Powered by Blogger.

Monday, September 23, 2013

தமிழீழ மக்களுக்கு முதலாவது ஆப்பு வைக்க தயாராகிறதா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் மக்கள் விடுதலைப்புலிகளின் அபிமானிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கருத்தில் கொண்டு பெரு வெற்றியீட்டச் செய்திருக்கிறார்கள்.

மாகாண அரசியல் என்பது பூச்சாண்டி என நன்கு அறிந்து வைத்திருந்தும் சர்வதேச அரசியல் அரங்கிற்கு தமது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லும் ஒரு சந்தர்ப்பமாக மாத்திரமே இதை தமிழீழ மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்கள் மீதான தனிப்பட்ட நம்பிக்கையில் வாக்குகள் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

தனியே சிங்கள பேரினவாத்தை மட்டும் அகற்றியது மட்டுமல்லாது கூட்டமைப்புக்குள் ஒழிந்திருக்கும் குள்ள நரிகளையும் இனங்கண்டு துரத்தியிருக்கிறார்கள் தமிழீழ மக்கள்.

குறிப்பாக இந்திய வல்லாதிக்க வற்புறுத்தலினால் கூட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஆனந்த சங்கரியை தமிழீழ மக்கள் கிளிநொச்சி அரசியலில் இருந்து வெளியேறும்படி சொல்லியிருக்கிறார்கள். (2,500 வாக்குகள் விழுந்தனதானே என்று எண்ணுபவர்களுக்கு தொடரந்து வாசிக்க விளங்கும்).

கிளிநொச்சி மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஆனந்தசங்கரிக்கு இந்திய சிங்கள வல்லாதிக்க வற்புறுத்தலில் மேலதிக ஆசனத்தில் ஒன்றை வழங்குவதற்கு சம்மந்தர் அவர்கள் தயாராகிவருவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.

புலிகள் நிர்வாகத்தில் இருந்த வேளை நடந்த தேர்தலில் சங்கரிக்கு கிளிநொச்சியில் இருந்து விழுந்த அந்த ஒரே ஒரு ஓட்டுப் போட்ட கந்தப்பு (பசுமாடு வாங்க காசு தாறன் என்று ஆளுக்கு சங்கரி கடிதம் போட்டது அப்ப) கூட இன்று வெளியாகியிருக்கும் செய்தி கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

சங்கரி அப்படி என்ன செய்தார்!!!

சம்மந்தர் அய்யா போல் சங்கரியும் ஒரு இந்திய விசுவாசி என்பதற்கப்பால் சிங்கள அரசுகளின் நிரந்தர நண்பர். அமைச்சுப்பதவியில் இல்லாத ஒரு கதிர்காமர்தான் சங்கரி.

சங்கரியில் கடந்த 6 வருட (அதற்கு முற்பட்டவை பற்றி எல்லோருக்கும் பொதுவாக தெரியும்) அரசியல் செயற்பாடுகள் குறித்து நுணுக்கமாக பார்த்தால் எல்லாம் புரியும்.

அன்ரன் பாலசிங்கண்ணை மற்றும் தமிழ்ச்செல்வண்ணையின் இழப்புகளை தொடர்ந்து தமிழீழ சர்வதேச அரசியல் செயற்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டமை வெளிப்படையானது. இந்த நேரத்தில் தான் சங்கரி மிக கேவலமான தனது அரசியலை முழு மூச்சுடன் செய்ய ஆரம்பித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் பல மோசமான பொய்க்குற்றச்சாட்டுகளை சர்வதேச அரசியல் தலைவர்களுக்கு வழங்கியதில் சங்கரியின் பங்கு பெரிது.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்குமாக மாறி மாறி ஓடி ஏராளமான சதிகளை செய்தவர்தான் சங்கரி. இந்தியாவின் சுப்ரமணியசுவாமியாகவும் சிங்களத்தின் கதிர்காமராகவும் செயற்பட்டார்.

இனப்படுகொலைப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் சிங்கள விசுவாசம் செய்த ஆனந்தசங்கரி இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகிறார்.

2008 இல் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாமல் தங்கியிருந்த குடும்பங்களை சந்திக்க வந்த சங்கரி "எனக்கு வன்னி உடும்பு இறச்சியும் புட்டும் சாப்பிட ஆசை.. எங்க பிரபாகரன் விட்டாத்தானே" என்று கதையளந்து சனம் வெளில போக சொல்லி அனுப்பின சம்பவம் நடந்தது.


சங்கரியை அரசியலுக்குள் கொண்டுவர நினைப்பது யார்!!

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிரான ஆனந்த சங்கரியை மக்கள் திட்டமிட்டு நிராகரித்த பின்னரும் ஆனந்தசங்கரியை மாகாணசபை உறுப்பினராக்கி அழகு பார்க்க நினைக்கிறது இந்திய சிங்கள அரசியல் கூட்டு சதிகள்.

இத்தனை நாளாக தமது அராஜகங்களுக்கு துணை போய் தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை காட்டிக் கொடுத்தமைக்காக மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் தமது அழுத்தங்களினால் அப்படியாவது பலவந்தமாக ஆனந்தசங்கரிக்கு ஒரு அரசியல் இருப்பை செய்து கொடுப்பதற்காகவே முயற்சிக்கின்றன என்று தெரிகிறது.


தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள்

மேலதிக ஆசனத்தில் மக்களால் முழுமையாக நிராகரிக்கபட்ட ஆனந்த சங்கரி  மக்களுக்கான அரசியலில் பலவந்தமாக திணித்து உங்கள் இந்திய அடிமைத்தனத்தை எமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டாம்.

இந்திய வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த தேர்தல் நடாத்தப்பட்டதும் அதற்காக பிரச்சினைகள் சிங்கள பேரினவாத அறிக்கைகள் சோடிக்கப்பட்டதும் அனைவரும் அறிவோம். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலைவீரர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகளால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்றும் நீங்கள் ஏற்றுக் கொண்டு சிங்கள இராணுவத்தின் முன் நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்காக மாத்திரம் தான் எங்கள் சனம் அடக்குமுறைகளையும் உடைத்து வாக்களிப்பு நிலையம் வந்தது.

சனம் எப்படி ஓட்டுப்போட்டது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கூட்டமைப்பை தெரிவு செய்யும் அதே வேளை தவறானவர் தெரிவு செய்யப்படக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே சனம் இருந்தது.

முதன் முறையாக ஓட்டுப்போட வந்த சனமும்.. பதட்டத்தில் தாங்கள் பிழையாக ஓட்டுப்போடக் கூடாது என்று எப்படி ஓட்டுப் போடுவது என்று கேட்டறிந்து வந்த சனமும் கூட்டமைப்பிற்காக வரவில்லை. புலிகளுக்காக தான் வந்தார்கள் என்பதை நினைவல் வைத்து மக்களால் நிராகரிப்பட்டவர்களை நிராகரிக்கப்பட்டவர்களாகவே கருதும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக ஆசனத்தில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.

ஆனந்தசங்கரி என்ற நரியைவிட ஈபிடிபி கும்பலில் போட்டியிட்டவர்கள் சிலருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கட்டுரை சங்கரியை மேலதிக ஆசனத்தில் வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்ய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யோசனை வைத்திருப்பதாக வெளியாகிய செய்தியை அடிப்படையாக வைத்து சங்கரி குறித்த அரசிலையும் நிராகரிப்பையும் பேசுவதற்காய் எழுதப்பட்டது.


ஆதி
கிளிநொச்சி.
23-09-13






















































Saturday, July 6, 2013

அவர்கள் வழமைக்கு திரும்பிவிடுவார்கள் ஆனால் உங்களை நம்ப முடியாது.


தலைப்பு ஒரு சிங்கள அதிகாரி சொன்ன வசனம்.
இன்று வடமாகாண தேர்தல் தொடர்பாக பல விவாதங்கள்.. சந்திப்புகள் அரசியல் காரசாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை வெறும் மாகாண அதிகாரங்களுக்குள் அடக்கிவிட நினைத்த இந்திய வல்லாதிக்கத்தின் நயவஞ்சகத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு எப்பொழுதோ தேவையற்றது என தூக்கி எறிந்த பிறகு தமிழீழ மக்கள் தமது இரத்தத்தை சிந்தி வலிகளை சுமந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் மாகாண சபை அதிகாரம் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது.

இது கூட இந்திய காங்கிரஸின் நாடகம் என்பதை எல்லா தமிழீழ மக்களும் அறிவார்கள்.

சிங்களம் எதிர்ப்பதாய் எதிர்க்கும்.. அதை இந்தியம் வாங்கித் தருவதாய் தரும்... எல்லாவற்றையும் தமிழீழம் நம்பும் என்பது அவர்களின் கணக்கு.
இந்தியம் எப்படிக் கணக்குப் போட்டாலும் சிங்களத்திற்கு தமிழீழம் குறித்த பதட்டம் ஒரு துளியும் குறையவில்லை.

இந்தியத்தின் கணக்குப்படி வடமாகாண தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுஆட்சியமைக்க வேண்டும் அத்துடன் தமது வேலை முடிந்துவிடும் தமிழீழ மக்கள் இந்தியாவை நம்புவார்கள் என்ற சராசரி சினிமா அரசியல் சிந்தனையுடன் செயற்படுகிறது. ஆனால் சிங்களம் தமிழீழ மக்களை நம்பத்தயாராக இல்லை.

வடமாகாண தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட பல பிராதான நகரங்களில் சிங்கள அதிகாரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளின் ஊடுருவல் வழமைக்கு மாறாக அதிகரித்திருக்கிறது.
இவர்களில் பலர் தமிழ் தமிழ் உள்ளுர் அமைப்புகளினூடாக தகவல்கள்திரட்டுவது மற்றும் வாக்கு மோசடிக்கான வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் சந்திக்கும் சிலருடன் பேசிய விடையம் தான் இந்த பதிவின் தலைப்பு.


தமிழீழ மக்கள் குறித்து அச்சத்துடன் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு போராட்டங்கள் என்பது ஆளும் அரசியல் தேவைகளுக்காக நடாத்தப்படுவதொன்று. அது எப்பொழும் வழமைக்கு திரும்பிவிடும் போக்கை உடையது அல்லது அதை கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசாங்கத்தை நாடினால் போதுமானது என்பது சிங்களத்தின் நிலைப்பாடு.
ஆனால் தமிழீழ மக்களின்போராட்டங்கள் என்பது தமது சர்வதேச அரசியலை குடைந்து சீரழிக்கிறது என்ற அச்சம் மேலோங்கிக்கிடக்கிறது.

தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்..உரக்க குரல் கொடுப்பார்கள் ஆனால் நிஜமான களம் என்று வரும்பொழுது சமூக வர்கங்களாக (சாதிகளாக என்பது அவர் குறிப்பிடுவது) பிரிந்துவிடுவார்கள். அதே நேரத்தில் தமிழீழ போராட்டக்காரர்களை பொறுத்தவரை களம் தமக்கானது என்று தீர்மானித்துவிட்டால் மூர்க்கத்தனமானமாக போராடுவார்கள். எனவே தமிழீழ போராட்டக்காரர்களுக்கான களத்தை இயலுமானவரை சிங்கள அரசாங்கம் தடுக்கும் என்பதே சிங்கள அரசியல்வாதிகளின் நிலைப்பாடாக காணப்படுகிறது.

அதனால் தான் "அவர்கள் வழமைக்கு திரும்பிவிடுவார்கள் உங்களை நம்ப முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்"

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பெண்களை சிங்கள இளைஞர்கள்  ஆக்குரோசமாக தாக்கிய போது அமைதியாக இருந்தவர்கள் இறுதிப் போட்டியில் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் புகுந்தார்கள்.
பிரித்தானிய பொலிசார் அது குறித்த விசாரணைகள் செய்து கொண்டிருக்கும் வேளையில் சிறிலங்கா அரசானது சிறுபிள்ளைத்தனமாக சர்வதேச பிடிவிராந்து ரேஞ்சிற்கு சென்றிருக்கிறது. (சர்வதேச பிடிவிராந்து ஏன் எதற்கு எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்).

பசீல்ராஜபக்‌ஷ அமைதியாக இந்தியா வந்து திரும்பியதும் கருணாநிதி+காங்கிரஸ் கும்பலில் சாமர்த்தியமும்

மகிந்தராஜபக்ச மற்றும் வேறு சில சிறிலங்கா அமைச்சர்கள் இந்தியாவரும்பொழுது கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைப்புகள் சிறங்காவின் மிக முக்கியமான அமைச்சர் மிக முக்கியமான விடையம் குறித்து பேச வரும்பொழுது பெரும் அடக்கத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.

கருணாநிதி கும்பல் மத்திய அரசியல் இருந்து விலகியிருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்ட கருணாநிதி மகள் கனிமொழியை அரசியல் அதிகாரியாக்குவதற்கு மும்மரமாக செயற்பட்டு அண்மையில் தெரிவுசெய்யபட்டிருந்தார்.

சாதிக்கட்சி தலைவர் ராமதாஸ் கைது தொடர்பில் தனது எதிர்ப்பையும் அனுதாபத்தையும் வெளிட்டு வந்த கருணாநிதி ராமதாஸை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். அந்த நிலையில் தான் பசீலீன் இந்திய வருகைக்கு ராமதாஸ் பயன்படுத்தபட்டிருக்கிறார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் பசீல் ராஜபக்‌ஷ இன அழிப்பு போர் குறித்த சர்வதேச அரசியலில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார். பசீல் ராஜபக்‌ஷவினூடாக தான் கருணாநிதி கும்பல் சிறிலங்காவில் ஏராளமான முதலீடுகள் மற்றும் குத்தகைகளை வாங்கி குவித்திருக்கிறது.

என்தான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தாலும் கருணாநிதி காங்கிரஸ் கும்பலின் ஆட்டங்களை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை ஜெயலலிதாவிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குரிய விடையமே!!.
வலுவற்ற சிங்கள அமைச்சர்களுக்கு மாநிலம் கடந்து எதிர்ப்பு வெளியிட்ட தமிழக அமைப்புகள் பசீலின் வருகை குறித்து திசைதிருப்பப்பட்டதும்.. வல்லரசான (!!) இந்தியாவின் மீனவ சமூகம் பசீல் ராஜபக்சவிடம் உயிர்ப்பிச்சை கேட்டதும் இந்த காலப்பகுதியில் தான் நடந்தேறியது.

காங்கிரஸ் கருணாநிதி மற்றும் ராமதாஸ் திட்டப்படி "இளமாறன்" என்ற இளைஞன் படுகொலை செய்யபட்டு புகைரத தண்டவாளத்தருகில் வீசப்பட்டு தமிழக அமைப்புகளை திசைதிருப்பிவிட்டு பசீல் ராஜபக்சவை ராஜ மரியாதையுடன் அழைத்து பேசிவிட்டு அனுப்பிவிட்டார்கள்.

அதற்கு ஏற்றாற் போல் தமிழீழ விடுதலை குறித்து போராடுபவர்கள் ஏன் "இளமாறன்" படுகொலை குறித்து போராடக் கூடாது என்று ஊடகங்கள் மற்றும் எழுத்துவெளியில் பரப்புரையை மேற்கொண்டு பசீல் ராஜபக்சவிற்கு எதிரான போராட்டங்களை தணித்துவிட்டார்கள்.

சமாந்தரமாக இன மற்றும் சமூக விடுதலை குறித்து போராடும் மனநிலையை தமிழக அமைப்புகள் கட்டியெழுப்பவில்லை என்பதே இங்குள்ள உண்மையாகும்.

சாதிப் பெயரில் இடம்பெற்ற மிகப்பெரும் படுகொலைக்கு (அரசியல் படுகொலை) நீதிவேண்டி தமிழக அமைப்புகள் தொடர் போராட்ட களத்தில் குதிக்கும் அதேவேளை தமிழ; இன அழிப்பு முக்கிய அரசியல்வாதியை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும். தமிழக மீனவ அமைப்புகள் சிங்களத்திடம் உயிர்ப்பிச்சைகேட்பதற்கு பதிலாக இந்திய அரசு சிங்கள மந்திரியை எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும் என்று போராட்டம் நடாத்தியிருக்க வேண்டும்.

இனம் குறித்த அத்தனை போராட்டங்களையும் முடக்கி சாதி வெறிக்குள் லாவகமாக தமிழக அமைப்புகளை திசை திருப்ப முடியும் என்ற சாமர்த்தியத்தை கருணாநிதி காங்கிரஸ் கும்பல் தெளிவாக புரிந்து வைத்துள்ளது.

சமாந்தரமாக போராடத்தெரியாத அல்லது சமாந்தரமாக போராட பயிற்சிகளை அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்ய கூடிய வலுவற்ற தமிழக அமைப்புகள் இருக்கும் வரை "ஒட்டு மொத்த தமிழனம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமே.

உலக வரலாற்றில் தமிழீழ மக்களின் போராட்டம் குறித்தும்.. தமிழீழ விடுதலைப்புலிகளின் மெனம் குறித்தும் இன்னமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சம் போல் ஒன்றுபட்ட தமிழனத்தின் போராட்டம் குறித்து அச்சம் வரவேண்டுமென்றால், ஒன்றுபட்ட தமிழின விடுதலை குறித்து உலகம் கவனம் செலுத்த வேண்டுமென்றால் தமிழக அமைப்புகளுக்கிடையில் மாற்றங்கள் வரவேண்டும். எல்லா வகையான போராட்டங்களையும் ஓரே நேரத்தில் கையாளக்கூடிய வகையில் மக்களை ஒழுங்குபடுத்த கூடிய அமைப்புகள் உருவாக வேண்டும்.



புரட்சி என்பது மாற்றம். மாற்றம் நிகழ வேண்டுமென்றால் அதற்கான களமும் தளமும் விரிவாக்கப்பட வேண்டும்.






ஆதி
07-07-13

Thursday, April 11, 2013

சீமானை அடுத்த கருணாநிதியாக்க திட்டமா!!! அம்பலமாகும் சதிகள்

நாம்தமிழர் கட்சி தலைவரும் தமிழீழ விடுதலைப்போராட்ட உணர்வாளருமான சீமானை "கருணாநிதி" செய்த செயற்திட்டங்களை செய்வதற்காக தயார்ப்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலிருந்தும் பெரும் துரோக கும்பல்கள் கிளம்பி போராட்டத்தை சிதைத்திருந்தன. அதில் முக்கியமானவர் கருணாநிதி. இனி விடையத்திற்கு வருகிறேன்.

தமிழீழ விடுதலை தொடர்பில் இதுவரை சரியான நிலைப்பாட்டில் இருக்கும் சீமானை குழப்பும் நடவடிக்கையில் கருணாநிதி மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கும்பல் ஒன்றை என்றுமில்லாதவாறு முழுவீச்சுடன் செயற்படுவதற்கு சிங்கள - இந்திய புலனாய்வு அமைப்புகள் களம் இறக்கியிருப்பதாக தெரிகிறது.

அதன் உச்சகட்ட காய்நகர்த்தலாகவே சீமானை மலேசிய பெண்ணுடன் (அந்த பெண் பற்றி இன்னமும் தெளிவான நிலை தெரியவில்லை என்பதால் அது பற்றி பேசுவதை தவிர்த்துக் கொள்கிறேன்) தொடர்புபடுத்தி பதிவுகள் வெளியானதும் அதை மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிரும் இருக்கின்றன (இதயச்சந்திரனிடம் இருந்து எனக்கும் மெயில் வந்தது).

தமிழ்நாட்டில் "தமிழீழ ஆதரவு" நிலைப்பாடு பல வருடங்களுக்கு பிறகு என்றும் இல்லாதவாறு மையம் கொண்டிருக்கிறது. அதன் தாக்கமாக தமிழீழ துரோக கும்பல்கள் ஓரங்கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.  அதனால் அமை எப்படியாவது தகர்த்தெறியவேண்டும் என்ற நிலைக்கு இந்திய "றோ" வும் சிங்கள அரசும் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இன்று "நாம் தமிழர் கட்சி" தலைவர் சீமானின் மீது சதி பின்னபட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சதிக்கும்பல்கள்.
1. அதிர்வுக் கண்ணன் ( தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துலக செயலக அமைப்புக்குள் 2009 ற்கு பிறகு ஊடுருவியவர் : வெளிநாடுகளில் நேரடிக் களங்களை காணதவர்களால் நிர்வகிக்கப்ட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகளில் சிபார்சுகளின் அடிப்படையில் நபர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது)

2. கருணாநிதி,"றோ" வைச் சேர்ந்த எழுத்தாளர்கள்/அல்லது ஊடக நிறுவனத்தார்


அதிர்வுக் கண்ணனும் அதன் சதி வலையமைப்பும்

அதிர்வுக் கண்ணன் என அறியப்படும் இந்திய உளவாளி 2009 ற்கு பிறகு தமிழீழ அமைப்புகளுக்குள் சிபார்சின் மூலம் உள் நுழைகிறார். தாயத்தில் உயிரிழப்பு அதிகரித்து மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் பின்வாங்கிக்கொண்டிருந்த நேரம் அது. புலத்தில் தமிழீழ மக்கள் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. புலம்பெயர் வாழ் மக்களிடத்தில் நிர்வாகங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்த நேரம் அதிர்வுக் கண்ணன் போன்ற சிலர் தமிழீழ அமைப்புகளுக்குள் சிபார்சிகளினால் நிர்வாக மட்டம் வரை நுழைந்ததாக தெரியவருகிறது.

அதிர்வுக்கண்ணன் "தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு"விற்குள் நுழைந்து "அனைத்துலக செயலக" பிரிவின் வெளிநாட்டு உறுப்பினர்களுடன் பலருடனும் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், தொடர்பில் இருந்த புலனாய்வுப்பிரிவு போராளிகள், தமிழ்நாட்டில் தொடர்பில் இருந்தவர்கள் என பல தகவல்களை சேகரித்த "கண்ணன்" குழுவினர் "றோ"வின் ஆலோசனைப்படி இணைய தளத்தினை ஆரம்பித்திருக்கின்றனர்.

அதிர்வு என்ற இணைய தளத்தை ஆரம்பித்து செய்த முதலாவது வேலை 2009ம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த இணையத்தினூடாக மக்களை குழப்பி 2010ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு முன்னதாக தமிழீழ அமைப்புகளுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கியது. அதன் பின்னர் அவர்களிடம் இருந்து நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்த போராளிகள், இறுதிப்போரில் தப்பிய போராளிகள் என பல முக்கியமான போராளிகள், அவர்களின் குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தார் கண்ணன்.

அந்த தகவல்களோடு கருணாநிதி காலத்தில் ஏராளமான தமிழீழ விடுதலைப்புலி போராளிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதும் பலர் நாடுகடத்தப்பட்டதும் செய்திகளில் வெளியாகியிருந்தது.

விழுப்புண் அடைந்து தப்பிய போராளிகள், விடுதலைப்புலிகளுக்கு தொடர்சியாக உதவியவர்கள், அவர்களின் புகைப்படங்கள், வசிக்கும் இடம், என எல்லா வற்றையும் இணையங்களில் வெளியிட்டு மக்களை தொடரச்சியாக குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்து அதிர்வு.

தமிழீழ தேசிய தலைவரிக் தாயாரை மருத்துவத்திற்கு கூட  அனுமதிக்காமல் விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பிய கருணாநிதியை 2012 ஆரம்பத்தில் அதிர்வுக் கண்ணன் சந்தித்திருக்கிறார்.
அதிர்வுக் கண்ணனும் கருணாநிதியும் 2012


அதிர்வின் முகநூல் அறிக்கை

இதில் என்ன காமடி என்றால் அதிர்வுக்கண்ணன் கொடுத்த அழுத்தத்தினால் தான் "டெசோ" மாநாட்டில் பல முக்கியமான தீர்மானங்கள் (என்னது என்று கேட்க கூடாது) நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல் மத்திய அரசில் இருந்தும் விலகியதாக அதிர்வு முகநூல் ஊடாக கருத்து தெரிவித்திருக்கிறார்.  
இதற்கு கருணாநிதியின் "டெசோ" கும்பல் கட்டாயம் பதில் தந்தே ஆக வேண்டும்.

தவிர அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய தமிழ்நாட்டு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பற்றி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் சொல்லியிருக்கிறார் அதிர்வுக்கண்ணன்.

அதிர்வுக் கண்ணன் தன்னை தமிழீழ விடுதலைப்போராட்ட சக்தியாக பல தடவைகள் தன் வாயால் சொல்லி காட்டியிருக்கிறார். தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் என்ற காரணத்திற்காக தமிழழகத்திற்குள்ளேயே நுழைய விடாத கருணாநிதி கண்ணனை சந்தித்திருப்பதன் மர்மம் என்ன??

புலம்பெயர் தமிழீழ மக்கள் உடனடியாக செயற்பட்டு தமிழீழ ஒருங்கிணைப்புக்குழு லண்டன் தனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.

அது போக தமிழ்ச்தேசிய கூட்டமைப்பினையும் குறிப்பாக சிறிதரன் எம்.பி யையும் தரக்குறைவாக (சிறி வாத்தி என அதிர்வு எழுதியது) எழுதி புலம்பெயர் தமிழர்களிடையில் பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தது அதிர்வு. சிறிதரன் எம்.பி உடன் கூட நின்று செயற்படுபவர்கள் யார் யார் என்பதையெல்லாம் வெளியிட்டு அவர்களை சிங்களப் புலனாய்வுப்பிரிவினர் கடத்தும் அளவிற்கு தகவல்களை வழங்கியது கண்ணன் என்றே அறியப்படுகிறது.
அதிர்வினால் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்கும் பொன்காந்தன் சில மாதங்களில் காணமல் போய்விட்டார்.

தமிழீழ தாயகத்தில் நிலப்பறிப்புக்கு எதிராக போராடும் மக்கள் பற்றியோ அல்லது நீதி மன்றங்களில் செய்யப்படும் வழக்கு தாக்கல்கள் பற்றியோ அல்லது அல்லலுறும் போராளிகள் மற்றும் மக்கள் பற்றியோ எந்த தகவல்களையும் செய்தி வெளியிடாத அதிர்வு புலம்பெயர் அமைப்புகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டு வருகிறது.

அது போக இன்று "சூசை" அண்ணை பற்றிய தகவல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலையோ அல்லது நடந்த இறுதிப்போர் பற்றியோ எந்தவொரு பூரண அறிவுமின்றி அந்த கட்டுரை தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. கட்டுரையில் இருக்கும் மொழி நடை "ஈழத்தமிழரின்" மொழி நடையல்ல.  இறுதிப்போரில் ஒரே இடத்தில் குழுமியிருந்த மக்களிடம் "இரண்டாயிரம் மீனவ மக்கள் வாருங்கள்" என்று சூசையண்ணை கேட்டதாக தமிழ்நாட்டு சினிமா பாணியில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்டடிருக்கும் செய்தியின் சம்பவம் குறித்து பல தமிழீழ மக்களுக்கு தெரியும்.
தமிழீழ தமிழில் இது புதுசு

"விறுவிறுப்பு" என்ற பெயரில் ஏதோ தலைவருடன் இருந்தது போல எழுதும் அதே குழுமத்தை சேர்ந்த தமிழ்நாட்டு "ஆடு" ஒன்றினால் எழுதப்பட்ட கட்டுரைதான் சூசை அண்ணையின் கட்டுரை போன்ற பல கட்டுரைகள். அதிர்வு தன்னை தமிழீழ விடுதலைப்போராட்டுத்துடன் நெருங்கியவர் என்று காட்டுவதற்காகவும் தமிழ்நாட்டில் நிலையெடுக்கவும் நினிமா பாணியில் இது போன்ற பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.


சீமான் குறிவைக்கப்பட்டிருக்கிறாரா?

அண்மையில் சீமான் குறித்த செய்திகளை சில இணையங்களும் அதிர்வு தனது மின்னஞ்சலினூடாகவும் பலருக்கு அனுப்பியிருந்தது.

முதலில் சீமான் பற்றிய செய்தியை அனுப்பியதால் தனக்கு பெருமையாக இருக்கும் என நினைத்த அதிர்விற்கு ஏமாற்றம் மிஞ்சியதால் அதை தான் செய்யவில்லை என்றும் "சேவர்" கடவுச்சொல் உடைக்கப்பட்டு வேறு யாரோ பாவித்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.

பல தடவைகள் தனது "சேவர்" உடைக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வெளியிட்ட ஒரே இணையம் அதிர்வாகதான் இருக்க முடியும்.

Hotmail, Gmail என்பன முன்னணி தகவல் தொழினுட்ப நிறுவனங்கள்.  Hotmail என்பது Microsoft இன் மின்னஞ்சல். இவற்றை சாதாரணமாக முடக்குவது என்பது இயலாதகாரியம்.
இதே அதிர்வு சீமான் குறித்தும் நாம் தமிழர் கட்சி குறித்தும் பல மோசமான செய்திகளை வெளிட்டிருந்தது (அவை நீக்கப்பட்டிருக்கின்றன)
இதில் இருக்கும் ஆதே பாணியில் தான் அதிர்வின் செய்திகள் வெளியாவதை கவனித்துப் பாருங்கள்.
அதிர்வுதான் ஆர்வ கோளாறில் முதலில் மின்னஞ்சலை அனுப்பியது என்பதற்கான ஆதாரம்

சீமானின் வெளிநாட்டு பயணத்தின் போது அதிர்வுக் கண்ணன் அனைத்துலக செயல சில ஆடுகளை சீமானை சந்திக்க பண்ணியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் மூலம் சீமானை நெருங்குவதற்கான நாடகத்தின் முதல் கட்டம் தான் இந்த சீமான் பற்றிய செய்திகள் என்று தெரியவருகிறது. அதாவது சீமானைப் பற்றி பிழையான தகவல்களை பரப்ப வேண்டும் பின்னர் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று அறிக்கை விட்டு சீமானிடம் நெருங்க வேண்டும்.

தமிழீழத்திற்கு மிக அண்மையில் இருக்கும் ஒரே மொழி பேசும் பெரும் நிலம் என்ற வகையில் தமிழக அரசியல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நிட்சயம் தாக்கத்தை செலுத்தும்.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் எதிர்காலத்தில் சீமானை பணத்தினாலும் செல்வாக்கினாலும் கட்டுப்படுத்தினால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டங்களை தமிழகத்தில் முடக்கிவிடலாம் என்று நினைத்து நீண்டகால சதித்திட்டத்தில் உளவு அமைப்புகள் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

 கருணாநிதியை எப்படி செயற்பட வைத்ததோ அதே கருவிதான் இன்று சீமான் மீதும் பொறி வைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுப்பியிருக்கிறது.

அதிர்வுக் கண்ணனின் நண்பர் ஒருவர் போதையில் உளறிய தகவல்களின் அடிப்படையிலும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கவனித்து வருவதில் இருந்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

பருதி அண்ணை உட்பட பலரின் பின்னணியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துலக செயலகத்தினுக்குள் நுழைந்திருக்கும் "ஆடு"களான அதிர்வுக் கண்ணன் கும்பல் தான் காரணம் என்று பலர் எழுதியிருக்க படித்திருக்கிறேன்.
வெளியாகிய செய்திகளையும் அதன் பிறகு நடந்தவற்றையும் வைத்து நீங்களே அறிந்து கொள்ளலாம்.

தவிர சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை புலம்பெயர் தமிழர்கள் செய்து வந்த நிலையில் தன்னை பெரும் செயற்பாட்டாளராக காட்டும் அதிர்வு தனது இணையத்தில் சிறிலங்காவிற்கான வர்த்தக விளம்பரங்களை தொடர்ச்சியாக வெளிட்டு வந்தது என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்.


ஆதி
11-4-2013

Thursday, March 28, 2013

எனக்கு சீமான் யார் என்று காட்டு# அடம்பிடித்த பாட்டி


தமிழ்நாடெங்கும் தமிழீழ விடுதலைத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

தமிழீழ தனி அரசிற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். நேர்த்தியாக ஒழுங்கமைக்கபட்டு உலக அரசியல் ராஜதந்திர தரத்தில் கோப்புகள் எழுதப்பட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கிறது. 

கருணாநிதியின் அரசியல் நாடக வார்த்தைகள் போலல்லாமல் சிறந்த சட்டவாக்கல் மொழி மூலம் தீர்மானம் ஒழுங்கமைக்கபட்டிருப்பது ஜெயலலிதா அம்மையார் மீது நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

" இவ்வளவு நாளா ஜெயலலிதாவிற்கு பிழையான தகவல்களை வழங்கி தமிழீழ விடுதலை மீது வெறுப்பை ஏற்படுத்திய கள்ள வேலைகள் பார்த்தது கருணாநிதி போலத்தான் இருக்கு.. இப்பதான் ஜெயலலிதாவுக்கு உண்மைகள யாரோ சொல்லினம். ஆள் கெட்டிக்காரி லேசில இந்த பிரச்சினைய விடமாட்டா அதால நம்பிக்கை இருக்கு. கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி இருந்தா தமிழ்ச் சனத்துக்கு ஏதோ பெரும் அழிவெண்டுதான் அர்த்தம்.. நல்லகாலம் தமிழ்நாட்டுச் சனம் அந்த தரித்திரத்த கலைச்சிட்டினம் " என்று தமிழீழ மக்களிடையில் பெரும் புத்ததுணர்ச்சி நிரம்பிய நிலையில் பேச்சுகள் பரவலாக அடிபடுகிறது. 

சரி இனி விடையத்துக்கு வருகிறேன். 

இன்று கடைக்கு வந்த பாட்டி ஒருவர் சீமானை பற்றி விசாரித்தார். அவருடைய பேரன்கள் பாடசாலையில் கற்பவர்கள். எப்பொழும் "சீமான் அப்பிடிக் கதைக்கிறார்.. சீமான் அங்க அப்பிடி கதைச்சிருக்கிறார்.. கருணாநிதி நாக்க புடுங்கிட்டு சாகலாம்" என்று சீமான் புராணம் பாடுறாங்கள். ஆரப்பன் அந்த சீமான் என்று கேட்டார். பாட்டியினுடைய பேரன்கள் இருவரும் போர் வலி காணதாவர்கள். வரிச் சீருடையணிந்த புலிகளை நேரில் காணதவர்கள். அந்த சிறுவர்கள் புலிகளை பற்றி தேடுகிறார்கள். நண்பர்களுடன் பேசுகிறார்கள். அதனால் தான் இத்தனை பேச்சுகள் வீடுகளில் அடிபடுகின்றன. 

பாட்டியை இருக்க சொல்லிவிட்டு "யூ டியுப்பில்" சீமானின் இரண்டு உரைகளை எடுத்து காட்டினேன். பாட்டி உணர்ச்சிவசப்பட்டிற்றா. மகன் இந்த பெடியன் "செல்வம் மாமா" ட்ட ரெயினிங் எடுத்துருக்கு. எல்லாராலையும் இப்பிடி கதைக்கேலாது. இண்டைக்கு தமிழகத்தில இவ்வளவு மாற்றம் நடந்திருக்கெண்டா இந்த மாதிரி கதைச்சதால தான் சாத்தியப்பட்டிருக்கும். என்று நிறைய கதைகள் சொன்னார்.  மே 17 இயக்க திருமுருகனுடைய ஒரு உரையையும் போராட்டம் ஒன்றின் போது பேசியவற்றையும் காட்டினேன். 

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம், முத்துக்குமார் அண்ணா, தங்கை செங்கொடியின் நடனம் என எல்லா வற்றையும் காட்டினேன். 

"செத்த சனம்.. பெடியளின்ட ஆவிதான் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்குள்ள புகுந்திருக்கு... தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ சிங்களவன் துலைஞ்சான்...  உந்த ஆணையிறவ பிடிக்கிற நேரத்தில இப்பிடி தமிழ்நாட்டில இருந்திருந்தா கட்டாயம் 2003க்குள்ள தம்பி தமிழீழத்த பிடிச்சிருப்பான்.  " என்று நிறைய சொன்னார். ஏனோ தெரியவில்லை உடம்பு புல்லரித்தது.

ஆணையிறவை பிடித்து யாழ்ப்பாண மீட்ப்பு போர் கைதடியையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் பொழுது இந்தியா தான் புலிகள் மீது அழுத்தம் பிரயோகித்து போரை நிறுத்தியது. இனியொரு தடவை இந்திய படைகளுடன் மோதல் வேணாம் என்ற நோக்கத்திற்காக தலைவர் போரை நிறுத்தி புலிகள் அணியை முகமாலைக்கு எடுத்திருந்தார் என்று அப்பொழுது பேசப்பட்டது. பாட்டி சொன்னவுடன் நினைத்துப் பார்த்தேன் உண்மைதான். இந்த எழுச்சி அன்று தமிழகத்தில் இருந்திருந்தால் அன்று இந்தியா சிங்கள ராணுவத்தை காப்பாற்ற தனது படையை அனுப்புவோம் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்க முடியாது. 


சரி செல்வம் மாமா யார் என்று சொல்லி விடுகிறேன். 

செல்வம் மாமா ஒரு பிரச்சார பீரங்கி. சம்பவங்களை தனது பேச்சாற்றலால் கண்முன் கொண்டுவரக்கூடிய அதி திறமைசாலி. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு பிரச்சாரங்களிற்கு "செல்வம் மாமா" போனால் அவர் பேசி முடிய நிறைப்பேர் தம்மை போராளிகளாக இணைப்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் "கிருசாந்தி" என்ற உயர்தர வகுப்பு மாணவி சிங்கள ராணுவத்தால் மிலேச்சத்தனமான பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டு படுகொலை செய்யப்ட்டார். தமிழீழ மக்களையே உலுக்கியெடத்த படு பயங்கரமான கற்பழிப்பு படுகொலை அது. அந்த சம்பவத்தை வன்னியில் இளைஞர் யுவதிகளுக்கு செல்வம் மாமா விளங்கப்படுத்த ஒரு வகுப்பில் இருந்த அத்தனை மாண மாணவியரும் போராட்டத்தில் இணைந்த சம்பவங்களும் இருக்கின்றது. 



எத்தனையோ வலிகளையும் கொடுமைகளையும் தாண்டி.. பேச முடியாத ஏராளமான கதைகளுடன் என்றோ ஒரு நாள் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையில் புலிகளின் வரவை மட்டுமே எதிர்பார்த்திருந்த சனங்களுக்கு தமிழக மாற்றம் பெரும் புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எல்லா வீடுகளிலும் தமிழக மாணவர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். 


ஆதி
28-3-13

Wednesday, March 6, 2013

அன்பான தமிழக உறவுகளே!!!

அன்பான தமிழக உறவுகளே!!!

2009 ற்கு பிறகு வரலாறு காணத அளவு தமிழகம் இன்று தமிழீழம் வேண்டி எழுச்சி கொண்டிருக்கிறது.

தமிழீழம் தான் இறுதி இலக்கு என்பதில் தமிழக மக்கள் கொண்டிருக்கும் உறுதியும் அதற்காக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் விலையும் செய்து கொண்டிருக்கும் உழைப்பும் இந்திய வல்லரசிற்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தமிழக மாற்றத்தையும் எழுச்சியையும் சிதைப்பதற்கு இந்திய மத்திய அரசு பாரிய வேலைத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. அதன் முதல் கட்டம் தான் "டெசோ" அமைப்பு தூசி தட்டப்பட்டது.

கருணாநிதி மதல்வராக இருக்கும் பொழுது 2009 இல் பல கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாது இந்திய ராணுவத்தை விடுதலைப்புலிகளுடனான நேரடி மோதலுக்கு நதமிழகம் ஊடாக சிங்கள தேசத்திற்கு அனுப்பி வைத்தவர் தான் கருணாநிதி. தவிர வன்னிக்கு கொண்டு செல்ல தமிழக மக்கள் கொடுத்த அத்தனை உணவுப் பொருட்களையும் தடுத்து பெரும் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி சிங்கள அரசிற்கு உதவி செய்தவர்.

கருணாநிதியின் உழைப்பிற்கு சிங்கள அரசு தேயிலைத் தோட்டங்களையும் பெற்றோலிய அகழ்வு நிறுவன ஒப்பந்தத்தையும் மற்றும் சில பெரும் வர்த்தக நடவடிக்கைகளையும் குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

கருணாநிதி புலிகளை அழித்து தமிழர்களை அடிமைகளாக தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எப்படியெல்லாம் செயற்பட்டார்.. போர்க்காலத்தில் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை விக்லீஸ் வெளிக் கொணர்ந்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

போர்க்காலத்தில், வைக்கோ அய்யா.. நெடுமாறன் அய்யா.. சீமான் உள்ளிட்ட பல தமிழீழ ஆதரவுச் சக்திகளை சிறையில் அடைத்து தமிழகத்தில் மக்கள் விழிப்படைந்து எழுச்சியுறும் நிலையை தடுத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணன் முத்துக்குமார் வைத்த தீயை தனது அதிகாரத்தால் அணைத்து மத்திய அரசின் இன அழிப்பு அத்தியாத்தில் முக்கிய இடம் பிடித்தவர் இந்த கருணாநிதி.

2009 இற்கு பிறகு தமிழீழ மக்கள் யாருமே கருணாநிதியிடம் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தருமாறு கேட்கவேயில்லை. இந்த நிலையில் தமிழக மக்கள் கருணாநிதியை அரசியலில் இருப்பை இல்லாது செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இன்று என்றும் இல்லாதவாறு தமிழக இளைஞர்கள் தெளிவடைந்து எழுச்சியுற்று எதையும் எதிர்க்க கூடிய போராட்ட குணத்திற்கு மாறியிருக்கின்றனர். இதை சிதைத்து தமிழக மக்களை திசை திருப்புவதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் அங்கம் தான் "டெசோ" கூத்தடிப்புகள் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவடைய செய்யுங்கள்.


4 நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த தலைவர் என்று தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டிய கருணாநிதி பிரணாப் தவறான தகவல் தந்ததாக சொல்லியிருந்தார். இவர் போஸ்டர் அடித்து ஒட்டிய காலப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் லட்சக்கணக்கில் வீதியில் நின்று போராடிக் கொண்டிருந்தார்கள்.

தன்னைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள ஒரு குழுவோ அல்லது முகாமைத்துவமோ இல்லாத கருணாநிதிக்கு ஏன் முதலமைச்சர் பதவி?? நாளை தமிழக மக்களுக்கு எங்காவது ஒரு நாட்டில் பெரும் அழிப்பு நடந்தால்.. அப்படியொன்றும் நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் சொன்னால் இந்த கருணாநிதி நம்புவாரா?? தமிழர்களை முட்டாள்களாகவும் வெறும் சினிமா ரசிகர்களாகவும் நினைத்து தொடர்ச்சியாக செய்யும் அயோக்கியத்தனத்தை தட்டிக் கேழுங்கள்.

தமது வியாபாரத்தையும்.. ராஜபக்ச குடும்பத்தையும் பார்க்க  தொடர்ச்சியாக கொழும்புவரை கருணாநிதியின் கும்பலை யாழ்ப்பாணம் வரை சிங்கள சிப்பாய்களினதோ சிங்கள பொலிசாரினதோ பாதுகாப்பில்லாமல் வரச்சொல்லுங்கள். நிட்சயமாக அடித்துக் கொல்வோம்!!

தமிழீழ பயணத்தில் ஒன்று திரண்ட பெரும் சக்தியாக தோள் கொடுக்கும் சக்தியாக ஒட்டு மொத்த இனத்தின் விடுதலைக்காக எழுச்சி கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களை சதிவலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த தமிழனத்தை முடமாக அடிமைகளாக மாற்றுவதற்கான பெரும் சதியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கு கருணாநிதி போட்ட பெரும் சதி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அதாவது தமிழகத்தில் கருணா குழுவிற்கு அடைக்கலம் கொடுத்திருந்த கருணாநிதி ஜெயலலிதாவின் முக்கிய கட்சி உறுப்பினர்கள் சிலரை போட்டு தள்ளிவிட்டு அதை ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படுவதனால் புலிகள் தான் செய்தனர் என்று கதையை மாற்றி தமிழகத்தில் புலிகள் மீதான ஆதரவை சிதைப்பது.
எது எப்படியோ இந்த கதை அம்பலமாகியது.


தமிழீழம் தேவையா இல்லையா என்பதை தமிழீழ மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணை சர்வதேச மனித உரிமை சரத்துக்களின் படி நடக்கட்டும். அதற்கான தண்டனையை சட்டம் செய்யட்டும். அது தமிழினத்தின் விடிவல்ல.

தமிழீழம் தான் இலக்கு. அதற்கு சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை எல்லா பக்கத்தாலும் வலியுறுத்துங்கள்.

டெசோ என்பது தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று தமிழக மக்கள் கொண்டிருக்கும் எழுச்சியை திசை திருப்புவதற்கான அல்லது தடை செய்வதற்கான மத்திய அரசின் செயற்திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடிந்தால் டெசோ தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பு அய்.நா முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கட்டும் பார்க்கலாம்.
கருணாநிதி தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை அய்.நா முன்னின்று நடாத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கட்டும் பார்க்கலாம்.

அன்பான தமிழக உறவுகளே!!

நாற்பதுனாயிரத்திற்கும் மேலான மாவீரர்களையும் லட்சக்கணக்கில் மக்களையும் இழந்து ரத்த சகதியில் எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கங்களை இழந்து ஆயிரமாயிரம் போராளிகளும் மக்களும் இன்று வலிகளோடும் தமிழீழ கனவை சும்ந்து கொண்டிருக்கின்றனர்.

வாழ்வாதரங்களை இழந்தும் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பயம் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழீழம் முற்று முழுதாக அரச பயங்கரவாதத்திற்குள் சிக்குண்டு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தமிழக மாற்றமும் எழுச்சியும் மிக முக்கியமான ஒன்று. சதிகளில் சிக்கிவிடாது போராடுங்கள்.
இதை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.


மே17 இயக்கம், நாம்தமிழர் கட்சி தொடர்பாக தமிழீழ மக்கள் ஆவலாக செய்தி படிக்கிறார்கள். வைகோ அய்யாவில் நீண்டகால மரியாதையும் உரிமையும் தொடர்ந்தும் இருக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று உலகமெங்கும் ஒலிக்கட்டும்.


ஆதி
6-3-13

Sunday, March 3, 2013

நாம் தோற்றுக் கொண்டு இருக்கிறோமா!!!

முள்ளிவாய்க்கால் வரை நடந்த இன அழிப்பு ஆதாரத்தை மட்டும் எடுத்து அது குறித்து மட்டுமே பேசி நான்கு வருடங்களை வீணடித்துக் கொண்டும் சர்வதேசத்திற்கு 2009 ற்கு பிறகு தமிழர் தாயகத்தில் நடக்கும் இன அழிப்பு வடிவம் தெரியவில்லையா!!! ஆதாரங்கள் இல்லையா!!!

2009 ற்கு பிறகு நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பு பற்றி இது வரை ஏன் அய்.நா மன்றத்தில் பேசப்படவில்லை!!! அமெரிக்கா ஏன் கண்டு கொள்ளவில்லை!!!

தமிழரை மீண்டும் ஒரு பொறிக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழீழ தேசத்தை அணு அணுவாக தடயமற்று அழிப்பதற்கான கால அவகாசத்தை சிங்கள தேசத்திற்கு சர்வதேசம் திட்டமிட்டு வழங்கிக் கொண்டிருக்கிறதா!!

# தமிழினத்தின் மீதான இன அழிப்பு முள்ளிவாய்காலுடன் முடிவடைந்து போலும்.. அதற்கு தீர்வு கண்டால் எல்லாம் சரி என்பது போலும் ஏன் சோடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!!!

உலகத் தமிழினமே!!!! எமது விடுதலைப்போராட்ட சிந்தனைகள் குறுகிவிட்டதா!!! 2009 ற்கு பிறகும் மோசமான இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழீழம் தான் எமது இலக்கு என்றும் வீதிக்கு இறங்கி கத்து...
 
3-3-2013

தமிழீழத்தின் 2009 இல் இருந்து 2013 வரை # அழிப்புகளும் மாற்றங்களும்

உலக நாடுகள் இன அழிப்பை முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி நான்கு வருடங்கள் கடக்கவுள்ள நிலையில் தமிழீழ நிலப்பரப்பின் புவியியல் மற்றும் மக்கள் நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அழிப்புகளையும் மாற்றங்களையும் இந்தப்பதிவில் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதற்கு முதல் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்கு சமாதான காலத்தில் நோர்வே உள்ளிட்ட வெளிநாடுகள் போட்ட சதி பற்றி சற்று புரிந்து கொண்டு நகரவோம்.

விடுதலைப்புலிகள் தமது அமைப்பிற்கு ஆட்களை இணைக்கும் பொழுது மிகக்கவனமாக கையாளும் பொறிமுறையை ஆரம்பத்தில் இருந்தே வைத்திருந்தார்கள். யார் வேணும் என்றாலும் அமைப்பில் இணைய முடியாதவாறு இறுக்கமாக இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவுவது சிம்மசொப்பனமாக இருந்தது.

இதை நாடிபிடித்த உளவு நிறுவனங்கள் சமாதான காலத்தில் திட்டம் தீட்டின. தீர்வு எட்டப்படாமல் சமாதான ஒப்பந்தம் குழப்புப்பட வேண்டும் அதே நேரத்தில் போர் தொடங்க முன் புலிகளுக்குள் ஊடுருவ வேண்டும்.

சமாதான காலத்தில் வெளிநாட்டு அரச நிர்வாக அலுவல்கள் பற்றி விடுதலைப்புலிகள் அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் வெளிநாடுகளில் இருக்கும் "கட்டாய இராணுவ பயிற்சி" பற்றிய தகவல்களும் புலிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
கட்டாய ஆட்சேர்ப்பு இராணுவ நடைமுறையிலோ அரச நடைமுறையிலோ ஒரு குற்றமல்ல என்று அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை உறவு முறைகளில் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதாவது வன்முறை பாவிக்கப்படின் உணர்ச்சிவசப்பட்டு தமது எதிர்பபையும் வெறுப்பையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துபவர்கள். அதனால் கட்டாய ஆட்சேர்ப்பு புலிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் என்ற உளவியலை பெரிதும் நம்பியது வெளிநாட்டு நிறுவனங்கள்.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அண்ணையின் இழப்பிற்கு பின்னர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணையினூடாகவே விடுதலைப்புலிகள் வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் உறவு நிலை பற்றி கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் தமிழ்ச் செல்வன் அண்ணையை கொலை செய்யும் படி ஆலாசனை வழங்கியதும் இந்த நோர்வே கூட்டம் தான் என்று தெரிகிறது.

உச்சக்கட்ட போர் தொடங்கப்பட முதல் தமிழ்ச்செல்வன் அண்ணை கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி விடையத்திற்கு வருகிறேன்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் முள்வேலி இன அழிப்பு முகாம்கள் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆதாரங்களுடன் பல மட்டங்களில் எழுதியாகிவிட்டது. தவிர சனல் 4 ஊடகம் இனப்படுகொலையை அக்குவேறாணிவேராக பிரி்த்து அம்பலப்படுத்திவிட்டது.

ஆனால் இன்று முகாம்களில் இருந்து காடுகளுக்கும் சில வீடுகளுக்கும் துரத்தப்பட்டிருக்கும் மக்கள், மக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், இனத்தின் இருப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன.. எப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன பற்றி தமிழ் ஊடகங்களே தொடர்ச்சியாக பதிவு செய்ய மறுக்கின்றன.

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இன்னமும் பிரிக்கப்ட்ட நிலையில் தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக சிங்கள தேசம் அறிவித்து நான்கு வருடம் ஆகியும் இன்னமும் புளியங்குளம் சோதனைச்சாவடி அதே இடத்தில் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

சிங்கள மயமாக்கல் உத்தி

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த புளியங்குளம், கனகராயன் குளம், மாங்குளம், முறுகண்டி, கிளிநொச்சி, பரந்தன், ஆணையிறவு, பளை,இயக்கச்சி, முகமாலை  வரையிலான ஏ9 பாதை அணு அணுவாக சிங்கள தேசமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.தவிர முகமாலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 பாதை ஏற்கனவே இராணுவ முகாம்களால் சிங்கள மயமாக்கப்பட்டிருக்கிறது.

புளியங்குளம் தொடக்கம் முகமாலை வரை ஏ9 பாதையை அண்டி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டு புத்தர் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரச காணிகள் ராணுவ முகாம்களாகவும் நிலத்தை பார்க்க வரமுடியாமல் இருக்கும் தனியார் காணிகள் புத்தர் விகாரைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் குடியேற்றப்பட்ட கையுடன் இராணுவ குடும்பங்கள் குடியேற்றப்பட்டுகின்றன.

விரைவாக கட்டி முடிக்க கூடிய கட்டட தொழினுட்பத்திலான (டியுறா போட் வீடுகள்) வீடுகள் அவசர அவசரமாக கட்டப்பட்டு சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன. சிறிது காலத்தின் பின் அத்திவாரம் போட்டு நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன.


ஏன் ஏ9 பாதை சிங்கள மயமாக்கலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

சந்திரிகா ஆட்சியில் அனுரத்த ரத்வத்தை தலமையிலான ராணுவம் "ஜெயசிக்குறு" ஆக்கிரமிப்பு போரை தொடங்கியிருந்தது. அதன் பிரதான நோக்கம் ஏ9 பாதையை கைப்பற்றுவது. காரணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை கூறுபோடுவது, விநியோக பாதையை பிளவுபடுத்துவது, ஆட்பலத்தை பிளவுபடுத்துவது, திசை திருப்பல் தாக்குதல்களை மேற்கொள்ளுவதன் மூலம் மக்களை குழப்புவது.

புலிகளின் முறியடிப்பு சமரில் தோற்றுப்போன அந்த திட்டத்தை இப்பொழுது கோத்தபாய தலமையிலான சிங்கள ராணுவம் விரைவாக நிறைவேற்றி வருகிறது.

ஏ9 பாதை முற்று முழுதாக சிங்களமயமாக்கப்படும் பட்சத்தில் வடக்கு மாகாண மக்கள் இரு பகுதியினராக பிரிக்கப்படுவார்கள். பெருமளவிலான கடற்கரைகள் இராணுவ முகாம்களாலும் சிங்கள மீனவ குடும்பங்களாலும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் ஏ9 பாதை நேர்த்தியான சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுவருகிறது.

இன்னமும் சிறிது காலத்தில் ஏ9 ற்கு கிழக்கே உள்ள மக்களை சுற்றி சிங்கள இராணுவமும் சிங்கள மக்களும் இருப்பார்கள் அதே போல் மேற்கிலும் இருப்பார்கள்.

இன்று ஏ9 கிழக்கில் இருந்து மேற்கிற்கு யார் செல்வதென்றாலும் ஒரு ராணுவ முகாமையாவது தாண்டித்தான் சென்றாக வேண்டிய நிலையிருக்கிறது.


தமிழர் காலாச்சார விழுமிய அழிப்புகள்

ஏ9 வீதியை அண்டி பெரிய அளவிலான கோயில்கள் குறைவு,தேவாலையங்கள் குறைவு . ஏ9 பாதையில் இருக்கும் கோயில்களின், தேவாலையங்களின் எண்ணிக்கையை விட புத்த விகாரைகளின் எண்ணிக்கையே அதிகம். ஏ9 வீதிக்கருகில் மக்கள் இருக்கும் வீடுகளைவிட இராணுவத்தின் முகாம்களும் இராணுவம் தங்கும் விடுதிகளும் தான் அதிகம்.

கட்டட அமைப்புகள், பெயர்பலகைகள், வர்ணப்பூச்சுகளின் நிறங்கள் எல்லாமே வேகமாக சிங்கள மயமாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டப்படும் கட்டங்களில் சிங்கள கலாச்சார சாயல் கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.

அசோக சக்கரத்தையும் பெளத்த கொடியையும் கொண்ட துணிகளில் சிறிலங்கா தேசிய கொடி பொறிக்கப்பட்டு தமிழர் தேசமெங்கும் பறக்கவிடப்படுகிறது. பொதுமக்கள் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் வங்கிகள் கடைகள் என எல்லா இடங்களிலும் இது பறக்கவிடப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் பேரூந்துகளில் சிங்களவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.. கட்டாயமாக சிங்கள பாடல்கள் ஒலிக்கவிடப்படுகிறது.


திட்டமிடப்பட்ட உளவியல் போர்

புலம்பெயர் தமிழர்கள் மட்டத்தில் இன்னமும் புரியப்படாத இந்தப் போர் தமிழீழ தாகயக்கில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது மற்றும் விடுதலை தொடர்பில் பகிரங்கமாக வெளிப்பட்ட இன ஒடுக்குமுறையை வெளிநாட்டு அமைப்புகள் திறம்பட கையாளத் தவறியிருக்கின்றன. அது பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.

யாழ் நகர் உள்ளிட்ட மாணவர்கள் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான மலையாள திரைப்படங்களில் குறுந்தகடுகள் தாராளமாக கிடைக்கின்றன. வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

போராட்டம் பற்றியும் படிப்பை பற்றியும் பேசித்திரிந்த மாணவர்களிடையில் இன்று சினிமா பற்றி கதைக்கும் கலாச்சாரம் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டிருக்கிறது.

இந்திய சாமிகளின் பெயரில் மக்களை வரவழைத்து சமூகம் பற்றிய அக்கறையை இல்லாது செய்து சுயநல போதனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தவிர அச்சமூட்டும் நடவடிக்கைகள், பழிவாங்கல்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் மிரட்டல்கள் என தமிழினம் தன்னை பலவற்றிற்கு தன்னை பாதுகாக்க வேண்டும் என்ற வெறுப்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.



தமிழீழ அடிப்படைப் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எப்படி தமிழனம் அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த முன் வடக்கு மாகாணத்தில் என்ன மாற்றத்தை செய்ய சிங்கள தேசம் அவசரமாக வேலை செய்கிறது என்பது பற்றியும் தொடரும் பதிவில் தருகிறேன்.


தொடரும்..


ஆதி
21-02-2013

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP