இன்று பெரும்பான்மை ஆசிய நாடுகளில் தொழிலாளிகளை சுரண்டிச் சுரண்டியே பல அரசுகளும் முதலாளிகளும் தமது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அதில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில், ஆழும் வர்க்கம் மாபெரும் கொள்ளைக்காரர்களாகவும் மனிதாபிமானமற்ற மிருகங்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் நோக்கம் இவர்கள் ஆட்சி செய்யும் காலப்பகுதியில் இயலுமானவரை பாமர மக்களின் சொத்துகளை சூறையாடுதல் சூறையாடிய செல்வத்தின் மூலம் இருப்பை தக்க வைத்து கொள்ளல்.
இந்த கொள்கையடிப்படையில் சிறிலங்காவின் அரசு மிகப்பெரும் அட்டூழியங்களை செய்து வருகிறது. தட்டிக் கேட்க முடியாத நிலையில் பாமர மக்களும் எதிர்க்கட்சியகளும் காணப்படுகின்றன. தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசு மற்றய நாடுகளுக்கு தாரைவார்த்துவரும் நிலங்கள் பாமர மக்களுடைய நிலங்கள் என்று எத்தனையோ தடவை ஒப்பாரி வைத்தாகிவிட்டது. ஆனால் சிறிலங்கா அரசோ அதில் இருக்கும் பண முதலைகளோ மக்களின் நலன் குறித்து எந்த அக்கறையுமற்று தமது வருமானங்களில் மட்டும் குறியாய் இருக்கின்றனர்.
போர் முடிந்த பிறகு வன்னியில் எத்தனையோ ஆயிரம் ஏக்கர் மக்களின் நிலம் அமைச்சர்மார்களின் பலவந்த பிடிகளுக்கு உள்ளாகியுள்ளது. அது போக தமிழர் தாயக பகுதிகளில் ஏனைய பகுதிகளும் இப்படியான பலவந்தங்களுக்கு உள்ளாகி வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு சம்பவம் தான் நுரைச்சோலை அனல் மின்னிலையம். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய கிராமத்தில் இந்த அனல் மின்னிலையம் அமைக்கப்ட்டுள்ளது. மீன் பிடித்தொழில் மற்றும் விவசாயத்தை ஜீவனோபாயமாக செய்து வரும் இந்த மக்களின் நிலம் செழிப்பானது. தென்னந் தோட்டங்களாலும் மரக்கறி தோட்டங்களாலும் நிறைந்த இந்த பிரதேசசத்தின் ஒரு பகுதி இன்று சிறிலங்கா அரசால் பலவந்தமாக பறிக்கபட்டடு சீன அரசாங்கத்திடம் கொடுக்கபட்டுள்ளது.
இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்திலும் அதற்கு தேவையான அரைவாசி நிதியினை சம்மந்தபட்ட அமைச்சர்கள் சுருட்டிவிட்டதாக விடயம் அறிந்த சிலர் சொல்கின்றனர்.இதனால் இந்த அனல் மின்னிலைய கட்டுமானத்தின் தரம் குறைவாகவே காணப்படும் என்பது வெளிப்படை உண்மை. அது போக அதில் இருந்து வெளியாகும் புகை அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் செழிப்பை இல்லாது செய்யப்போவதோடு எதிர்காலத்தில் மக்களின் உடல் நலத்திலும் செய்லாவக்கு செலுத்தப்போவது உண்மை. சிறிலங்காவில் மக்கள் பாவனையற்ற எத்தனையோ நிலங்கள் இருந்தும், கடற்கரைகள் இருந்தும் அவற்றை எப்படி தொழிற் பேட்டைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது.. அல்லது அதை எப்படி பாவிப்பது என்று ஆய்வுகள் செய்வதை விடுத்து மக்களின் நிலங்களை பறிப்பதும் அதன் வழங்களை சிதைத்து குறுகிய காலத்தில் தமது செல்வத்தை பெருக்குவதிலும் குறியாக இருக்கும் இந்த முதலாளி வர்கங்களை எப்படி அடக்குவது??? இந்த அதிகாரப் போக்கிற்கு எதிராக எப்படி மக்கள் திரண்டெழுவது???? இந்த அதிகார போக்குகள் கட்டுப்படுத்தாவிடில் எதிர்காலத்தில் பாமர மக்கள் வறுமையால் சாகும் நிலை உருவாகும்....
ஆதி
17-03-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment