Powered by Blogger.

Tuesday, December 10, 2013

தாய்லாந்து போராட்டம் சீனாவின் நேரடிப்பலப்பரீட்சையா!! #தெற்காசிய சமகால அரசியல்

தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மத்தியகிழக்கில் மேற்குலகின் ஆதிக்கம் அல்லது கைப்பொம்மை ஆட்சிகள் உருவாக்கபட்டுவரும் நிலையில் தெற்காசியாவில் சீனா தனது பலத்தை பரிசோதிக்கும் களமாக தாய்லாந்து இருக்கலாம்.

தாய்லாந்து அரசியல் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருக்கிறது எனக் கூறப்படும் கருத்து உண்மையாயின் எதிர்காலத்தில் தெற்காசியாவில் பெரும் அரசியல் மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே பர்மாவில் சீன - அமெரிக்க - இந்திய அரசியல் இழுபறிகளில் பலப்பரீட்சைகள் செல்வாக்கு செலுத்திவரும் நிலையில் தாய்லாந்தில் சீனாவின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்படுமாயின் அண்டைநாடான மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வெளிப்படையான சீன ஆதிக்கத்தை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் சிறிலங்காவை சீனா தனது கட்டுப்பாட்டில் அல்லது சீனாவிரும்பும் ஆட்சிமாற்றங்களை உருவாக்கும் வல்லமை பொருந்திய நாடாக மாற்றுவதற்கான சாதகங்கள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

இந்தியம் மற்றும் இந்தியத்தின் பிராந்திய ஆதிக்கம் ஏற்கனவே ஆட்டம் காணும்  நிலையில் இருப்பதால் இந்தியாவில் இருக்க கூடிய தனிப்பெரும் இனங்கள் தமது சுய விடுதலைகுறித்து சிந்திக்க வேண்டிய காலம் உருவாகி இருக்கிறது.

இந்தியம் என்ற மாயைக்குள் சிக்கி இருக்கும் பெரும் இனங்களுக்கு சுய விடுதலை குறித்து சிந்திப்பதற்கோ அல்லது போராடுவதற்கோ இன்றைய காலங்களில் துணிவும் செய்ற்பாட்டு பொறிமுறையும் இல்லாது இருப்பினும் கட்டாயம் இந்திய மாயையை உடைத்தெறிய வேண்டிய நிலையை காலம் விரைவில் உருவாக்கும் என்றே தெரிகிறது.


ஆதி
10-12-13

Monday, November 25, 2013

புரட்சிகர தமிழீழச் சனம் சிங்கள இராணுவத்துடன் செய்யும் உளவியல் போர் உணர மறுக்கும் உலகம்

உலக வரலாற்றில் போராடும் மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் பலவிதமான போரைச் செய்வார்கள். பாலியல் வன்முறைகள், கொடூரமான படுகொலைகள் மற்றும் போராடுபவர்களின் இலக்கு குறித்த சந்தேகத்தை எழுப்பி பரப்புவது  என ஆக்கிரமிப்பாளர்களின் போர் விரிவடைந்து செல்லும்.

இப்படிப்பட்ட இன்னல்களையும் சோர்வடையச் செய்யக்கூடிய உளவியல் போரையும் வென்ற இனம் விடுதலை பெற்றுவிடும் இதுதான் உலக நியதி.

இப்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று நீட்சியில் தமிழீழ மக்களின் போராட்டம் வித்தியாசமாக உருவெடுத்திருக்கிறது.

30 வருடங்களிற்கு மேல் தங்களை பாதுகாத்து வழிநடத்தி எதிரியிடம் போரிடக் கற்றுக்கொடுத்த அமைப்பும் அந்த மக்களின் தலமையும் இல்லாத நிலையில் தமிழீழ மக்கள் மண்ணில் செய்து கொண்டிருக்கும் பெரும் உளவியல் போர் சிங்கள அரசை மட்டுமல்ல அதன் இயந்த்திரமாக இருக்கும் சிங்கள கொலைவெறி இராணுவத்தையும் அசைத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

2009 இல் தமிழீழ அரசு தனது ஆயுதங்களை மௌனித்து சர்வதேச சதியினால் சரணடைந்த பிறகு, இந்திய சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கும்பலால் பிரேரிக்கப்பட்ட முட்கம்பி வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட பின்பு நடந்த மாவீர்தினங்களையும் சம்பவங்களையும் அவதானமாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நிலையிலும் அதை சர்வதேசத்திடம் முறையாக கொண்டு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய நிலையிலும் தமிழீழ மக்கள் இருக்கிறார்கள்.


2009 மாவீரர் தினம் - மெனிக்பாம் மற்றும் சில முட்கம்பி முகாம்களுக்குள் விளக்கு கொழுத்தியதால் மக்கள் மீது சிங்கள இராணுவம் அடாவடி

2010 மாவீர்ர தினம் - மட்டக்களப்பு நகர் மத்தியில் மாவீரர் ஈகச்சுடர் ஏற்றும் நேரம் மாவீரர் கானம் இசைக்கப்பட்டது. மற்றும் சில இடங்களில் மாவீரர் படங்கள் வைக்கப்பட்டது தீபம் ஏற்றப்பட்டது.

2011 மாவீரர் தினம் - கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாவீரர் நாளை முன்னிட்டு தாக்க வருவதாக நினைத்து கிளிநொச்சியில் சிறுவனை இராணுவம் சுட்டுக் கொன்றது. கிளிநொச்சியில் பல கோயில்களில் ஒலிபெருக்கிகள் இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

2012 மாவீர் தினம் - தமிழீழத்தில் எல்லா மாவட்டத்திலுமே மாவீரர் தின எழுச்சி பதாதைகள் மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டன. யாழ் மற்றும் கிழக்கு  பல்கலைக்கழகத்தில் வெளிப்படையாகவே தீபங்கள் ஏற்றப்பட்டன. கோயில்களில் பிரார்த்தனைகள் நடந்தன. கார்த்திகை தீப நாளை சாக்காக வைத்து கிறிஸ்தவ மத்தை பின்பற்றும் தமிழர்களும்  வீதிகளில் தீபம் ஏற்றினர். வீதிகளுக்கு இறங்கி தீபங்களை காலால் மித்தது சிங்கள இராணுவம். யாழ் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2013 மாவீரர் தினம் - மாவீர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்ய சனம் துயிலுமில்ல வாசல்வரை சென்றது. மக்களின் சின்ன சின்ன அமைப்புகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டது. சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பு மாவீரர் நினைவு நாள் மற்றும் மாவீரர் நினைவிடங்கள் பற்றி பேசியே ஆகவேண்டிய கட்டாய நிலையை மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.


தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ மக்களின் தலமை களத்தில் இல்லாத நேரத்தில் தமிழீழ விடுதலை குறித்து மக்கள் இந்த அளவிற்கு சிங்களத்துடன் மோதுவதென்பது சாதாரண விடையமல்ல. வெறுமனே இந்த மாதத்தில் மட்டுமல்லாது காணாமல் போனோர் மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராக சனங்களின் மூர்க்கம் அதிகரித்து வருவது சிங்களத்திற்கு விளங்குவது போல் உலகத்திற்கு விளங்கவில்லையா அல்லது அதை சரியான முறையில் உலக அரங்கில் கொண்டு சேர்கவில்லையா என்பது குறித்து கவனமெடுப்பது அவசியமான ஒன்று.


ஆதி
25-11-13

Monday, November 18, 2013

இந்தியப் புற்று நோயால் செயலிழந்துவரும் தமிழினம்

இந்தியா என்பது புற்றுநோய்.

இந்தியப் புற்றுநோய் குறித்து 25 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதுகுறித்து அதிக கவனம் செலுத்தாததால் இன்று தமிழினம் தனது இருப்பைத் தொலைத்து அழிவடையும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிக்காலத்திற்கு பின்னர் ஏராளமான வரலாற்று படிப்பினைகளையும் நமது மூதாதேயரின் வாழ்வு பற்றியதுமான ஏராளமான பொக்கிசங்கள் இருந்தும் அதை தூசுதட்டி தலைமுறை தலைமுறையாக சொல்லிக் கொடுப்பதைவிடுத்து சினிமா ரசிகர்களாகவும் கிரிக்கட் ரசிகர்களாகவும் மாற்றப்பட்டனர் தமிழர்கள்.

விதிவிலக்காக உரிமை மறுப்பை எதிர்த்து வீட்டுக்கு வீடு ஆயுதம் தூக்கி எதிரியை களத்தில் சந்தித்தது தமிழீழம். இருந்தாலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை மூடி மறைத்து எவ்வளவு விரைவாக தமிழகத்தை சல்லடைபோட்டு செயலிழக்க செய்ய முடியுமோ அவ்வளவிற்கு செயலிழக்க பண்ணிவிட்டு தமிழீழத்தை சூறையாடியிருக்கிறது இந்தியப் புற்று நோய்.

கல்வெட்டுக்களில் இருக்கும் தமிழ் மன்னர்களின் வீர வரலாறு தமிழீழ தாயமெங்கும் வியாபித்து நிற்கும் பொழுது திரைச்சீலைகளுக்கு பின்னால் கவர்ச்சி நடிகைகளின் நடனங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழகம் இன்று தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சித்தாலும் இந்தியப் புற்று நோயால் முழுமையாக பீடிக்கப்பட்டு எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்வதென்று தெரியாமல் திணறுகிறது.

இந்த பூமிப்  பந்தில் எட்டுக் கோடிக்கு மேல் ஒரே மொழிபேசும் இனமாக, ஒரே இலக்கணம் கொண்ட சனமாக, ஒரே இலக்கியத்தை படிக்கும் மக்களாக இருந்தும் தனக்கென்று சொந்த நிலமும் அதற்கொரு கொடியும் தனியொரு படையும் கொண்ட அரசாக, தன்னைத்தானே ஆழும் இனமாக தமிழினம் இல்லாததற்கு காரணம் இந்தியப் புற்றுநோய்தான் என்றால் மிகையாகாது.

சாதிபேதங்கள் இன்றி, வரட்டுக் கௌரவங்கள் இன்றி, ஊழல் இன்றி இன விடுதலையை மட்டுமே இலட்சியமாக கொண்டு தங்களால் தனிப்பெரும் படையை கட்டியெழுப்பவோ அல்லது ஆழும் அந்திய சக்திகளுக்கு எதிராக போரிடவோ தெரியாத அல்லது முடியாத தமிழகம் ஆகக்குறைந்தது இந்திய வல்லூறுகளை தமது சொந்த நாட்டுக்குள் முடக்க தெரிந்திருந்தால் கூட இன்று "தமிழீழம்" என்ற தனிப்பெரும் தமிழர் நாடு மலர்ந்திருக்கும்.


சொல்வதற்கு கடினமானதென்றாலும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டும். தன்னைத்தானே வருத்தும் தியாக மனப்பாண்மை கொண்ட தமிழக வீரர்களால் எதிரியை திணறடிக்கவோ அல்லது எதிரியின் சூழ்ச்சியை புரிந்து அதற்கேற்போல் போராடவோ தெரியாது.


இன உணர்வுடன் தன் சொந்த மக்களை மட்டுமே நம்க கூடியதும் தன் சொந்த மக்களை வைத்து எந்தப்பெரும் அரசையும் ஆட்டம் காண வைக்க முடியும் என்ற நம்பிக்கை வைத்து ஒரே இலட்சிய கொள்கையுடன் களத்தில் இறங்கி மக்களை வழிநடத்தக் கூடிய தலமை தமிழகத்திற்கு அவசரமாக தேவைப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் வீர வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட வகையில் வரலாறுகள் அழிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

சொந்த நிலமும் தன்னைத்தானே ஆழும் ஆட்சியும் என்பது ஒரு இனத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு. தமிழீழத்தை சுவம்சம் செய்து பறித்து  சிங்களத்திடம் கொடுத்த இந்தியம் தமிழகத்தை நாசுக்காக கூறுபோட்டுவிட்டது.

இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமக்காக போராட முடியாத அடிமை நிலமை ஏற்படுத்தியாகிவிட்டது. அடக்கு முறைக்களுக்கு எதிராக தொடர்ச்சப் போராட்டங்களை செய்யவும் சூழ்நிலைக்கேற்றவாறு அதன் வடிவத்தை மாற்றவும் முடியா நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.


தமிழகமே!!!!

இனிவரும் தமிழனத்தின் சந்ததிக்காகவேனும் உனக்கென்றொரு செங்கோல் ஆட்சியை உருவாக்கு. சாதிகளால் பிளவுண்டுகிடக்கும் முட்டாள்களே!!!! உங்கள் பெற்றோர்களையும் பெற்றோரின் பெற்றோர்களையும் திட்டமிட்டு சகதிக்குள் தள்ளியிருக்கிறான் எதிரி அதன் தொடரச்சியாக அந்த சகதிதான் உங்கள் வாழ்கை என்று உங்கள் தலைமுறையையும் அந்த சகதி நாற்றத்திற்குள் வைத்திருக்காதீர்கள்.

தனி இனமாக தமிழ் இனமாக இந்த ராஜ்ஜியத்தை ஆண்டது தான் தமிழினம். தமிழினமாக உருவெடுங்கள். தமிழனத்திற்கு எதிராக பேசுபவர்கள் முதல் செயற்படுபவர்களை உங்கள் மண்ணில் இருந்து விரட்டுங்கள். இறுக்கமாகவே இருங்கள். இறுக்கம் இனத்தை காக்கும்.


ஆதி
18-11-13

Thursday, November 7, 2013

"தோற்றுப் போகிறோம் போராட வா" என்று கூப்பிடுங்கள் #புலிகள் இல்லாத வெளி

இன்று முகப்புத்தகத்தில் நண்பர் பரணி அவர்கள் எழுதியிருந்த குறிப்பொன்றை பார்க்க கிடைத்தது.

" 2009 ற்கு பிறகு இதுவரை நடந்த எல்லாப்போராட்டங்களும் தோற்றுவிட்டதாக பேசுகிறார்கள் ஆனால் வன்னியில் இருந்த சனங்களையும் எராளமான போராளிகளையும் இந்த போராட்டங்கள் காப்பாற்றியது" என்ற பொருள் பட எழுதியிருந்தார்.

இதை முற்றிலும் மறுக்கிறேன். அதுபோக 2009 ற்கு பிறகு வெல்வதற்காக போராட்டங்களை சரிவர நாங்கள் நடாத்தவில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எனது அபிப்பிராயத்தை முன்வைக்கிறேன்.

விடுதலைப்புலிகள் போராட்டத்தை கட்டியெழுப்பி அதை பெரும் மரபுவழி இராணுவமாகவும் பல்துறை கட்டுமானங்களைக் கொண்ட அரசாகவும் நடாத்துவதற்கு ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் புலிகள் வகுத்த வியூகங்கள்தான் காரணம்.

தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் அதிகமான போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். வீரச்சாவடைந்தவர்களை விதைப்பதற்கு விதைகுழிகள் மாவீரர் துயிலுமில்லங்களில் வெட்டப்பட்டன. அதை வெட்டியவர்கள் பொதுசனங்களாக இருந்த இளைவர்கள்தான். இத்தனை போராளிகளை இழந்துவிட்டோம் என்ற செய்தி ஆழமாக பதியப்பட ஏராளமானவர்கள் வீரச்சாவடைந்தவர்களை இடங்களை நிரப்புவதற்காக போராளிகளாக மாறினார்கள்.

யாழ்ப்பாண குடாநாடு சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது யாழ்குடாநாட்டில் ஏற்பட்டுவரும் தோல்வியை வன்னியில், மட்டக்களப்பில் மக்களிடம் பிரச்சாரப்படுத்தினார்கள். போராடவேண்டிய தேவையை சொன்னார்கள். அதன் தொடர்ச்சியாக புதிய அணிகள் இணைக்கப்பட்டு பயிற்சிக்கு செல்ல தயாராக இருந்த அணிகள் முல்லைத்தீவை கைப்பற்றின.

முல்லைத்தீவில் இருந்து இராணுவதளபாடங்கள் முதல் அந்த முகாமை இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்துவதற்கு மக்களிடமே விட்டார்கள்.

அதே போல்தான் ஜெயசிக்குறு ஆக்கிரமிப்புச் சமர் வன்னியை பிழந்து முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது சந்தித்துவரும் தோல்வியை மக்களிடம் சொன்னார்கள் புலிகள். தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கு சனம் புலிகளுடனேயே நின்றது.
எல்லைப்படை, துணைப்படை, விழிப்புக்குழு, மாணவர் விழிப்புக்குழு, மாணவர் படை, என சனங்கள் எல்லா வழியிலும் போராடத்துணிந்தன.

போராளிகளுக்கு உலர் உணவு சேகரிப்பதில் இருந்து காயப்பட்டுவரும் போராளிகளை பராமரிப்பது வரைக்கும் சனங்கள்தான் நின்றார்கள்.

தமிழீழத்தில் புலிகளுடனையே இருந்த சனங்களுக்கு புலிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியை எதிர்மறையாக காட்டியது கிடையாது. "தோற்கிறோம் போராடவா" என்றுதான் அழைப்புவிடுத்திருக்கிறார்கள்.

புலம்பெயர் கட்டமைப்பு

புலம்பெயர்கட்டமைப்பை பொறுத்தவரை சனங்கள் போராட்டங்களை செய்திகளில் படிப்பவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

2009 இல் இலட்சக்கணக்கில் வீதிக்கு இறங்கி போராடிய சனங்கள் எங்கே!! அவர்களை ஏன் இப்பொழுது போராட அழைக்க முடியவில்லை!!!

"தோற்றுப்போகிறோம் போராட வா" என்று வீட்டைத் தட்டுங்கள். படிக்கும் மாணவ மாணவிகளுடன் பேசுங்கள்.

இது நிரந்தர தோல்வியானால் எங்கள் சரித்திரம் ஈழத்தில் அழிந்துவிடும் என்ற பயங்கரமான உண்மையை சொல்லுங்கள்.

தோற்கிறோம் என்ற உண்மையை விளங்கி போராட வருபவன்தான் கடைசிவரை இலட்சியத்திற்காக போராடுவான்.

இரண்டாயிரம் பேர் போராடி தோற்றுப்போனால் தோற்றுவிட்டோமே என்ற இன உணர்வு மூவாயிரம் பேரை கூட்டி போராடத் தூண்டவேண்டும். அது தான் நிலைத்து நிற்க கூடியதும் இலக்குவரை செல்லக் கூடியதுமான போராட்டம்.



தமிழக கட்டமைப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை இலட்சியத்திற்கா போராடக்கூடியவர்கள் அதிகம் இருக்கும் இடம். ஆனால் சாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பிழவுபட்டு நிற்கும் தேசம்.

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து, அணு உலை குறித்து இதுவரை போராடிக் கொண்டிருப்பதை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை.

போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டும். காந்தி நடாத்திய போராட்டம் வெற்றியளித்தது உண்மையென்றால் அதே போராட்டத்தை செய்ய தமிழிகத்தில் விடுதலை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தன்னைத்தானே எரிக்கும் தியாக போராட்டங்களை கைவிட்டு எதிரியை அழிக்கும் விடுதலைப்போராட்டத்தை தமிழகம் தொடங்க வேண்டும். தமிழகத்தில் அப்படியொரு அமைப்பு உருவாக வேண்டும்.

வெறும் மேடை அரசியல் எதையம் பெற்றுத்தராது என்ற உண்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒடுக்கபட்டுகிடக்கும் சனங்கள், ஊழல் அரசியல்வாதிகளால் தமது உரிமைகள் மற்றும் வாழ்வாதார பலன்களையே இழந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்காக தமிழனாக போராடக்கூடிய  அமைப்பு உருவாக வேண்டும்.

தமிழீழ விடுதலை குறித்து தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் உணர்வு மிக்க போராட்டங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்த இனமாக ஒருவிடுதலைக்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் தமிழினம் எப்போது ஒரே அமைப்பாக போராடப்போகிறது!!!!


போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.

ஆதி
07-11-2013

Monday, October 28, 2013

சிங்களத்தை காப்பாற்ற லீனாவை அனுப்பியது இந்தியா!! # வெள்ளைவானின் ரகசியம்

உலகளவில் தமிழீழ விடுதலைக்கான நீதி கோரி போராட்டங்கள் பல தளங்களில் முடக்கிவிடப்பட்டு நகர்ந்து கொண்டிருக்க மனிதாபிமானஅடிப்படையில் பல மேற்கத்தைய ஊடகங்கள் சிங்கள இராணுவத்தின் படுகொலைகளை அப்பட்டமாகி சர்வதேசத்தின் முன்னிலையில் தொங்க விட்டிருக்கின்றன.

விரும்பியோ விரும்பாமலோ படுகொலைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில் சிறிலங்காவும் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்கா இந்தியாவும் விழிபிதிங்கி நிற்கும் இவ்வேளையில் சிறிலங்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து கூனிக்குறிகி நிக்றிது இந்தியா.

சிறிலங்காவுடன் ராஜதந்திர ரீதயில் மோதி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையில் சிறிலங்காவை மனிதஉரிமை கண்டனங்களில் இருந்து மீட்டெடுத்து தன்னையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் தள்ளபட்டிருக்கிறது இந்தியா என்ற அரக்க தேசம்.

சனல் 4 மற்றும் பிபிசி தொலைக்காட்சிகளில் மிக அப்பட்டமாக சிங்களத்தின் கொடுமைகள் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிலையில் இதுவரை இந்திய தேசத்தில் இருந்து தமிழர்களின் துயரங்களை வெளிகொண்டுவருவதற்கு யாரும் முன்வரவில்லை அல்லது விரும்பவில்லை. இந்தலையில் லீனாமணிமேகலை என்ற அந்தோனியின் படுக்கையறைத்தோழிக்கு என்ன அக்கறை இருக்கிறது என்று யாரும் நினைக்கலாம்.

இந்தியாவின் திட்டமிடலும் லீனாவின் சதியும்

இந்தியாவைப் பொறுத்தவரை சிறிலங்கா மீது மனிதஉரிமைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்து ஒட்டுமொத்த பார்வையும் குவிவதை விரும்பவில்லை.

முள்ளிவாய்க்காலில் படுகொலையை முடித்த கையுடன் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளைப்பற்றி படுமோசமான விமர்சனங்களை முடக்கிவிடுவதற்காக பலநாடுகளில் இருக்க கூடிய புலியெதிர்பாளர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புலியெதிர்பாளர்களை ஒருமித்திருந்தது இந்திய ரோ அமைப்பு. இதே போன்றதான செய்பாட்டைத்தான் பர்மா விடுதலைப்போராட்டம் நசுக்கப்பட்ட பின் ரோ செய்திருந்ததை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த நிலையில் இந்தியாவின் சதியை புலம்பெயர் தமிழீழ அமைப்புகள் தகர்த்திருந்தன. சிங்கள இராணுவத்தின் மிலேச்சத்தனமான படுகொலை வீடியோக்களை ஆவணமாக்கி சிங்கள இராணுவ மற்றும் சிறிலங்கா அரசின் கொடூர முகம் உலகிற்கு காட்டப்பட்டது. இதனால் மூக்குடைபட்டுப்போன இந்தியா செய்வதறியாது தவித்தது. மிக வேகமாக புலிகளை பற்றிய விமர்சனங்களை பரப்புவதில் குறியாக இருந்தது இந்திய அரசு.

சோபாசக்திி, லீனாமணிமேகலை, ஆதவன்தீட்ண்யா, கவின்மலர், த.அகிலன் மற்றும் இன்னபிற ஊடகவியலாளர்களுடன் மிக கேவலமான பிரச்சாரங்களை முடக்கியிருந்தது யாவரும் அறிந்தவிடையம்.

சிங்கள அரசுமீதான குற்றங்களை மூடிமறைத்து தமிழீழவிடுதலைப்போராட்டம் மற்றும் புலிகள் மீதான காழ்ப்புணர்ச்சி பரப்புரைகளே இந்தியாவில் அதிகளவில் செய்யப்பட்டன. இந்த நிலையில் லீனாவின் வெள்ளைவானின் பின்னணி என்ன என்பது உங்களால் ஊகிக்க முடிந்தாலும் அதற்கு பின்னணியில் இருக்க கூடிய சதியை தெளிவாக புரிந்து கொண்டு ஊடக மட்டத்தில் பரப்புரைகளை செய்வது அவசியமான ஒன்றாக கருதவேண்டியிருக்கிறது.


லீனாவின் சதி

நீதி கோரிய ஆர்ப்பாட்டம் என சொல்லி அதை தனது செங்கடல் படத்திற்கான காட்சியாக மாற்றிய லீனாவின் பின்னணி பின்னர் "டாடா" நிறுவன விளம்பரப் பட தயாரிப்பிற்கு பின் வெளிச்சமானது.

இன்னல் படும் மக்களின் துயரத்தை பணமாக்கும் தந்திரத்தை அறிந்துவைத்திருக்கும் விபச்சாரியான லீனா ஏற்கனவே தனது தேவைக்காக எப்படியெப்படியெல்லாம் பாலியல் லஞ்சம் வழங்கினார் என்று அனைவரும் அறிந்தவிடையம். இது குறித்து இதில் பேசதேவையில்லை.

வெள்ளைவான் ரகசியம் என்ன!!!

சிறிலங்கா அரசுமீதான கண்டனங்கள் எழும்போது "காத்தான் குடி படுகொலை" என தலைப்பை உருவாக்கி புலிகள் மீது கவனத்தை திரைதிருப்பி சிங்கள அரசின் மீதான் விமர்சனங்களை முக்கியத்துவமற்றதாக்கும் நிகழ்ச்சி நிரலை ஷோபாசக்தி குழுவினர் கையாள்வது அனைவரும் அறிந்ததே.

ஈபிடிபி கருணாகரன் தலமையில் சிறிலங்கா அரசினால் அழைத்துவரப்பட்ட இந்திய எழுத்ததாளர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்கரித்த விடையங்களும் விடுதலைப்புலிகள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என்று கூவிய விதமும் அதன் தொடர்ச்சியாக இந்திய பெண் அதிகாரி ஒருவர் விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் மீது வைத்த மிருகத்தனமான விமர்சனமும் ஒரே நிகழ்ச்சி நிரல் என்பதை இத்தனை ஆண்டுகால தமிழீழ அரசியல் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடக்க இருக்கும் பொதுநலவாய மாநாடு மற்றும் அடுத்தவருடம் கூட இருக்கும் மதிர உரிமைகள் பேரவை மாநாட்டில் சிறிலங்காவிற்கு அதிஉச்ச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கும் இந்த நிலையில் சிறிலங்காவில் ராஜபக்‌ஷ அரசு மட்டுமே மனித உரிமைகளை மீறவில்லை என்றும் போரினால் தமிழீழ மக்கள் மீது மட்டும் மனித உரிமைகள் மீறப்பட வில்லை என்றும் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு ராஜபக்‌ஷ கும்பலை காப்பாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை "ரோ"வின் அனுசரணையுடன் லீனா வெள்ளைவானாக தயாரித்திருப்பதாகவே தெரிகிறது.

ஆண்டாண்டுகாலமாக சிறிலங்காவில் எல்லா மக்களுமே பாதிக்கட்டிருக்கிறார்கள் எல்லா அரசுகளுமே குற்றங்கள் செய்திருக்கின்றன எனவே இந்த அரசை மட்டும் குற்றம் சொல்வது சரியாகாது. என்று சொல்வதனூடாக இந்தியா மீதான வெறுப்புணர்வு குறைக்கப்படும் என்ற மோட்டுத்தனமான எதிர்பார்ப்பும் லீனா என்ற விபச்சாரியிடம் காணப்படுகிறது.

ஈபிடிபி கருணாகரனின் ஆதரவில் லீனா வருகைதந்தது சிறிலங்கா இராணுவத்திற்கு தெரியாது என்று அதியுச்ச காமடியை அவிழ்த்து விட்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

லீனாவை மக்களுக்கு தெரியாது என்ற படியால் மக்கள் தமது வலிகளை சொல்லியிருக்கிறார்கள். ஈபிடிபி கருணாகரனினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலரும் புலிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருப்பதாக அறிய முடிகிறது.

இத்தனை வலிக்குள்ளும் சிங்கள அரசு மீதான எதிர்ப்பை பதிவு செய்த பல பெண்கள் லீனா என்பவள் விபச்சாரி மற்றும் இந்திய உளவுத்துறையை சேர்ந்தவள் என்பது மட்டுமல்லாது ஈபிடிபி ஆதரவில் சிறிலங்காவில் உலாவருகிறாள் என்று தெரிந்தவுடன் பதறிப்போய் இருக்கின்றனர்.

தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட விடப்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரமான படுகொலைகளை வெளிக் கொணர்ந்த சனல் 4 ஊடகத்தின் ஆவணப்படம் சிறிலங்கா அரசுமீது வைத்த குற்றச்சாட்டுக்களின் தாக்கத்தை தணிக்கும் விதமாக புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை வைத்து உலக பார்வையின் தாக்கத்தை குறைப்பதற்கான வேலையை லீனா திறம்படச் செய்திருப்பதாக அறிய முடிகிறது.

அந்தோனயின் அந்தப்புர ராணிகளான கவினடமலர், லீனா என தமிழ்நாட்டிலும் சிலர் கனடா உள்ளிட்ட சில இடங்களிலும் நன்றாகவே வேலைசெய்கிறார்கள்.


பார்ப்போம்!!!!

காலம் எங்களை விடுவிக்கும்.


ஆதி
28-10-13

Friday, October 25, 2013

கூட்டமைப்பு அரசியல் யாருக்கு அஞ்சுகிறது!!! # மக்கள் தடைகளை உடைத்தெறிவார்கள்

வடமாகாண தேர்தலுக்குப்பின் வடக்கைப் பொறுத்தவரை மக்களின் நடவடிக்கைகளில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக மாவீரர்கள் மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக மக்கள் திடுக்கிட்டு விழித்ததைப்போல் விழித்திருக்கிறார்கள்.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இல்லாது செய்யபட்டபின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிழலில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில்நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித்தேர்தலை மக்கள் சந்தித்திருந்தாலும் வடமாகாணத் தேர்தல் என்பது வடக்கைப்பொறுத்தவரை மக்களை உசாரடையச்செய்திருக்கிறது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நரித்தனமான அரசியல்

இதுவரைகாலமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தாங்கள் செய்யும் அரசியலை மக்களிடம் சொல்லியது கிடையாது. கிழக்குமாகாணத் தேர்தலில் " தேர்தல் புறக்கணிப்பு" கருத்து பரவலாக மக்கள் மத்தியில் காணப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் பெருமளவில் முடக்கிவிடப்பட்டிருக்கவில்லை. அது போக கிழக்கு மாகாண அதிகாரத்தை முஸ்லிம்காங்கிரஸ் உடன் சேர்ந்து கைப்பற்றுவது தான் என்று சம்மந்தர் தலமையிலான குழு திட்டமிட்டு செயற்பட்டிருந்தாலும் இறுதி நேரத்தில் சலுகைகளுக்காக முஸ்லீம் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டது வரலாற்றில் எழுதப்பட்டுவிட்ட பெரும் கதை.

தவிர கிழக்கு மாகாண தேர்தலைப்பொறுத்தவரை ஒப்பீட்டளவில் பெருமளவான தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்னமாதிரியான அரசியலை செய்கிறது என்று இதுவரை மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டவும் இல்லை அது சம்மந்தமான பொதுக்கூட்டங்களும் நடாத்தப்பட்டவில்லை.

தேர்தல் விஞ்ஞாபத்தில் ஒரு விதமாகவும் கொழும்பு மற்றும் இந்தியாவுடன் இன்னொருமாதிரியாகவும் நரித்தனமான தமிழ்மக்களுக்கு வாழ்நாள் சிறையாக வரக்கூடிய நரித்தனமான அரசியலை சம்மந்தன் குழுவினர் செய்கின்றனர் என்ற சந்தேகம் பலமாகவே எழுந்திருக்கிறது. 

கூட்டமைப்பை மீண்டும் தக்கவைத்த புலிகள்

இந்த நிலையில் வடமாகாண தேர்தலைப்பொறுத்தவரை இறுதிக் கணம் வரை மக்கள் மாகாண அரசியலில் எந்த அக்கறையுமற்று இருந்ததைதே காண முடிந்தது.  மக்கள் எதற்காக இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட கூட்டமைப்பு அரசியல் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து பகிரமங்கமாக மேடைகளில் பேசுவதற்கு தீர்மானித்தது. மாவீர்ரகளுக்கான வீர வணக்கங்கள் செலுத்தப்பட்டன.

இந்த நிலையில் தான் மக்கள் தேர்தலில் எப்படியாவது வாக்களிக்க வேண்டும் என்ற நிலைக்குஉளவியல் ரீதியாக தள்ளப்பட்டனர்.

மக்களின் மாற்றங்கள்.

நீண்டகாலத்திற்கு பிறகு தமிழீழ மண்ணில் மாவீர்ரகளுக்கு வீரவணக்கம் பகிரங்கமாக செலுத்தப்பட்டது மக்களை பொறுத்தவரை இழந்த ஏதோ ஒன்றை திரும்ப பெற்றுவிட்டடோம் என்பது போன்றதான உணர்வு பொங்கி எழுந்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் தங்களை பாதுகாக்க வருவார்கள் போன்றதான ஒருவித வீராப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

பொது இடங்களில் புலிகளைப் பற்றி பேசுவது சட்டத்திற்கு முரணானது அல்ல என்ற சட்ட வெளிகள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரத்தின் பின் மக்களுக்கு புலப்பட்டிருக்கிறது. ஆகக்குறைந்தத அரசியல் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி பற்றி மட்டும்தான் பேச முடியுமே தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்க கூட முடியாது என்ற அரசியல் பார்வை மக்களிடத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.


கூட்டமைப்பின் அரசியல் யாருக்கு அஞ்சுகிறது!!!

சிறிலங்கா இராணுவம் செய்யும் அத்துமீறல்களுக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கி போராட்டங்களை செய்ய மக்கள் தயார் நிலையில் இருப்பது போன்றதான சலசலப்புகள் பரவலாக எல்லா இடங்களிலும் புலப்படுகிறது.

அண்மைக்காலங்களில் சில பிரதேச சபைகளில் (சாவகச்சேரி மற்றும் கரைச்சி) மாவீரர் துயிலுமில்ல புணரமைப்புக் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்படுபவர்கள் மக்கள் மத்தியில் இருக்கும் சராசரி மனிதர்களே. கிராம மக்களுடன் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும் சராசரி மனிதர்கள் தான் பிரதேச சபை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். (மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சராசரிபொதுவாழ்வில் இருந்து சற்று விலகியிருப்பவர்கள்).

பிரதேச சபைஉறுப்பினர்களின் தீர்மானம் என்பது அரசியல் தலமைகளால் ஆலோசிக்கபட்டு பிரேரிக்கபட்டதல்ல. அது அந்தந்த உறுப்பினர்கள் வாழும் கிராம மக்களின் விரும்பம் தான் தீர்மானமாக நிறைவேற்றபடப்டது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பழுத்த தலைகளுக்கு தெரியும். இருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் செல்வாக்குச் செலுத்தும் புறக்காரணிகளுக்காக இன்று தீர்மானத்திற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார்கள்.

மக்களே தாங்கள் போராட தயாராக இருக்கும் போது, வீதிக்கு இறங்க தயாராக இருக்கும் போது கூட்டமைப்பின் அரசியல் எதற்கு அஞ்சுகிறது??

கரைச்சிப்பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இருந்த பல மாவீரர் நினைவகங்களை மக்கள் துப்பரவு செய்துவிட்டார்கள். உருமறைப்புச் செய்து அதற்கான மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள்.

கனகபுரம் மாவீர்ர துயிலுமில்லத்தை துப்பரவு செய்வதற்காக விளக்குமாறு, மண்வெட்டி, கத்தி, கோடாரி, குப்பைவிறாண்டி என பல ஆயுதங்களுடன் சனம் தயாரான செய்தி சம்மந்தர் தலமையிலான கூட்டமைப்பினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மக்களைப்பொறுத்தவரை "ஒருத்தன் செய்தா குற்றம் அதையே நூறுபேர் சேர்ந்து செய்தா போராட்டம்" என்ற நிலையில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அரசியல் வழிகாட்டிகளாகவும் சட்டத்தையும் சட்டத்தால் எப்படி எப்போது தோற்கடிக்கப்படுவோம் என்பதையும் சரியான முறையில் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அரசியல் தலைவர்(கள்) இருந்தால் இன்று வடபகுதியென்ன கிழக்கிலும் மக்கள் வீதிக்கிறங்கி பெரும் செய்தியை சர்வதேசத்திற்கு கொடுக்க தயாராகவே இருக்கிறார்கள்.

கூட்டமைப்பை அச்சுறுத்தும் சக்தி எது என்பதை மக்களிடம் நேரடியாக பேச வேண்டும். கூட்டமைப்பு எவ்வாறான பேச்சுக்களில் ஈடுபடுகிறது என்பதை மக்களிடம் நேரடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

சம்மந்தர் தலமையிலான சில குழுவினர் அடிவருடித்தனமான அரசியலை செய்கிறார்கள் என்று நினைக்கும் பட்டத்தில் மக்கள் பாராளுமன்றம் அனுப்பிய மற்றையவர்கள் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அரசியலில் இருந்து விலகி இந்தியா மற்றும் கனடாவில் இருக்கும் தத்தம் குடும்பங்களுடன் இணைந்து குடும்ப வாழ்வில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

மக்களைப்பொறுத்தவரை விடுதலைதான் முக்கியம். அதற்காக எந்தப் போராட்டத்தையும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். புலிகள் இல்லாத இந்த நிலையில் சரியான வழிகாட்டலுடன் மக்களை போராடச் செய்ய வேண்டியது தமிழீழ மக்களுக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.


ஆதி
26-10-2013

Monday, September 23, 2013

தமிழீழ மக்களுக்கு முதலாவது ஆப்பு வைக்க தயாராகிறதா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் மக்கள் விடுதலைப்புலிகளின் அபிமானிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கருத்தில் கொண்டு பெரு வெற்றியீட்டச் செய்திருக்கிறார்கள்.

மாகாண அரசியல் என்பது பூச்சாண்டி என நன்கு அறிந்து வைத்திருந்தும் சர்வதேச அரசியல் அரங்கிற்கு தமது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லும் ஒரு சந்தர்ப்பமாக மாத்திரமே இதை தமிழீழ மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்கள் மீதான தனிப்பட்ட நம்பிக்கையில் வாக்குகள் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

தனியே சிங்கள பேரினவாத்தை மட்டும் அகற்றியது மட்டுமல்லாது கூட்டமைப்புக்குள் ஒழிந்திருக்கும் குள்ள நரிகளையும் இனங்கண்டு துரத்தியிருக்கிறார்கள் தமிழீழ மக்கள்.

குறிப்பாக இந்திய வல்லாதிக்க வற்புறுத்தலினால் கூட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஆனந்த சங்கரியை தமிழீழ மக்கள் கிளிநொச்சி அரசியலில் இருந்து வெளியேறும்படி சொல்லியிருக்கிறார்கள். (2,500 வாக்குகள் விழுந்தனதானே என்று எண்ணுபவர்களுக்கு தொடரந்து வாசிக்க விளங்கும்).

கிளிநொச்சி மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஆனந்தசங்கரிக்கு இந்திய சிங்கள வல்லாதிக்க வற்புறுத்தலில் மேலதிக ஆசனத்தில் ஒன்றை வழங்குவதற்கு சம்மந்தர் அவர்கள் தயாராகிவருவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.

புலிகள் நிர்வாகத்தில் இருந்த வேளை நடந்த தேர்தலில் சங்கரிக்கு கிளிநொச்சியில் இருந்து விழுந்த அந்த ஒரே ஒரு ஓட்டுப் போட்ட கந்தப்பு (பசுமாடு வாங்க காசு தாறன் என்று ஆளுக்கு சங்கரி கடிதம் போட்டது அப்ப) கூட இன்று வெளியாகியிருக்கும் செய்தி கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

சங்கரி அப்படி என்ன செய்தார்!!!

சம்மந்தர் அய்யா போல் சங்கரியும் ஒரு இந்திய விசுவாசி என்பதற்கப்பால் சிங்கள அரசுகளின் நிரந்தர நண்பர். அமைச்சுப்பதவியில் இல்லாத ஒரு கதிர்காமர்தான் சங்கரி.

சங்கரியில் கடந்த 6 வருட (அதற்கு முற்பட்டவை பற்றி எல்லோருக்கும் பொதுவாக தெரியும்) அரசியல் செயற்பாடுகள் குறித்து நுணுக்கமாக பார்த்தால் எல்லாம் புரியும்.

அன்ரன் பாலசிங்கண்ணை மற்றும் தமிழ்ச்செல்வண்ணையின் இழப்புகளை தொடர்ந்து தமிழீழ சர்வதேச அரசியல் செயற்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டமை வெளிப்படையானது. இந்த நேரத்தில் தான் சங்கரி மிக கேவலமான தனது அரசியலை முழு மூச்சுடன் செய்ய ஆரம்பித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் பல மோசமான பொய்க்குற்றச்சாட்டுகளை சர்வதேச அரசியல் தலைவர்களுக்கு வழங்கியதில் சங்கரியின் பங்கு பெரிது.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்குமாக மாறி மாறி ஓடி ஏராளமான சதிகளை செய்தவர்தான் சங்கரி. இந்தியாவின் சுப்ரமணியசுவாமியாகவும் சிங்களத்தின் கதிர்காமராகவும் செயற்பட்டார்.

இனப்படுகொலைப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் சிங்கள விசுவாசம் செய்த ஆனந்தசங்கரி இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகிறார்.

2008 இல் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாமல் தங்கியிருந்த குடும்பங்களை சந்திக்க வந்த சங்கரி "எனக்கு வன்னி உடும்பு இறச்சியும் புட்டும் சாப்பிட ஆசை.. எங்க பிரபாகரன் விட்டாத்தானே" என்று கதையளந்து சனம் வெளில போக சொல்லி அனுப்பின சம்பவம் நடந்தது.


சங்கரியை அரசியலுக்குள் கொண்டுவர நினைப்பது யார்!!

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிரான ஆனந்த சங்கரியை மக்கள் திட்டமிட்டு நிராகரித்த பின்னரும் ஆனந்தசங்கரியை மாகாணசபை உறுப்பினராக்கி அழகு பார்க்க நினைக்கிறது இந்திய சிங்கள அரசியல் கூட்டு சதிகள்.

இத்தனை நாளாக தமது அராஜகங்களுக்கு துணை போய் தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை காட்டிக் கொடுத்தமைக்காக மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் தமது அழுத்தங்களினால் அப்படியாவது பலவந்தமாக ஆனந்தசங்கரிக்கு ஒரு அரசியல் இருப்பை செய்து கொடுப்பதற்காகவே முயற்சிக்கின்றன என்று தெரிகிறது.


தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள்

மேலதிக ஆசனத்தில் மக்களால் முழுமையாக நிராகரிக்கபட்ட ஆனந்த சங்கரி  மக்களுக்கான அரசியலில் பலவந்தமாக திணித்து உங்கள் இந்திய அடிமைத்தனத்தை எமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டாம்.

இந்திய வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த தேர்தல் நடாத்தப்பட்டதும் அதற்காக பிரச்சினைகள் சிங்கள பேரினவாத அறிக்கைகள் சோடிக்கப்பட்டதும் அனைவரும் அறிவோம். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலைவீரர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகளால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்றும் நீங்கள் ஏற்றுக் கொண்டு சிங்கள இராணுவத்தின் முன் நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்காக மாத்திரம் தான் எங்கள் சனம் அடக்குமுறைகளையும் உடைத்து வாக்களிப்பு நிலையம் வந்தது.

சனம் எப்படி ஓட்டுப்போட்டது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கூட்டமைப்பை தெரிவு செய்யும் அதே வேளை தவறானவர் தெரிவு செய்யப்படக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே சனம் இருந்தது.

முதன் முறையாக ஓட்டுப்போட வந்த சனமும்.. பதட்டத்தில் தாங்கள் பிழையாக ஓட்டுப்போடக் கூடாது என்று எப்படி ஓட்டுப் போடுவது என்று கேட்டறிந்து வந்த சனமும் கூட்டமைப்பிற்காக வரவில்லை. புலிகளுக்காக தான் வந்தார்கள் என்பதை நினைவல் வைத்து மக்களால் நிராகரிப்பட்டவர்களை நிராகரிக்கப்பட்டவர்களாகவே கருதும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக ஆசனத்தில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.

ஆனந்தசங்கரி என்ற நரியைவிட ஈபிடிபி கும்பலில் போட்டியிட்டவர்கள் சிலருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கட்டுரை சங்கரியை மேலதிக ஆசனத்தில் வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்ய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யோசனை வைத்திருப்பதாக வெளியாகிய செய்தியை அடிப்படையாக வைத்து சங்கரி குறித்த அரசிலையும் நிராகரிப்பையும் பேசுவதற்காய் எழுதப்பட்டது.


ஆதி
கிளிநொச்சி.
23-09-13






















































Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP