"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் கட்டுரையை (பேட்டியை) எழுதி பிரசுரித்திருக்கும் விகடன் மற்றும் விகடன் நிரூபர் அருளினியன் இன்று மிக முக்கியமான வரலாற்றுக் கடமையை செய்யக் கூடிய வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
போர்க்குற்ற வீடியோக்கள், புகைப்படங்கள், மற்றும் உரையாடல்களை வெளியிட்டு சனல் 4 என்ற ஆங்கில ஊடகம் தமிழருக்கான நீதிவேண்டி இன்றுவரை தனது பங்கிற்கு போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விகடனின் அருளினியன் போர்க்குற்ற மற்றும் தமிழ் பெண்கள் மீது சிங்கள அரசின் கோர தாண்டவத்தை வாக்கு மூலமாக பெற்றிருக்கிறார்.
இந்த வாக்குமூலமானது எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னதான அய்.நா மன்றம் மற்றும் மனித உரிமை காப்பகம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தூரகங்களுக்கு அனுப்பபட்டு சிறிலங்காவிற்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.
இந்த பேட்டியில் சொல்லப்பட்டிருக்கிற தமிழ் பெண்களை கற்றபழித்த அமைச்சரை ஊகிக்க கூடியதாக இருகக்கிறது. அதாவது சிறிலங்கா அரமச்சரவையில் இருக்க கூடியவர்களே தமிழினத்தின் மீது நேரடி இன அழிப்பில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரமான வாக்குமூலங்களை இந்த நேரத்தில் எடுப்பது கடினம். எனவே இந்த வாக்குமூலமானது தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இந்த பேட்டிக் கட்டுரையை விகடனும் அருளினியனும் பிரசுரித்திராமல் தமிழனித்தின் மீதான பற்ருறுதியில் செய்திருந்தால் உடனடியாகவே விரைந்து செயற்படுமாறு வேண்டுகிறோம்.
எதிர்வரும் 5ம் திகதி சிறிலங்கா தொடர்பான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த வாக்கு மூலம் பெரும் செல்வாக்கை செலுத்தும். இந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து விகடனும் அருளினியனும் செயற்படுவார்களா!!!
தமிழர்களுக்காக இந்த தடவையாவது ஒரு "தமிழ் ஊடகம்" உரத்து குரல்கொடுக்குமா?? அல்லது விகடன் அருளினியனால் வியாபார நோக்கிற்காக வன்முறைக்குள்ளான பெண் விபச்சாரியாக்கப்பட்டாளா!!
இந்த வாக்கு மூலம் மிக முக்கியமானது. காரணம் சிறிலங்கா அமைச்சர் நேரடியாக இதில் பங்கெடுத்திருக்கிறார். விகடன் ஒரு ஊடகமாக இந்த வாக்கு மூலத்தை அய்.நாவிற்கோ அல்லது மனித உரிமை அமைப்புகளுக்கோ கொடுக்கலாம். தவிர அருளினியன் இந்த வாக்மூலத்தை பெற்றவர் என்ற வகையில் அவரே இதை அனுப்பலாம்.
அருளினியனுக்கு இதில் சங்கடங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.. அதை வேகமாக சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பக்கூடிய ஏற்பாடுகளை செய்வதற்கு நிறைப்பேர் இருக்கிறார்கள்.
ஆதி
11-1-2012
No comments:
Post a Comment