Powered by Blogger.

Wednesday, December 18, 2013

இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டமும் அரசின் சூழ்ச்சியும்.

இதன் பின்னணியில் குறுகியகால மற்றும் நீண்டகால பெரும் சதித் திட்டங்கள் இருக்கலாம். முழுமையான தகவல்கள் இன்னமும் ஊடகப்படுத்தப்படாத நிலையில் இன்று ஊகிக்க கூடிய சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்கல் திட்டத்தை கொண்டுவந்தது தற்போதைய யாழ் அரச அதிபர் தலமையிலான குழு என்று அறியப்படுகிறது.

மட்டக்களப்பில் இருந்து ராஜபக்சவால் யாழிற்கு இடமாற்றம் பெற்ற கணேஸ் யாழ்மாவட்ட நிலமைகள் மற்றும்நிர்வாக செயற்பாடுகளில் பரீட்சையமாவதற்கு முன்னரே அவசர அவசரமாக இரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்.

இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டத்திற்கு இருபதினாயிரம் மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கபட்டிருப்தாகவும் சொல்லப்படுகிறது.


இரணமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குளத்து நீரை கொண்டு செல்வதற்கும் அதற்கான வழங்கல் வடிகாலமைப்புகளை நிர்மாணிப்பதற்கும் இருக்க கூடிய பொறியியல் மற்றும் சட்டவாக்கல் செலவுகளுக்கு யாழ்ப்பாணத்திலேயே நிரந்தர மழைநீர் சேகரிப்பு திட்டங்களையும் தரவை உள்ளிட்ட நீர்தேங்கல் நிலங்களை புனரமைக்கவும் முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில் நீர் சேகரிப்பு நிலங்களை இனம் கண்டு அதை புனரமைப்பதைவிடுத்து இரணைமடுவில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டும் என விடுக்கபட்டிருக்கும் யாழ் "அரசாங்க" அதிபரின் கோரிக்கைக்கு பின்னால் இராணுவ மற்றும் அரசியல் நலன்கள் இருப்பதை யாழ் மற்றும் கிளிநொச்சி மக்கள் நன்கறிவார்கள்.

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு நீர்வழங்கல் பொறிமுறைகளை அமைப்பதென்பது ஏராளமான நீர் நிலைகள் மற்றும் தனியார் காணிகள், வீதிகளை ஊடறுத்து செல்ல வேண்டும். இருக்க கூடிய சட்டப் பிரச்சினைகளை ஆழும் அரசு என்ற ரீதியில் அதிகாரப்போக்கில் வென்றாலும் கண்மூடித்தனமானக யாழ் மக்களிற்காக இருபதினாயிரிம் மில்லியனை முதலீடு செய்ய சிறிலங்கா அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மிக அவதானமாக அணுக வேண்டும்.

இருபதினாயிரம் மில்லியன் ரூபாய்களை இலாபத்துடன் சிறிலங்கா அரசு எப்படி மீளப் பெற திட்டமிட்டுருக்கிறது என்பதை புத்திஜீவிகள் ஆய்வு செய்ய வேண்டும். இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் சிறிலங்கா அரசு எப்படியான திட்டத்தை வைத்திருந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியது தமிழர்களுக்கு மிகப்பெரிய சவால்.

முதலீடு செய்த பணத்தை இலாபத்துடன் மீளப்பெறுவதற்கு தமிழர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படலாம் அல்லது சிங்களவர்கள் குடியேற்றப்படலாம்.

இரப்பர் போன்ற "பணப்பயிர்" விவசாயத்தை ஊக்குவித்தல் எனும்பெயரில் சிங்களவர்கள் குடியேற்றப்படலாம்.

இதனால் அரசாங்கத்தின் முதலீட்டு சிந்தனையும் அதன் எதிர்கால குறிக்கோளும் பற்றி ஆய்வு செய்ய வேண்டியது தமிழீழ பொருளியலாளர்களின் கட்டாயக் கடமையாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய பேராசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தர மழைநீர் சேகரிப்புத்திட்டங்கள் குறித்தும் அதனை எப்படி கட்டியெழுப்புவது குறித்தும் ஆய்வு செய்துபிரேரிக்க வேண்டும்.



இரணைமடு நீரை வெளியேற்ற வேண்டும் என்ற சிறிலங்கா யாழ் "அரச" அதிபரின் கோரிக்கையின் பின்னால் இருக்க கூடிய இராணுவ மற்றும் அரசியல் தேவைகள் குறித்து பார்ப்போம்.

சிறிலங்காவின் நீண்டகால இராணுவ மற்றும் அரசியல் திட்டம்:

இரணைமடு-யாழ்ப்பாண நீர்வழங்கல் திட்டம் நிறைவேற்றப்படுமானால் அதன் பிற்பாடு இரணைமடுவின் நீர்மட்ட அளவு குறித்து யாரும் பேசப்போவதில்லை. நீர்வழங்கல் திட்டம் சீரானதாக நடைபெறுகிறதா என்பதை மட்டுமே கண்காணிப்பார்கள்.  இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தபடுமானால் அதனால் தொடங்கப்படும் அத்தனை வர்த்தகங்களும் சரியானதாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே முக்கிய நோக்கமாக கண்காணிக்கப்படும். இருபதினாயிரம் மில்லியனை எந்தவொரு வருமானமும் இன்றி வடக்கில் முதலீடு செய்ய அரசு ஆர்வமாக இருக்கப்போவதில்லை.

இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் ஆரம்பிக்கபட்டு,
ஒருவேளை இரணைமடுவின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நீர்போதுமானதாக இல்லை எனவே யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்கலை நிறுத்தி வையுங்கள் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை எழலாம் அப்பிடியான ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் மிகப்பெரிய பிரதேசவாத பிரித்தாளும் நிலையை உருவாக்க முடியும் என சிறிலங்கா மற்றும் இந்திய அரசு திட்டம் தீட்டியிருப்பதாகவே தெரிகிறது.

தமிழர் பிரதேசங்களை பிரித்தாள வேண்டும் என்ற திட்டம் இந்திய அரசினால் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது மாவிலாற்று அணை மூடப்பட்டு போர் தொடங்கி வைக்கபட்டதில் இருந்து புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.

ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் தமிழர் தாயகங்களை சாதுர்யமாக கூறுபோட்டிருக்கிறது இந்தியா. திருகோணமலை துறைகமுகம் உள்ளிட்ட பகுதி சம்பூர் மற்றும் மட்டக்களப்பின் சில பிரதேசங்களையும் இந்தியா அபிவிருத்தி எனும் பெயரில் தன்னகப்படுத்தி தமிழ் மக்களை வெளியேற்றியிருக்கிறது.

மக்களிடத்தில் இடைவெளியையும் ஒருவித பதட்டத்தையும் உருவாக்கி வைத்திருப்பதால் தமது ஊடுருவல்களை இலகுவாக செய்யலாம்என்பது இராணுவ உத்தியாகும்.

இரணைமடு ஏன் கருப்பொருளானது.

இரணைமடுவில் விடுதலைப்புலிகளால் "இலகு ரக" விமானங்களிற்கான இறங்குதளம் ஒன்று காணப்பட்டதும் அதை சிறிலங்கா அரசு புனரமைத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதும் யாவரும் அறிந்த விடையம்தான்.

இன்று சிறிலங்கா அரசால் புனரமைக்கபட்டு பெரிய விமானங்களுக்கான தளமாகவும் அதாவது அதிவே இராணுவ விமானங்களுக்கான தளமாகவும் உருவாக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

அதிவேக விமானங்களுக்கான தளமாக அது மாற்றபடப்டிருந்தால் அது இரணைமடு குள அணைக்கட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும்.

இரணைமடு நீர்மட்டத்தை எப்போதும் குறைவாகவே வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அதிவேக விமானங்களின் தேவைகளுக்கு இறங்கு தளம் பாவிக்கப்படும் போது நிலத்தில் ஏற்படக்கூடிய அதிர்வானது பெரும் நீர் அழுத்தத்தினால் காணப்படும் அணைக்கட்டை உடைக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் நீர்மட்டத்தை வழமையை விட மிகக் குறைவாகவே இராணுவம் வைத்திருக்க விரும்பும்.


சிறிலங்கா அரசின் பெருமெடுப்பிலான முதலீட்டு சிந்தனையின் பின்னணியில் வடக்கைப்பொறுத்தவரை இராணுவ நலன்கள் இருக்காமல் இருக்க முடியாது.


இரணைமடு-யாழ் நீர்வழங்கல் திட்டம் குறித்து மக்களிடத்திலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடையேயும் பேசப்படும் அழவிற்கு வடக்கில் இருக்க கூடிய அரச ஆதரவு கட்சிகளிடமிருந்தோ நேரடி அரச அமைப்புகளிடமிருந்தோ எந்த கருத்துக்களும் வெளிப்படாமல் இருக்கிறது.


அவதானித்துக் கொண்டே இருப்போம்.


ஆதி
19-12-13















No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP