Powered by Blogger.

Friday, November 9, 2012

களம் திறக்கபட்டுவிட்டது... உங்களுக்கு தெரியுமா?? # பாவனைக்கு வந்திருக்கும் துப்பாக்கிகள்

இன்றைய சம்பவங்கள்.

1. விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் தளபதி பரிதி மீதான படுகொலைத் தாக்குதல்
2. ராஜபக்ஷவின் பட்ஜட் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
3. வெலிக்கடைச் சிறையில் கைதிகளின் கையில் ஏகே.47 (பொலிசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இராணுவம்தான்    கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மோதலை செய்வதாக அவசர செய்திகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் "வெளிப்படையாக" விடுதலைப்புலிகளின் தளபதி நிலை செயற்பாட்டாளர் மீது பிரன்ஸில் வைத்து தாக்குதல் நடாத்தப்ட்டிருக்கிறது. படுகொலையில் முடிந்திருக்கம் இந்த தாக்குதலை எந்த இராணுவம் செய்தது?? செய்ய வேண்டிய தேவை என்ன?? என்பவற்றோடு தாக்குதல் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நேரமும் முக்கியமானவிடையம்.

தமிழீழ மக்களே!!!
எம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளை தமிழக நாளேடுகளின் கருப்பொருள்போல் வெறுமனே செய்தியாகவும் சம்பவங்களாகவும் பார்க்காமல் அரசியல் ரீதியாகவும் தர்க்கரீதியான புலனாய்வுச் சிந்தனையோடும் அணுகுங்கள்.

தளபதி பரிதி அண்ணருக்குக்கு எனது வீரவணக்கங்களை தெரிவித்துக் கொண்டு இந்த சமகால பார்வையை தொடர்கிறேன்.

தளபதி பரிதி அண்ணர் மீதான தாக்குதலானது "றோ" உளவுப்பிரிவினதும் சிங்கள ஒட்டுக்குளுக்களினதும் திட்டமிட்ட தாக்குதலாக இருந்தாலும் இருவரினதும் நோக்கம் வெவ்வேறானதாகவே தெரிகிறது.

இந்தியாவிற்கு தலையிடிகொடுக்கும் புலிகளின் நிலை.

விடுதலைப்புலிகள் ஆயதங்களை மெளனிப்பதாக அறிவித்து ஆயிரக்கணக்கான போராளிகளும் சரணடைந்தனர். முக்கியமாக அரசியல் மற்றும் ஆவணப் பிரவுகளின் மூத்த தளபதிகள் போராளிகள் உட்பட பல இராணுவ மட்ட தளபதி நிலைப்போராளிகளும் ஏனைய போராளிகளுமாக ஆயிரக்கணக்கில் சரணடைந்திருந்தனர். இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சர்வதேச மட்டத்தில் ஊடுருவிவிட்டதாகவும் சிலர் உள்நாட்டில் இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அடிக்கடி சொல்லிவருவது யாவரும் அறிந்ததே.

இந்திய இராணுவத்தினுடனான மோதல் மற்றும் சிறிலங்கா ராணுவத்தின் மிலேச்சத்தனமான நிலப்பிரிப்பு இராணுவ நடவடிக்டகைகளையும் சாதுர்யமாக கடந்துவந்த விடுதலைப்புலிகள்...  2009ற்கு பிறகு தமிழ் மக்கள் மீது எத்தனையோவிதமான அடககு முறைகளை சிங்கள அரசு மேற்கொண்டும் ஏன் இன்னமும் எந்தவித பதில் நடவடிக்கைகளையும் உள்நாட்டில் செய்யவில்லை என்பது பலருக்கு பீதியை உருவாக்கியிருக்கிறது.

தவிர இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறும் தொடர்ச்சியான அழுத்தங்கள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.  சமாந்தரமாக தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சிறிலங்கா ஒரு நச்சுக்களைகளைக் கொண்ட நடாக உருவெடுத்துவருகிறது.

இதனால் சிங்கள தேசத்தை அடக்குவதற்கு கட்டாயமாக இந்தியாவிற்கு தமிழீழ மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தமிழீழத்தையும் தமிழ் மக்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்தியா குறியாக இருக்கின்றனர். முதலாவதற்கு புலிகளின் மீள் வருகையும் இரண்டாவதற்கு புலிகள் மீதான தொடர்ச்சியான தடையும் தேவைப்படுகிறது. அதாவது புலிகள் மீள்வருகை உறுதிப்படுத்ப்படால் புலிகள் மீதான தடையை எடுக்க தேவையிலடலை. புலிகள் மீதான தடையிருக்கும் பட்சத்தில் அதை தமிழீழத்திற்கு பெரும் தடையாக பயன்படுத்டதலாம் என்பது இந்திய பெருச்சாளிகளின் நிலைப்பாடு.

இதனால் புலிகளை சீண்டி எப்படியாவது களத்திற்குள் இழுக்க வேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காக சர்வதேச செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களை இனிவரும் நாட்களில் "றோ" மேலுவும் தீவிரப்படுத்தலாம்.

ராஜபக்ஷவுக்கும் புலிகள் தேவை

புலிகளை மாத்திரமே காரணம் காட்டி இன்று சிறிலங்காவை குடும்பகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் ராஜபக்ஷவிற்கு உள்நாட்டில் என்றுமில்லாதவாறு சதிகள் உருவாகிக் கொண்டிருப்பதாக அச்சம் கொண்டிருப்பதாகப்படுகிறது. ஒருவை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் அது ராஜபக்ஷ பரம்பரையே அழித்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால் புலம்பெயர் தமிழர் செயற்பாட்டாளர்பகளை முடக்குவது. அங்கும் விடுதலைப்புலிகளை தாக்கி அழிக்க முடியும் என்பது போன்றதான "சிங்களச் செய்திகளை" வெளியிடுவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு கட்டாய தேவையாக இருக்கிறது.

அது போக உள்நாட்டில் விடதலைப்புலிகளின் ராணுவ செயற்பாடுகள் ஆரம்பித்தால் அதைக் காரணம் காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்தும் அரசியல் எதிர்பைக்கிளப்பும் எதிர்சாராரிடம் இருந்தும் தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பது ராஜபக்ஷவின் நினைப்பு.

இவை அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் புலிகளின் மெளனம் கலையவேண்டும்.

இப்படி தத்தமது நலன்களின் அடைப்படையில் விடுதலைப்புலிகளின் மெளனத்தை  சோதித்துப்பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

எத்தனையோ வருடங்கள்... எத்தனையோ வலிகள்.. எத்தனையோ இழப்புகளுக்குள் மத்தியில் கள முனைகளில் நின்ற போராளிகள் அதே எதிரியிடம் சரணடையும் முடிவை புலிகளின் தலமை எடுக்க முதல் எத்தனையாயிரம் தடவை என்னென்னவற்றையெல்லாம் யோசித்திருக்கும் என்பது தமிழீழ மக்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய ஆத்ம உறவு அது.

என்னதான் இருந்தாலும் சொல்லணாத்துன்பங்களையும்... எழுத்தில் கொட்டிவிட முடியாத வலிகளையும்.. மரணங்களையும் கொடுத்து போராடிக் கொண்டிருக்கம் தமிழீழ மக்களின் பொறுமை தொடர்ந்து இப்படியே இருக்கும் என்று யாரேனும் நினைப்பார்களாக இருந்தால்  அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்று அர்த்தம்..

http://aathithyank.blogspot.de/2012/11/blog-post_9.html
ஆதி
09-11-12

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP