எதிராக குறை கூறிக்கூட ஒரு அறிக்கை விடமுடியாது என்பதை காட்டுகிறது. மொழிக்கலப்பை, தமிழ் மொழிச் சிதைப்பை, மேற்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கெதிராக சான்றுகளோடு ஒரு கண்டன அறிக்கை விடமுடியாது என்பதை காட்டுகிறது. 

அதாவது தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மக்களுடைய உரிமைகளை ஒன்று கூடி பேசிவிடக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு தெளிவாக இருந்தே இந்த மாநாட்டின் ஒழுங்குபடுத்தல்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டினாடாக ஒரு கல்லில் பல மாங்காய்கள் சிறிலங்கா அரசிற்கு விழப்போகிறது என்பதே உண்மை
1)சர்வதேச அளவில் எழுத்தாளர் ஊடகவியலாளர்களிற்கு சிறிலங்காவில் மிகச்சிறந்த உரிமை உள்ளது என்பதை காட்டுவது
2)ஒன்று கூடும் தமிழ் எழுத்தாளர்களை ஒட்டுமொத்த குரலாக தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவதை இலங்கையில் தடுப்பது
3)மாநாடே நடாத்தும் அளவிற்கு சர்வதேச தரத்தில் தமிழர்களுக்கு சிறிலங்காவில் உரிமை கிடைத்துவிட்டது என்பதை காட்டுவது.
4)மாநாட்டினூடாக தமிழர் உரிமைப்போராட்ட மற்றும் புலி எதிர்ப்பு எழுத்தாளர்களை இலகுவாக அடையாளம் கண்டு எதிர்காலத்தில் தமிழ் மக்களை ஊடகங்களினூடாக குழப்புவதற்கு பிரயோகிப்பது

இப்படி வெளிப்படையான காரணங்கள் பல காணப்படுகின்றன. ஆக இந்த மாநாடு நடாத்தப்படும் இடம், மாநாட்டை நடாத்தும் அமைப்பின் செயற்பாடு, மாநாட்டு இணைப்பாளர்களின் பின்னணி மற்றும் உள்நோக்கு அத்தோடு மாநாட்டினூடான சிறிலங்கா அரசின் அரசியல் நகர்வுகள் குறித்து சிந்தித்து விட்டு இந்த மாநாடு பற்றி தங்கள் நிலைப்பாட்டை எடுப்பதே எழுத்தாளர்களுக்கு, தமிழுக்கும் அதன் எழுத்து தர்மத்திற்கு செய்யும் சத்தியம.

மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் அண்மையில் வழங்கியுள்ள பேட்டில் காணப்படும் குழப்ப நிலைகள்.
தங்களுடைய உணர்வுகளை, தமிழுணர்வை, எழுத்தாளன் என்ற நிலையில் அல்லது கலைஞன் என்ற நிலையிலே பரந்த வாழ்கிற எங்களுடைய மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து  அவர்களோடு பரிமாற, கருத்துப்பரிமாற்றம் செய்ய ஒரு சந்தர்ப்பம் தேவை
நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது.  எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.
இந்த இரண்டு கருத்துகளும் அவரால் தெரிவிக்கப்பட்ட விடையங்களே.... "உணர்வுகளை பகிர்ந்து கொள்ள" என அழைப்பு விடுக்கப்படும் இடத்தில் தணிக்கை வேறு இருக்கிறது... இங்கேயும் தமிழ் எழுத்தாளர்ளின் உரிமைகளை பறிப்போம் என்று முற்கூட்டியே சொல்விடுகின்றனர் ஏற்பாட்டாளர்கள். அப்படியாயின் இவர்கள் யார்?? எல்லா உணர்வகளையும் பேசக்கூடிய நாட்டிலா இந்த மாநாடு நடைபெறப் போகிறது??

சர்வேதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கும் சிறிலங்காவில் தமிழரின் நிலை...

கடவுளே இவர்களின் வாழ்வை உறுதிப்படுத்து..

சிறிலங்கா அரசினால் சின்னாபின்னமாக்கப்பட்ட பின் இப்பொது இருக்கும் கூடாரம்
கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டுகிடக்கும் தமிழர்கள்
சிறிலங்கா அரசினால் காட்டுமிராண்டிதனமாக சுட்டுக்கொல்லப்ட்டுகிடக்கும் தமிழ் இளைஞர்கள்
கிளிநொச்சி இரணைமடுவில் சிறிலங்கா அரசால் திறக்கப்ட்டுள்ள பெளத்த விகாரை.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயில் வாசலில் ஆயுதம் தாங்கிய சிறிலங்கா படை.




இப்படி தமிழர்கள் நாடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்கா சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த உகந்த இடமா??  தமிழினம் இப்படி ஒடக்கப்ட்டுக்கொண்டிருக்க தமிழ் எழுத்தாளனை அரசியல் பேசாதே என்று தடுப்பதன் பின்னணி என்ன??? அப்படித்தான் பேசினாலும் எதிர்காலத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இப்படிப்பட்ட சர்வாதிகார நாட்டில் தமிழர் உரிமை போராட்ட எதிர்ப்பு சக்திகளால் ஒழுங்கு படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாநாடு பற்றிய நிலைப்பாட்டை தமிழ் எழுத்தாளர்கள் தான் ஊகித்தறியவேண்டும்.

ஆதி
10-11-10

அரசியலில் திணறும் சிறிலங்கா அரசு - தமிழ் எழுத்தாளர் மாநாடு அரசின் ஏற்பாடா???


இன்று சிறிலங்கா அரசின் அரசியல் நிலமை என்பது என் செய்வதன்று தெரியாமல் தினறும் சூழ்நிலையாகவே காணப்படுகிறது.

1)தமிழின படுகொலை மீதான போர்க்குற்றம்
2)தமிழர் பிரதேசத்தில் ஏற்படுத்திய சிங்கள மற்றும் பெளத்த மயமாக்கல்
3)சீனாவின் ஆழ ஊடுருவல்
4)இந்தியாவின் அரசியல் ஊடுருவல்
5)பன்னாட்டு புலனாய்வாளர்களின் உள்நுழைவு
6)விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளின் அசைவு தெரியாத உறங்கு நிலை
7)புலம்பெயர் தமிழர்களின் தமிழீழம் பற்றியதான விடாப்பிடி
8)சிறிலங்கா அரசுக்கெதிரான மாணவர்களின் போராட்டம்
9)பூசி மெழுகப்படும் பொருளாதார சோடினைகளில் உட்சரிவுகள்

என சிறிலங்கா அரசசின் அரசியலின் காலில் அவிழ்க்கப்படமுடியாத பிணைப்புகள் பல போடப்பட்டுள்ளன.

தன்னை காப்பாற்றி கொள்வதற்காக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தன்னையே அடைமானம் வைத்த சிறிலங்காவிற்கு தன்னிடத்திலையே இந்தியாவும் சீனாவும் மோதப்போகின்றன அல்லது போட்டியை நடத்தப்போகின்றன என்ற காலம் கடந்த ஞானம் ரஜீவ்காந்தி கொலைவழக்கில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவரை விடுவித்ததில் இருந்து புரிந்திருக்கும். தெற்காசியாவின் பலம் மிக்க புலனாய்வு அமைப்பான றோவிற்கு ஈழத்தமிழர்களுக்கெதிரான போரில் நேரடிப்பங்காளியாக இருந்த றோவிற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றிய இறுதி முடிவெடுக்க ஒரு வருடத்திற்கு மேலானது பெரும் சந்தேகத்திற்குரியதே. அரசியல் ஆளுகையை செய்யக்காத்திருந்த இருந்தியாவுக்கு சீனாவின் நில ஆழுகை கொள்கையானது பெரும் சங்கடத்தை உருவாக்கியிருக்கலாம். இலங்கையின் தெற்கில் பல வர்த்தக மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் சீனாவிடம் போயுள்ளதோடு வடக்கு மற்றும் கிழக்கிலும் ஊடுருவியுள்ளமையானது காலப்போக்கில் இந்தியாவின் அரசியல் ஆளுகைக் கொள்கை பிரயோசனமற்றதாகிவிடும் என்ற காரணத்தாலேயே இன்று இந்தியாவும் வடக்கில் தன் நில ஆளுகை திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளின் ராஜதந்திர மோதல் களம் ஒன்று சிறிலங்காவில் திறக்கப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசிற்கு நெருக்கடியே.

இது போக போர்க்குற்றம், தமிழ் பிரதேசங்கள் மீதான சிங்கள மற்றும் பெளத்த மயமாக்கல், புலம்பெயர் தமிழரின் தமிழீழம் பற்றியதான சட்ட நகர்வுகள் சிறிலங்கா அரசை பெரிதும் திணறடித்துள்ளது. இங்கு போடப்பட்டுள்ள சிக்கல்களை தமிழ் மக்களை கொண்டே இல்லாது செய்வதற்கான நடவடிக்கையில் தான் இன்று சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் செய்யப்பட்ட ஆணைக்குழு முன்னில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசு செய்த போர்க்குற்றங்களை அப்பட்டமாக ஒப்புவித்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாத சிறிலங்கா அரசு வன்னி மக்கள் சிவில் நிர்வாகத்தை விட இராணுவ நிர்வாகத்தையே விரும்புகின்றனர் என்ற சம்மந்தமற்ற ஆவணச் சமர்பித்தலூடாக போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டுக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்துள்ளது. ஆனால் சர்வதேச விசாரணைகள் தவிர்க்கப்பட முடியாததே.

இதே போல் இன்று தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் சிங்கள அத்துமீறல்களையும் சிறிலங்காவில் உள்ள தமிழ்ர்களுடாக, என்ற பேரில் மூடி மறைப்பதற்கான பல ஏற்பாடுகளையே சிறிலங்கா அரசு மேற்கொண்டுவருகிறது. தமிழர் பிரச்சினைகளை பேசும் அத்தனை குரல்களையும் அதிகாரத்தின் பெயரால் அடக்கியுள்ள சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை அவதூறு செய்தல், சிறிலங்கா அரச நிர்வாககங்களை தூற்றுதல் ஆனால் அரசை போற்றுதல் போன்ற குரல்களுக்கு அரசு களமமைத்து கொடுத்துள்ளது. அதாவது நடுநிலைச்சார்பான அரசு என்ற தோற்றப்பாட்டை உலகிற்கு தமிழர்களினூடாக காண்பித்து தமிழர் பகுதிகளில் போருக்கு பின் செய்யப்படும் சிங்கள ஆக்கிரமிப்புகளை மூடிமறைக்கும் அரசியலை மேற்கொள்கிறது. யாழ்ப்பாணத்தில் செய்யப்படும் சிங்கள கலாச்சாரத்தின் பெருமளவிலான உள்வாங்கல்கள் அதை தட்டிக்கேட்கமுடியாமல் அதிகார அடக்கல்கள் போன்றானவை உலக நாடுகளின் பார்வையில் தமிழர் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள் விரும்புகிறார்கள் போன்றான தோற்றப்பாட்டை கட்டாயம் உருவாக்கும். இப்படியான ஒரு சோடிக்கப்பட்ட பார்வைக்கே உலகத்  தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை, தமிழர் உரிமை போராட்டத்தை மற்றும் தமிழர் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுக்கொண்டிருப்பதனூடாக எப்படிப்பட்ட சிறிலங்கா அரசியலின் பின்னணி உள்ளது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ள முடியும். பல எத்தாளர்களை தடைசெய்த நாடுகடத்திய இலங்கை அரசு, பல ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்து துன்புறுத்திய துன்புறுத்திக்கொண்டிருக்கும் இலங்கை அரசு, பல எழுத்தாளர்களின் கொலைச் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத இலங்கை அரசிற்கு உலகத் தமிழ் எழுத்தாளர்களின் மாநாடும் அதன் பின் அரசு செய்யப்போகும் பிரச்சாரமும் வெகு பெறுமதியானது என்றே கருதுகிறது.

தமிழரின் சமகாலப்பிரச்சினைகள்,தமிழ் நிலப்பறிப்புகள்,தமிழர் மேல் திணிக்கப்படும் பெளத்தம், தமிழர் மேல் மேற்கொள்ளும் பாலியல் வன்முறைகள்,தமிழர் பகுதிகளில் கேள்விக்குறியாகியுள்ள சிவில் நிர்வாகம், இப்படி அரசால் இரண்டாம் தரப்பு மக்களாகக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் உணர்வுகளை இந்த மாநாடு பேசுமா என்பது ஜயத்திற்குரிய விடயமே. சிறிலங்காவில் இனப்பிரச்சினையே இல்லை,நடந்த போர்களெல்லாம் மதப்பிரச்சினை மற்றும் சில குழுக்களுக்கிடையில் மொழி புரிதலின்மையால் நடந்த பிரச்சினைகளே தவிர இனப்பிரச்சினையே நடக்கவில்லை, முள்ளிவாய்க்கால் எனும்பிரதேசத்தில் அப்படி ஒரு இனப்படுகொலையையே நடத்தி முடிக்க வில்லை என்று சொல்லி முடிப்பதற்காக, தமிழர் உரிமைப்போராட்ட எதிர்ப்பு சக்திகளை உலக அரங்கிற்கு காட்டுவதற்கான ஒத்திகையாக கூட இந்த இலங்கை உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு இருக்கலாம்.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சில உதவிகள் செய்யவேண்டும் ஆனால் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையோ, பழம் பெரும் இனம் என்ற அங்கிகாரமோ தேவையில்லை என்ற தொனியில் இந்த மாநாட்டின் கருப்பொருள் இருந்தாலும் வியப்பதற்கில்லை.

பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்று 1 வருடத்திற்கு முதல் தானே அறிவித்த அரசு இன்னமும் பயங்கரவாத சட்டம் வைத்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்னமும் அரசு சரியான பதில் கூறவில்லை. தமிழ் உரிமை பற்றி பேசும் குரல்களுக்குத்தான் நிட்சயமாக அந்த சட்டம் அமுலில் உள்ளது என்பது யாவரும் அறிந்திருக்க இந்த தமிழ் எழுத்தாளர் மாநாடு நிட்சயமாக தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுமா என்பது சந்தேகமே.

ஒருவேளை தமிழ் மக்களின் உரிமையை பற்றி இந்த மாநாடு பேசுமென்றால் அந்த மாநாட்டை இலங்கையில் நடாத்தும் தருணம் இதுவல்ல என்பது தான் உண்மை. தமிழ் மக்களை கொன்று குவித்து வாழ்விடங்களை அழித்து தமிழர் பிரதேசங்களில் சிங்கள கலாச்சாரத்தை திணித்து கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை முதலில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு சிறிலங்கா அரசை காப்பாற்றும் அல்லது அதன் பிரச்சாரத்திற்கு உதவக்கூடிய அத்தனை நிகழ்வுகளையும் தவிர்த்தல் இன்றியமையாதது. சிறிலங்காவில் சட்டம் என்பது அரசின் சட்டைப் பை ஆகிவிட்ட நிலையில் சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு போவது பற்றி யோசிக்க வேண்டும். இந்த வகையில் இப்போது நடைபெற இருக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்பதன் உள்நோக்கம் பற்றி அனைவருக்கும் புரிந்திருக்கும்.

ஆதி
2-11-10

தமிழரின் தேசவழமைச் சட்டம் குறித்து கவனத்தை திருப்பியுளள்ள சிறிலங்கா அரசு

நான் ஏற்கனவே தேசவழமை சட்டதினால் உள்ள சிங்கள நிலப்பறிப்புக்களிற்கு உள்ள சிக்கல்களையும் அதனால் சிறிலங்கா அரசு தேசவழம சட்டத்தை இல்லாது செய்ய நடவடிக்கை செய்யும் என்ற குற்றச்சாட்டையும் ஊகித்து இங்கு எழுதியிருந்தேன். அதேபோல் சிறிலங்கா அரசின் சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர்  விஜிதமுனி சொய்ஷா யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் தெரிவித்த

1948 ஆண்டுக்கு முன்னர் இலங்கையில்   தமிழரும் சிங்களவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். அதன்பின்னர் தேசவழமைச் சட்டம் காரணமாக தழிழரும் சிங்களவரும் இணைந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
 என்ற கருத்தானது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்திள்ளது. தேசவழமைச்சட்டத்தை இல்லாது செய்வதினூடு தமிழர் பிரதேசங்களை சிங்களவர்கள் வாங்குவது சட்டபூர்வமாக்கப்படுவதோடு நிலப்பறிப்பறிப்பு நிகழ்த்துவதும் அங்கிகரிக்கப்பட்டுவிடும்.

ஆக்கிரமிப்புகளினூடு செய்யப்படும் அனைத்து அத்துமீறல்களுக்கும் தெசவழமைச்சட்டம் இல்லாது செய்யப்படின் சட்டத்தின்பால் அங்கிகாரம் செய்யபடுவது தவிர்க்கப்படமுடியாததே. அதிகார அத்துமீறல்கள் செய்யும் சிறிலங்கா அரசுக்கு மிரட்டி நிலத்தை சட்டபூர்வமாக வாங்கி சிங்கள உள்வாங்கலை மேற்கொள்வது மிக இலகுவானதே.

பாராளுமன்ற பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் என்ற ரீதியில் சிறுபான்மையினரின் தனித்துவங்களை குற்றம் சாட்டி சிதைத்து கொள்ள முனையும். இது குறித்த நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் கட்சிகள் சுயனநலமற்று மேற்கொள்ளுமா என்பது சந்தேகத்திற்குரியதே.

ஆனால் தமிழர்கள் கொண்டுள்ள சில சட்ட நிலமைகளை சிதைப்பதனூடு அல்லது இல்லாது செய்வதனூடு தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் மற்றும் அத்துமிறிய குடியேற்றங்களை சட்டத்திற்கு உட்பட்டவை போல் சர்வதேசத்திற்கு காட்ட சிறிலங்கா அரசு முயலும் என்பது வெளிப்படை உண்மை.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமையில் தமிழ்கட்சிகள் உள்ளர். மக்கள் மீது திணிக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக வாக்களித்த மக்களை திரட்டவேண்டிய கடமையில் அந்தந்த தமிழ் கட்சிகள் உள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

எனக்கு  இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் யாழ்ப்பாணத்துத் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன்
 என்று  சிறிலங்கா அரசின் சிறைச்சாலைகள் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர்  விஜிதமுனி சொய்ஷா யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது தெரிவித்தமையானது தமிழர்கள், தமிழ் பெண்கள், மற்றும் தமிழ்ர் கலாச்சாரம் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே புரிந்து கொள்ள முடியும்.

ஆதி
24-10-10

இலங்கையில் சட்டத்தின் நெகிழ்வுத்தன்மை.... தப்பித்துக்கொள்ளும் சிங்களம்


சட்டத்தில் அனைவரும் சமம் என்பது பொதுவான  கோட்பாடு. குற்றங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கையாழும் முறமைகளும் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அது போக சட்டம் இலங்கையில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதே கவலையளிக்கிறது.

சிறிலங்காவில் பெரும்பான்மை சிங்களவர்களை அதிகம் கொண்டதும் பெரும்பான்மை இனத்தவரை ஜனாதிபதியுமாக கொண்ட அரசாங்கம் சிறுபான்மை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ள இனவன்முறைபற்றி யாவரும் அறிந்ததே. இன அழிப்பின் உச்சத்தை சட்டத்தின் நெகிழ்வுத்தன்மையை பாவித்து சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு மேற்கொள்ளும் படுகொலைகளய் கற்பழிப்புகளுக்கு எதிராக சாட்சி சொல்ல வருவதென்பது தற்கொலைக்கு சமனான ஒன்றாகியபோதும் இனத்தின் மேல் உள்ள பற்றால், இனியாருக்கும் இப்படி நடக்க கூடாது என்ற வைராக்கியத்தால் வரும் சாட்சியங்களின் சாட்சிகளை நீதிமன்றங்கள் சரியாக கையாண்டு குற்றவாழிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கிறதா என்பது சந்தேகமே.

சிறிலங்கா அரசால் முள்ளிவாக்காலில் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழின படுகொலைக்கு பிறகு எஞ்சிய மக்களை சிதைகக்கும் நடவடிக்கையில் நாசுக்காக ஈடுபட்டுவருகிறது. குடும்பங்களை அழிப்போம் என்று மிரட்டி தமிழ்பெண்களை கற்பழிப்பது. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை கடத்தி கொலைசெய்வது. அங்கிருக்கும் பெண்களை கற்பழிப்பது என்பது தினம் தினம் வன்னிப்பெரு நிலத்தில் சிங்கள ராணுவத்தால் செய்யப்பட்டுவருகிறது.

இதில் சில சம்பவங்களுக்கு நேரடிச்சாட்சியங்களும் உண்டு. இந்த சாட்சியங்களின் ஊடாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் சரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றனவா என்பதே இப்போதுள்ள கேள்வி.

விசுவமடுவில் தமிழ்பெண்ணை பாலியல்வன்முறைக்குட்படுத்திய ராணுவத்தினர் நான்குபேரும் சாட்சியங்களால் நீதிமன்னத்திற்கு முன்னால் இனம்காணப்பட்டவர்கள். அவர்களை பிணையில் விடுதலை செய்தது என்பது எந்தவகையில் நியாயம்??? குற்றவாழிக்கு பிணை வழங்க முடியும் என்ற சட்டத்தில் சரத்துகள் இருந்தாலும் பிணைவழங்கப்பட்ட ராணுவத்தினர் மீதான வழக்குகள் இனி இழுத்தடிப்பு செய்யப்பட்டு மூடப்பட்டுவிடும் என்பது தான் உண்மை. கற்பழிப்பில் ஈடுபட்ட தமது சகாக்களுக்கு பிணைவழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பபட்டுவிட்டனர் என்ற செய்தி வன்னியில் இருக்கு 2 இலட்சம் ராணுவத்தினருக்கும் உளவியல் ரீதியிலான உந்துதலை கொடுத்திருக்கும்.

மருத்துவமாது தர்ஷிகா படுகொலையுடன் தொடர்பென கருதப்பட்ட முக்கிய குற்றவாளியான சிங்கள வைத்தியர் தொடர்பான விசாரணை அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமை, விசுவமடு கற்பழிப்புடன் தொடர்புடைய ராணுவத்தினர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை, சாவகச்சேரியில் கொலைசெய்யப்பட்ட சிறுவனின் கொலையில் நேரடித்தொடர்புடைய ஈபிடிபி உறுப்பினர் விடுதலை செய்யப்ட்டமை.
 என்பவை தமிழ் மக்கள் மீது சட்டத்தினால் அரசு மேற்கொள்ளும் வன்முறைகளை எடுத்து காட்டுகிறது.

சமூகத்தை நெறிப்படுத்த வேண்டியது சட்டம். இந்த வகையில் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் ஒரு இனம் மீதான அடக்குமுறைகள் மறைமுகமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என்ற ரீதியில் அணுக வேண்டும். வன்முறையை பிரயோகிக்ககும் அரசின் குற்றங்களை சாட்சியங்களினூடாக வெளிக்கொணர்வதற்கு முன்வரவேண்டும்.
வழக்கை முடிக்காமல் ராணுவத்தை பிணையில் வெளியில் விட்டதில் இருந்து என்னை இவன்தான் கற்பழித்தான் என்று மானம் சுயகெளவரவம் எதிர்கால நிலை என்பதை கருத்தில் கொள்ளாது நீதிமன்றத்தில் உள்ள நம்பிக்கையால் தன் இனத்தின் மீதுள்ள பற்றால் சாட்சியமாக வந்த பெண்ணிற்கு நீதிமன்று என்ன சொல்ல வருகிறது??

விசாரணையின்றி தமிழர்கள் தடுத்து வைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படும் தமிழர்கள் குறித்து விசாரணைசெய்ய குழு அமைக்கப்பட்டு கலைக்கப்படுவதும்,தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதும், தமிழ் நிலங்கள் பறிக்கபடுவதும்  அநீதி என்று தெரிந்தும் இதுவரை தமிழ் சட்டவாளர்களால் இதுகுறித்து கேள்வியெழுப்பமுடியவில்லை அல்லது புறக்கணிப்புகளை ஏன் செய்யவில்லை என்ற சந்தேகம் என்னில் நிலவுகிறது.. ஆனால் கிளிநொச்சியில் கற்பழிப்பில் ஈடுபட்ட ராணுவத்தையும், மருத்துவமாது தர்ஷிகா கொலை குற்றவாளியையும், சிறுவனை கொன்ற கொலையாளியையும் எப்படி சாதுர்யமாக இந்த தமிழ் சட்டவாளர்கள் தப்ப வைத்தார்களோ அப்போதே ஒன்று வெளிப்படை உண்மை... சட்டத்தின் நெகிழ்வுத்தன்மையினூடாக அரசு மேற்கொள்ளும் வன்முறைகளை செல்வாக்குகளின் அடிப்படையில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

இலங்கையில் நீதிமன்று என்பது சட்ட சோடினை செய்யப்பட்ட வன்முறை ஆயுதமே.

ஆதி

23-20-20

சிங்கள மாணவர்களின் வருகை... விழுமியங்களை கட்டிக்காக்குமா யாழ் பல்கலைக்கழகம்??


சமாதான காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்களமாணவர்கள் தெரிவாகியதும் போர் ஆரம்பித்ததும் தென் பல்கலைகழகங்களுக்கு மாற்றம் வேண்டி சென்றதும் யாவரும் அறிந்த விடயம். யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் செயற்பாடுகள் முடக்கிவிடப்பிருந்த காலம் என்பதால் சமுதாய சீர்கேடுகள் பெரிதாகவே கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த நேரத்தில் சிங்கள மாணவர்களின் வருகை என்பது எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனால் இன்றைய நிலையில் சிங்கள மாணவர்களின் வருகையின் பிற்பாடு யாழ்பல்கலைக்களக சமூகத்தில் ஏற்படப்போகும் திடீர் மாற்றங்கள் சமுதாயத்தில் எவ்வகையான மாற்றங்களை கொண்டுவரப்போகிறது என்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்துவது முக்கியமானதே.

சிங்களவர்களை பொறுத்தவரை அவர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் புத்தர் இருப்பது தவர்க்கப்படமுடியாதது மட்டுமன்றி அதை நிறுவுவதற்கு தாம் பெரும்பான்மையினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தவும் தயங்குவது கிடையாது. அந்த வகையில் எதிர் வரும் வருடம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்படும் என்பது ஊகித்து கொள்ள முடிகிறது. இந்த விடயத்தை யாழ் பல்கலைக்கழக சமூகம் எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

யாழ் பல்கலைகழக வாளாகத்தில் தமிழ் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை யாரும் விரும்புவதில்லை என்பதற்கப்பால் கலாச்சாரமான உடைகளை அணிவதையே பெற்றோரும் விரும்புகின்றனர். ஆனால் சிங்கள மாணவர்களை பொறுத்தலரை ஜீன்ஸ் அணிவது என்பது அவர்களால் தவர்க்கப்பட முடியாதது. இதனால் எதிர்காலத்தில் தமிழ் பெண்களும் இந்த தூண்டுதலுக்கு உள்ளாவது மட்டுமன்றி கவர்ச்சியாக கல்விச்சாலைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. ஆகவே இந்த ஆடை சம்பந்தப்பட்ட விடயத்தை யாழ் பல்கலைக்கழக சமூகம் எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிங்கள காதல்ர்கள் அல்லது நண்பர்கள் தமக்கிடையில் அங்க நெருக்கங்களை எப்போதும் கொண்டிருப்பர். தனது காதலி மேலோ அல்லது நண்பி மேலோ கையை போட்டபடி நடப்பது. காதலியை சற்று இறுக்கிய படி இருப்பது. அங்க சில்மிசங்கள் என்பன சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை போனறது. இவ்வாறான அங்க நெருடல்கள் தமிழ் சமூகத்தில் நடைபெறப்போவதை யாழ்பல்கலைகழக சமூகம் எப்படி தடுக்கப்போகிறது. இவ்வாறு வெளிப்படையான அங்க நெருடல்கள் இடம்பெறுமிடத்து இவை தமிழ் மாணவர்கள் (பல்கலைக்கழகம் மட்டுமல்ல பாடசாலை மாணவர்களும்) மத்தியில் எப்படியான தாங்கங்களை ஏற்படுத்த போகிறது என்பது குறித்து யாழ்பல்கலைக்கழக சமூகம் கவனம் செலுத்துமா???

அது போக சிங்கள இளைஞர் யுவதிகளின் கவர்ச்சியும் சுண்டியிழுக்கும் பேச்சுகளும் புதிதாக பழகப்போகும் தமிழ் இளைஞர் யுவதிகளிடத்தில் கவர்ச்சி மயக்கங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்தப்போகிறது என்பது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெற்றோர்களின் கண்டிப்பான கண்காணிப்பு மிக மிக அவசியமானது. பொது இடங்களில் அங்க சில்மிசங்களில் ஈடுபடுவோர் குறித்து தமிழ் மக்கள்  விழிப்புடன் இருக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் தட்டிக்கேட்கும் அல்லது தண்டிக்கும் மனப்பாண்மையை வளர்த்து கொள்ள வேண்டும்.

தமிழர் கலாச்சார மற்றும் விழுமியங்களையும். தமிழ் பெண்களின் அடக்கமான பழக்கவழக்கங்கள் குறித்தும் சிங்களர் மத்தியில் பொறாமை போன்ற தன்மை காணப்படுகிறது. அடக்கமான தமிழ் பெண்களை காதல் வலையில் விழுத்தி காம இச்சைகளை நிறைவேற்றி கொள்வதில் சிங்கள இளைஞர்களுக்குள்ள ஆர்வம் தென்னிலங்கையில் கல்விகற்கும் தமிழர்களுக்கு தெரியும். இணையதளங்களில் உலாவும் சிங்கள காதல் ஜோடிகளின் ஆபாசக்காட்சிகள் போல் தமிழர் தாயகப்பகுதிகளில் எடுக்கப்பட்டவை என்று சிங்களவர்களால் வெளியிடப்படும் என்பதை அனைத்து தமிழ் யுவதிகளும்  அறிந்து வைத்திருத்தல் அவசியம். வீரச்சாவடைந்த பெண்போராளிகளை நிர்வாணமாக்கி அவர்களின் பிணங்களை வீடியோ எடுத்து சுயஇன்பம் கண்ட சிங்கள இளைஞர்களின் வெறிகுறித்து தமிழ் பெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
இப்போது தமிழ் மாணவர்களின் நிலை

தமிழர் கல்வியை சிதைப்பதற்கு கலாச்சார சீர்கேடுகளை மற்றும் தமிழர் விழுமியங்களை அழிப்பதற்கான ஊக்குவிப்புகளை சிறிலங்கா அரசு நாசுக்காக மேற்கொண்டுவருகிறது என்பதை படித்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகளிடம் தோற்றுப்போன இந்திய வல்லரசு.


தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்புகள் இராணுவ நடவடிக்கை முறைமைகள் புலனாய்வு திறமைகள் ராஜதந்திர நகர்வுகள் குறித்து உலகத்தின் பொலிஸ்காரன் என குறிக்கப்படும் அமெரிக்காவே வியப்பு வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இந்த வகையில் சிறிலங்கா அரசால் விடுக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்ற செய்தியும் ஈழப்போரில் நேரடிப்பங்களிப்பு வழங்கியதும் அண்டை நாடுமான இந்திய வல்லரசின் அதன் பிற்பாடான நடவடிக்கைகளும் ஈழத்தமிழரை மட்டுமல்லாது அனைத்து நாடுகளையும் சிந்திக்க வைத்துள்ளது.

ஈழப்போரின் நேரடிப்பங்காளியான இந்தியா விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்ற சிறிலங்கா அரசின் செய்திக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாது சிறந்த ராணுவத்தினர் என்றும் சிறிலங்கா அரசை மெச்சியது. ஆனால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனரா இல்லையா அல்லது விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத்தலைவருமான மே.த.கு வே. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற ஜயப்பாடுகள் இந்திய வல்லரசில் காணப்படுவது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது மட்டுமல்லாது இந்தியவல்லரசின் இயலாத்தன்மையையும் வெளிக்காட்டியுள்ளது. இது குறித்த காரணங்களை நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
1)விடுதலைப்புலிகள் மீதான தடை
2)ராஜீவ் காந்தி கொலைவழக்கில் இன்னமும் தமிழீழ தேசியத்தலைவரின் பெயர் நீக்கப்படாது இருப்பது.

இந்தியாவின் பங்காளி நாடான சிறிலங்கா விடுதலைப்புலிகள் இனிமேல் இல்லை என்று அறிவித்ததன் பிற்பாடு இல்லாத விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் தடைவிதித்திருப்பதானது இந்திய வல்லரசின் ராஜதந்திரத்தின் இயலாத்தன்மையை காட்டுகிறது. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்ற செய்திக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியா விடுதலைப்புலிகளை தடைசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்ததிடம் கோரியமை இந்தியாவின் கொள்கை மற்றும் செய்தி வகுப்பாளர்களிடம் காணப்படும் முரண்பாடுகளையே காட்டுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைவரை தாம் கொன்றுவிட்டோம் என்று இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்து அவரின் மரண சான்றிதளையும் இந்திய அதிகாரி சிதம்பரத்திடம் ஒப்படைத்தது யாவரும் அறிந்ததே. இவ்வாறிருக்க ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தமிழீழ தேசியத்தலைவரின் பெயர் நீக்கப்படாமையானது இந்திய சட்டத்தில் மரணமானவர் கூட வழக்கில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற சந்தேகமும் நகைப்பும் ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே.

சிறிலங்காவில் சீனாவின்  வருகையும் வடக்கில் நாசுக்காக ஊடுருவும் சீனாவின் ராஜதந்திரமும் இந்தியாவை அவசர அவசரமாக இந்தியாவை வடக்கில் களமிறங்க தூண்டியுள்ளது வெளிப்படையுண்மை. விடுதலைப்புலிகள் குறித்தும் அதன் தலமைகள் குறித்தும் சிறிலங்கா அரசின் கருத்து வேறுபாடுகளுக்கிடையில் சிறுபிள்ளைத் தனமான ராஜதந்திர கொள்கைகளை மாற்ற முடியாத இந்தியா வடக்கில் மென்மையான ஊடுருவலை மேற்கொள்கிறது என்பதை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் தலமை குறித்து ஈழத்தமிழர்களிடத்தில் காணப்படும் நம்பிக்கையே இன்று இந்தியவல்லரசை முட்டாளாக்கியது மட்டுமல்லாது சிறிலங்கா குறித்த ராஜதந்திரத்தில் ஆட்டம் காண வைத்துள்ளது என்பதை அனைத்து தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் தமிழீழ தேசியத்தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று பல அரசுகள் உத்தியோகபூர்வ அறிக்கைகளைவிடுத்தும் தமிழீழம் என்ற கொள்கையை விட்டு சற்றும் தளராத தமிழ் மக்களினால் தான் இன்று வல்லருசுக்கள் மூக்குடைபட்டு நிற்பதை வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.

விடுதலைப்புலிகள் உத்தியோக பூர்வமான ஆயுதப்போராட்டத்தை மெளனித்த பின்னர் அவர்களின் ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கணிப்பதற்கு இந்திய வல்லரசின் புலனாய்வாளர்கள் தோற்றுப்போனது தமிழர்களின் வெற்றி. விடுதலைப்புலி உறுப்பினர்களின் சரணடைவு மற்றும் காணாமால் போன மக்கள் குறித்தான வன்னி மற்றும் மட்டக்களப்பு மக்களின் நேரடிச்சாட்சியங்களானது இந்தியாவின் வல்லாதிக்க கனவில் நாற்றத்தை அள்ளி வீசியுள்ளது.

சிறிலங்கா அரசின் கோமாளித்தனமான செயற்பாடுகளால் விடுதலைப்புலிகளின் ராஜதந்திரம் மற்றும் நகர்வுகள் குறித்து இந்திய வல்லரசு விடுதலைப்புலிகளிடம் தோற்றுப்போனது தமிழர்களின் வெற்றியே.

இனிவரும் காலங்களில் ஈழ மற்றும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் இந்திய வல்லாதிக்கத்தின் காழ்ப்புணர்ச்சி கொள்கைகளை இல்லாது செய்யும் அல்லது அடிபணியச்செய்யும் என்பது தெளிவாகிறது.

அனைத்து தமிழர்களும் தமிழர்களுக்கு இதுவரை நாடில்லை என்பதையும் போரினால் சிதைந்து போயுள்ள  தமிழர்களின் வாழ்வாதரங்களை கட்டியெழுப்ப வேண்டிய கடமை அனைத்து தமிழர்களினுடையது என்பதையும் நினைவில் வைத்து செயற்படுவது தமிழீழத்திற்கான வழிகளை ஏற்படுத்தும் என்பதில் ஜயமில்லை.

ஆதி
18-10-10

கலப்பின மயமாக்கப்படும் தமிழர் பகுதிகள்

சிங்கள மயமாக்கலை மாலை அணிவித்து கூட்டிவரும் ஈபிடி தலைவர் டக்ளஸ்

தமிழர் நிலங்கள் கலப்பின மயமாக்கலை மிகவேகமாக சிறிலங்கா அரசு மேற்கொண்டுவருகிறது. மாகாணவாரியங்கள்...மாவட்ட வாரியங்கள் எல்லாம் தாண்டி பிரதேசத்தின் கிராமங்களினூடான கலப்பின செறிவாக்கல் தமிழர் பிரதேசங்களில் மட்டும் விரைவுபடுத்தப்பட்டுள்ளமையானது வெறுமனனே இனச்சுத்திகரிப்பு மட்டுமல்லலாது கலாச்சாரவிழுமியங்களை சிதைத்தல், கல்வி ஆர்வத்தை சிதைத்தல், பாலியல் குறைபாடுகளை உருவாக்கல், விரியமற்ற குழந்தை பிறப்புகளை ஊக்குவித்தல், இனம் என்ற அடிப்படையில் சிந்திக்காமல் இருத்தல் என்பவற்றை கருத்தில் கொண்டு இலங்கை புலனாய்வுத்துறையினதும் உளவியல் வல்லுனர்களின் ஆலோசனையிலும் இந்த கலப்பினமயமாக்கலை சிறிலங்கா சிங்கள அரசு மெற்கொண்டுவருகிறது.

இந்த கலப்பின மயமாக்கலுக்கு அரச சார்பு ராணுவ துணைக்குளுக்கள் (ஈபிடிபி, கருணா குழு, பிள்ளையான் குழு, புளொட், ஜிகாத் குழு ) ஆனந்த சங்கரி அரசியல் குழு, முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் என அரசு தமிழ் பேசும் அமைப்புகளையும் பலாத்காரமான செயற்பாடுகளக்கு சிங்கள ராணுவத்தையும் களம் இறக்கிவிட்டுள்ளது. 
சுற்றுப்புற சூழல் தம்மால் மாசடைவதாக செய்திவந்ததற்கு எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் யாழில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள்

இந்த கலப்பின செயற்பாட்டில் முதலில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை விரைவாக தமிழர் தாயகத்தில் சலுகைகள் அடிப்படையில் குடியமர்த்தல் பின் அவர்கள் சமயங்களை வளர்ப்பதற்கான ஊக்குவிப்பை வழங்கல் பின் கலப்பு கலியாணத்திற்கு ஏற்ற வகையில் பாலியல் தூண்டுதல்களை ஏற்படுத்துவதற்கான வாய்புகளை வழங்கல் போன்றவையான நிகழ்ச்சி நிரலுக்கேற்ற வகையில் ஆரம்ப கட்ட பணிகளும் எதிர்கால செயற்திட்டங்களும் தமிழர் பிரதேசங்களில் வெளிப்படையாகவே சிங்கள அரசால் செய்யப்பட்டுவருகிறது.
சிங்கள ஆயுததாரிகளின் பிடியில் சிக்கி கிடக்கும் தமிழினம்... எந்த நேரமும் கற்பு சூறையாடப்படலாம் என்ற நிலையில் தமிழ் பெண்கள்

தனி முஸ்லிம் பிரதேசங்களில் மற்ற எந்த வொரு இன மக்களும் இருக்கமுடியாது என்ற சூழ் நிலை நிலவும் இந்த வேளையில் சிங்கள மக்களின் அதிகாரத்தினூடு முஸ்லிம் மக்களின் வருகையானது ஆதிக்க நோக்கமின்றி வேறெதுவுமாய் இருக்க முடியாது என வயது முதிர்ந்த யாழ் வாசியொருவர் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது.

கடைசி 6 வருடங்களில் போரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் பலாத்காரமாக சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றங்களையும் சமய தலங்களையும் நிறுவி வழங்களை சுரண்டுதல் தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சலிப்படைதல் என்பவற்றை செய்துவரும் அரசு யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு வவுனியா போன்ற பிரதேசங்களில் தனது ஒட்டுக்குழுக்கள் மூலம் சட்டரீதியாக  பணத்தை கொடுத்து மிரட்டி காணிகளை பறித்து வருகிறது.

திருகோணமலையில் இன்று நகர்ப்பகுதிக்குள் மட்டும் தமிழர்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தம்மை குடியேற்றுமாறு வருகை தந்துள்ளமையானது சட்டரீயாக நிலம் பறிக்கும் செயற்பாடு இப்போது யாழ்ப்பாணத்தில் முடக்கி விடப்பட்டுள்ளமையை தெளிவுபடுத்துகிறது.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் கலாச்சாரத்தினூடு வாழ்க்கையை சந்தோசமாக நடாத்த முடியாது என்று தமிழ் மக்கள் அவர்களருகில் இருந்து விலத்தி இருக்கப்போவதும் இப்படி விலகி போவதனூடு அவர்களின் ஆக்கரமிப்பு அதிகரிக்கப்போவதும் யாழில் எதிர்காலத்தில் நடக்கப்போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இன்றை கிழக்கு மற்றும் புத்தளத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் சமூகமானது ஜிகாத் என்ற ஆயுதக்குழுவுடனும் பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு முஸ்லிம் தீவிர குழுக்களில் அதிதீவிர விருப்புடையவர்களாகவும் இருப்பது யாழ்ப்பாணம் மற்றும் மற்றய தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களை உட்செலுத்துவதற்கான அரசின் எண்ணமாக கூட இருக்கலாம்.

இனியொருதடவை ஆயுதம் தாங்கிய புலிகளின் வருகை இருக்குமிடத்து இந்த முஸ்லிம் ஆயுதக்குழுக்ளால் தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடாக கூட இருக்கலாம்.

தமிழர் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் காலாச்சார சிரழிவுகளை சிங்கள பொலிசார் மற்றும் ராணுவம் ஊக்குவிக்குமிடத்து சமூக நலன் மிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்துபவர்களை கண்டிப்பாக தண்டிப்பதோடு சம்மந்தப்பட்டவர்களின் பெற்றோர்களையும் தண்டிக்க முன் வர வேண்டும். பிள்ளைகளை வீடுகளில் கட்டுப்படுத்த விரும்பாத பெற்றோரும் பெற்றோர் வரம்புகளை தாண்டி சமூகத்தில் இன விழுமியங்களை சிதைப்பவர்களும் வேண்டப்படாத களைகளே. வேரோடு பிடுங்கியெறிப்பட வேண்டிய பாஸ்தீனம் போன்ற களைகள்.

கலப்பின மயமாக்கலை ஆயுதமற்ற அரசியல் பலமற்ற சிறுபான்மையினர் என்ற வகையில் தடுக்க முடியாது போனாலும் கலப்பினமயமாக்கலின் பின் ஏற்படுத்தப்படவிருக்கும் சீர்கேடுகளை ஊக்குவிக்க இருக்கும் எந்த இன இளைஞர் யுவதிகளையும் களையெடுக்க வேண்டும்.

மருத்துவமாது தர்சிகா கற்பழிக்கப்பட்டு படுகொலை, படுகொலைக்கு தீர்வு காணப்படவில்லை, சூத்திரதாரி வீடுவிக்கப்பட்டுள்ளார் இப்படி சிங்கள ராணுவத்தின் அடாவடிகளுக்கு ஈபிடிபியின்  கைகள் இருப்பது வெளிப்படை உண்மையே.

இன்று யாழில் சிங்கள படையினர் மற்றம் சிங்கள பொலிஸாருக்கும் தமிழ் யுவதிகளை கூட்டிக்கொடுக்கும் இளைஞர்கள் குறித்தும் ஒத்துப்போகும் தமிழ் யுவதிகள் குறித்தும் சமூக நலன் மிக்க இளைஞர்கள் அவதானமாக இருப்பதும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டியதும் தவிர்க்கப்பட முடியாததே.

ஆதி
15-10-10

எப்படியும் வெல்வோம்..


November 7, 2009


இன்று தமிழர்களாகிய எம் விடுதலைப்போராட்டமானது மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் பலம் வாய்ந்த எம் புலம்பெயர் தமிழர்களின் கைகளுக்கு கைமாற்றப்பட்டுள்ளதால் இந்த விடுதலைக்கான வேள்வி அணைந்துவிடாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. தேசியதலைவர் அவர்களின் சிந்தனைப்படி( "போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் மாறது")..... எல்லாமே நல்ல படியாக நடக்கிறது என்ற திருப்தியாவது இறுதிப்போரில் கருகியும், உயிரோடு நசித்தும், குண்டுகளால் உடல் சிதைத்தும்... எதிரியால் கொல்லப்பட்ட எம் மக்களினதும் விடுதலைபோராளிகளினதும் ஆத்மாவை சிறிதளவேனும் சாந்தப்படுத்தும்.

இன்று எமது தேசியத்திற்கான நாடுகடந்த அரசாங்கம், அரசியல் கட்டமைப்புக்கள்... இப்படி உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகவழிமுறைகள் பின்பற்றப்படும் போதுதான் மக்களின் பலமும் வலுத்த ஆதரவும் மிக மிக பாரிய அளவில் தேவைப்படும் என்பதை அனைத்து தமிழ்மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

முகாம்களில் இருந்து ஒரு தொகுதி மக்கள் சிங்கள அரசால் விடுவிக்கப்பட்டும் இன்னும் சில மக்கள் தொகுதியினர் சொந்த இடங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் பெரும் தொகுதியினர் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஞாபகம் வைத்திருங்கள் மக்களே!!

விடுவிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சிங்கள அரசாங்கம் என்ன இழப்பீட்டை வழங்கியது???? வருமானத்திற்கான அனைத்து மூலதனத்தையும் அழித்துவிட்டு அவர்களை வெறும் கையோடு நடுத்தெருவில் விட்டால் அவர்களால் என்ன செய்யமுடியும்?????? அழித்த சொத்துக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டாமா????? இன்று சொந்த இடங்களுக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்களில் பல இளம் பருவத்தினர் கைது செய்யப்படுவதாகவும் அங்கிருந்து வரும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன....இப்படியிருக்க இதை கண்காணிப்பவர் யார்??? இன்னொரு பலமடங்கு பெரிதான செம்மணியை வன்னியில் உருவாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் பெரும் நாடகம் தான் இந்த சொந்த இடங்களில் குடியமர்த்தல் செயற்திட்டம்.

வேறு மாவட்ட மக்களுடன் முற்றாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தான் இன்று மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் காணப்படுகின்றனர். அவர்களை குடியமர்த்தினால் அவர்களை பார்ப்பதற்கு ஏன் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது??? வெளிநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது???? ஏன் சிங்கள எதிர்கட்சிக்கு மறுக்கப்பட்டுள்ளது????? இது பற்றி யாரிடம் முறையிடுவது???? இதை எந்த "மீறல்" சட்டத்தில் சேர்ப்பது?????
இதற்கு நிட்சயமாக விடை தெரியாத நிலையில்தான் இறுதி நிமிடங்களில் வெளியேறிய மக்கள் பலர் காணப்படுகிறோம்.

இப்படியான பல வெளிவராத பல இன்னல்களை எம் வன்னி மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இதை வெளியுலகத்திற்று கொண்டுவருவதும் தட்டிகேட்க கூடிய நிலையிலும் புலம்பெயர் எம் உறவுகள் நீங்கள தான் உள்ளீர்கள் அதனால் விழிப்புடன் இருங்கள்.

வீட்டுக்கொருவர்... பின் இருவர்... இறுதியில் அனைவரும்.... என்ற நிலையில் போராடி மனங்களும்.. ஆயுதம் ஏந்திய கரங்களும் மரத்துப்போய் கிடக்கிறது இங்கு. கடைசி வரை நாம் போராடியது எப்படி நகர்த்தப்படப்போகிறது என்ற ஏக்கமாய் கூட இருக்கலாம். வெளிநாடுகளில் செய்யப்பட்ட போராட்டங்களாலும் தொடர் எழுச்சிகளாலும் தான் இங்கு மக்கள் மனம் தளராமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

எம் புலம்பெயர் உறவுகளே!!!
இந்திய மற்றும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் சிங்களப்பேரிவாதத்தை பற்றியும் நீங்கள் நன்கறிவீர்கள். இந்தி மத்திய அரசானது எப்போதும் தமிழர்களுக்கான விடிவிற்கு சம்மதிக்காது என்றும் அறிவீர்கள். இந்திய தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் கொல்லப்படுவதை தடுக்கவோ தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த நாட்டில் இருந்து தண்ணீர் பெற்றுக்கொடுக்கவோ மாட்டாத இந்தியா, ஈழத்தில் தானே கொன்ற மற்றும் கொல்லப்போகும் தமிழ் மக்களுக்காக "விடிவு" என்ற சொல்லை கூட உச்சரிக்காது என்பது தான் உண்மை. எமது கரங்கள் தான் எமக்கு பலம். உலக நீதியில் எம் போராட்ட நியாயத்தை வெளிக்கொணர்ந்து அதனூடக எமது நாட்டை நிறுவக்கூடிய பாரிய போராட்டம் உங்கள் கையில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் வீட்டுக்கொருவர் வீதிக்கிறங்குங்கள். போதாவிடில் இருவராக இறங்குங்கள்.
கொசாவாவிற்கே நாடமைக்க முடியுமென்றால் பழம் பெரும் வீர இனமாம் தமிழருக்கு ஏன் நாடமைக்க முடியாது..????

ஈழத்தில் இருந்து
அன்புடன்
-ஆதி-

ஈழத்தில் தமிழ் அரசியல்.



விடுதலைப்போராட்டங்களும் அதன் வழிமுறைகளும் பலதடவைகள் புரியாது போயுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் பெரும் இனப் படுகொலையும் அதன் பின் நடைபெறும் இனச் சிதைப்பும் இன்னமும் மர்மமாக்கப்பட்டுள்ளமையானது தமிழ் அரசியல் வாதிகளின் இயலாத்தன்மையும் பெரிய எழுத்தாளர்களுக்கு பணத்தின் மேல் உள்ள மோகமும் இன்றி வேறு எதுவாயும் இருக்கமுடியாது.

இங்கு முதலில் தமிழ் அரசியல்வாதிகளின் பிழைப்பரசியல் என்பது விபச்சாரத்திற்கு ஒப்பானது என்பதே வெளிப்படை உண்மை. அரசோடு சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல் தலமைகள் விடுதலைப்புலிகள் களத்தில் இருந்த காலத்தில் தாம் மக்களுக்காக போராடுவதாகவும் ஆனால் விடுதலைப்புலிகள் தமக்கு இடமளிக்கிறார்கள் இல்லை எனவும் அனுதாப அரசியல் நடத்தியது மட்டுமல்லாது தமிழினத்தின் உரிமைகளையும் அடகுவைத்தனர். இதன் மூலம் இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததென்ன??? இன்று விடுதலைப்புலிகளும் இல்லை புலிகளின் ஆயுதங்களும் இல்லையென்ற நிலையில் இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்லவருதென்ன???? வீதிபுனரமைப்பதும் கோயிலுக்கு நிறம் பூசுவதும் தமிழரின் உரிமையன்று. 

கொத்துக்கொத்தாய் செத்து பிணமாய் வந்த இனத்தை காம இச்சையில் சிங்களம் சப்பி துப்பும் வரையில் இந்த அரசு ஆதவு கட்சிகள் என்ன செய்தன??? செய்து கொண்டிருக்கின்றன?? இவர்களும் சேர்ந்து தான் அட்டூழியங்களை கட்டவுள்த்துவிட்டிருந்தனர் என்பது வெளிப்படையுண்மையாகிய நிலையயில் தமிழர் நீதியை எங்கு தேடுவது.????

தமிழ்ர்களின் உரிமைகள் உடமைகள் என பேசியதால் அதிக ஆசனங்களுடன் நாடாளுமன்றத்திற்கு மக்களால் அனுப்பப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இதுவரை மக்களின் உரிமைகளின் நலனில் என்ன செய்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லி அரசில் செய்யவேண்டும். ஆயுதப்போராட்டம் இல்லாத இந்த வேளையில் சாத்திவீகப்போராட்ம் செய்து தமிழ் மக்கள் மேல் ஏவப்பட்டிருக்கும் வெளிப்படை மற்றும் உள் வன்முறைகள் பற்றி தட்டிக்கேட்கலாமே.??? தமிழ் தேசியக்கூட்டமைப்பு சாத்தீவீக போராட்டத்தை தொடங்கினால் வாக்களித்த அத்தனை தமிழ் மக்களும் ஆதரவு தரமாட்டார்களா என்ன???  வெறுமனே பணத்திற்கான அரசில் செய்து  நிலங்களையும் இளம் பெண்களையும் இளைஞர்களையும் சிங்களத்திடம் காவு கொடுப்பதை விடுத்து தமிழ் அரசியல் வாதிகள் இனிமேலாவது உரிமைகளிற்கான அரசியல் செய்யவேண்டும் இல்லையேல் விலகவேண்டும்.
உரிமைகள் மேல் உணர்வுள்ள தலைமுறையை அரசியலில் நுளைத்து சாத்வீக போராட்டங்களை நடாத்தவேண்டும். வெறுமனே இந்தியாவுடன் பேச்சு..இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு என்பன தமது அரசியல் இருப்பை வெளிப்படுத்துவதற்கே அன்றி தமழ் மக்களுடைய உரிமைகள் பற்றியதல்ல. தமிழ் மக்களின் உரிமைகளிற்கு குரல் கொடுப்பதாயின் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கட்டும். அப்போது எல்லோரும் பார்ப்பார்கள். மாறாக குளிரூட்டப்பட்ட அறைகளில் நடக்கும் அந்தரங்க சந்திப்புகள் பற்றி மக்களுக்கு தெரியாது. மக்களிற்கான அரசியலை மக்கள் உரிமைக்கான அரசியலை மக்கள் மத்தியில் இருந்து செய்வதே மக்களின் தேவையும் பாதுகாப்பும்.

ஆதி
04-10-2010

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP