இன்று பெரும்பான்மை ஆசிய நாடுகளில் தொழிலாளிகளை சுரண்டிச் சுரண்டியே பல அரசுகளும் முதலாளிகளும் தமது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அதில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில், ஆழும் வர்க்கம் மாபெரும் கொள்ளைக்காரர்களாகவும் மனிதாபிமானமற்ற மிருகங்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் நோக்கம் இவர்கள் ஆட்சி செய்யும் காலப்பகுதியில் இயலுமானவரை பாமர மக்களின் சொத்துகளை சூறையாடுதல் சூறையாடிய செல்வத்தின் மூலம் இருப்பை தக்க வைத்து கொள்ளல்.
இந்த கொள்கையடிப்படையில் சிறிலங்காவின் அரசு மிகப்பெரும் அட்டூழியங்களை செய்து வருகிறது. தட்டிக் கேட்க முடியாத நிலையில் பாமர மக்களும் எதிர்க்கட்சியகளும் காணப்படுகின்றன. தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசு மற்றய நாடுகளுக்கு தாரைவார்த்துவரும் நிலங்கள் பாமர மக்களுடைய நிலங்கள் என்று எத்தனையோ தடவை ஒப்பாரி வைத்தாகிவிட்டது. ஆனால் சிறிலங்கா அரசோ அதில் இருக்கும் பண முதலைகளோ மக்களின் நலன் குறித்து எந்த அக்கறையுமற்று தமது வருமானங்களில் மட்டும் குறியாய் இருக்கின்றனர்.
போர் முடிந்த பிறகு வன்னியில் எத்தனையோ ஆயிரம் ஏக்கர் மக்களின் நிலம் அமைச்சர்மார்களின் பலவந்த பிடிகளுக்கு உள்ளாகியுள்ளது. அது போக தமிழர் தாயக பகுதிகளில் ஏனைய பகுதிகளும் இப்படியான பலவந்தங்களுக்கு உள்ளாகி வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு சம்பவம் தான் நுரைச்சோலை அனல் மின்னிலையம். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய கிராமத்தில் இந்த அனல் மின்னிலையம் அமைக்கப்ட்டுள்ளது. மீன் பிடித்தொழில் மற்றும் விவசாயத்தை ஜீவனோபாயமாக செய்து வரும் இந்த மக்களின் நிலம் செழிப்பானது. தென்னந் தோட்டங்களாலும் மரக்கறி தோட்டங்களாலும் நிறைந்த இந்த பிரதேசசத்தின் ஒரு பகுதி இன்று சிறிலங்கா அரசால் பலவந்தமாக பறிக்கபட்டடு சீன அரசாங்கத்திடம் கொடுக்கபட்டுள்ளது.
இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்திலும் அதற்கு தேவையான அரைவாசி நிதியினை சம்மந்தபட்ட அமைச்சர்கள் சுருட்டிவிட்டதாக விடயம் அறிந்த சிலர் சொல்கின்றனர்.இதனால் இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்தின் தரம் குறைவாகவே காணப்படும் என்பது வெளிப்படை உண்மை. அது போக அதில் இருந்து வெளியாகும் புகை அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் செழிப்பை இல்லாது செய்யப்போவதோடு எதிர்காலத்தில் மக்களின் உடல் நலத்திலும் செய்லாவக்கு செலுத்தப்போவது உண்மை. சிறிலங்காவில் மக்கள் பாவனையற்ற எத்தனையோ நிலங்கள் இருந்தும், கடற்கரைகள் இருந்தும் அவற்றை எப்படி தொழிற் பேட்டைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது.. அல்லது அதை எப்படி பாவிப்பது என்று ஆய்வுகள் செய்வதை விடுத்து மக்களின் நிலங்களை பறிப்பதும் அதன் வழங்களை சிதைத்து குறுகிய காலத்தில் தமது செல்வத்தை பெருக்குவதிலும் குறியாக இருக்கும் இந்த முதலாளி வர்கங்களை எப்படி அடக்குவது??? இந்த அதிகாரப் போக்கிற்கு எதிராக எப்படி மக்கள் திரண்டெழுவது???? இந்த அதிகார போக்குகள் கட்டுப்படுத்தாவிடில் எதிர்காலத்தில் பாமர மக்கள் வறுமையால் சாகும் நிலை உருவாகும்....
ஆதி
17-03-2011
Thursday, March 17, 2011
Friday, March 4, 2011
விடுவிக்கப்பட்ட போராளிகள் - சமூகத்தில் பின்தள்ளப்படும் கதை
இன்று விடுவிக்கப்பட்டும் போராளிகள் சமூகத்தில் பின் தள்ளப்படுவதாகவும் அதனால் சமூக மற்றும் வாழ்வாதரப் பிரச்சினைகள் அந்த போராளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் ஆதரவுக் கூலிகள் முதலைக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த விடையங்களை நாங்கள் நிதானமாகவும் விரைவாகவும் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமது உயிர்களை துச்சமென மதித்து போராடிய அனைத்து வீரர்களுமே மரியாதைக்குரியவர்கள் என்பதை எந்த சமூகமும் மறந்துவிடக் கூடாது. தமது அவயங்களை இழந்து தமது வாழ்க்கையின் பல முக்கிய படிகளை இழந்து இன்று தமிழ் மக்களின் போராட்டம் உலகமயப்படவதற்கு களத்தில் நின்ற போராளிகள் தான் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது.
விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் கட்டளைகளுக்கமைய செயற்பட்டு சரணடைந்த பல போராளிகள் சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறிலங்கா அரச படகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போக சில ஆயிரம் போராளிகளையே முகாம்களில் அடைத்து புனர்வாழ்வு என்ற பெயரில் பல திணிப்புகள் மற்றும் மன உழைச்சல்களுக்கு உள்ளாக்கி பின் அவர்களின் கண்காணிப்பில் வெளியில் விடப்படுகின்றனர். அவர்களில் சிலர் நேரடியாக சிறிலங்கா புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள போதும் பலர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்ட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த போராளிகளுக்கு எம்மால் இயன்ற வழிகாட்டல்கள் மற்றும் சந்தர்பங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். வீரியம் மிக்க நாற்றுகள் அவர்கள். தயா மாஸ்டர் உட்பட பல ஊடக புள்ளிகள் வெளிப்படையாகவே தமிழ் இன விடுதலை போருக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அவர்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. சாதாரண போராளிகளாக களமாடி தமது வாழ்வை தொலைத்த போராளிகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் மேல் மக்களுக்குள்ள அன்பு விடுவிக்கப்படும் போராளிகளை அரவணைக்க தூண்டியது. இந்த சந்தர்பத்தில் தான் சிறிலங்கா அரசும் சில ஒட்டுக் குழுக்களும் தமது கைங்கரியங்களை காட்ட ஆரம்பித்தனர். விடுவிக்கப்படும் போராளிகளில், கரிசனை உள்ள மக்களை நேரடியாகவும் மறை முகமாகவும் மிரட்டினர். சிலர் கொலை கூட செய்யப்ட்டனர். விடுவிக்கபட்ட போராளிகளை சமூகத்தில் இருந்து ஓரங்கட்டி விடுதலைப் புலிகள் மேல் வெறுப்பு ஏற்படச் செய்வதற்கான உளவியல் நடவடிக்கைகளை எதிரி விடுவிக்கப்பட்ட போராளிகள் விடையத்தினூடாக செலுத்தும் உத்தியை கண்டு பிடித்துள்ளான். விடுதலைப்புலிகளை பழி கூறும் ஊடக மற்றும் இலக்கிய யுத்தத்தை பல புலம்பெயர் எழுத்தாளர்களினூடு ஆரம்பித்துள்ளான். அதற்காக பிரித்தானியா உட்டபட பல இடங்களில் இருந்து சில எழுத்தாளர்களை கூட்டி ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கப்ட்டுள்ளனர்.
இந்த சதி யுத்தத்தில் மாண்டு போகாது விடுவிக்கப்படும் போராளிகளின் வாழ்வியலை எப்படி வளமாக்க முடியும் என்று உள்நாட்டு மற்றும் புலம் பெயர் மக்கள் சிந்திக்க வேண்டும். விடுவிக்கப்படும் போராளிகளுக்கு நேரடியாக புலம் பெயர் தமிழர்கள் தொடர்பேற்படுத்தி தம்மால் இயன்ற உதவிகளை செய்து அவர்களை வளப்படுத்துவது பாதுகாப்பு பிரச்சினை என்று கருதினால், நிறுவனங்களினூடாக பொது அமைப்புகளினூடாக செய்யவேண்டும். எமது குரல்கள் புலத்தில் பலமாய் ஒலிப்பதற்கு களத்தில் ரத்தம் சிந்திய போராளிகளை கைவிடமுடியாது அவர்கள் குறித்த அக்கறையின்மை என்பது எமது போராட்டத்தை நசுக்குவதற்கு ஒப்பானது. புலிஎதிர்பு கோசங்களுக்கு விலைபோய் தமிழீழ தாகத்தை இல்லாது செய்து தமிழர் இரண்டாம் தரப்பு பிரஜைகள் அவர்களுக்கு உரிமை தேவையில்லை என்ற சிறிலங்கா அரச செயற்பாட்டிற்கு பக்க பலமாக மாறியிருக்கும் பழைய புலி உறுப்பினர்கள் குறித்து நாம் எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் பெரிய பொறுப்புகளில் இருந்து களம் சந்திக்காது வாழ்ந்த சில ஈனப்பிறவிகளே இன்று களத்தில் நின்ற புலிகளை வேட்டையாட புறப்பட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர்களாகவும் ஒட்டுக்குழுக்களின் சில பொறுப்பாளர்களாகவும் உருவெடுத்துள்ள இவர்கள் களத்தில் நின்ற எம் போராளிச் செல்வங்களை ஓரங்கட்டுவதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றனர். இதற்கு மக்கள் இடம் அளிக்க கூடாது. வேலையின்றி இருக்கும் விடுவிக்கப்ட்ட போராளிகளுக்கு வழிகாட்ட வேண்டும். நம்பிக்கை தரவேண்டும். இதற்கு உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என அனைவரிடமும் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுதலைப்புலிகளின் செய்தி மற்றும் இலக்கிய ஊடகப்பிரிவுகள் விளையாட்டுப் பிரிவுகள் என பெரிதளவில் களம் சந்திக்காது இயல்பாக வாழ்ந்த சில ஈனப்பிறவிகள் தான் இன்று சிங்கள படைகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் இணைந்து விடுவிக்கபட்ட போராளிகளையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் வேட்டையாடி விடுதலைப்புலிகள் பற்றிய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றுவதற்கு மாபெரும் உளவியல் சதியுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு களமுனையில் ரத்தம் வியர்வை சிந்தி போராடி அங்கங்களை இழந்தும் வாழ்வினை தொலைத்தும் அல்லலுறும் விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக உதவ அனைவரும் கை கோர்க்க வேண்டும்.
ஆதி
05-03-2011

வகை
சமகாலம்
Tuesday, February 22, 2011
தமிழர் பகுதிகளில் தலைவிரித்தாடும் சிங்கள ஆதிக்கம்....புலிகளை விரைவாக வருமாறு மக்கள்
யுத்தத்தை வென்ற சிறிலங்கா அரசு தமிழர் பிரதேசங்களை ஆக்கரமிப்பதையும் தமிழர்களை அடிமைகளாக நடத்துவதிலும் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறையை சேர்ந்த பெரும் பகுதியை சிங்கள மயமாக்கிவிட்ட அரசு இப்போது வடக்கில் தனது வேலைளை திசை திருப்பியுள்ளது.
வடக்கில் முக்கிய நிர்வாக நகரமாக காணப்படும் யாழ்குடாநாட்டை சிங்கள கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. சட்டவிரோதமான அத்துமிறல்கள், வெளிப்படையான இனவாத நடவடிக்கைகள், இராணுவ மற்றும் பொலிஸ் அச்சுறுத்தல்கள், நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் என சிறிலங்கா அரசின் சிங்கள மேலாதிக்க போக்கு விபரிக்க முடியா த அளவு தலைவிரித்தாடுகிறது.
அரச பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி சிங்கள அத்து மீறல்களை கூட கேட்க முடியாத ஒரு கோழைக் கட்சியாக இருந்து கொண்டு அப்பாவி தமிழ் மக்களை மிரட்டி தமது அரசியல்களை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வருடம் ஆரம்பித்து கடந்த இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் பல்வேறு வகையான சிங்கள ஆதிக்க நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. யாழ் மாநாகர சபையின் உப தலைவராக செயற்படும் றீகன் என்பவர் சாவகச்சேரி நீதிமன்றினால் இனங்காணப்பட்ட கொலை சந்தேக நபர். அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிப்பதில் நேரடியாக அரசின் அழுத்தம் பாவிக்கப்பட்டது மட்டுமல்லாது உப தலைவர் பதவியையும் செயற்குழு எடுத்த முடிவுக்கு மாறாக அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. உப தலைவர் பதவியை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கு வழங்க செயற்குழு முடிவெடுத்திருந்தது. அதன் பிரகாரம் நடப்பு 2011 ற்கான உப தலைவர் (மேயர்) பதவி ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தும் செயற்குழு அறிக்கையில் றீகனின் பெயரே வந்துள்ளது. இது சிறிலங்கா அரசின் நேரடி தலையீடு என விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போல்.... யாழ் நகர் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டியது யாழ் மாநகர சபை. கட்டிடம் கட்டுவதற்கான நிலம் மற்றும் சூழலை கருத்தில் கொண்டே அனுமதிகள் வழங்கப்பட்டுகின்றன. ஆனால் புல்லுக்குளம் மூடப்பட்டுள்ள பகுதியில் எந்த பரிசோதனையோ அனுமதியோ இன்றிஅவசர அவசரமாக 5 மாடிக்கட்டிடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பித்துள்ளன. அந்த கட்டடத்தை கட்டும் நிறுவனம் பசீல் ராஜபக்ஷவின் நிறுவனமாம். மாதாந்த கூட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர், எதிர்கட்சிகளால் ஏற்படும் சில விவாதங்களை தடுப்பதற்காக வேலை ஆரம்பித்த பின்னர் அந்த நிறுவனத்தை யாழ் மாநகர சபையில் பதிவு செய்துள்ளது மட்டுமல்லாது அனுமதி பத்திரத்தையும் தயாரித்து எடுத்துள்ளது. அந்த கட்டிடம் கட்டி முடிந்த பின்னர் மக்கள் பாவனைக்கு வரும் பொழுது அது எப்போது இடிந்து விழும் என்று யாராலும் கணிக்க முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இத்தனை நடவடிக்கையும் சிங்கள மேலலாதிக்க போக்கே தவிர வேறொன்றுமாய் இருக்க முடியாது.
இது போக நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஆசிரியர் வளையாட்டுப் போட்டியில் சிங்கள மேலாண்மை ஆதிக்கமும் சிங்கள இனவாதமும் தலைவிரித்தாடியது. தமிழ் நடுவர்களால் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை ஏற்க முடியாது என மறுத்த சிங்களவர்கள் அதை ஆட்சேபித்து அரசியல் தலையீடுகளையும் புகுத்தினர். இதனால் விரக்தியடைந்த பல தமிழ் ஆசிரியர்கள் விளையாட்டு நடுவர் நிலையில் இருந்தும் விளையாடுவதில் இருந்தும் விலகினர். இயக்கம் இல்லாததால தானே இந்த ஆட்டம் ஆடுறீங்கள் என வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர். உச்சக்கட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கெதிரான புள்ளி சேர்ப்பிற்காக இராணுவத்தினரை ஆசிரியர்கள் போல் விளையாட களம் இறக்கினர் சிங்கள மாகாணங்கள். இருந்தும் வடமாகாணங்களை சேர்ந்த வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண ஆசிரியர்கள் இது தமிழ் சிங்கள பிரச்சினை என வெறிகொண்டு விளையாடியது அனைத்துப் போட்டிகளிலும் தெரிந்தது. இறுதியில் வடமாகாணம் பாரிய புள்ளி வித்தியாசத்துடன் வெற்றி பெற்றது பலருக்கு சங்கடத்தையும் உருவாக்கியிருந்தது. போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்களர் ஒருவரை மாத்தறையில் இருந்து தொலைபேசிமூலம் யாழில் விளையாடவைக்க சிங்களனால் முடியுது ஆனால் தமிழ் அரசியல்வாதிகளால் எதுவும் முடியாது என எல்லா தமிழர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். புலிகள் இருந்திருந்தால் இப்படி இவர்களால் செய்யமுடியுமா என்ன என குமுறிக் கொண்டிருந்தனர்.
தவிர நேற்று தமிழீழ தாய் பார்வதி அம்மாவினுடைய இறுதிக்கிரிகைகளுக்கு புறப்பட தயாராக இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மறித்த சிறிலங்கா அரசு பலரை துப்பாக்கி முனையில் மிரட்டியுமுள்ளது. ஆண்கள் பெண்கள் என பலரும் இறுதிக் கிரியைக்கு செல்ல தயாராக இருந்த வேளை இந்த சிங்கள இனவாதப்போக்கும் சிறிலங்கா ராணுவத்தின் ஆயுத அச்சுறுத்தலும் புலிகளின் வருகை குறித்த தேவையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக இளைஞர்கள் முதல் வெளி இளைஞர்கள் வரை "இயக்கம் வராட்டிசரிவராது" என்று பேசும் அளவிற்கு தமிழ் பிரதேசங்களில் சிங்கள மேலாதிக்கம் புற்று நோய் போல் வளர்ந்து கொண்டிருக்கிறது.
யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்விகற்கும் மாணவன் ஒருவன் பல கெட்டபழக்கங்கள் கொண்டவனாயும் அடாவடித்தனம் மிக்கவனாகவும் இருப்பததோடு மற்றய மாணவர்களுக்கும் இடையூறு விழைவித்துக் கொண்டிருக்கிறானாம். வெளிநாட்டுப்ப பணம் அவனுக்கு வருவதால் எப்போதும் பெரும் பணத்தொகையை தன்னோட வைத்துன் கொண்டிருக்கும் அந்த சிறுவன் ஆசிரியர்களையே மிரட்டுகிறானாம். அதனால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலையை விட்டு நீக்கியது நிர்வாகம். அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி முக்கியஸ்தருடன் பாடசாலை வந்த சிறுவன் எந்த மறுதலிப்புமின்றி பாடசாலையில் சேர்க்கப்ட்டுள்ளான்.
இயக்கம் இருந்திருந்தா இந்த மாதிரி காவாலிகளையெல்லாம் வடிவா திருத்தி போட்டு அனுப்புவாங்கள் இப்ப என்ன செய்யிறது என்று புலிகள் பற்றிய வெற்றிடத்தை மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த செய்தி சிறிலங்கா அரசின் சிங்கள மேலாதிக்கத்திற்கு தமிழ் மக்களால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு சமிஞ்சையே. புலிகளின் மீள் பிரவேசம் எந்தவழியிலும் வரலாம் என்று தமிழ் மக்கள் சிங்கள அரசிற்கு கூறியுள்ள செய்திதான் இந்த உச்சக் கட்ட பொறுமை.
ஆதி
23-02-2011

| அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுபோட்டியில் வழங்கப்ட்ட மடல் தனிச் சிங்களத்தில் |

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "
தேசியத் தலைவர் வே.பிரபாகரன்
ஆதி
23-02-2011
வகை
சமகாலம்
Wednesday, February 16, 2011
தமிழ் பாடசாலைகளில் சிங்கள புலனாய்வாளர்கள்
இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி மட்டுமன்றி ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழீழ போராட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பபு காலாகாலமாக பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. விடுதலைப்போராட்டத்தில் போராளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இருந்து களத்திற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் வரை மாணவர்களின் பங்களிப்பு இருந்ததது. சாத்வீக போராட்டங்கள் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு என எல்லா வகையான புரட்சிகர போராட்டங்களிலும் மாணவர்கள் நேரடியாக ஈடுபட்டுவந்தனர்.
விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க போராளிகள் பாடசாலையிலிருந்தே உருவாகிவிடுகிறார்கள் என்ற உண்மையை அறிந்த சிங்கள அரசு தனது புலனாய்வாளர்களை சிங்களம் கற்பிக்கும் பிக்குகளாக வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று எழுந்த சர்ச்சையின் பின் நடந்த சில விடையங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசினால் பணம் போட்டு வளர்க்கப்படும் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா சிங்களத்தில் தான் தேசிய கீதம் பாட வேண்டும் என அச்சுறுத்தி பணிய வைத்ததார். அதே போல் அரச அதிபர் இமட்டா சுகுமாரும் பாடசாலை மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சிறிலங்கா ராணுவத்தின் மேற்பார்வையுடன் சிங்கள தேசிய கீதத்தை பழகத்திணித்தனர். இந்த சிங்கள தேசிய கீதத்திற்கு பான்ட் அடிப்பதற்கு யாழ் இந்து கல்லூரி மாணவர்களே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சிங்கள தேசிய கீதத்திற்கு இசை வழங்க அந்த மாணவர்கள் தமக்கு விருப்பம் இல்லை என்று பாடசாலை வரவுகளில் ஒழுங்கின்மையை காட்ட ஆசிரியர்களும் அதை பொருட்டாக எடுக்காமல் வீட்டுவிட்டனர். ஆனால் இமல்டா சுகுமாரின் அழுத்தத்தினால் மீண்டும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து பயிற்சிக்கு அனுப்பினார்கள்.
இந்த நடவடிக்கைக்கு பாடசாலை சமூகத்திடம் இருந்து வெறுப்புணர்வு வந்தும் சிங்கள பிக்கு இருப்பதனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதாக பாடசாலை சமூகம் அங்கலாத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆசிரியருக்கு பயந்து தம்மை சிங்கள தேசிய கீதத்திற்கு இசையமைக்க அனுப்பிவிட்டார் என்று அதிபர் மேல் மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அதிபர் தலையிடமாட்டார் என்றால் சிங்கள பிக்குவை தாம் அடித்து விரட்டுவோம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். அந்த பான்ட் குழுவில் இருந்த தரம் 11 மாணவன் சொல்கிறான் " ஏ.ல் அண்ணாக்கள் சிங்களாத்தில பாடப் போனதுக்கு எங்களுக்கு தான் பேசப்போறாங்கள். இந்த பிக்கு ஆமியாம். அதாலதான் ரீச்சர் மாரும் சிங்களத்தில பாட எங்கள பிள்ளைகள அனுப்ப வேண்டாம் என்டு அதிபருக்கு சொல்ல பயப்பிடினும்.... அதிபர் தலையிட மாட்டார் என்டா பிக்குவிக்கு நாங்களே சொட்ட போட்டு அனுப்பிருவம்" என்று .
ஆயுதப்போராட்டத்தையோ அல்லது சாத்வீக போராட்டங்களையோ நேரடியாக சந்திக்காத அடுத்த தலைமுறையிடம் விடுதலைப்போராட்ட வீச்சு மிக ஆழமாக செலுத்தப்பட்டுள்ளது. இயலாமை இருந்தாலும் அந்த சிறுவனின் அடி மனதின் கிடக்கை சிங்கள பிக்குவை அடித்தேனும் விரட்ட வேண்டும் என்பதாய் இருக்கிறது.
அது போக.... ஆண்கள் பெண்கள் என எல்லா பாடசாலைகளிலும் சிங்களம் கற்பிக்கவென பிக்குகள் நியமிக்கப்ட்டுள்ளனர். சிங்கள பாடசாலைகளில் தமிழ் கற்பிப்பதற்கு யாருக்கும் நியமனம் வழங்காத அரசாங்கம் தமிழ் பாடசாலைகளில் வலுக்கட்டாயமான மொழித்திணித்தலோடு சிங்கள பெளத்த கோட்பாடுகளையும் திணிக்கிறது. இதற்கு எதிப்பு தெரிவிப்பவர்கள் மற்றும் தமிழீழ விடுதலை கருத்தை கொண்டிருக்கும் பாடசாலை மட்டங்கள் என்பவற்றை அறிந்து கொள்வதற்காக பிக்கு வேடம் தரத்த சிறிலங்கா புலனாய்வாளர்கள் தமிழ் பிரதேச பாடசாலைகளில் ஊடுருவியுள்ளனர்.
ஆதி
2-17-2011

Monday, January 31, 2011
#tnfisherman & இலங்கை மீனவர்கள்...
இந்த தலைப்பினூடு பல விடையங்கள் இன்று பதிவுலகத்தில் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனது கண்ணோட்டத்தில் சில விடையங்களை பேசவேண்டும் என்று நினைக்கிறேன். இன்றுவரையான வரலாறுகளில் எப்போதும் போராட்டம் ஒன்று ஆரம்பித்த பிற்பாடு அதுபற்றிய எதிர்கருத்துகளை அல்லது விமர்சனங்களை சூழ்நிலை அறியாது செய்து தமது இருப்புகளை காட்டிக்கொள்ளும் பலர் இருந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் அவர்களால் போராட்டம் ஆரம்பிக்க முன்னர் அது பற்றி எதுவும் தெரிவிக்கும் தைரியம் கிடையாது. இது தான் இன்று தமிழரின் விடுதலைப்போராட்டத்திலும் சரி தமிழக மீனவர்களின் உயிர்பற்றிய விழிப்பு போராட்டத்திலும் சரி நடந்து கொண்டிருக்கிறது.
போராட்டங்களின் தன்மையறியாது அதுபற்றிய விமர்சனங்கள் செய்வது போராட்த்தின் தேவை குறித்த செய்தி சமுதாயத்தில் குழப்ப நிலையில் இருக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கையே தவிர போராட்டத்தின் குரலாக அமைய முடியாது.
இங்கு "இலங்கை மீனவர்கள்" என்று குறிப்பிடும் அனைத்து எழுத்தாளர்களிடமும் ஒன்று கேட்கிறேன்... இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினை என்று இதுவரை இலங்கை மீனவர் சங்கம் சொல்லியிருக்கிறதா??? இலங்கை மீனவர் சங்கம் என்பது தமிழர்+சிங்களவர்+முஸ்லிம் மீனவர்களை சேர்த்த அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகள் அறுப்பது பற்றி பேசியிருக்கிறதா???முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை, வடமராட்சி, வடமராட்சிகிழக்கு என தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கும் இடங்களில் சிங்கள மீனவர்கள் அத்து மீறி படையினரின் உதவியோடு மீன்படிப்பதால் தமிழ் மினவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேசியிருக்கிறதா??? இல்லை தமிழ் மீனவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை பகுதிகளில் மீன்பிடிக்க முடியும் என்றாவது கூறியிருக்கிறதா??? இங்கு தான் இலங்கை மீனவர்கள் என்ற பதம் தொலைந்து போகிறது.
தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று போராட்டம் நடந்து கொண்டிருக்க இலங்கை மீனவர்களின் வலையும் அறுக்கப்படக்கூடாது என குரல் எழுப்புவது உள்நோக்கு கொண்டதாகவே கருத வேண்டிக்கிடக்கிறது.
இலங்கை தமிழ் மீனவனின் வலையை தமிழக மீனவன் அறுத்தாலும் சரி தமிழக மீனவனின் வலையை இங்கத்தைய மீனவன் அறுத்தாலும் சரி ஒருவரின் பிழைப்பை இன்னொருவன் இல்லாது செய்வதை அனுமதிக்க முடியாது அதற்கு மேல் கொல்லப்படுவதை எப்படி விபரிக்க முடியும்??? இதே எல்லயைில் மீன்பிடிக்கும் சீனனும், கொரியனும் உயிருடன் திரும்பிப்போகலாம் தமிழக மீனவன் மட்டும் சாகவேண்டும் என்பது என்ன நியாயம். தமிழன் என்பதால் மட்டும் தான் அவன் சுட்டுக்கொல்லப்படுகிறான் என்பது தான் எனது கருத்து. மருந்துகளை பாவித்து ஈழத்து மீனவளத்தை சீனன் கொத்துக்கொத்தாய் அள்ளிக்கொண்டு போவது எல்லோருக்கும் தெரிந்த விடையம். ஆனால் அப்பாவி தமிழ் மீனவர்கள் அத்து மீறி வந்தார்கள் என்று சுட்டுக்கொல்லப்படுவதும் அதற்கு சொல்லப்படும் நியாயமும் மிருகத்தனத்தைவிட மோசமானது.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுதை நிறுத்தும் அதேவேளை(ஒரே நேரத்தில்) இலங்கை மீனவர்களுக்கு தமிழகமீனவர்களால் வரும் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும் என்பது போராட்டத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கை. இலங்கை அரசு முதலில் தமிழ் மீனவனை சுட்டுக்கொல்வதை நிறுத்து வேண்டும். இலங்கையில் அந்தந்த மாவட்ட மீனவர்களை அந்தந்த மாவட்டங்களில் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையெனின் எல்லோருக்கும் ஒரே சட்டம் பேணவேண்டும். எல்லாரும் எல்லா இடத்திலும் மீன்பிடிக்க முடியுமென்றால் இருந்து பாருங்கள் ஈழத்தமிழனின் பிணங்கள் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை கடல்களில் மிதக்கும். சிங்களவன் எப்போதும் தனது குணத்தோடு தான் இருப்பான். கடந்த மாதம் கூட வடமராட்சி..வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு பகுதி கடல்களில் தமிழ் மீனவர்களின் வலைகள் சிங்களவர்களால் அறுக்கப்ட்டு ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்ட்டனர்.
முதலில் தமிழ் மீனவன் சுட்டுக்கொல்லப்படுவதை நிறுத்து. இலங்கை மீனவர்கள் என்று ஜக்கியம் பேணும் இலங்கையர்கள், இலங்கை தமிழ் மீனவனுக்கு, இலங்கை சிங்களவனுக்கு கொடுக்கப்படும் உரிமையை கொடுக்கச் சொல்லி ஒரு வரியாவது எழுதட்டும் பார்க்கலாம் (நாங்கள் எழுதினால் இனவாதிகள் என்ற சொல்லாடலில் அடக்கப்பட்டுவிடுவோம்).
ஆதி
1-2-2011

திரு லோஷன் அவர்கள் தன் பதிவில் " ஐந்நூறு பேர் இறந்த பிறகுதான் இத்தனை பேரின் கண்களும் விழித்தனவா?" (லோசன்)என்று எழுதியிருக்கிறார்.இது தான் பிரச்சினை... முதலாவது தமிழக மீனவன் சிறிலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்படும் போது எல்லோரும் கத்தினோம்.... அந்த குரல்கள் கேட்கவில்லை.... 500 வது மீனவன் சுட்டுக்கொல்லப்படும் போது கத்தும் குரல் கொஞ்மென்றாலும் கேட்க ஆரம்பித்திருக்கிறது அந்த வேளையில் தான் அறுபடும் வலைகள் குறித்த கேள்வியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து வடமராட்சி வந்து சிங்களவனால் மீன்பிடிக்கப்படும் உரிமை வடமராட்சி மீனவனால் ஹம்பாந்தோட்டை போய் மீன்பிடிக்க இல்லை என்ற இலங்கை மீனவர்களிடையில் காட்டப்படும் உரிமை பிரச்சினை அறுக்கப்படும் வலைகள் விடையத்தால் மறைக்கப்படுகிறது.
இலங்கை தமிழ் மீனவனின் வலையை தமிழக மீனவன் அறுத்தாலும் சரி தமிழக மீனவனின் வலையை இங்கத்தைய மீனவன் அறுத்தாலும் சரி ஒருவரின் பிழைப்பை இன்னொருவன் இல்லாது செய்வதை அனுமதிக்க முடியாது அதற்கு மேல் கொல்லப்படுவதை எப்படி விபரிக்க முடியும்??? இதே எல்லயைில் மீன்பிடிக்கும் சீனனும், கொரியனும் உயிருடன் திரும்பிப்போகலாம் தமிழக மீனவன் மட்டும் சாகவேண்டும் என்பது என்ன நியாயம். தமிழன் என்பதால் மட்டும் தான் அவன் சுட்டுக்கொல்லப்படுகிறான் என்பது தான் எனது கருத்து. மருந்துகளை பாவித்து ஈழத்து மீனவளத்தை சீனன் கொத்துக்கொத்தாய் அள்ளிக்கொண்டு போவது எல்லோருக்கும் தெரிந்த விடையம். ஆனால் அப்பாவி தமிழ் மீனவர்கள் அத்து மீறி வந்தார்கள் என்று சுட்டுக்கொல்லப்படுவதும் அதற்கு சொல்லப்படும் நியாயமும் மிருகத்தனத்தைவிட மோசமானது.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுதை நிறுத்தும் அதேவேளை(ஒரே நேரத்தில்) இலங்கை மீனவர்களுக்கு தமிழகமீனவர்களால் வரும் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும் என்பது போராட்டத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கை. இலங்கை அரசு முதலில் தமிழ் மீனவனை சுட்டுக்கொல்வதை நிறுத்து வேண்டும். இலங்கையில் அந்தந்த மாவட்ட மீனவர்களை அந்தந்த மாவட்டங்களில் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையெனின் எல்லோருக்கும் ஒரே சட்டம் பேணவேண்டும். எல்லாரும் எல்லா இடத்திலும் மீன்பிடிக்க முடியுமென்றால் இருந்து பாருங்கள் ஈழத்தமிழனின் பிணங்கள் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை கடல்களில் மிதக்கும். சிங்களவன் எப்போதும் தனது குணத்தோடு தான் இருப்பான். கடந்த மாதம் கூட வடமராட்சி..வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு பகுதி கடல்களில் தமிழ் மீனவர்களின் வலைகள் சிங்களவர்களால் அறுக்கப்ட்டு ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்ட்டனர்.
முதலில் தமிழ் மீனவன் சுட்டுக்கொல்லப்படுவதை நிறுத்து. இலங்கை மீனவர்கள் என்று ஜக்கியம் பேணும் இலங்கையர்கள், இலங்கை தமிழ் மீனவனுக்கு, இலங்கை சிங்களவனுக்கு கொடுக்கப்படும் உரிமையை கொடுக்கச் சொல்லி ஒரு வரியாவது எழுதட்டும் பார்க்கலாம் (நாங்கள் எழுதினால் இனவாதிகள் என்ற சொல்லாடலில் அடக்கப்பட்டுவிடுவோம்).
ஆதி
1-2-2011
வகை
சமகாலம்
Tuesday, January 11, 2011
"செங்கடல்" தமிழர்களின் ரத்தத்தையும் உணர்வுகளையும் வைத்து நடாத்தப்படவிருக்கும் அடுத்த வியாபாரம்.
புலி எதிர்ப்பு ஆதரவாளர்களால் இயக்கப்ட்ட "செங்கடல்" திரைப்படம்,சிறிலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருப்பதால் தணிக்கை குழுவின் தடைவிதிக்கப்ட்டடுள்ளது என்ற பிரச்சாரம் விளம்பர நோக்கமுடையது. சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனம் செய்யமுடியாது என மைக்கைப் பிடுங்கியவர் சிறிலங்கா அரசுக்கு எதிரான கருத்தோடு படம் செய்துள்ளார் என்ற பிரச்சாரம் ஈழத்தமிழரிடத்தில் எடுபடாது. எப்படி தான் படம் இருந்தாலும் விடுதலைப்புலிகள் மீதான அவர்களின் காழ்ப்புணர்வு அந்தப்படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..
"செங்கடல்" திரப்படம் பற்றிய பேச்சிற்கு சில தமிழ் இணைய தளங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. யார் செய்தி எழுதிப்போட்டாலும் அதன் பின்னணி பற்றி அறியாமல் அப்படி செய்தியை பிரசுரிக்கும் சில பொறுப்பற்ற இணையங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய "றோ" அமைப்புடன் உறவு பேணிவரும் சில ஈழசெய்தி இணையங்கள் இந்த தவறை மீள மீள செய்து வருகின்றன.
இந்த திரைப்படத்தை பொறுத்தவரை இதை இயக்கிய லீனா மேகலை மற்றும் அவருடன் பணியாற்றிய ஷோபா சக்தி என்ற இருவரும் தமிழ்மக்களுக்கு தமிழீழம் தேவையில்லை என்ற கருத்தை எழுத்துகளினூடாக விதைத்து வருபவர்கள்.தமிழீழ போராட்ட தார்ப்பரியத்தை பக்கச்சார்பாக விமர்சித்து வருபவர்கள். தமிழீழ மக்கள் கொத்துக்கொத்தாய் பிணங்களாக சிறிலங்கா அரசால் கொன்றுகுவிக்கப்ட்ட பின் புலிகளுக்குபின் புலிகளுக்கு முன் என்று அர்தமற்ற அரசியல் எழுதி வியாபாரம் பெருக்கிறவர்கள். உச்சக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த வேளையில் போரை நிறுத்தக்கோரி நடாத்தப்பட்ட மாபெரும் பேரணி ஒன்றில் சிறிலங்கா அரசையோ இந்திய அரசையோ கண்டிக்கும் வகையில் பேசக்கூடாது என்று ஒலிவாங்கியை பிடுங்கி எடுத்தவர்தான் லீனாமேகலை.
விடுதலைப்புலிகளை எழுத்து நாகரிகமற்று, நடுநிலையற்று விமர்சிக்கும் இவர்கள் ஒருபோதுமே ஈழத்தமிழ் மக்களின் சுயாட்சி நிலைகுறித்து பேசியது கிடையாது. சிங்கள அரசோடு இரண்டாம் தரப்பு மக்களாக வாழ்வதே சாலச்சிறந்தது என்று எழுதி எழுதி தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் சிறிலங்கா அரசை விமர்சிக்கும் திரைப்படத்தை எடுத்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படியே பேசியிருந்தாலும் திரைப்படத்தின் மூலம் தமிழீழத்திற்கான போராட்டத்தால் தான் இவை நடந்தது என்று கூறி மக்கள் விடுதலைப்போராட்டத்தின் மீது பழி போடப்படுவதாயே இருக்கும் என்பது அவர்களின் கடந்த கால படைப்புகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.
தமிழீழ மக்களின் விடுதலை குறித்து எந்த அக்கறையுமற்று வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இலக்கியம் செய்யும் இவர்கள் தமது வருவாய்க்காய், விளம்பரத்திற்காய் தமிழீழ மக்களின் வேதனைகளை தமது படைப்புகளின் இணைத்துக்கொள்வது அருவருக்கத்தக்கது. ஈழத்தமிழ் மகள் தமிழ் நாட்டு பொலிஸ்காரனால் கற்பழிக்கப்டதற்கு கூட எந்தவொரு கண்டன நிலைகளையும் தமது தளங்களில் பேசாத இந்த பெண்ணிய வாதிகளின் பின்புலமும் வெறுக்கத்தக்கதாக கூட இருக்கலாம். பரவாயில்லை அதை விடுவோம்.
இந்த திரைப்படம் தணிக்கை குழுவிற்கு சென்று சில தடைகளை சந்தித்த போது "பெண்ணால் இயக்கப்ட்ட படம்... இதற்கு தடைவிதிக்கப்படுவதானது ஆணாதிக்க போக்கு" என அர்த்தமற்ற வகையில் ஆதரவு தேட நினைத்த போது அது மிகுந்த பலனளிக்கவில்லை. அதனால் தான் இந்த தமிழீழ போராட்ட எதிர்பாளர்கள் இந்த திரைப்படம் "சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துகளை" கொண்டிருப்பதாக பொய்பிரச்சாரம் செய்து படத்திற்கான இலவச விளம்பரம் செய்கிறார்கள்.
ஒரு இனத்தின் விடுதலை உணர்வுகளை பேசுவதாக கூறி செய்யப்படும் வியாபாரம் அவர்களது உச்சக்கட்ட ஈனத்தனத்தையே காட்டும்.
இறுதியாக ஒன்றை மட்டுமே சொல்லிக் கொள்ள முடியும்... "செங்கடல்" திரைப்படத்தை இயக்கும் குழு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது. இதற்கு சான்று அவர்களின் கடந்த கால வியாபார இலக்கியங்கள். இவர்கள் சிறிலங்கா அரசை திரைப்படத்தில் விமர்சித்திருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் விமர்சித்து அது தேவையில்லை என்ற வகையிலும் பேசியிருப்பார்கள். அதனால் இது குறித்த பார்வை வாசகர்களை சார்ந்தது.
ஆதி
12-01-2011
வகை
சமகாலம்
Friday, December 3, 2010
வன்னியில் மக்கள் போராட்டங்களை அடக்க வருகிறார் மேர்வின் சில்வா
சிறிலங்கா அரசு அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் அத்தனை வழிகளையும் அடைத்து வருவதோடு காட்டுமிராண்டித்தனமாக வெளிப்படையாகவே நடந்து வருகிறது. பல்கலைக்களக மாணவர்களை மிக மோசமான அராஜக போக்கை கடைப்பிடித்த சிறிலங்கா அரசு மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமின்றி குண்டர்களை வைத்தும் தாக்கியது. களனி பல்கலை கழகத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு போராட்டம் அடக்கப்பட்டதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா அவர்கள் பொறுப்பேற்றது அனைவரும் அறிந்த விடையம். அதே போல் றுகுணு பல்கலை கழகத்தில் பொலிசாரால் துன்புறுத்தப்ட்டு மாணவன் ஓருவர் கொல்லப்பட்டதும் 3 மாணவிகள் பொலிசாரால் அங்க சேட்டைக்கு உள்ளாக்கபட்டதும் அனைவரும் அறிந்த விடையம். இதே போன்றதான அடக்குமுறையை சிறிலங்கா அரசு தமிழர் தாயகப்பிரதேசங்களிலும் மேற் கொள்வதற்கு திட்டமிட்டுவருகிறது.
உரிமைகளை கேட்டு தமிழர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடாத்தும் பட்சத்தில் அது உலக அரங்கில் மிகப்பெரிய சிக்கலுக்குள் தன்னை மாட்டிவிடும் என்பதை சிறிலங்கா அரசு தெளிவாக அறியும். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதேச செயலாளர் மாற்றத்திற்கு எதிராக மக்கள் திரண்டு கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் நடாத்தியிருந்தனர். அதை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தியிருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறிலங்கா இராணுவம் உலக அரங்கில் படுமோசமான ஒன்று என்பது தெளிவாகியுள்ள நிலையில் திரும்பவும் மக்களை அடக்குவதற்கு ராணுவத்தை பயன்படுத்துவதென்பது இலங்கை அரசை அரசியல் தனிமைப்படுத்தல் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அதனால் இப்படிப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு குண்டர்களை பயன்படுத்த சிறிலங்கா அரசு முடிவெடுத்துள்ளதான அறிகிறேன். அந்த வகையில் வன்னி பிராந்தியத்திற்கு குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லை தீவு பிரதேசங்களுக்கான ஒருங்கமைப்பாளர்களை தெரிவு செய்வதற்காக அவர் ஆட்களை நியமித்து சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்ததாக அறிகிறேன்.
பிரதேசவாரியாக பிரபலமான ஒருவரையே ஒருங்கிணைப்பாளராக தெரிவு செய்யும் படி பணித்ததாகவும் அறிகிறேன். இந்த வகையில் சாதாரணமாக அனைவருக்கும் எழும் கேள்விதான் எனக்கும் எழுகிறது...
1)அபிவிருத்தி அமைச்சுடனோ கலாச்சாரா அமைச்சுடனோ அல்லது விளையாட்டு அமைச்சுடனோ சம்மந்தப்படாத மேர்வின் சில்வாவிற்கு வன்னியில் ஒருங்கிணைப்பாளர் எதற்கு.
2)மங்கள சமரவீர தமிழ் மக்களின் பிரதேசங்களில் செய்யப்படும் பெளத்த திணிப்பை விமர்சித்தபோது மேர்வின் சில்லா "மங்கள பிற்ந்த போது தெல்தெனியா பகுதியில் இருந்து பிள்ளை பெற வந்த தமிழ் பெண்ணிடம் பால்குடித்திருக்கிறார் போல" என்று தமிழ் தாய்களையும் தமிழ் பாலையும் கேவலமாக விமர்சித்த மேர்வின் சில்வாவிற்கு வன்னியில் ஓருங்கிணைப்பாளர் எதற்கு.
இவற்றிற்கு சாதாரணமான இலகு பதிகள்களே காணப்படுகின்றன.
1)தமிழ் பெண்களையும் தமிழ் கலாச்சாராத்தையும் கேவலப்படுத்துதல் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளை ஊக்குவிக்க சலுகைகளை வழங்குதல்.
2)தனது செயற்பாடுகளை விமர்சித்தாலோ அல்லது எதிர்தாலோ குண்டர்களை கொண்டு தாக்குதல். நாட்டுக்கு விரோதமாக செய்பட நினைத்தால் மக்கள் இப்படிதான் செய்வார்கள் என வெளிப்படையாக அச்சுறுத்தல்.
3)தமிழர்கள் இரண்டாம் தரப்பு பிரஜைகள் அவர்கள் உரிமை பற்றி பேமுடியாது என்ற சிங்கள சித்தாந்தத்தை தமிழீழபிரதேசத்தில் அரசியல் முறையில் (இராணுவ முறையன்று) நடைமுறைப்படுத்தல்.
4)அடாவடிதனங்கள் மூலம் நிலங்களை பறித்தல்.
போன்ற செற்பாடுகளுக்கே இன்று சிறிலங்கா அரசால் வன்னிப்பகுதிக்கு மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மக்கள் மேர்வின் சில்வாவின் ஒழுங்கமைபாளர்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும். உரிமை என்பது எமது உயிரிலும் மேலானது.
ஆதி
4-12-2010
வகை
சமகாலம்
Subscribe to:
Posts (Atom)