Powered by Blogger.

Friday, November 16, 2012

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீது இந்தியா செய்யப்போகும் அடுத்த தாக்குதல் # சம்பவங்களை ஆராய்தல்

பிராந்தியத்தில் இந்தியாவின் நயவஞ்சக போக்கு குறித்த முதல் பதிவை இந்த இணைப்பில் பார்க்கலாம் சொடுக்குக

பிராந்திய அரசியலை இந்தியா ------->சீனா ----> அமெரிக்கா என்ற மூன்று அரசுகளின் நிலைப்பாட்டை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.


குறிப்பு : மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் நத்திதா ஹக்சர் எழுதிய "வஞ்சக உளவாளி" _ பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் என்ற நூலை படித்துப் பாருங்கள் இந்தியாவின் கோரமுகம் தெரியும்.


பிராந்தியத்தில் தோற்றுப்போன இந்தியா

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளும் இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கமும் இந்தியாவை பிராந்திய அரசியல் செல்வாக்கில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றன என்றே சொல்லலாம்.

தனது நாட்டு மக்களுக்கு தன்னை வல்லரசாக சுயபிரகடனம் செய்திருக்கும் இந்தியா தனது அயல்நாடுகள் எதனுடனும் உளப்பூர்வமான நட்பு நாடாக கொண்டிருக்கவில்லை என்பதற்கு அப்பால் இந்தியாவின் அரசியல் அழுத்தங்களுக்கு அவை ஒரு போதும் அடிபணிந்ததோ பயப்பிட்டதோ கிடையாது.

இந்திய அரசியல்வாதிகள் பணம்புரட்டுவதில் மட்டுமே அக்கறை செலுத்திவருவது போல் இந்திய இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் இந்திய அரசியல்வாதிகளின் கூலி ஆட்களாகவே பெரும்பாலும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்பிற்கேற்ப வழக்குகளும் விசாரணைகளும் குழப்பிக்கொண்டே இருக்கின்றன.

வல்லரசாக இருக்கும் அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் என்பது வெறுமனே ஒரு தலைவனையும் சில முடிவுகளை எடுக்க கூடிய அதிகார நபரையும் தேர்ந்தெடுப்பதுதான். மற்றப்படி அவர்களின் பொருளாதார கூட்டி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் ஒரே மாதிரியான கொள்கைளின் கீழ்தான் செயற்படும்.

விடையத்திற்கு வருவோம்.

ராஜதந்திர ரீதியில் சிறிலங்காவே இந்தியாவை மிரட்டும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதாவது பிராந்தியத்தில் ஒரு அரசிற்கு எதிராக முடிவுகளை எடுக்க கூடியதாகவோ அல்லது ராஜதந்திர ரீதியில் பணிய வைக்க கூடிய அளவிற்கோ இந்தியாவின் பலம் இல்லை என்றே சொல்லலாம்.

தெற்காசிய நாடுகளில் சீனா இன்று தனது நேரடி பிரசன்னத்தை அதிகரித்திருக்கிறது. இதனால் பதறிப்போயிருக்கும் இந்தியா பிராந்தியத்தில் அரசுகளுக்கு சார்பாகவே தானும் நடந்துகொள்ளும் முறமையை கடைப்பிடிக்கிறது. மனித உரிமைகளையோ அல்லது அநியாயங்களையோ கண்டுகொள்ளாமல், பிராந்தியத்தில் அரசுகளுக்கு சீனாவிடம் இருந்து கிடைக்கும் உதவிகளை விட தான் உதவிகளை அதிகம் வழங்கி தனது இருப்பை உறுதிப்படுத்த துடிக்கிறது இந்தியா.

இந்தியாவின் இந்த கேவல நிலையை புரிந்து கொண்ட அரசுகள் இந்தியாவை மிரட்டி தமக்கு சாதகமாக பணிய வைத்துள்ளன.

பர்மாவிலோ, பாகிஸ்தானிலோ, சிறிலங்காவிலோ, சீனாவிலோ, பங்களாதேஸிலோ இந்தியாவின் பேச்சு எடுபடாது என்ற நிலை முடிவாகிவிட்டது.

சீனா யார் மீதும் போர் தொடுக்காது

சீனாவை பொறுத்தவரை அதன் எல்லாச் செயற்பாடுகளுமே நீண்டகால திட்டத்திலானது. உலக அரசியலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றால் முதலில் உலக பொருளாதாரத்தை கையிற்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு முதல் பிராந்தியத்தில் மிக வலுவான சக்தியா உருவெடுக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் இன்று சீனா இந்தியாவிற்குள் தனது பொருளாதாரத்தை விரிபுபடித்தியிருக்கிறது. இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை என்பதால் இந்திய சந்தையை இழக்க சீனா முயற்சிக்காது. தனது ராணுவ கட்டுமானங்களை காட்டி இந்தியாவை பயமுறுத்தினாலும் சீனா இந்தியாமீது போர் தொடக்க வேண்டிய தேவைகள் ஏதும் இப்போதைக்கு இல்லை.

தவிர சிறிலங்கா நிலைப்பாட்டிலும் சீனாவின் கொள்கை வெளிப்படையானது. சிறிலங்காவை தனது நட்பு நாடு என்றும் அதற்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டால் தான் காப்பாற்றும் என்றும்சீனா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

அது போக சிறிலங்காவின் அரசியல் சமரசங்கள் குறித்து எந்த கவலையும் இன்றி சீனா தனது வணிகத்தையும் பொருளாதார கட்டுமானங்களையும் வேகமாக ஏற்படுத்திவருகிறது.

சீனாவின் பெரும் கட்டுமானங்கள் தென்னிலங்கையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது அரசியல் சூழ்நிலைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டாலும் தனது பொருளாதார கட்டுமானங்களுக்கோ அல்லது தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கோ பாதிப்பு வராமல் இருக்க தென்னிலங்கை பொருத்தமானது என்று சீனா நினைப்பதாகவே தெரிகிறது.

அதே போல் மீண்டும் ஒருதடவை போர்ச்சூழல் ஏற்பட்டாலும் சீனா நேரடியாக தனது படைகளை இந்தியா போல் அனுப்பப்போவதில்லை என்பதும் வெளிப்படை.

தவிர இன்று தென்னிலங்கை பொருளாதாரத்தின் ஏறத்தாள பெரும்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.

ஆக இப்பொழுது இந்தியா எதை செய்ய வேண்டும்.. எது சரி எது தவறு... எது தனக்கு சாதகம்.. எது பாதகம் என்று ஒரு உறுதியான முடிவை எடுத்து தனது கொள்கைகளை மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படிருக்கிறது.


இந்தியா செய்யப்போகும் அடுத்த தாக்குதல் என்ன

தெற்காசிய பிராந்தியத்தில் விடுதலை இயக்கங்கள் மீது இந்தியா செய்த அத்தனை அட்டூழியங்களும் ஒரே மாதிரியானவை. அந்தந்த மக்களின் மனநிலைகள் களநிலமைகளை கருத்தில் கொள்ளாது இந்தியா ஒரே மாதிரியான அணுகுமுறைகளையும் தாக்குதலையும் தான் மேற்கொண்டிருக்கிறது.

கடந்தகால வரலாறுகளை புரட்டிப்பாருங்கள் புரியும்.

இந்தியாவின் நிலைப்பாட்டை ஆராய்வது கொஞ்சம் சிக்கலான விடையம். அதாவது மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் சண்டையை தொடங்கியிருக்கவில்லை என்பது அதன் பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். மற்றையது வன்னிக்குள் விடுதலைப்புலிகள் பின்வாங்கிய விதம்.

இந்த இரண்டிற்குள்ளும் ஆயிரமாயிரம் சர்வதேச சதிகள் இருக்கின்றன என்பதற்கப்பால் இந்தியாவின் நரித்தனமும் இருக்கிறது.

ஓயாத அலைகள் 3 மற்றும் தீச்சுவாலை எதிர்தாக்குதல் சமர்களில் பெரும் வெற்றியையும் பெரும் உற்சாகத்துடனும் இருந்த புலிகளின் யாழ்ப்பாணம் கைப்பற்றுவதற்கான தாக்குதலை நிறுத்தியது இந்தியா தான் என்பது அப்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்ட விடையம்.

இப்படிப்பட்ட தாக்குதல் திறன் அதிகரித்திருந்த காலத்தில் ஆயுதப்போராட்டத்திற்கும் அப்பால் எமது விடுதலை இலட்சியத்தை சமாதானமாக பெற்றுக் கொள்வதாயின் அதற்கும் நாங்கள் சம்மதம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவே விடுதலைப்புலிகள் சமாதான மேடைக்கு போயினர்.

அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்படி இருக்க வன்னிப்போரில் விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு எப்படி இந்தியா காரணமாயிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?? விடுதலைப்புலிகள் போரில் பின்வாங்கிக் கொண்டிருந்தாலும் பாரிய ஊடுருல் தாக்குதல்களை செய்யாமல் பேச்சுவார்த்தை குறித்தும் அத்துமீறல்கள் குறித்தும் பேசினர். மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடந்துகொண்டிருப்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகள் தமது கைப்பொம்மைகளாக இருக்காமல் தனிநாட்டு கோரிக்கையில் மிக உறுதியாக இருப்பது இந்தியாவிற்கு பெரும் ஆத்திரத்தை ஊட்டியிருக்கிறது. அதனால் எப்படியாவது விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நேரடியாகவே தனது படைகளை வன்னிக் களங்களுக்கு அனுப்பியது இந்தியா.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா போரை நிறுத்துவதற்கு முனைப்புக் காட்டியும் அதை தட்டிக்கழித்தது இந்தியா. சீனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பிராந்தியத்தில் இந்தியா சண்டியர் போல் இருப்பது அமெரிக்காவிற்கு சாதகம். இதனால் இந்தியாவிடம் இதை விட்டுவிட்டது.

இருந்தாலும் விடுதலைப்புலிகளை அழித்தவுடன் தமிழ் மக்களுக்கு தன்னால் நிதந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று இந்தியா சொன்னதை அமெரிக்கா நம்பியிருக்கலாம். ஆனால் இன்று நிலமை தலைகீழாகிவிட்டது.

இதனால் மீண்டும் சிறிலங்காவில் குழப்பங்களை ஏற்படுத்தி அதனூடாக சிறிலங்காவை தனது கட்டுப்பாட்டிற்குளன் கொண்டுவருவதற்கு தீவிரமாக இறங்கியிருக்கிறது இந்தியா.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் "தமிழீழம்" என்ற இலட்சியத்தை தவிர எந்தவொரு தீர்விற்கும் அவர்கள் இறங்கிப்போவதற்கு தயாராக இல்லை. அதனால்தான் ஆயுதங்களை மெளனித்து இது வரையில் தமது மெளனத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை முற்று முழுதாக அழிவித்துவிட்டதாக தனது நாடாளுமன்றில் அறிவித்து வெற்றிவிழாக்களை இன்னமும் கொண்டாடிவருகின்றன. உண்மையில் விடுதலைப்புலிகளின் தலமை முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டதா அல்லது ஏதாவது நீண்டகால திட்டத்துடன் மெனமாகி இருக்கிறார்களா என்ற குழுப்பத்தில்தான் இதுவரையில் தடை செய்து வைத்திருக்கிறது.

தலைவர் வே.பிரபாகரனின் இரத்த மாதிரி இந்திய அரசிடம் இருந்தும் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்படிருக்கும் தலைவர் வே.பிரபாகரன் இந்துவிட்டார் அதனால் அவரை வழக்கில் இருந்து நீக்குகி றாம் என்று அறிவிப்பதற்கு 1 வருடத்திற்கு மேல் எடுத்தது இந்தியா.  இப்படிப்பட்ட குழப்பகர நிலமைகள் தொடர்ந்த வண்ணம் இருக்க இனி இந்தியா என்ன செய்யப்போகிறது என்று அனைவருக்குள்ளும் தளம்பல் நிலை ஏற்பட்டிருக்கிறது.



விடுதலைப்புலிகள் மீண்டும் வந்தாலும் அவர்கள் தமிழீழ கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள் என்பதுதான் உறுதி. சிறிலங்காவை கட்டுப்பாட்டில் வைக்க இது இந்தியாவிற்கு சரியானதல்ல இதனால் றோவின் கைப்பொம்மைகளாகிய "ரெலோ" அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்களை உள்ளடக்கிய சிறு குழுவை உருவாக்கி சிறிலங்காவில்  இராணுவத்தின் மீது "சொறி தேய்ப்பதற்கு" அனுப்புவதற்கான தீவிர முயற்சிகளில் இந்தியா இறங்கியிருப்பதாக தெரிகிறது.

இந்த றோவின் எடுபிடிகள் இப்படியான சிறுபிள்ளைத்தனமாக வேலைகளில் ஈடுபடும்பொழுது போர்க்குற்ற அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவும் இந்தியாவும் தப்பித்துக் கொள்வதோடு சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தையும் ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாது சிறிலங்காவை தனது கைக்குள் கொணடுவந்த மாதிரியும் இருக்கும் தமிழீழ போராட்டமும்  நசுக்கப்பட்டுவிடும் என்பது இந்தியாவின் தந்திரமாக தெரிகிறது.


இதற்கு ஏற்றதாற் போலதான் இந்திய மற்றும் சிறிலங்கா எழுத்தாளர்களையும் இலக்கியம் சம்மந்தப்பட்டவர்களையும் உள்ளடக்கிய குழு தீரிவமாக புலிகள் மீது அரசியல்பார்வை மீது அவதூறுகளையும் சினிமாத்தனமான போர் விமர்கனங்களையும் எழுதி வந்தனர் வருகின்றனர்.

( சிங்கள ஒட்டுக்குழுக்களின் புலம்பெயர் செயற்பாட்டாளராகவும் றோவின் ஊதுகுழுலாகளும் செயற்படும் ஷோபாசக்தி, புலிகளின் செயலகத்தில் சம்மபளத்திற்கு வேலை செய்து இன்று அதிர்வு ஊடகம் நடாத்தும் கண்ணன், கனடாவை சேர்ந்த சுமதி என்ற கறுப்பி நவா, இன்று வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் வசிக்கும் ஹரி, றோவின் ஏஜன்டுகளான தமிழகத்தை சேர்ந்த கவின்மலர், ஆதவன்தீட்சண்யா, லீனாமணிமேகலை...  இன்னும் பலர் இருக்கிறார்கள்).

குறிப்பாக இரண்டுபக்கமும் டபுள் கேம் விளையாடும் நபர்களும் அதிகம்.

குறிப்பு : மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் நத்திதா ஹக்சர் எழுதிய "வஞ்சக உளவாளி" _ பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் என்ற நூலை படித்துப் பாருங்கள் இந்தியாவின் கோரமுகம் தெரியும்.

--------------------------------------------------------------------------------

இன்னொரு முக்கியமான விடையம்... விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா அமெரிக்காவிற்கு சில வாக்குறுதிகை கொடுத்து தோற்றுப்போயிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தங்கள் அதிகரிக்கும்.

ஓபாமாவின் ஆட்சிக்காலத்தில் இதுவரையில் அமெரிக்கா நேரடியாக தனது படைகளை இறக்கி போர் செய்திருக்கவில்லை. (ஓசாமைவை போட்டது சின்ன அசைன்ட்மன்ட் மட்டுமே). இனியும் நேரடியாக இறங்கி போர் செய்ய மாட்டார் என்ற கொள்கையில்தான் அமெரிக்கர்கள் அவருக்கு வாக்களித்ததாக சொல்கிறார்கள். எது எப்படி இருப்பினும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ராஜதந்திர அழுத்தங்கள் அதிகரிக்க போகிறது என்பது உண்மையாகவே தெரிகிறது.

இதுபற்றி பிறதொரு பதிவில் பார்ப்போம்.



ஆதி
17-11-12


































































































































































































































































































































































































































































































































































































சிறிலங்காவை அடுத்த பர்மாவாக மாற்ற பெரும் வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறது இந்தியா # தமிழீழ மக்களுக்கு எச்சரிக்கை _ பகுதி 1

அன்பான தமிழீழ உறவுகளே!!

இது ஒரு அவசரமான எச்சரிக்கைப்பதிவு தயவு செய்து விழிப்பாய் இருப்பதுடன் இலட்சியம் தவாறாது இயன்ற வழிகளில் போராடுங்கள். சோர்ந்து கிடப்போரை தட்டி எழுப்புங்கள். ஏறத்ததாள பெருமளவு இந்தியர்கள் ஊடுருவிட்டார்கள்.

1989ம் ஆண்டு பர்மா என்ற பெயரை மியான்மர் என்று மாற்றியது இராணுவ அரசு.

முதலில் பர்மாவில் நிகழ்ந்த விடுதலைப்போராட்டங்கள் எப்பிடி நசுக்கப்பட்டு இன்று இராணுவ ஆட்சிக்கு அங்கிகாரம் அளிக்கபட்டிருக்கிறது என்பதை "சுருக்கமாக" பார்ப்போம்.

பர்மாவில் தேசிய சிறுபான்மை இனங்களாக இருக்க கூடிய
1) கரேன்
2) ஆரக்கான்

என்ற இனங்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக தனிநாட்டு போராட்டங்களை நடாத்திவந்தன. (இந்த இனங்களின் தேசிய வரலாறு குறித்து நான் இங்கு பேசப்போதில்லை)

இந்த இனங்களின் போராட்ட அமைப்புகளிற்கு தனித்தனியாக இந்திய அரசு பயிற்சிகளையும் இராணுவ தளபாடங்களையும் சீருடைகளையும் உணவுப்பொருட்களையும் ஏன் அலுவலகங்களை கூட இந்தியாவில் அமைத்துக் கொடுத்தது.
பர்மாவை சுற்றியிருக்க கூடிய எரிவாயு வளத்தை சுரண்டுவதற்கு தான் நினைக்கும் அரசு பர்மாவில் அமைய வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காக போராட்ட இயக்கங்களை ஆதரித்து தான் நினைக்கும் அரசை நிறுவிவிடலாம் என்று நம்பியது.

இந்தியாவின் நயவஞ்சக போக்கை காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்ட போராளிக் குழுக்கள் விழிப்படைய ஆரம்பித்தன. அதே சமயம் சீனா பர்மாவின் இராணுவ ஆட்சி அரசுடன் நெருங்கத் தொடங்கியது.

உடனே போராளிக் குழுக்களின் தலைவர்களை பேச்சுவாரத்தைக்கு என்று அழைத்து முக்கிய தலைவர்களை சுட்டுக் கொன்றது இந்திய அரசு. ஏனைய போராளிகளை அந்தமான் உள்ளிட்ட பல தேசங்களில் சிறைவைத்தது. இன்னும் பலரை பர்மா இராணுவ அரசிடம் கொடுத்தது.

இருந்தாலும் போராட்ட குழுக்கள் மீண்டும் தலைப்பட்டது. உடனே தனக்கு சாதகக இருந்த போமாராளிகளை ஒழுங்கமைத்து விடுதலைக்காக போராடிய குழுக்கள் சிதைக்கப்பட்டது. போராட்ட குழுக்கள் தமது தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஒன்றிணைந்த பர்மாவிற்கான விடுதலைப்போராட்டம் என்று செயற்பட்டார்கள்.

அந்த மக்களின் சுயநிர்ணய விடதலைப்போராட்டத்தை நிதந்தரமாக அழிப்பதற்கு இந்திய வல்லாதிக்கம் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பல ஆயிரக்கணக்கான போராளிகள் இன்னமும் இந்திய மற்றும் அந்தமான் தீவுகளின் வதைமுகாம் சிறைக்கூடங்களில் இந்திய வல்லாதிக்கத்தால் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

இந்த விடுதலைப்போராட்டங்களை அழிப்பதில் இந்திய ஊடகங்கள் பெரும் பங்காற்றயிருப்பதாக பதிவுகள் சொல்கின்றன.

விடுதலைப்போராட்ட தலைவர்கள் அழிக்கப்ட்ட பின் அடுத்த போராட்டத்திற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் கால இடைவெளியில் "இந்த போராட்டம் சரியா தவறா" என்பது போன்றதான விவாதங்களை இந்திய பத்திரிகைகள ஊடாக இந்திய அரசு மற்றும் புலனாயய்வுப்பிரிவினர் செய்ததாகவும் அதனால் மக்கள் ஒரு குழுப்ப நிலையை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களினூடாக பர்மிய ஊடகங்னளுக்கு இப்படிப்பட்ட நயவஞ்சக பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் மக்களை குழப்படைய செய்து இன்று சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் கைவிடப்படும் அளவிற்கு மாற்றியிருக்கிறது இந்திய வல்லாதிக்கம்.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லபட்டும் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் பெரும் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பர்மிய இராணுவ அரசுக்கு எதிராக அய்.நாவில் கொண்டுவரப்பட்ட பிரரேணைக்கு எதிர்த்து வாக்களித்து பர்மிய இராணுவ கொடுங்கோலரசை காப்பாற்றியது இந்தியா.

பர்மிய இராணுவ அரசிற்கு எதிராக தான் இருந்தால் அங்கு சீனாவின் ஆதிக்கம் வந்துவிடும் என்று நயவஞ்சக சாக்கு சொல்லிய இந்திய அரசு  கரேன் ஆரக்கான் இனங்களின் பூர்வீகத்தையே அழித்தது. கரேன் , மொழியை பர்மிய இராணுவ அரசு தடை செய்ததை இந்தியா ஆதரித்தது.

இராணுவ அதிகாரத்துடன் பெளத்த தீவிரவாதத்தை அதிகரித்த பர்மிய இராணுவ அரசு முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை கொன்று குவித்தது. சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டன. எல்லாவற்றையும் ஆதரித்து இராணுவ அரசிற்கு இன்றளவிலும் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருப்பது இந்திய இரத்த வெறி அரசுதான்.

பர்மிய விடுதலைப்போராட்டங்களை சிதைத்த அதே வழிமுறையை இம்மியளவும் பிசகாமல் தமிழீழ போராட்டத்திலும்  நடைமுறைப்படுத்த எண்ணியது இந்திய வல்லாதிக்கம்.

விடுதலைக்காக போராட புறப்பட்ட அத்தனை இயக்கங்களும் இந்திய அரசின் எடுபிடியாக மாற "தமிழீழ விடுதலைப்புலிகள்" அமைப்பு மாத்திரம் "தமிழீழ போராட்டத்திற்கு எதிராக வந்தால் இந்தியாவையே எதிர்ப்போம்" என மூர்க்கத்தனமாக திரண்டது.
அதனால்தான் நேரடியாக இராணுவத்தால் அடக்க நினைத்தது இந்தியா ஆனால் அதற்குள் விடுதலைப்புலிகள் ஆழமாக நிலையெடுத்துவிட்டனர்.

நயவஞ்சக திட்டத்தை சரிவர அரசியல் ரீதியாக வெல்ல முடியாமல், இராணுவத்தை அனுப்பி இந்தியாவிற்கு அவமானத்தை தேடித்தந்தவர் என்பதாலேயே  தோற்றுப்போன ராஜீவ்காந்தியை இந்திய உளவுத்துறையே பலியெடுத்தது என்று சொல்கிறார்கள். அதனால்தான் வழக்கு விசாரயையை கூட நேர்த்தியாக செய்யமுடியாமல் இந்திய வல்லாதிக்கம் திணறுகிறது.


எப்படி இருப்பினும் ராஜீவ்காந்தி அப்புறப்படுத்தப்பட வேண்டியவர். அவ்வளவே.

இன்றளவும் விடுதலைப்புலிகளை இந்தியா தடைசெய்து வைத்திருப்பதும் உச்ச கோபத்திலும் இருப்பதற்கு ராஜீவ்காந்தி கொலை காரணம் அல்ல.

ஏன் எப்படி என்பதை அடுத்த பகுதியில் தருகிறேன்.


நிராஜ் டேவிட் எழுதியிருக்கும் "இந்த கட்டுரையை"(  http://www.tamilwin.com/show-RUmqzBSZOdgw2.html) கட்டாயம் வாசித்துவிட்டு காத்திருங்கள் இந்தியா எப்பிடி செயற்பட்டது அடுத்தகட்டமாக எதை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் தருகிறேன்.

---------------------------------------------------------------------------------
இந்திய நயவஞ்சகத்தை மோப்பம்பிடித்து குறிப்பிட்ட ஒருசில வருடங்களுக்குள் இந்தியாவிற்கு எதிராகவே தமிழீழமக்களை தயார்ப்படுத்திய "அண்ணன்" எங்களின் வாழ்வு.

ஆதி
16-11-12

Monday, November 12, 2012

இந்தியா ஒரு ஜனநாயக விரோத நாடு..தவிர செல்வாக்கை இழந்து வாய்வீரம் பேசும் ஒரு பயந்ததாங்கொள்ளி தேசம்


பர்மிய போராளிகளை இந்திய வஞ்சக அரசு ஏமாற்றியவிதமும் பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்கள் செய்த அட்டூளியங்களுக்கு எதிராக 2007 ம் ஆண்டு அய்.நாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக அதாவது இராணுவ கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து அவர்களை காப்பாற்றியது. அதற்கு அவர்கள் சொல்லிய காரணமும்... தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவ அட்டூழியங்களை இந்தியா காப்பாற்றுவதற்கு சொல்லும் காரணங்களும் ஒன்றுதான்.

சமகால நிகழ்வுகளும் கடந்தகால வரலாறுகளும் தெரியாத மடையர்கள் இந்தியாவை வல்லரசாக கனவு காணுகிறார்கள்.

இந்தியா என்பது காலாகாலமாக தெற்காசிய பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான சக்தியாக தன்னை தயார்ப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்தியா என்பது ஒரு பயந்தாங்கொள்ளி நாடு என்பதற்கப்பால் நயவஞ்சகமான ஒரு தேசம்.

இந்தியாவை உடைத்து சிதறடிப்பதற்கு சீனாவோடு தெற்காசிய நாடுகள் உறவுகளை வலுப்படுத்துகின்றன என்றே தோணுகிறது.

இன்று இந்தியா தெற்காசிய பிராந்திய அரசியலில் நேரடியாக செல்வாக்கு செலுத்தக்கூடியதானதாகவோ அல்லது கட்டுப்படுத்தக் கூடியதானதாவோ இல்லாத நிலையை அடைந்திருக்கிறது.

சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவிடும் என்ற அச்சத்தில் சீனாவைவிட அதிகளவிலான உதவிகளை செய்ய நினைக்கிறது. அதாவது சின்னப்புள்ளத்தனமாக.

இந்தியா ஒரு அடிமைதேசம் என்பதற்கு கடந்த 10வருட நிகழ்வுகளே போதுமானது.

இந்திய சனங்கள் அடிமட்ட முட்டாள்களாக "ஹிந்தியா" என்று உணர்ச்சிகர கோசமிடுவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது.

இந்தியா உண்மையிலேயே பிராந்திய செல்வாக்கு மிக்க நாடென்றால் சீனா ஆதரக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இந்தியாவால் ஒரு பிரேரணையிலாவது கையெழுத்து இடவோ அல்லது ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ முடியுமா???

சீனாவிற்கு பயத்தில் இந்தியா வாய்திறக்கப்பயப்பிடுகிறது.

தனது நாட்டு எல்லைக்குள் மட்டும் வீரம் பேசும் இந்தியாவை அந்த நாட்டு மக்கள் பெரிதும் நம்புகிறார்கள்..

ஆதி
13-11-12

Friday, November 9, 2012

களம் திறக்கபட்டுவிட்டது... உங்களுக்கு தெரியுமா?? # பாவனைக்கு வந்திருக்கும் துப்பாக்கிகள்

இன்றைய சம்பவங்கள்.

1. விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் தளபதி பரிதி மீதான படுகொலைத் தாக்குதல்
2. ராஜபக்ஷவின் பட்ஜட் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
3. வெலிக்கடைச் சிறையில் கைதிகளின் கையில் ஏகே.47 (பொலிசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இராணுவம்தான்    கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மோதலை செய்வதாக அவசர செய்திகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் "வெளிப்படையாக" விடுதலைப்புலிகளின் தளபதி நிலை செயற்பாட்டாளர் மீது பிரன்ஸில் வைத்து தாக்குதல் நடாத்தப்ட்டிருக்கிறது. படுகொலையில் முடிந்திருக்கம் இந்த தாக்குதலை எந்த இராணுவம் செய்தது?? செய்ய வேண்டிய தேவை என்ன?? என்பவற்றோடு தாக்குதல் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நேரமும் முக்கியமானவிடையம்.

தமிழீழ மக்களே!!!
எம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளை தமிழக நாளேடுகளின் கருப்பொருள்போல் வெறுமனே செய்தியாகவும் சம்பவங்களாகவும் பார்க்காமல் அரசியல் ரீதியாகவும் தர்க்கரீதியான புலனாய்வுச் சிந்தனையோடும் அணுகுங்கள்.

தளபதி பரிதி அண்ணருக்குக்கு எனது வீரவணக்கங்களை தெரிவித்துக் கொண்டு இந்த சமகால பார்வையை தொடர்கிறேன்.

தளபதி பரிதி அண்ணர் மீதான தாக்குதலானது "றோ" உளவுப்பிரிவினதும் சிங்கள ஒட்டுக்குளுக்களினதும் திட்டமிட்ட தாக்குதலாக இருந்தாலும் இருவரினதும் நோக்கம் வெவ்வேறானதாகவே தெரிகிறது.

இந்தியாவிற்கு தலையிடிகொடுக்கும் புலிகளின் நிலை.

விடுதலைப்புலிகள் ஆயதங்களை மெளனிப்பதாக அறிவித்து ஆயிரக்கணக்கான போராளிகளும் சரணடைந்தனர். முக்கியமாக அரசியல் மற்றும் ஆவணப் பிரவுகளின் மூத்த தளபதிகள் போராளிகள் உட்பட பல இராணுவ மட்ட தளபதி நிலைப்போராளிகளும் ஏனைய போராளிகளுமாக ஆயிரக்கணக்கில் சரணடைந்திருந்தனர். இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சர்வதேச மட்டத்தில் ஊடுருவிவிட்டதாகவும் சிலர் உள்நாட்டில் இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அடிக்கடி சொல்லிவருவது யாவரும் அறிந்ததே.

இந்திய இராணுவத்தினுடனான மோதல் மற்றும் சிறிலங்கா ராணுவத்தின் மிலேச்சத்தனமான நிலப்பிரிப்பு இராணுவ நடவடிக்டகைகளையும் சாதுர்யமாக கடந்துவந்த விடுதலைப்புலிகள்...  2009ற்கு பிறகு தமிழ் மக்கள் மீது எத்தனையோவிதமான அடககு முறைகளை சிங்கள அரசு மேற்கொண்டும் ஏன் இன்னமும் எந்தவித பதில் நடவடிக்கைகளையும் உள்நாட்டில் செய்யவில்லை என்பது பலருக்கு பீதியை உருவாக்கியிருக்கிறது.

தவிர இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறும் தொடர்ச்சியான அழுத்தங்கள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.  சமாந்தரமாக தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சிறிலங்கா ஒரு நச்சுக்களைகளைக் கொண்ட நடாக உருவெடுத்துவருகிறது.

இதனால் சிங்கள தேசத்தை அடக்குவதற்கு கட்டாயமாக இந்தியாவிற்கு தமிழீழ மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தமிழீழத்தையும் தமிழ் மக்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்தியா குறியாக இருக்கின்றனர். முதலாவதற்கு புலிகளின் மீள் வருகையும் இரண்டாவதற்கு புலிகள் மீதான தொடர்ச்சியான தடையும் தேவைப்படுகிறது. அதாவது புலிகள் மீள்வருகை உறுதிப்படுத்ப்படால் புலிகள் மீதான தடையை எடுக்க தேவையிலடலை. புலிகள் மீதான தடையிருக்கும் பட்சத்தில் அதை தமிழீழத்திற்கு பெரும் தடையாக பயன்படுத்டதலாம் என்பது இந்திய பெருச்சாளிகளின் நிலைப்பாடு.

இதனால் புலிகளை சீண்டி எப்படியாவது களத்திற்குள் இழுக்க வேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காக சர்வதேச செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களை இனிவரும் நாட்களில் "றோ" மேலுவும் தீவிரப்படுத்தலாம்.

ராஜபக்ஷவுக்கும் புலிகள் தேவை

புலிகளை மாத்திரமே காரணம் காட்டி இன்று சிறிலங்காவை குடும்பகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் ராஜபக்ஷவிற்கு உள்நாட்டில் என்றுமில்லாதவாறு சதிகள் உருவாகிக் கொண்டிருப்பதாக அச்சம் கொண்டிருப்பதாகப்படுகிறது. ஒருவை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் அது ராஜபக்ஷ பரம்பரையே அழித்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால் புலம்பெயர் தமிழர் செயற்பாட்டாளர்பகளை முடக்குவது. அங்கும் விடுதலைப்புலிகளை தாக்கி அழிக்க முடியும் என்பது போன்றதான "சிங்களச் செய்திகளை" வெளியிடுவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு கட்டாய தேவையாக இருக்கிறது.

அது போக உள்நாட்டில் விடதலைப்புலிகளின் ராணுவ செயற்பாடுகள் ஆரம்பித்தால் அதைக் காரணம் காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்தும் அரசியல் எதிர்பைக்கிளப்பும் எதிர்சாராரிடம் இருந்தும் தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பது ராஜபக்ஷவின் நினைப்பு.

இவை அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் புலிகளின் மெளனம் கலையவேண்டும்.

இப்படி தத்தமது நலன்களின் அடைப்படையில் விடுதலைப்புலிகளின் மெளனத்தை  சோதித்துப்பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

எத்தனையோ வருடங்கள்... எத்தனையோ வலிகள்.. எத்தனையோ இழப்புகளுக்குள் மத்தியில் கள முனைகளில் நின்ற போராளிகள் அதே எதிரியிடம் சரணடையும் முடிவை புலிகளின் தலமை எடுக்க முதல் எத்தனையாயிரம் தடவை என்னென்னவற்றையெல்லாம் யோசித்திருக்கும் என்பது தமிழீழ மக்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய ஆத்ம உறவு அது.

என்னதான் இருந்தாலும் சொல்லணாத்துன்பங்களையும்... எழுத்தில் கொட்டிவிட முடியாத வலிகளையும்.. மரணங்களையும் கொடுத்து போராடிக் கொண்டிருக்கம் தமிழீழ மக்களின் பொறுமை தொடர்ந்து இப்படியே இருக்கும் என்று யாரேனும் நினைப்பார்களாக இருந்தால்  அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்று அர்த்தம்..

http://aathithyank.blogspot.de/2012/11/blog-post_9.html
ஆதி
09-11-12

Friday, November 2, 2012

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்# ஒரு வாக்கு மூலம்


"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது. 

சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது. 

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்

உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் "திருமாவேலனிற்கு" இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன். 

முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் "நான் ஆதி பேசுகிறேன்.... அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக.." என்று உரையாடலை தொடரும் பொழுது "ஹலோ..ஹலோ... " என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.

தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார். 

"உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்" என்று கேட்டேன்... தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.


ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??

அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள். 


தவிர..
சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது. 

அது போக யோ.கர்ணனை முள்ளிவாய்க்கால் வரை போராடிய முன்னாள் போராளி என்று எழுதியவர்தான் அருளினியன். ஆனால் யோ. கர்ணன் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி பிரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பொம்பிளைப் பிள்ளைகளோடு அநாகரிகமாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்ட்டவர் என்பது ஊரறிந்த விடையம். இது புதுசாக முழைத்திருக்கும் அருளினியனுக்கோ விகடனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. 

வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும். 

போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!! 

பேட்டி உண்மையென்றால்!!

தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள். 


வெறும்  பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்... 


உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்... ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.



ஆதி
02-11-2012

Thursday, November 1, 2012

விகடனும் அருளினியனும் தம் வரலாற்றுக் கடமையை செய்வார்களா!!


"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் கட்டுரையை (பேட்டியை) எழுதி பிரசுரித்திருக்கும் விகடன் மற்றும் விகடன் நிரூபர் அருளினியன் இன்று மிக முக்கியமான வரலாற்றுக் கடமையை செய்யக் கூடிய வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

போர்க்குற்ற வீடியோக்கள், புகைப்படங்கள், மற்றும் உரையாடல்களை வெளியிட்டு சனல் 4 என்ற ஆங்கில ஊடகம் தமிழருக்கான நீதிவேண்டி இன்றுவரை தனது பங்கிற்கு போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விகடனின் அருளினியன் போர்க்குற்ற மற்றும் தமிழ் பெண்கள் மீது சிங்கள அரசின் கோர தாண்டவத்தை வாக்கு மூலமாக பெற்றிருக்கிறார்.

இந்த வாக்குமூலமானது எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னதான அய்.நா மன்றம் மற்றும் மனித உரிமை காப்பகம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தூரகங்களுக்கு அனுப்பபட்டு சிறிலங்காவிற்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

இந்த பேட்டியில் சொல்லப்பட்டிருக்கிற தமிழ் பெண்களை கற்றபழித்த அமைச்சரை ஊகிக்க கூடியதாக இருகக்கிறது. அதாவது சிறிலங்கா அரமச்சரவையில் இருக்க கூடியவர்களே தமிழினத்தின் மீது நேரடி இன அழிப்பில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரமான வாக்குமூலங்களை இந்த நேரத்தில் எடுப்பது கடினம். எனவே இந்த வாக்குமூலமானது தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இந்த பேட்டிக் கட்டுரையை விகடனும் அருளினியனும் பிரசுரித்திராமல் தமிழனித்தின் மீதான பற்ருறுதியில் செய்திருந்தால் உடனடியாகவே விரைந்து செயற்படுமாறு வேண்டுகிறோம். 

எதிர்வரும் 5ம் திகதி சிறிலங்கா தொடர்பான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த வாக்கு மூலம் பெரும் செல்வாக்கை செலுத்தும். இந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து விகடனும் அருளினியனும் செயற்படுவார்களா!!!

தமிழர்களுக்காக இந்த தடவையாவது ஒரு "தமிழ் ஊடகம்" உரத்து குரல்கொடுக்குமா?? அல்லது விகடன் அருளினியனால் வியாபார நோக்கிற்காக வன்முறைக்குள்ளான பெண் விபச்சாரியாக்கப்பட்டாளா!!

இந்த வாக்கு மூலம் மிக முக்கியமானது. காரணம் சிறிலங்கா அமைச்சர் நேரடியாக இதில் பங்கெடுத்திருக்கிறார். விகடன் ஒரு ஊடகமாக இந்த வாக்கு மூலத்தை அய்.நாவிற்கோ அல்லது மனித உரிமை அமைப்புகளுக்கோ கொடுக்கலாம். தவிர அருளினியன் இந்த வாக்மூலத்தை பெற்றவர் என்ற வகையில் அவரே இதை அனுப்பலாம். 

அருளினியனுக்கு இதில் சங்கடங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.. அதை வேகமாக சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பக்கூடிய ஏற்பாடுகளை செய்வதற்கு நிறைப்பேர் இருக்கிறார்கள்.

ஆதி
11-1-2012

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP