Powered by Blogger.

Tuesday, December 10, 2013

தாய்லாந்து போராட்டம் சீனாவின் நேரடிப்பலப்பரீட்சையா!! #தெற்காசிய சமகால அரசியல்

தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மத்தியகிழக்கில் மேற்குலகின் ஆதிக்கம் அல்லது கைப்பொம்மை ஆட்சிகள் உருவாக்கபட்டுவரும் நிலையில் தெற்காசியாவில் சீனா தனது பலத்தை பரிசோதிக்கும் களமாக தாய்லாந்து இருக்கலாம்.

தாய்லாந்து அரசியல் போராட்டத்தின் பின்னணியில் சீனா இருக்கிறது எனக் கூறப்படும் கருத்து உண்மையாயின் எதிர்காலத்தில் தெற்காசியாவில் பெரும் அரசியல் மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே பர்மாவில் சீன - அமெரிக்க - இந்திய அரசியல் இழுபறிகளில் பலப்பரீட்சைகள் செல்வாக்கு செலுத்திவரும் நிலையில் தாய்லாந்தில் சீனாவின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்படுமாயின் அண்டைநாடான மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வெளிப்படையான சீன ஆதிக்கத்தை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் சிறிலங்காவை சீனா தனது கட்டுப்பாட்டில் அல்லது சீனாவிரும்பும் ஆட்சிமாற்றங்களை உருவாக்கும் வல்லமை பொருந்திய நாடாக மாற்றுவதற்கான சாதகங்கள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

இந்தியம் மற்றும் இந்தியத்தின் பிராந்திய ஆதிக்கம் ஏற்கனவே ஆட்டம் காணும்  நிலையில் இருப்பதால் இந்தியாவில் இருக்க கூடிய தனிப்பெரும் இனங்கள் தமது சுய விடுதலைகுறித்து சிந்திக்க வேண்டிய காலம் உருவாகி இருக்கிறது.

இந்தியம் என்ற மாயைக்குள் சிக்கி இருக்கும் பெரும் இனங்களுக்கு சுய விடுதலை குறித்து சிந்திப்பதற்கோ அல்லது போராடுவதற்கோ இன்றைய காலங்களில் துணிவும் செய்ற்பாட்டு பொறிமுறையும் இல்லாது இருப்பினும் கட்டாயம் இந்திய மாயையை உடைத்தெறிய வேண்டிய நிலையை காலம் விரைவில் உருவாக்கும் என்றே தெரிகிறது.


ஆதி
10-12-13

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP