போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு சர்வதேச அழுத்தங்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் திரை மறைவில் தனது தொடர்ச்சியான இருப்பிற்கான அடித்தளங்களை ராஜபக்ச கச்சிதமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
ஏதிர்க்கட்சிகளின் வலுவை சிதைப்பதுஇ சிறுபான்மையினரின் குரலை அடக்குவது என்று பல நிகழ்ச்சி நிரல்களின் கீழ் அவரின் நடவடிக்கைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. “ஒரு கட்சி ஆட்சி” அதாவது “மன்னராட்சி” முறையிலான நடவடிக்கைகளுக்கு மகிந்த ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இன்றுள்ள அரசியல் அமைப்பின்பிரகாரம் முழுஅதிகாரமும் மத்திய அராங்கத்திடமே குவிந்துள்ளது. அதிலும் ஜனாதிபதிக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆதிகாரமிக்க நீதிமன்றங்களின் தீர்ப்பில் கூட தலையிடக்கூடிய வகையில் ராஜபக்ஷவின் கையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த தலமையிலான ராஜபக்ஷ குடும்பம் இன்று சிறிலங்காவின் முக்கிய வர்த்தக மையங்கள் உட்பட உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக கேந்திர மையங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பெரும் பணப்புழக்கத்தில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தை எதிர்த்து ஒரு பெட்டிக்கடை கூட நடாத்த முடியாத நிலையில் சிறிலங்காவின் நிலை மாறிவருகிறது.
வௌ;வேறு கட்சிகளில் மக்களால் தெரிவு செய்யப்ட்டவர்கள் கூட இன்று ராஜபக்ஷவின் அதிகாரத்தாலும் பணத்தாலும் விலைக்கு வாங்கப்பட்டு ராஜபக்ஷ கட்டுப்பாட்டில் வைக்கப்ட்டுள்ளனர். இதனால் பலம் மிக்க எதிர்க்கட்சிகள் எதுவுமற்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குடும்ப ஆட்சியை வலுவாக நிறுவியுள்ளது.
சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் நட்ப்பு வைத்துள்ள மகிந்த ராஜபக்ஷ மன்னராட்சி தொடர்பில் அரபு நாடுகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மன்னராட்சியை உருவாக்குவதற்கு தேவையான காரணிகள் மற்றும் அதிலுள்ள சிக்கல்கள்இ சட்ட தேவைகள் குறித்தும் தமது அதிகாரிகளை அரபு நாடுகளுக்கு அனுப்பி ஆராய்ந்து வருகிறார்.
எப்படியான அரசியல் முறமையை அவர் கையாண்டாலும் தமிழர்களின் உரிமைப்பிரச்சினை அவருக்கு மிகப்பெரிய தலையிடியாக தொர்ந்து கொண்டே இருக்கும் என்று நன்கறிந்த மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினரின் அரசியல் குரலை நசுக்கும் நடவடிக்கைகளிலும் மிக மும்மரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆழும் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை தேர்தலினூடாக தெரிந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷஇ வடக்கு கிழக்கு பகுதிகளில் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கு துணை ராணுவக் குழுக்களை களம் இறக்கியுள்ளார். இவர்களுக்கு பக்கபலமாக ஆயுதம் தாங்கிய படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். போர்க்குற்றம் தொடர்பில் ஜ.நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை எப்படியும் சிதைத்துவிடவேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இந்தியாவினூடாக தமிழ் தேசியக் சுட்டமைப்பிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பது அல்லது நேரடியாக தமிழ் தேசிய சுட்டமைப்பு ஊறுப்பினர்களை அச்சுறுத்தி அடக்குவது என்ற நிலைப்பாட்டில் ராஜபக்ஷ இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆதன் தொடர்ச்சியாகதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் உதவியாளர்கள் தாக்கப்படுவதும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதும்.
தவிர இன்று தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்வென்றாலும் சரி நிறுவன நிகழ்ச்சிகள் என்றாலும் சரி ராணுவத்தின் பிரசன்னம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுpறிலங்கா ராணுவத்தின் பிரசன்னம் இன்றி எந்த நிகழ்ச்சிகளும் தமிழர் தாயகப்பகுதிகளில் நடாத்த முடியாது என்ற நிர்ப்பந்தம் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் திணிக்கப்பட்டுள்ளது. தமது சுய அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எந்த பிரச்சினையுமின்றி ராஜபக்ஷ தாளத்திற்கு ஆடும் ஈ.பி.டி.பி கட்சிஇ தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிஇ கருணாகுழு உட்பட அத்தனை துணை ராணுவக் குழுக்கழுமே தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ் மக்களின் அரசியல் குரலை அடக்குவதற்கு மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் தாயகப்பிரதேசங்களில் இருந்து மண் உட்பட அத்தனை வளங்களையும் தென்னிலங்கைக்கு பலவந்தமாக திருடி அனுப்புவதில் இந்த துணை ராணுவ குழுக்கள் இயங்குவதோடு பாதுகாப்பிற்கு சிறிலங்காவின் ஆயுதம் தாங்கிய படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுபோக கல்வி நடவடிக்கைகள்இ அதிகாரிகள் இடமாற்றங்கள்இ அரச அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களிலும் இந்த துணைராணு குழுக்களின் பிரசன்னத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு தமிழ் மக்களின் நலன் குறித்து பேசும் அத்தனை குரல்களும் முடக்கப்ட்டு வருகிறது.
தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும் உள்ளுராட்சி மன்றங்கள் நேரடியாக மாகாண ஆளுனரினதும் மத்திய அரசாங்கத்தினதும் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசாங்கம் தான் நினைப்பதை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. அதை தட்டிக்கேட்கும் நிலை யாருக்கும் வழங்கப்படுவதில்லை. அதுபோக யாழ்ப்பாணத்தின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது. என்னதான் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி அரச அதிகாரியாக இருந்தாலும் சரி யாழ்ப்பாண ராணுவ தளபதியின் அனுமதியின்றி ஒரு பட்டம் கூட பறக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்ட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசக்கூடிய அத்தனை வழிகளும் ராணுவ இயந்திரத்தால் அடைக்கப்ட்டுள்ளது.
சிறுபான்மையினரின் குரலை அடக்குவதன் மூலம் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி நகர்வுகளை தீவிரப்படுத்தலாம் என நம்புகிறது அரசு. போர் முடிந்து 2 வருடங்கள் கடந்து வரும் நிலையில் அவரகாலச்சட்டம் உட்பட பல கெடுபடிகள் நீங்கப்படாமைக்கான காரணம் ராஜபக்ஷ தலமையிலான குடும்பாட்சியை உறுதிப்படுத்துவதற்கே.
புலம்பெயர் தமிழர்களின் கைகளில் வழங்கப்ட்டுள்ள தமிழர் போராட்டங்கள்
ஈழத்தில் தமிழ் மக்களின் குரல்கள் அத்தனையும் ராணுவ இயந்திரத்தால் அடக்கப்ட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தான் முழுவீச்சுடன் தமிழர் உரிமைப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கெதிரான பாரிய மனித படுகொலையை சிறிலங்கா அரசு செய்து முடித்து இன்று 2 வருடங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய பாரிய போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் செய்யவில்லை என்றே தெரிகிறது. ஜ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஆதாரமாக வைத்து சிறிலங்கா அரசிற்கெதிரான போராட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசிற்கெதிரான கோஷங்கள் எழுப்பப்பட வேண்டும். இராணுவ அதிகாரிகளாக இருந்து இன்று சிறிலங்காவின் ராஜதந்திரிகளாக முகமூடி தரித்துள்ளவர்களை இனங்கண்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு தமிழர் உரிமைப்பிரச்சினையில் நேரடியாக சர்வதேசத்தை தலையிடும் படி கோரி போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் நடாத்துவதினூடுதான் எமது விடுதலைப்போராட்டம் இன்னமும் முடியவில்லை என்று உலகிற்கு எடுத்துக்காட்ட முடியும். எம்மீதான கொடூர இனப்படுகொலையை சிறிலங்கா அரசு நிகழ்த்தி இரண்டு வருடங்கள் கழியும் இந்த நிலையில் விடுதலை பெறும் வரை போராடுவோம் என சபதம் எடுப்போம் உறவுகளே!!
ஆதி
10-05-2011
No comments:
Post a Comment