Powered by Blogger.

Thursday, January 30, 2014

காட்டிக் கொடுப்பாளர்கள்

காட்டிக் கொடுப்பாளர்கள்.
பகிரங்க இன அழிப்பை சிங்கள அரசு முள்ளிவாய்க்காலில் நடாத்தி முடித்து 5 வருடங்கள் கழியும் நிலையில் பல காட்டிக் கொடுப்பாளர்களை இனம் காண முடிந்திருக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்கள் முன்னாள் போராளிகள் என காட்டிக் கொடுக்கபட்டவர்கள் ஒருபுறம் இருக்க தனித்து நிற்கும் தமிழீழ மக்களின் அரசியலையும் தாறுமாறாக காட்டிக் கொடுப்பு செய்யும் எழுத்தாளர்கள் பகிரங்கமாகவும் நாசுக்காகவும் இழையோடியிருக்கிறார்கள்.
துணைராணுவக் குழுக்களின் அரசியல் பரப்புரைப்பிரிவாக செயற்படக்கூடிய சோபாசக்தி கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு புறமும் தங்களை பெரும் உணர்ச்சியாளர்களாகவும் புரட்சியாளர்களாகவும் காட்டும் சில புலம்பெயர் கும்பலும் சோபாசக்தி கும்பலுடன் இயங்க கூடிய தமிழ்நாட்டு கும்பலுமாக மூன்று தரப்பட்ட தளங்களில் இந்த இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனந்தி அக்காவிற்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதற்கு முதலும் சமகாலத்திலும் இந்த கும்பல்கள் எப்படி எழுதியிருந்தன என்பதை வைத்து இந்த கும்பல்களை புரிந்து கொள்ளுங்கள்.
வீதியில் இறங்கி மக்களோடு நின்று போராடுவதால் அனந்தி அக்காவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளின் பார்வை வளையத்திற்குள்ளும் வந்ததால் யோ.கர்ணன் அனந்தி அக்காவை புலிமுகப்பெண் என்ற கட்டுரையில் பயங்கரவாதி முத்திரை குத்துவதற்கு படாத பாடுபட்டிருப்பது தெரியும்.
இதே தொடர்ச்சியாக தங்களை தமிழீழ உணர்வாளர்களாக காட்டிக் கொள்ளும் சில புலம்பெயர் கும்பல் அனந்தி அக்காவை தாங்கள் தான் அரசியலுக்கு கொண்டு வந்தது போலவும் அவர்களால் தான் அனந்தி அக்காவால் இவ்வளவு செயற்பட முடிகிறது போலவும் பினாத்தல் கதைகளை அவிட்டுவிட்டு சிக்கலில் அனைவரையும் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதியிருப்பவர்கள் புலம்பெயர் தேசங்களில்நடக்கும் எந்தவொரு போராட்டங்களிலும் பங்கெடுப்பது கிடையாது. அதேபோல் யோ.கர்ணன் உள்ளிட்ட கும்பலும் இங்குள்ள மக்களின் போராட்டங்களில் பங்கெடுப்பது கிடையாது.
அனந்தி அக்காவை சிக்கலில் மாட்டுவதற்கு யோ.கர்ணன் கும்பல் எடுத்த முயற்சியும் இந்த புலம்பெயர் கும்பல் ஒன்றின் செய்திக் குறிப்பின் நோக்கமும் ஒன்றாகவே காணப்படுகிறது.
எப்படா எதாவது துப்பு கிடைக்கும் என்று ஏக்கத்தோடு இருக்கும் எதிரிக்கு பல்லவியை எடுத்துக் கொடுக்கும் இந்த கும்பல்கள் குறித்து மிக அவதானமாக இருக்க வேண்டும்.
கடந்த 2012ம் ஆண்டு மாவீரர் தினம் நடைபெற்ற போது ஏற்பட்ட சிங்களத்தின் அத்து மீறல்கள் மற்றும் அடாவடித்தனத்திற்கும் இந்த கும்பல் ஒன்றுதான் காரணமாக இருப்பதாக அறியமுடிகிறது. தாங்கள் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்னமாதிரியான வேலைகளை செய்கிறார்கள் என்பதை முகநூல் மற்றும் இணையங்களில் வர்ணனை போல் செய்து எதிரியின் கண்காணிப்பை இலகுபடுத்திய கும்பலும் இதுதான் என்று அறியமுடிகிறது.
இணைய பிரபலத்திற்காக எதையும் எழுதாதீர்கள். எழுதும் போது யோசியுங்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாமே சினிமாவும் இலக்கியமும்தான். 30 வருடத்திற்கு மேலாக போராட்டம் செய்யும் சனங்களின் ரகசியமும் அதன் வினைத்திறனையும் போராட்ட கண்ணினூடாக பார்ப்பதற்கு பரீட்சயமற்றவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அது அவர்களின் தவறு அல்ல.
எமது போராட்டம் இன்னமும் முடிந்துவிடவில்லை. எமக்காக சர்வதேச அரங்கில் குரல்கொடுக்க நாடுகள் இல்லை. வெறுமனே இந்த மக்களின் ரத்தம் கண்ணீர் துயரம் மற்றும் விடுதலை வேட்கையில்தான் இத்தனை ஆண்டுகால போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் போராட்டம் தலமைகள் குறித்து எழுதும் போது பேசும் போது மிக அவதானமாக இருக்க வேண்டியது எல்லோருடைய கடமை.


No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP