இன்று தமிழ் மக்களை பொறுத்தவரை புத்தரை ஒரு ஞானியாகவும் பெளத்தத்தை ஒரு மதமாகவும் பார்க்கும் மனநிலை தாண்டி "பெளத்தம்" என்பது ஒரு இன அழிப்பு குறியீடாகவே பார்க்கின்றனர்.
வன்னியில் புத்த சிலைகளை கண்டால் குழந்தைகள் மிரளுகிறார்கள்...அரச மரங்களை கண்டால் "எப்ப இதில புத்தர கொண்டுவந்து வைக்கப்போறாங்களோ!!!" என்ற வெறுப்பு ஏக்கம் மக்களிடத்தில் பரவிக்கிடக்கிறது. சிங்கள அரசானது இன அழிப்பை ஆயுதத்தாலும் இனக்கலப்பு மற்றும் இனப்பரம்பல் சிதைப்பை பெளத்த்தாலும் செய்து வருகிறது.
கட்டாய கொண்டாட்டங்களும் உயர் நீதிமன்ற விதிகளை தாண்டிய ஒலிபரப்புகளும் ஆயுதப்படையின் பாதுகாப்புமென பெளத்தம் தமிழ் மக்களின் மீதான இனச்சிதைப்பை செய்யும் மிகப்பெரிய அரச இயந்திரமாக உருவெடுத்துள்ளது...அதில் புத்தன் அரக்கனாகவும் சிங்கள சிப்பாய்கள் அரக்கனின் பாதுகாவலர்களாகவும் மாற்றம் பெற்றுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பிக்குவை கண்டால் "சிங்கள மொட்டையன்" என்று காறி உமிழ்கிறார்கள். இது யாராலும் பயிற்றிவிக்கப்ட்டதல்ல.. பெற்றோர்கள் வீடுகளில் பேசுவதை அவர்கள் பெளத்தத்தின் மீது காட்டும் வெறுப்பை சிறுவர்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தவிர அண்மையில் ஒரு இளைஞர் கூட்டம் இப்படி ஒரு பந்தையம் கட்டியது "இண்டைக்கு அதில இருக்கிற புத்தருக்கு முதலில் மூத்திரம் அடிக்கிறதாரு??"
தங்களின் இயலாமை காட்டுவதற்கு சிறுவர்களும் இளைஞர்களும் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்.
பெளத்தம் என்ற தியான நெறியை மதம் ஆக்கியதும் அந்த மத வெறியால் இன்னொரு இனத்தை அழிப்பதும் சிங்களம் தான்... சிறிலங்காவை பொறுத்தவரை பெளத்தம் ஒரு என்பது ஒரு மத தீவிரவாத அமைப்பு...
ஆதி
22-5-2011
முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட கருத்தூட்டல்கள் கீழே..
· · Share · Delete

- Pathinathan Arulnesanஉங்களுக்கு யார் இதெல்லாம் வந்து சொல்றாங்கள்?...ஹா ஹா ஆ,
இதுகளை பெருமையா வேற சொல்லிக்கொள்ள முடிகிறது உங்களால்....இவற்றை வைத்துக்கொண்டு பார்த்தால் உங்களைச் சுற்றிய சூளலை மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர இது தமிழர்களின் புரட்சியாக தெரியா...து நண்பரே.
இவற்றையெல்லாம் (அசிங்கங்களை) எழுதிதான், தமிழர்கள் மீண்டும் தங்கள் புரட்சியை ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டுமா? தமிழர்கள் அவ்வளவு முட்டாள்களா? - ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்.
இதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற வேலைகள், இந்த நாட்டில் மட்டுமல்ல உலகம் முளுவது பயன்படுத்தப்படும் கொலையாயுதம் மதம். சிங்கள அரசியல்வாதிகள் பௌத்தத்தை வைத்துக்கொண்டு மக்களை தமிழர்களுக்கெதிராக தூண்டினால் - அதே பௌத்தத்தை அசிங்கப்படுத்தி அவர்களுக்கெதிராக தமிழ் அரசியல்வாதிகள் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் உருவான போராட்டம் இறுதியில் கொலைவெறிபிடித்து தனது இனத்தையே தின்று அழிந்துவிட்டது. இப்போது எந்த நோக்கத்திற்காக அதே தூண்டல்களை தொடர்கிறீர்கள். நீங்கள் முதலில் யாருக்காக எழுதுகிறீர்கள்?...வரப்போகி ற அடுத்த மெசியா யார்?
தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்ய சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்" இவ்வளவுதானே இங்கே நீங்கள் சொல்ல வருவது. அதை தடுக்க சந்தியில் நின்று புத்தனை மல்லுக்கிளுத்தால் சரிவருமா?
நடுனிலையாய் நின்று எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைகள் , கோபங்களாகவும் அவலங்களாகவும் மட்டுமே தெரிகிறது...வீட்டுக்குள் நின்றுகொண்டு வீட்டின் குறை நிறைகளை சொல்ல முடியாது, அப்படிச் சொன்னால அது வெறும் பொறுக்காமல் வருகிற புலம்பலாகவே தோன்ன்றும். வெளியிலிருந்து பாருங்கள். அப்போது அதன் குறை நிறைகள் சரியாகத் தெரியும். அப்போது அதை சரியாக சொல்லமுடியும், எங்கள் நியாயங்கள் நீதியானதாக இருக்கும் அப்போதுதான் எங்களுக்கான நியாயமான நீதியை எதிர்பார்க்கமுடியும். நண்பனாக, வழ்த்துக்களுடன் - ப. அருள்நேசன்See MoreYesterday at 11:54am · · 2 peopleAgiilan Thadchchanamoorthy and Nila Shayene L like this. - ஆதி ஆதித்யன்இது யார் சார்பான தூண்டுதலோ போராட்டத்திற்கான அறைகூவலோ கிடையாது நண்பரே!!! எங்களை சுற்றி நடக்கும் அக்கிரமங்களும் சமூகத்தில் நடக்கும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் இந்த பதிவு. இனி வரும் காலங்களில் வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களிற்கு மக்களுக...்கு யாரும் அறை கூவல் விடுக்க வேண்டிய தேவைகள் இல்லை. மாறாக மக்களின் இயலாத்தன்மையும் அதனால் அதிகாரங்களுக்கெதிராய் மக்கள் கூனிக்குறுகி சிந்திக்கும் முறைகளையும் நாங்கள் பேசியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது... இங்கு நான் எழுதி அத்தனை விடையங்களும் இப்பொழுது எமது சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பவை மட்டுமே!!! ....See MoreYesterday at 12:20pm · · 1 personVasudevan Kanagasabai likes this.
- ஆதி ஆதித்யன் இங்கு எந்த அசிங்கங்களினூடாகவும் பிரச்சினைகளை சொல்லவில்லை..... அன்றாட எமது வாழ்வில் பாவிக்கும் சொற்பிரயோகங்கள் மட்டுமே பாவித்திருக்கிறேன்... ....Yesterday at 12:24pm ·
- Kirishanth Selvanayagamசரியாக சொன்னீர்கள் அண்ணா.. உங்களின் இந்தப் பதிவு நிச்சயம் தேவை.. சிறுவர்கள் தங்கள் இயலாமையை இப்படியாவது காட்டுகிறார்கள்.. இது ஒரு அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் நடக்கும் வழமையான ஒன்று தான்... இதே போலத் தான் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெர...ிக்கப்படைகள் மீது சிறுவர்கள் கல்லால் எரிந்து தங்கள் எதிர்ப்பைக் கட்டுகிறார்கள்.., இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீனியச் சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது ஒளிந்து நின்று கவண் மூலம் கல்வீச்சு நடாத்துகிறார்கள்... விடுதலை மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில் தங்கள் வெறுப்பை எங்களின் தம்பிகளும் இப்படிக் காட்டுகிறார்கள்... அதில் தப்பில்லையே..........!See MoreYesterday at 5:47pm · · 1 person
No comments:
Post a Comment