Powered by Blogger.

Monday, November 12, 2012

இந்தியா ஒரு ஜனநாயக விரோத நாடு..தவிர செல்வாக்கை இழந்து வாய்வீரம் பேசும் ஒரு பயந்ததாங்கொள்ளி தேசம்


பர்மிய போராளிகளை இந்திய வஞ்சக அரசு ஏமாற்றியவிதமும் பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்கள் செய்த அட்டூளியங்களுக்கு எதிராக 2007 ம் ஆண்டு அய்.நாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக அதாவது இராணுவ கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து அவர்களை காப்பாற்றியது. அதற்கு அவர்கள் சொல்லிய காரணமும்... தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள இராணுவ அட்டூழியங்களை இந்தியா காப்பாற்றுவதற்கு சொல்லும் காரணங்களும் ஒன்றுதான்.

சமகால நிகழ்வுகளும் கடந்தகால வரலாறுகளும் தெரியாத மடையர்கள் இந்தியாவை வல்லரசாக கனவு காணுகிறார்கள்.

இந்தியா என்பது காலாகாலமாக தெற்காசிய பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான சக்தியாக தன்னை தயார்ப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்தியா என்பது ஒரு பயந்தாங்கொள்ளி நாடு என்பதற்கப்பால் நயவஞ்சகமான ஒரு தேசம்.

இந்தியாவை உடைத்து சிதறடிப்பதற்கு சீனாவோடு தெற்காசிய நாடுகள் உறவுகளை வலுப்படுத்துகின்றன என்றே தோணுகிறது.

இன்று இந்தியா தெற்காசிய பிராந்திய அரசியலில் நேரடியாக செல்வாக்கு செலுத்தக்கூடியதானதாகவோ அல்லது கட்டுப்படுத்தக் கூடியதானதாவோ இல்லாத நிலையை அடைந்திருக்கிறது.

சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவிடும் என்ற அச்சத்தில் சீனாவைவிட அதிகளவிலான உதவிகளை செய்ய நினைக்கிறது. அதாவது சின்னப்புள்ளத்தனமாக.

இந்தியா ஒரு அடிமைதேசம் என்பதற்கு கடந்த 10வருட நிகழ்வுகளே போதுமானது.

இந்திய சனங்கள் அடிமட்ட முட்டாள்களாக "ஹிந்தியா" என்று உணர்ச்சிகர கோசமிடுவதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது.

இந்தியா உண்மையிலேயே பிராந்திய செல்வாக்கு மிக்க நாடென்றால் சீனா ஆதரக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இந்தியாவால் ஒரு பிரேரணையிலாவது கையெழுத்து இடவோ அல்லது ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ முடியுமா???

சீனாவிற்கு பயத்தில் இந்தியா வாய்திறக்கப்பயப்பிடுகிறது.

தனது நாட்டு எல்லைக்குள் மட்டும் வீரம் பேசும் இந்தியாவை அந்த நாட்டு மக்கள் பெரிதும் நம்புகிறார்கள்..

ஆதி
13-11-12

Friday, November 9, 2012

களம் திறக்கபட்டுவிட்டது... உங்களுக்கு தெரியுமா?? # பாவனைக்கு வந்திருக்கும் துப்பாக்கிகள்

இன்றைய சம்பவங்கள்.

1. விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் தளபதி பரிதி மீதான படுகொலைத் தாக்குதல்
2. ராஜபக்ஷவின் பட்ஜட் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
3. வெலிக்கடைச் சிறையில் கைதிகளின் கையில் ஏகே.47 (பொலிசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இராணுவம்தான்    கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மோதலை செய்வதாக அவசர செய்திகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் "வெளிப்படையாக" விடுதலைப்புலிகளின் தளபதி நிலை செயற்பாட்டாளர் மீது பிரன்ஸில் வைத்து தாக்குதல் நடாத்தப்ட்டிருக்கிறது. படுகொலையில் முடிந்திருக்கம் இந்த தாக்குதலை எந்த இராணுவம் செய்தது?? செய்ய வேண்டிய தேவை என்ன?? என்பவற்றோடு தாக்குதல் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நேரமும் முக்கியமானவிடையம்.

தமிழீழ மக்களே!!!
எம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளை தமிழக நாளேடுகளின் கருப்பொருள்போல் வெறுமனே செய்தியாகவும் சம்பவங்களாகவும் பார்க்காமல் அரசியல் ரீதியாகவும் தர்க்கரீதியான புலனாய்வுச் சிந்தனையோடும் அணுகுங்கள்.

தளபதி பரிதி அண்ணருக்குக்கு எனது வீரவணக்கங்களை தெரிவித்துக் கொண்டு இந்த சமகால பார்வையை தொடர்கிறேன்.

தளபதி பரிதி அண்ணர் மீதான தாக்குதலானது "றோ" உளவுப்பிரிவினதும் சிங்கள ஒட்டுக்குளுக்களினதும் திட்டமிட்ட தாக்குதலாக இருந்தாலும் இருவரினதும் நோக்கம் வெவ்வேறானதாகவே தெரிகிறது.

இந்தியாவிற்கு தலையிடிகொடுக்கும் புலிகளின் நிலை.

விடுதலைப்புலிகள் ஆயதங்களை மெளனிப்பதாக அறிவித்து ஆயிரக்கணக்கான போராளிகளும் சரணடைந்தனர். முக்கியமாக அரசியல் மற்றும் ஆவணப் பிரவுகளின் மூத்த தளபதிகள் போராளிகள் உட்பட பல இராணுவ மட்ட தளபதி நிலைப்போராளிகளும் ஏனைய போராளிகளுமாக ஆயிரக்கணக்கில் சரணடைந்திருந்தனர். இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சர்வதேச மட்டத்தில் ஊடுருவிவிட்டதாகவும் சிலர் உள்நாட்டில் இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அடிக்கடி சொல்லிவருவது யாவரும் அறிந்ததே.

இந்திய இராணுவத்தினுடனான மோதல் மற்றும் சிறிலங்கா ராணுவத்தின் மிலேச்சத்தனமான நிலப்பிரிப்பு இராணுவ நடவடிக்டகைகளையும் சாதுர்யமாக கடந்துவந்த விடுதலைப்புலிகள்...  2009ற்கு பிறகு தமிழ் மக்கள் மீது எத்தனையோவிதமான அடககு முறைகளை சிங்கள அரசு மேற்கொண்டும் ஏன் இன்னமும் எந்தவித பதில் நடவடிக்கைகளையும் உள்நாட்டில் செய்யவில்லை என்பது பலருக்கு பீதியை உருவாக்கியிருக்கிறது.

தவிர இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறும் தொடர்ச்சியான அழுத்தங்கள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.  சமாந்தரமாக தெற்காசிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சிறிலங்கா ஒரு நச்சுக்களைகளைக் கொண்ட நடாக உருவெடுத்துவருகிறது.

இதனால் சிங்கள தேசத்தை அடக்குவதற்கு கட்டாயமாக இந்தியாவிற்கு தமிழீழ மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தமிழீழத்தையும் தமிழ் மக்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்தியா குறியாக இருக்கின்றனர். முதலாவதற்கு புலிகளின் மீள் வருகையும் இரண்டாவதற்கு புலிகள் மீதான தொடர்ச்சியான தடையும் தேவைப்படுகிறது. அதாவது புலிகள் மீள்வருகை உறுதிப்படுத்ப்படால் புலிகள் மீதான தடையை எடுக்க தேவையிலடலை. புலிகள் மீதான தடையிருக்கும் பட்சத்தில் அதை தமிழீழத்திற்கு பெரும் தடையாக பயன்படுத்டதலாம் என்பது இந்திய பெருச்சாளிகளின் நிலைப்பாடு.

இதனால் புலிகளை சீண்டி எப்படியாவது களத்திற்குள் இழுக்க வேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காக சர்வதேச செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களை இனிவரும் நாட்களில் "றோ" மேலுவும் தீவிரப்படுத்தலாம்.

ராஜபக்ஷவுக்கும் புலிகள் தேவை

புலிகளை மாத்திரமே காரணம் காட்டி இன்று சிறிலங்காவை குடும்பகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் ராஜபக்ஷவிற்கு உள்நாட்டில் என்றுமில்லாதவாறு சதிகள் உருவாகிக் கொண்டிருப்பதாக அச்சம் கொண்டிருப்பதாகப்படுகிறது. ஒருவை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் அது ராஜபக்ஷ பரம்பரையே அழித்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால் புலம்பெயர் தமிழர் செயற்பாட்டாளர்பகளை முடக்குவது. அங்கும் விடுதலைப்புலிகளை தாக்கி அழிக்க முடியும் என்பது போன்றதான "சிங்களச் செய்திகளை" வெளியிடுவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு கட்டாய தேவையாக இருக்கிறது.

அது போக உள்நாட்டில் விடதலைப்புலிகளின் ராணுவ செயற்பாடுகள் ஆரம்பித்தால் அதைக் காரணம் காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்தும் அரசியல் எதிர்பைக்கிளப்பும் எதிர்சாராரிடம் இருந்தும் தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பது ராஜபக்ஷவின் நினைப்பு.

இவை அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் புலிகளின் மெளனம் கலையவேண்டும்.

இப்படி தத்தமது நலன்களின் அடைப்படையில் விடுதலைப்புலிகளின் மெளனத்தை  சோதித்துப்பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

எத்தனையோ வருடங்கள்... எத்தனையோ வலிகள்.. எத்தனையோ இழப்புகளுக்குள் மத்தியில் கள முனைகளில் நின்ற போராளிகள் அதே எதிரியிடம் சரணடையும் முடிவை புலிகளின் தலமை எடுக்க முதல் எத்தனையாயிரம் தடவை என்னென்னவற்றையெல்லாம் யோசித்திருக்கும் என்பது தமிழீழ மக்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய ஆத்ம உறவு அது.

என்னதான் இருந்தாலும் சொல்லணாத்துன்பங்களையும்... எழுத்தில் கொட்டிவிட முடியாத வலிகளையும்.. மரணங்களையும் கொடுத்து போராடிக் கொண்டிருக்கம் தமிழீழ மக்களின் பொறுமை தொடர்ந்து இப்படியே இருக்கும் என்று யாரேனும் நினைப்பார்களாக இருந்தால்  அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்று அர்த்தம்..

http://aathithyank.blogspot.de/2012/11/blog-post_9.html
ஆதி
09-11-12

Friday, November 2, 2012

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்# ஒரு வாக்கு மூலம்


"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது. 

சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது. 

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்

உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் "திருமாவேலனிற்கு" இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன். 

முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் "நான் ஆதி பேசுகிறேன்.... அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக.." என்று உரையாடலை தொடரும் பொழுது "ஹலோ..ஹலோ... " என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.

தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார். 

"உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்" என்று கேட்டேன்... தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.


ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??

அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள். 


தவிர..
சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது. 

அது போக யோ.கர்ணனை முள்ளிவாய்க்கால் வரை போராடிய முன்னாள் போராளி என்று எழுதியவர்தான் அருளினியன். ஆனால் யோ. கர்ணன் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி பிரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பொம்பிளைப் பிள்ளைகளோடு அநாகரிகமாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்ட்டவர் என்பது ஊரறிந்த விடையம். இது புதுசாக முழைத்திருக்கும் அருளினியனுக்கோ விகடனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. 

வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும். 

போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!! 

பேட்டி உண்மையென்றால்!!

தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள். 


வெறும்  பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்... 


உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்... ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.



ஆதி
02-11-2012

Thursday, November 1, 2012

விகடனும் அருளினியனும் தம் வரலாற்றுக் கடமையை செய்வார்களா!!


"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் கட்டுரையை (பேட்டியை) எழுதி பிரசுரித்திருக்கும் விகடன் மற்றும் விகடன் நிரூபர் அருளினியன் இன்று மிக முக்கியமான வரலாற்றுக் கடமையை செய்யக் கூடிய வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

போர்க்குற்ற வீடியோக்கள், புகைப்படங்கள், மற்றும் உரையாடல்களை வெளியிட்டு சனல் 4 என்ற ஆங்கில ஊடகம் தமிழருக்கான நீதிவேண்டி இன்றுவரை தனது பங்கிற்கு போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விகடனின் அருளினியன் போர்க்குற்ற மற்றும் தமிழ் பெண்கள் மீது சிங்கள அரசின் கோர தாண்டவத்தை வாக்கு மூலமாக பெற்றிருக்கிறார்.

இந்த வாக்குமூலமானது எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னதான அய்.நா மன்றம் மற்றும் மனித உரிமை காப்பகம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தூரகங்களுக்கு அனுப்பபட்டு சிறிலங்காவிற்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

இந்த பேட்டியில் சொல்லப்பட்டிருக்கிற தமிழ் பெண்களை கற்றபழித்த அமைச்சரை ஊகிக்க கூடியதாக இருகக்கிறது. அதாவது சிறிலங்கா அரமச்சரவையில் இருக்க கூடியவர்களே தமிழினத்தின் மீது நேரடி இன அழிப்பில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரமான வாக்குமூலங்களை இந்த நேரத்தில் எடுப்பது கடினம். எனவே இந்த வாக்குமூலமானது தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

வெறுமனே வியாபார நோக்கத்திற்காக இந்த பேட்டிக் கட்டுரையை விகடனும் அருளினியனும் பிரசுரித்திராமல் தமிழனித்தின் மீதான பற்ருறுதியில் செய்திருந்தால் உடனடியாகவே விரைந்து செயற்படுமாறு வேண்டுகிறோம். 

எதிர்வரும் 5ம் திகதி சிறிலங்கா தொடர்பான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த வாக்கு மூலம் பெரும் செல்வாக்கை செலுத்தும். இந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து விகடனும் அருளினியனும் செயற்படுவார்களா!!!

தமிழர்களுக்காக இந்த தடவையாவது ஒரு "தமிழ் ஊடகம்" உரத்து குரல்கொடுக்குமா?? அல்லது விகடன் அருளினியனால் வியாபார நோக்கிற்காக வன்முறைக்குள்ளான பெண் விபச்சாரியாக்கப்பட்டாளா!!

இந்த வாக்கு மூலம் மிக முக்கியமானது. காரணம் சிறிலங்கா அமைச்சர் நேரடியாக இதில் பங்கெடுத்திருக்கிறார். விகடன் ஒரு ஊடகமாக இந்த வாக்கு மூலத்தை அய்.நாவிற்கோ அல்லது மனித உரிமை அமைப்புகளுக்கோ கொடுக்கலாம். தவிர அருளினியன் இந்த வாக்மூலத்தை பெற்றவர் என்ற வகையில் அவரே இதை அனுப்பலாம். 

அருளினியனுக்கு இதில் சங்கடங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.. அதை வேகமாக சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பக்கூடிய ஏற்பாடுகளை செய்வதற்கு நிறைப்பேர் இருக்கிறார்கள்.

ஆதி
11-1-2012

Tuesday, October 16, 2012

வலி தெரியாமல் அழிக்கப்படும் தமிழ் இனம்

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டுவதற்கான இந்தியாவின் திட்டங்கள் திரை மறைவில் மிக விரைவாக நடந்தேறியிருப்பதாகவே தெரிகிறது... இதை சும்மா விட்டால் அப்துல் கலாம் வந்து திறக்கும் பொழுது எல்லோரும் "ஆ..." என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்துல் கலாமின் ஆலோசனையில் ஏங்கனவே பெளத்த பாடசாலை ஆரம்பிக்கபட்டு சிங்கள கலாச்சார உடையில் தமிழ்ச்சிறுவர்களுக்கு "சிங்கள பெளத்தம்"

கற்பிக்கப்படுகிறது. (சிங்கள பெளத்தத்தின் அடிப்படையே திரிக்கப்பட்ட அரசியல் கதைகள் தான்).

யாழில் சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டும் இந்தியா அம்பாந்தோட்டையில் "தமிழ் இந்து கலாச்சார" மண்டபத்தையும் பேருவளையில் "தமிழ் இஸ்லாம் கலாச்சார" மண்டபத்தையும் கண்டியில் "தமிழ் கிரிஸ்தவ" கலாச்சார மண்டபத்தையும் இதே பிரமாண்டத்துடன் கட்டுமா??

திரை மறைவில் செய்வது ஒன்று... த.தே.கூட்டமைப்பை கூப்பிட்டு சொல்வது ஒன்று.. புலனாய்வுப்பிரிவினரை வைத்து கதைகள் அவிழ்த்துவிடுவது இன்னொன்றுமென இந்திய காட்டேறி அரசு தமிழினத்தின் இருப்பை தமிழீழத்தில் இல்லாது செய்வதற்கான பல வழிகளை திறந்துவிட்டிருக்கிறது.

தமிழனம் வித்தியாசமான அரசியல் போருக்குள் சிக்குண்டுகிடக்கிறது. வலி தெரியாமல் தமிழினம் கூறுபோட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் இளையோர்களே!!! இன்று உண்மையாக செயற்படும் தமிழர் அமைப்புகளே!!!!

எப்படிக் கையாளப்போகிறீர்கள். இவற்றை இங்கிருந்து கொண்டு கையாள முடியாது. காணிப்பறிப்பிற்கெதிராக வன்னயில் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.. யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கிறது!!! மட்டக்களப்பில் அத்துமீறல்கள் நடக்கிறது.. திருகோணமலை அமைதியாக இருக்கிறது.... இது தான் நிலை. அச்சம் சூழ்ந்து கிடக்கிறது. வலி தெரியாமல் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படியான நிகழ்வுகளை விரைவாக ஆவணப்படுத்தி சர்வதேசப்படுத்துங்கள். பிரச்சினைகளை ஆறவிடாதீர்கள்.

ஆதி


16-10-2012

Saturday, September 22, 2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஞாபகப்படுத்துகிறோம்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் தமிழ் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை த.தே.கூ ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம்.

யாரும் எமக்கு பிச்சை போடத்தேவையில்லை..  உலக அரங்கில் எல்லோருக்குமான நீதியை எமக்கு தந்தால் போதும். சிங்களனுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டம் போதிக்கும் இந்திய வல்லூறுகளுக்கு கூட்டமைப்பு இனியும் தீனிபோட்டால் சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பை தமிழ் மக்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் தீவிர வேலைகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டிவரும்.

அய்.நா மன்றம் பக்கச்சார்பாக செயற்றபடுகிறது என்பதையும்... அய்.நா மன்றத்தின் சட்டதிட்டத்திற்கமைய தமிழ் மக்களின் இறையாண்மை நிலத்தை பிரித்து தர வேண்டும் என்பதை த.தே.கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். மாறாக தேசிய அரசியல் என்றும் சந்தர்ப்பவாத அரசியல் பற்றியோ அடிபணிவு அரசியலையோ தமிழ் மக்கள் மேல் திணிக்கும் வேலையை சம்மந்தன் அவர்கள் செய்ய கூடாது.

அமெரிக்க கோபுர தகர்ப்பிற்கு பின்னரான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இறையாண்மையை கருத்தில் கொண்டு மக்களின் விடுதலை விருப்பை ஏற்று நாடுகள் உருவாகியிருக்கின்றன. தவிர இன்று அரசியல் சமநிலை மற்றும் மக்களின் கொந்தளிப்பு நிலை உலகில் பெரும் மாற்றத்தை கண்டிருக்கிறது.

தமிழ்மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு சொல்வதும் அதன்பால் அரசியலை செய்வதும் தான் கூட்டமைப்பினது கடமை. தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச சட்டத்தின் ஊடாக எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பதில்தான் கூட்டமைப்பு முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டுமே தவிர இந்திய ஊழல் வல்லூறுகளின் நலனிற்கேற்ப தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிக்க  கூட்டமைப்பு மக்கள் அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் சம்மந்தன் அய்யா அவர்களே!!.

அடிபணிவு அரசியலையும் பிராந்திய வல்லாதிக்கங்களின் திணிப்பு அரசியலையும் த.தே.கூட்டமைப்பு செய்யுமானால் தமிழ் மக்கள் தமக்கு தேவையானதை வேறுவழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை கடந்தகால வரலாறுகளை வைத்து கூட்டமைப்பு அறிந்து கொள்ள வேண்டும்.


சாத்தியப்படாத ஒன்றையோ, உலக நீதியில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றையோ தமிழீழ மக்கள் கேட்கவில்லை என்பதை த.தே.கூட்டமைப்பு தெளிவுபடுத்தி தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு.
இநத்தியா என்பது சாக்கடை. தமது சொந்த மக்கள் மீது அக்கறையற்று மக்களின் பணங்களை சுரண்டி அதை வெளிநாடுகளில் வைப்பில் இட்டிருப்பவர்களும்... ஊழல் செய்து பெருத்துப் போய் இருப்பவர்களும்தான் இந்திய அரசியல். இந்த வல்லூறுகளுக்கு தமிழீழ மக்களுக்கு எது வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை கிடையாது. அது தேவையும் இல்லை.

சட்டத்தின்பால் பிரிந்து சென்று தனி அரசு அமைக்கும் உரிமை நூற்றாண்டு வரலாறுகளை கொண்ட தமிழீழ மக்களுக்கு இருக்கிறது.
இதன் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு சர்வதேச அரசியல் செய்ய வேண்டும். மாறாக மகிந்தருடன் தேசிய அரசியல் அமைப்பது.. இந்தியா சொல்லுது என்பதற்காக ஊப்புச் சப்பற்ற அதிகாரங்களுக்காக கதிரைகளை பெறுவது..  போன்ற சிந்தனைகளை தவிர்த்து கொள்ளுதல் தமிழ் மக்களின் அரசியலுக்கு ஆரோக்கிறமாக இருக்கும்.


ஆதி
23-9-12

தியாக தீபம் அண்ணன் லெப்.கேணல் திலீபன் # மீண்டும் மீண்டும் கற்பிக்கும் பாடங்கள்.


25 வருடங்களுக்கு முன், தமிழீழ போராட்டம் ஆயதப் போராட்டமாக முழு மூச்சாக தீவிரப்படுத்துவதற்கு முன்னர்  அகிம்சை தேசம் என்று எழுத்துவடிவில் இருக்கும் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ மக்களின் விடுதலைக்காக மிகப்பெரிய அகிம்சைப் போராட்டத்தை தமிழ் மக்கள் முன்னிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் நடாத்தியிருந்தனர்.

ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் தமிழீழ மக்களின் விடுதலைக்காக வீதியில் தவம் கிடந்தான் அண்ணன் திலீபன். குழந்தைகள் முதல் முதியவர் வரை அவனது இந்த உச்ச கட்ட போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தியிலும் தனது இலட்சியத்தில் இருந்து இம்மியளவும் விலகாது தமிழீழ மக்களின் கண்முன்னாலேயே தனது உயிரை சொட்டு சொட்டாக மாய்த்துக் கொண்டான்.

சாத்வீக போராட்டங்களால் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் போராடி தோற்றுப்போன தமிழீழ மக்களுக்கு ஆயுதப்போராட்டத்தைத் தவிர வேறெந்த தெரிவும் இருந்திருக்கவில்லை. எல்லைகளை மீட்க இளைஞர் யுவதிகள் ஆயுதங்களுடன் களத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை காலம் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது.

விரும்பியோ விரும்பாமலோ ஆயுதங்களை ஏந்தி தமிழின விடுதலைக்காக போராடிய அமைப்புகள் நாளடைவில் தமது சொந்த நலனை பாதுகாப்பதற்கே அந்த ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த நேரத்தில்தான் தமிழீழ மக்களின் தெரிவு "தமிழீழ விடுதலைப் புலிகள்" ஆக தோற்றம் பெறுகிறது. ஆரம்ப காலங்களில் உருவான அனைத்து இயக்கங்களையும் புறந்தள்ளிவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை பொத்தி பொத்தி பாதுகாக்க ஆரம்பித்தனர் தமிழீழ மக்கள். அதற்கான காரணங்கள் இவை தான்.

மற்றைய இயக்க தலைவர்களை தமது கட்டுப்பாட்டில் பொம்மையாக மாற்றி வைத்திருந்த இந்திய வல்லாதிக்கத்திற்கு தமிழீழ தேசிய தலைவர் மே.த.கு வே.பிரபாகரன் அவர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. அவரது இலக்கும் பயணமும் முழு வீச்சுடன் தமிழீழம் நோக்கியதாகவே இருந்தது. இதனால் எப்படியாவது விடுதலைப்புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்திய காட்டுமிராண்டி இராணுவத்தை தமிழீழத்திற்குள் நுழைத்திருந்தார் ராஜீவ்காந்தி.

தமிழீழ மக்களுக்கு ஆரம்ப காலங்களில் இந்தியா மீது நம்பிக்கையும் மதிப்பும் அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் நம்பிக்கையுடன் விளையாடக் கூடாது என்பதற்காக மக்கள் முன்னிலையிலேயே தமது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தனர் புலிகள். இந்திய காட்டுிராண்டி இராணுவத்தின் நோக்கத்தை விடுதலைப்புலிகள் அனுமானித்திருந்தாலும் மக்களின் நம்பிக்கைகாக தமது ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். ஆனால் சிறுது காலத்திலேயே ராஜீவ்காந்தியின் உத்தரவுக்கமைய இந்திய காட்டுமிராண்டி இராணுவம் தனது வேலை தொடங்கியது.

அமெரிக்க ராணுவம் "பிலிப்பைன்ஸ்" நாட்டை  எப்படி, ஏன் சீரழித்ததோ அதே நோக்கத்திலேய (பிறிதொரு பதிவில் இதுபற்றி ஒப்பிடுவோம்) இந்திய ராணுவம் தமிழீழ மக்கள் நிலத்தில் இறக்கபட்டிருந்த உண்மை அனைவருக்கும் புரிந்தது. இதனால் தமிழீழ மக்களுக்கு "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற தமது அமைப்பு ஆயுதம் ஏந்தியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.  ஆனாலும் விடுதலைப்புலிகள் அனை நிதானமாகவே கையாண்டிருந்தனர்.

இந்தியா பிரித்தானிய அரசிற்கெதிராக தான் எப்படி விடுதலை அடைந்ததாக சொல்கிறோ அதே வழியில் இந்திய வல்லாதிக்கத்திடம் இருந்து விடுதலைபெற புலிகள் தீர்மானிக்கின்றனர். ஆனால் அண்ணன் திலீபன் தியாக அகிம்சைப் போராட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிடும் முடிவை எடுக்கிறான்.

உலக வரலாற்றில்  இன விடுதலைக்காக நீராகாரம் எதுவுமின்றி அகிம்சைப் போராட்டம் நடாத்திய மக்கள் தமிழீழ மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அகிம்சையால் விடுதலையடைந்ததாக பீற்றிக் கொள்ளும் இந்திய வல்லாதிக்கம் நீராகாரம் இன்றி அகிம்சைப்போராட்டம் நடாத்தி அணுவணுவாக உயிரை மாய்த்துக் கொண்ட தமிழீழ மக்களின் தியாக தீபம் அண்ணன் திலீபனின் குரலை செவிமடுக்கவில்லை. மாறாக தான் தமிழீழத்திற்குள் நுழைந்த நோக்கத்தை செயற்படுத்துவதிலேயே குறியாக இருந்தது.

இந்த நிலையில்தான் தமிழீழ மக்கள் இந்திய வல்லாதிக்கப்படையை சிதைத்தழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றர். சாத்தவீக போராட்டம், அகிம்சைப் போராட்டம் தோற்றுப்போன நிலையில் தமிழீழ மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மூச்சாக செயற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு காலம் தள்ளுகிறது.

தமிழீழ மக்களின் இன இருப்பையும் கலாச்சார விழுமியங்களையும் சிதைத்து ஒரு இனக் கலப்பையும் இன அழிப்பையும் உருவாக்க வந்த இந்திய பிசாசுகள் மீது முழுவீச்சான போராட்த்தை ஆயுதப்போராட்டமாக மாற்றியிருந்தனர் தமிழீழ மக்கள்.

தமிழீழ மண்ணில் கோரதாண்டவம் ஆடிய இந்திய பிசாசுகளை வேட்டையாடியதோடு இல்லாமல் அதை எய்தவனையும் பலி எடுத்தனர் தமிழீழ மக்கள்.

காந்தியம் என்பது ஒரு போலி என்பதையும் அகிம்சைவழி போராட்டங்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு ஒரு பொருட்டல்ல என்பதையும் தமிழீழ மக்கள் 25 வருடங்களுக்கு முன்னரே உலகத்திற்கு தெரியப்படுத்தினர்.

இந்திய விசுவாசிகளே!!!!

இந்தியா என்பது அகிம்சையால் விடுதலைபெற்றது என்றால் திலீபனை என் இந்தியா சாகடித்தது?? இந்திய அரசிற்கெதிராய் அண்ணன் திலீபன் செய்த வன்முறையென்ன??
சுபாஸ்சந்திரபோஸ் ஆயுதத்தோடு போராடியும் காந்தியின் போராட்டத்திற்கு பிரித்தானியா மதிப்பளித்து வெளியேறிது என்று நம்பும் நீங்கள் 25 வருடத்திற்கு முன்பு இந்தியாவிற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடாத்திய திலீபனை இந்தியா சாகடித்ததை எப்படி கருதுகிறீர்கள்!!!

தமிழ்நாட்டில் இன்னமும் வெறித்தனமாக இந்தியத்தை நம்பும் சகோதர்களே!!!

25 வருடத்திற்கு முன்பு இந்திய அரசிற்கு எதிராக எந்த வன்முறையிலும் இறங்கியிருக்காத மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஒரு போராளியின் அகிம்சைப் போராட்டத்தை அணுவணுவாக ரசித்து சாகடித்தது காந்தியின் இந்திய தேசம் என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.

மக்களின் விடுதலை என்ற பெயரில் இறங்கி தமிழீழ மக்கள் மீது பாலியல் தாக்குதல்கள், கடத்தி கொலை செய்தல், வீதிகளில் சுட்டுக் கொல்லுதல், என பெரும் இன அழிப்பிற்காக கோரதாண்டவம் ஆடிய இந்திய வல்லாதிக்க பிசாசுகள் தான் உங்கள் ராணுவம் என்பதை ஞாகம் வைத்திருங்கள்.

ராஜீவ்காந்தி அன்றே பலியெடுக்கபடாமல் இருந்திருந்தால் 18 வருடங்கள் கழித்து தமிழீழ மக்களில் யாராவது ராஜீவ்காந்தியை பலி எடுத்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. ராஜீவ்காந்தி உலகில் இருந்து அகற்றப்பட வேண்டிய அசுரன்.

இந்தியா என்ற அராஜக நாடு மக்களின் அகிம்சைப் போராட்டங்களுக்கு எதிரான ஒன்று என்பதை 25 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ மக்கள் உலகிற்கு நிரூபித்து காட்டியிருந்தார்கள். ஆனாலும் அப்பாவி ஹிந்திய கோசக்காரர்கள் அதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை இருந்தாலும் 25 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் மக்களின் அகிம்சை போராட்டத்தை திலீபனின் இதே நாட்களில் அராஜக கரம் கொண்டு நசுக்கியிருக்கிறது இந்திய வல்லாதிக்கம்.

கூடம்குள அணு உலைக்கு எதிரான மக்களின் அகிம்சைப் போராட்டத்தின் மீது அதிகாரவெறித் தாக்குதல்களை நடாத்தி மக்களின் கோரிக்கைகளை சிறைவைத்துவிட்டு தனது வழமையான அராஜக பணிகளை இந்திய வல்லாதிக்க அரசு நிழ்த்திவருகிறது. அதே இந்திய காட்டுமிராண்டி அரசியல்வாதிகளும் இராணுவமும் காவல் துறையும் மக்களின் அகிம்சை போராட்டத்தை கேலி செய்வதோடு காறி உமிழ்ந்திருக்கிறார்கள். இந்த அவமானத்தை தமிழக மக்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது எதிர்வரும் காலத்திற்கு தான் தெரியும்.

எது எப்படி இருப்பினும்,
காந்தியம் என்ற போலி அகிம்சை முகமூடி தரிந்த ,இந்தியம் என்ற மனித குலத்திற்கு எதிரான தேசத்தின் உண்மை முகம் பற்பல சந்தர்ப்பங்களில் வெளிப்படிருந்தாலும் இதே நாட்களில் 25 வருடங்கள் கழித்து தமிழ்மக்களின் அகிம்சைப்போராட்டம் ஒன்று இந்திய அராஜக சக்திகளால் நசுக்கப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பதிவாகிறது.. காரணம் தமிழகத்தில் இன்னமும் போலிகளை நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகம் என்பதே தான்.
போலி ஹிந்தியத்தை உடைத்தெறிந்து தன்னலமிக்க இனமாக தமிழக மக்கள் திரள வேண்டும்.

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டம் தொடரும்... சாத்வீக போராட்டம் தோற்கடிப்பட்ட பின் அகிம்சை போராட்டமாக மாற்றம் எடுத்தது... அகிம்சைப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் ஆயுதப் போராட்டமாக பரினாமம் அடைந்தது... ஆயுதப்போராட்டத்தை சூழ்ச்சிகளால் அழித்திருந்தாலும் ஆயுதப்போராட்டம் அதிபயங்கர ஆயுதப்போராட்டமாகவோ... அதிபயங்கர தமிழீழ விடுதலைப்போராட்டமாகவோ மாற்றமெறடுக்கும்... இதை காலம் உருவாக்கும் என்பதே புரட்சிகளின் வரலாறு.

அண்ணன் திலீபன் மேல் சத்தியம் செய்வோம்.. "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

ஆதி
22-09-12

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP