ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை உலக அரசியல் தளம் பல்வேறு வழி முறைகளில் இதை கையாள்கிறது. மேற்குலகம் தனியொரு பார்வையையும் தெற்காசியா பிறிதொரு பார்வையினூடாகவும் இதை அணுகுகிறது எனலாம். தெற்காசிய “அரசியல் செல்வாக்கு” நாடுகளை பொறுத்தவரை வெளிப்படையாக அமெரிக்க எதிர்ப்பு போக்கை வெளிப்படுத்துகின்றன. அதாவது அமெரிக்கா தெரிவிக்கும் எதற்கும் எதிர்மறையான செயற்பாட்டை வெளிப்படுத்துவதையே இந்த அரசுகள் விரும்புகின்றன எனக் கூட கூறலாம். ஆனால் இந்த நாடுகள் எந்த அளவிற்கு அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் என்பது சந்தேகத்திற்குரியதே.
இலங்கையில் நடந்த போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30ற்கு மேற்பட்ட நாடுகள் செல்வாக்கை செலுத்தியிருந்தன என விமர்சனங்கள் இருக்கின்றன. அதாவது தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு 30 நாடுகளை களம் இறக்கியிருந்தது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆயுத போராட்ட வடிவை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு போரிற்கு சிறிலங்கா அரசு மற்றைய நாடுகளையும் உதவிக்கு இழுத்திருந்தது.
தமிழ் மக்களின் போராட்டத்தின் தார்ப்பரியம் அதன் பின்னணி அதன் தேவை சிங்கள பயங்கரவாதத்தின் ஆழம் குறித்து போதியளவு அறிந்திராத நாடுகள் சிறிலங்கா அரசின் இன அழிப்பு போருக்கு ஆதரவு செய்திருந்தன. போருக்கு ஆதரவு செய்த நாடுகளுக்கு போரிற்கு பின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. போருக்கு எந்த வழியிலும் உதவிய அத்தனை நாடுகளும் சிறிலங்காவில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆதை தட்டிக் கேட்க கூடிய உரிமை தமிழ் மக்களிற்கு இருக்கிறது.
மேற்குலகத்தின் போக்கு
மேற்குலகத்தை பொறுத்தவரை தமது தெற்காசிய ராஜதந்திர நகர்வுகளிற்கு மற்றும் வர்த்தக ஊடுருவல்களுக்கு சிறிலங்கா என்பது இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது. தமது ஊடுருவல்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசின் பேச்சிற்கேற்ப சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலில் தான் தம்மோடு எந்த தொடர்புமற்ற தமிழ் மக்களின் விடுதலை அமைப்பை தடைசெய்தது. தடை செய்தது மட்டுமல்லாது விடுதலைப்புகளுக்கெதிரான போரில் தொழினுட்ப ரீதியிலான உதவிகளை வழங்கி விடுதலைப்புலிகளின் நகர்வுகளை சிறிலங்கா அரசிற்கு கொடுத்தது. மேற்குலகின் இந்த செயற்பாடுகள் தான் இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் ஈழத்தில் முடங்கி தமிழ் மக்கள் சிங்கள அரசின் அடிமைகளாகக்ப்ட்டுள்ளனர்.
இப்போது சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் விடையத்தில் நடந்து கொள்ளும் முறைகளில் அதிர்ப்தி அடைந்த மேற்குலகம் சிறிலங்கா அரசை தண்டித்து வரப்போகும் சிறிலங்காவின் அரசுகளிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற கொள்கையில் இருப்பது போல் இருக்கிறது. தமிழ் மக்கள் பல லட்சக்கணக்கில் வெளிநாடுகளில் பரந்து கிடப்பதால் அவர்கள் ஒரே நேரம் திரண்டெழுந்து தம்மிடம் நீதி கேட்டால் தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த வஞ்சகப்போக்கு உலகத்தாருக்கு தெரிந்து விடும் என்ற ரீதியில் இதை கையாள்கிறது. தவிர முதலாளித்துவ போக்கு கொண்ட சீன அரசாங்கத்தின் தலையீட்டையும் கட்டுப்படுத்த நினைக்கிறது மேற்குலகம்.
தெற்காசியாவின் போக்கு
தெற்காசியா எனப்படும் போது இங்கு வல்லரசுக்கனவோடு இருக்கும் இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கமே அதிகம். சீனாவை பொறுத்தவரை இந்தியாவை கண்காணிப்பதற்கும் தனது வர்த்தக வலயங்களை உருவாக்குவதற்கும் மட்டுமே சிறிலங்கா தேவை. அதே போல் தனது அரசியல் பலத்தை பரிசீலிப்பதற்கான தளமாகவும் ஈழப்பிரச்சினையை பார்க்கிறது சீனா. சுpறிலங்காவின் பிரச்சினைகளில் மற்றய நாடுகள் தலையிட வேண்டாம் என்பது போன்றான எச்சரிக்கைகளும் இதன் தொடர்களே.
ஏல்லாவற்றிற்கும் அப்பால் வல்லாதிக்க திமிரின் திரை மறைவில் ஒழிந்து நிற்கும் போர்க் குற்றவாளி இந்தியாவே. இன்று தமிழ் மக்கின் விடுதலைப்போராட்டத்திற்கு அனைத்து வழிகளிலும் சிங்கள அரசிற்கு உதவியளித்து தமிழர் போராட்டத்தை நசுக்கியது இந்த இந்தியா தான் என்பது வெளிப்படை உண்மை. சிறிலங்கா அரசு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டால் இந்தியாவின் போர்க்குற்றத்திற்கெதிரான சாட்சியமாக அது மாறிவிடும் என்று அஞ்சுகிறது இந்தியா.
சிறிலங்கா அரசிற்கெதிரான அத்தனை குற்றச்சாட்டுகளையும் தனது ராஜதந்திர மற்றும் ஊழல் அரசியலினூடாக மறைத்துக் கொள்கிறது இந்தியா. சிறிலங்காவில் இப்போது சீனாவின் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலும் சிறிலங்காவிற்கு ஒரு எச்சரிக்கை கூட விடமுடியாத நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது இந்திய வல்லாதிக்கம். குடும்ப பழிவாங்கலுக்காக தமிழீழ மண்ணையே சுடுகாடாக்கிய சோனியாவின் அரசு சிறிலங்கா அரசினால் குற்றவாளிக் கூண்டுக்கு கூட்டிச் செல்லப்படக் கூடிய நிலை காணப்படுவதனால் சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்கான முழு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது இந்திய வல்லாதிக்கம்..
புலம்பெயர் தமிழர்களின் தேவை
இந்த உலகமயப்படுத்தப்பட்ட எமது போராட்டத்தில் இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு முற்று முழுதாக தேவைப்படும். எமது உரிமைப் பிரச்சினையை பொறுத்தவரை நாங்கள் கேட்டு இந்தியா எமக்கு நேரடியாக உதவப்போவதில்லை. ஆனால் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்குலக நாடுகளில் இருந்து எமது போராட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் இந்த நாடுகளாலையே முன்வைக்கப்பட்டது. எமது பிரச்சினைகளை நிதானமாக உள்வாங்கக் கூடியவர்களாக இருப்பவர்கள் மேற்குலகத்தினர் மட்டுமே.
சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ள ஜ.நா வின் அறிக்கை தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்தும் பேசியிருந்தது. எனவே சிறிலங்காவில்; எமக்கான உரிமைகள் மறுப்பு குறித்து மேற்குலகம் தெளிவடையத் தொடங்கியிருக்கிறது என்ற முடிவிற்கு நாம் தாராளமாக வரலாம்.
சனல் 4 மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியகள் காட்டிய வீடியோ குறிப்பிட்ட ஒருசில சம்பவங்கள் மட்டுமே. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடைக்காமலும் எந்த தடயமுமின்றி சிங்கள அரசால் நடாத்தப்ட்ட கொடுரங்கள் நிறைய என்பதை எல்லாத்தமிழர்களும் அறிவார்கள்.
எம்மீதான அழிப்பை எவ்வளவு கொடுரமாய் சிறிலங்கா அரசு நடாத்தி முடித்தது என்று இன்று உலகம் பூராவும் பார்க்க கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் இந்த சிறிலங்கா அரசிற்கு எதிராக எமது விடுதலைக்காக எமது தாயக உறவுகளிற்க்காக எதை செய்தோம் என்று யாராவது சிந்தித்துண்டா??
ராஜதந்திர வழியிலான போராட்டங்களை முன்னெடுக்க ஒவ்வொரு தமிழரும் ஒன்றிணைய வேண்டும். குழுக்களாக பிரிந்து கிடக்கும் தமிழர்கள் தமிழினமாக ஒன்றுபட்டு ஒட்டுமொத்த இனத்தின் விடுதலைக்கு பாடுபடவேண்டும். அந்ததந்த நாடுகளில் அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் அரசியல் கட்சிகள் சர்வதேச அமைப்புகள் என எல்லாவற்றுடனும் தொடர்புளை ஏற்படுத்தி தமிழினத்திற்கெதிராய் நடந்தேறிய போர்க்குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தெளிவுபடுத்துவதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்விற்கான நியாயத்தையும் தெளிவு படுத்தவேண்டும்.
மேற்குலகம் எமது பிரச்சினையை சரியான முறையில் அணுகுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்குலகத்தை பலமாக வைத்து இந்தியாவை அடக்க வேண்டும் அல்லது எமது பக்கம் உள்ள பிரச்சிகைகளுக்கு தீர்வு காண வலியுத்த வேண்டும். போராட்டங்களிற்கான புதிய வழிகளை திறப்போம். சுpறிலங்கா அரசின் நடவடிக்கைகளை முறியடிக்க கூடியவகையில் ராஜதந்திர நகர்வுகளினூடாக போராடுவோம். வீடுகளில் முடங்கிக்கிடப்பதால் எமக்கு விடுதலை கிடைக்க போவதில்லை.
உலகே எமது பிரச்சினை தொடர்பில் பார்வையை செலுத்தியுள்ள நிலையில் எமது போராட்த்தின் தேவையை உலகிற்கு உணர்த்த வேண்டியது கட்டாயமாகும் நேரமும் இதுவாகும்.
ஆதி
10-05-2011
No comments:
Post a Comment