Powered by Blogger.

Friday, November 16, 2012

சிறிலங்காவை அடுத்த பர்மாவாக மாற்ற பெரும் வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறது இந்தியா # தமிழீழ மக்களுக்கு எச்சரிக்கை _ பகுதி 1

அன்பான தமிழீழ உறவுகளே!!

இது ஒரு அவசரமான எச்சரிக்கைப்பதிவு தயவு செய்து விழிப்பாய் இருப்பதுடன் இலட்சியம் தவாறாது இயன்ற வழிகளில் போராடுங்கள். சோர்ந்து கிடப்போரை தட்டி எழுப்புங்கள். ஏறத்ததாள பெருமளவு இந்தியர்கள் ஊடுருவிட்டார்கள்.

1989ம் ஆண்டு பர்மா என்ற பெயரை மியான்மர் என்று மாற்றியது இராணுவ அரசு.

முதலில் பர்மாவில் நிகழ்ந்த விடுதலைப்போராட்டங்கள் எப்பிடி நசுக்கப்பட்டு இன்று இராணுவ ஆட்சிக்கு அங்கிகாரம் அளிக்கபட்டிருக்கிறது என்பதை "சுருக்கமாக" பார்ப்போம்.

பர்மாவில் தேசிய சிறுபான்மை இனங்களாக இருக்க கூடிய
1) கரேன்
2) ஆரக்கான்

என்ற இனங்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக தனிநாட்டு போராட்டங்களை நடாத்திவந்தன. (இந்த இனங்களின் தேசிய வரலாறு குறித்து நான் இங்கு பேசப்போதில்லை)

இந்த இனங்களின் போராட்ட அமைப்புகளிற்கு தனித்தனியாக இந்திய அரசு பயிற்சிகளையும் இராணுவ தளபாடங்களையும் சீருடைகளையும் உணவுப்பொருட்களையும் ஏன் அலுவலகங்களை கூட இந்தியாவில் அமைத்துக் கொடுத்தது.
பர்மாவை சுற்றியிருக்க கூடிய எரிவாயு வளத்தை சுரண்டுவதற்கு தான் நினைக்கும் அரசு பர்மாவில் அமைய வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காக போராட்ட இயக்கங்களை ஆதரித்து தான் நினைக்கும் அரசை நிறுவிவிடலாம் என்று நம்பியது.

இந்தியாவின் நயவஞ்சக போக்கை காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்ட போராளிக் குழுக்கள் விழிப்படைய ஆரம்பித்தன. அதே சமயம் சீனா பர்மாவின் இராணுவ ஆட்சி அரசுடன் நெருங்கத் தொடங்கியது.

உடனே போராளிக் குழுக்களின் தலைவர்களை பேச்சுவாரத்தைக்கு என்று அழைத்து முக்கிய தலைவர்களை சுட்டுக் கொன்றது இந்திய அரசு. ஏனைய போராளிகளை அந்தமான் உள்ளிட்ட பல தேசங்களில் சிறைவைத்தது. இன்னும் பலரை பர்மா இராணுவ அரசிடம் கொடுத்தது.

இருந்தாலும் போராட்ட குழுக்கள் மீண்டும் தலைப்பட்டது. உடனே தனக்கு சாதகக இருந்த போமாராளிகளை ஒழுங்கமைத்து விடுதலைக்காக போராடிய குழுக்கள் சிதைக்கப்பட்டது. போராட்ட குழுக்கள் தமது தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஒன்றிணைந்த பர்மாவிற்கான விடுதலைப்போராட்டம் என்று செயற்பட்டார்கள்.

அந்த மக்களின் சுயநிர்ணய விடதலைப்போராட்டத்தை நிதந்தரமாக அழிப்பதற்கு இந்திய வல்லாதிக்கம் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பல ஆயிரக்கணக்கான போராளிகள் இன்னமும் இந்திய மற்றும் அந்தமான் தீவுகளின் வதைமுகாம் சிறைக்கூடங்களில் இந்திய வல்லாதிக்கத்தால் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

இந்த விடுதலைப்போராட்டங்களை அழிப்பதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்காற்றயிருப்பதாக பதிவுகள் சொல்கின்றன.

விடுதலைப்போராட்ட தலைவர்கள் அழிக்கப்ட்ட பின் அடுத்த போராட்டத்திற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் கால இடைவெளியில் "இந்த போராட்டம் சரியா தவறா" என்பது போன்றதான விவாதங்களை இந்திய பத்திரிகைகள ஊடாக இந்திய அரசு மற்றும் புலனாயய்வுப்பிரிவினர் செய்ததாகவும் அதனால் மக்கள் ஒரு குழுப்ப நிலையை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களினூடாக பர்மிய ஊடகங்னளுக்கு இப்படிப்பட்ட நயவஞ்சக பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் மக்களை குழப்படைய செய்து இன்று சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் கைவிடப்படும் அளவிற்கு மாற்றியிருக்கிறது இந்திய வல்லாதிக்கம்.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லபட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் பெரும் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பர்மிய இராணுவ அரசுக்கு எதிராக அய்.நாவில் கொண்டுவரப்பட்ட பிரரேணைக்கு எதிர்த்து வாக்களித்து பர்மிய இராணுவ கொடுங்கோலரசை காப்பாற்றியது இந்தியா.

பர்மிய இராணுவ அரசிற்கு எதிராக தான் இருந்தால் அங்கு சீனாவின் ஆதிக்கம் வந்துவிடும் என்று நயவஞ்சக சாக்கு சொல்லிய இந்திய அரசு  கரேன் ஆரக்கான் இனங்களின் பூர்வீகத்தையே அழித்தது. கரேன் , மொழியை பர்மிய இராணுவ அரசு தடை செய்ததை இந்தியா ஆதரித்தது.

இராணுவ அதிகாரத்துடன் பெளத்த தீவிரவாதத்தை அதிகரித்த பர்மிய இராணுவ அரசு முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை கொன்று குவித்தது. சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டன. எல்லாவற்றையும் ஆதரித்து இராணுவ அரசிற்கு இன்றளவிலும் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருப்பது இந்திய இரத்த வெறி அரசுதான்.

பர்மிய விடுதலைப்போராட்டங்களை சிதைத்த அதே வழிமுறையை இம்மியளவும் பிசகாமல் தமிழீழ போராட்டத்திலும்  நடைமுறைப்படுத்த எண்ணியது இந்திய வல்லாதிக்கம்.

விடுதலைக்காக போராட புறப்பட்ட அத்தனை இயக்கங்களும் இந்திய அரசின் எடுபிடியாக மாற "தமிழீழ விடுதலைப்புலிகள்" அமைப்பு மாத்திரம் "தமிழீழ போராட்டத்திற்கு எதிராக வந்தால் இந்தியாவையே எதிர்ப்போம்" என மூர்க்கத்தனமாக திரண்டது.
அதனால்தான் நேரடியாக இராணுவத்தால் அடக்க நினைத்தது இந்தியா ஆனால் அதற்குள் விடுதலைப்புலிகள் ஆழமாக நிலையெடுத்துவிட்டனர்.

நயவஞ்சக திட்டத்தை சரிவர அரசியல் ரீதியாக வெல்ல முடியாமல், இராணுவத்தை அனுப்பி இந்தியாவிற்கு அவமானத்தை தேடித்தந்தவர் என்பதாலேயே  தோற்றுப்போன ராஜீவ்காந்தியை இந்திய உளவுத்துறையே பலியெடுத்தது என்று சொல்கிறார்கள். அதனால்தான் வழக்கு விசாரயையை கூட நேர்த்தியாக செய்யமுடியாமல் இந்திய வல்லாதிக்கம் திணறுகிறது.


எப்படி இருப்பினும் ராஜீவ்காந்தி அப்புறப்படுத்தப்பட வேண்டியவர். அவ்வளவே.

இன்றளவும் விடுதலைப்புலிகளை இந்தியா தடைசெய்து வைத்திருப்பதும் உச்ச கோபத்திலும் இருப்பதற்கு ராஜீவ்காந்தி கொலை காரணம் அல்ல.

ஏன் எப்படி என்பதை அடுத்த பகுதியில் தருகிறேன்.


நிராஜ் டேவிட் எழுதியிருக்கும் "இந்த கட்டுரையை"(  http://www.tamilwin.com/show-RUmqzBSZOdgw2.html) கட்டாயம் வாசித்துவிட்டு காத்திருங்கள் இந்தியா எப்பிடி செயற்பட்டது அடுத்தகட்டமாக எதை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் தருகிறேன்.

---------------------------------------------------------------------------------
இந்திய நயவஞ்சகத்தை மோப்பம்பிடித்து குறிப்பிட்ட ஒருசில வருடங்களுக்குள் இந்தியாவிற்கு எதிராகவே தமிழீழமக்களை தயார்ப்படுத்திய "அண்ணன்" எங்களின் வாழ்வு.

ஆதி
16-11-12

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP