Powered by Blogger.

Sunday, December 23, 2012

இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள்.


இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை.

மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான்  வரலாறு.

இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

5 மாணவர் படுகொலை

2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் (வருகிற ஜனவரியுடன் 7 வருடங்கள் ஆகின்றன).

இந்த படுகொலை கோத்தபாய - பொன்சேகா கூட்டணியினால் நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. படுகொலை நடாத்தப்பட்ட அன்று மகிந்தராஜபக்ஷ மற்றும் கோத்தபாய நாட்டில் இருக்கவில்லை என்பது முக்கியமான விடையம்.

திருகோணமலை நகர்ப்புறத்தில் ரோந்துப்பணியில் ஈடுபடும் வழமையான காவல் துறை அகற்றபட்டு அன்று மாலை புதிதான கடற்படை அணியொன்று ரோந்தில் ஈடுபடுத்தபட்டிருந்தது. அந்த அணிதான் இந்த மாணவர்களை படுகொலை செய்திருந்தது.

தவிர வழமைக்கு மாறாக கடற்கரையில் கூடியிருந்த மக்களை வெளியேறும்படியும் இந்த கடற்படை கூறியிருக்கிறது.

மாணவர்கள் மீது கைக்குண்டை வீசிச் சென்ற ஆட்டோவை பிடிக்காமல் உடனடியாகவே மாணவர்கள் இருந்த இடத்தை சுற்றிவழைத்திருக்கிறது ராணுவம். அந்த இடத்தில் இன்னும் பல மக்களும் இருந்திருக்கிறார்கள். எல்லோரையும் வாகனத்தில் ஏற்றி அடையாள உறுதிப்படுத்தும் சோதனையை செய்து அனுப்பிவிட்டு இந்த மாணவர்களை நிலத்தில் படுக்க வைத்து கூட்டுக் கொன்றது இந்த காடையர் கூட்டம்.

சம நேரத்தில் திருகோணமலை நகர்ப்புற மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கைக்குண்டு தாக்குதலில் காயமுற்று இரத்தப்பெருக்கினால் 2 மாணவர்கள் மயக்கமுற்றிருந்த நிலையில் அவர்கள் இறந்துவிட்டதாக கருதி மற்றைய மாணவர்களை படுகொலை செய்துவிட்டு வெளியேறியிருக்கிறது சிங்களப் படை.

இத்தனைக்கும் கொல்லப்ட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை வைத்தியர்.அவர் சம்பவ இடத்திற்கு வர அவரை பொலிசார் மறித்து வைத்திருக்கின்றனர். அந்த நேரத்தில்தான் சூட்டுச்சத்தம் கேட்கப்படுகிறது. பின்னர் மாணவரகள் சடலமாக இரத்தவெள்ளத்தில் கிடக்கின்றனர்.

அந்த கணத்தில் உடனடியாக சம்மபவ இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்தவர்தான் பத்திரிகை நிருபர் சுகிர்தராஜன்.



5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடம்

சுகிர்தராஜன் படுகொலை

2006ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி இந்த சுகிர்தராஜன் படுகொலை செய்யப்படுகிறார். இங்குதான் இந்தியாவின் ஊடுருவல் வெளிப்படையாக தெரிகிறது.

பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்மந்தமான தகவல்கள் புகைப்படங்களை வெளியிட்ட பத்திரிகை நிருபர் சுகிர்தராஜன் (வீரகேசரி என்று நினைக்கிறேன்) புகைப்படத்தை வெளியட்டு சரியாக 20 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாணவர்களின் படுகொலையை அம்பலப்படுத்தியதற்காக தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதைவிட மிக முக்கியமான காரணமாக அவர் இந்தியாவின் ஊடுருவல் பற்றி அம்பலப்படுத்தியருந்தமைதான்  என்பதை யாரும் விளங்கிக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை.

திருகோணமலை துறைமுக திணக்களத்தில் நடந்து கொண்டிருந்த இந்தியாவின் திட்டங்களை அம்பலப்படுத்தியவர்தான் சுகிர்தராஜன்.

எண்ணைவள ஆராய்ச்சி.. திருகோணமலையில் மேலதிக எண்ணைக் குதங்களை நிறுவுவது.. அனல் மின்னிலயத்தை திறப்பது போன்ற திட்டமிடல்களை  சமாதான காலத்தில் இந்தியா செய்து கொண்டிருந்தது. அதை சுகிர்தராஜன் வெளிபடுத்தியிருந்தார். அதைவிட தொடர்ச்சியாக சிங்கள மற்றும் இந்திய அரசாங்க சதிகளையும் படுகொலைகளையும் வெளிபடுத்தியமையினால் தான் படுகொலை செய்யபடுவேன் என சுகிர்தராஜன் தெரியப்படுத்தி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

எண்ணை வள ஆராய்சி மற்றும் அகழ்வு வேலைகளில் அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தான் தமிழீழ மக்கள் மீதான போரை ஆதரித்துக் கொண்டிருந்தார்.

தமிழீழ மக்கள் மீதான் இன அழிப்பு போருக்கு எதிராக தமிழக மக்கள் மற்றும் சில கட்சி அமைப்புகள் வீதிக்கு இறங்கி போராட அவர்களை சிறைப்பிடித்து அடைத்து இன அழிப்பு போருக்கு எதிரான போராட்டங்களை நசுக்கினார் கருணாநிதி.

அவரது உதவிக்காக ராஜபக்ஷ அரசு மலையகத்தில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. தேயிலை தோட்டம் கனிமொழி பெயரில் தான் வழங்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. தவிர எண்ணைவள ஆராய்ச்சி மற்றும் அகழ்வு ஒப்பந்தங்கள் அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியின் பெயரிலும் பங்குகள் கருணாநிதிக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இனிமேல் அரசில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஒப்பந்தங்களில் எந்த பிரச்சினையும் வராதிருக்கும் படி மிக நேர்த்தியாக தொழில் நிறுவனங்களினூடாக ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்று சம்பூர் மக்கள் துரத்தப்பட்டு அதில் இந்த அனல் மின்னிலையம் அமைக்கபடுகிறது. இது கூட கருணாநிதி சோனியா கூட்டணியால் செய்யப்படும் ஒரு வேலைத்திட்டம் என்றாலும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன. தொடரந்து வாசிக்கும் பொழுது உங்களுக்கு விளங்ககும்.


சுட்டு படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜன்


சுட்டு படுகொலை செய்யப்பட்ட சுகிர்தராஜன்

இந்தியா அவரச அவசரமாக போரை தொடக்கியதற்கான காரணம்

சமாதன ஒப்பந்தத்தை எப்படியாவது விடுதலைப்புலிகள் முறித்துவிடுவார்கள் என்று எண்ணியிருந்த இந்தியாவிற்கு விடுதலைப்புலிகளின் போக்கு மிக அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் பெரும் இழப்புக்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும் மிக பொறுமையாக இருந்தார்கள்.

இடைக்கால நிர்வாகத்தினூடாக சுயாட்சி உரிமையை பெற்றுவிடுவார்களோ என்று இந்தியா அச்சம் கொண்டது. இதனை இந்தியாவிரும்பவில்லை. சமாதான ஒப்பந்தத்திற்கு முதலிருந்தே இந்தியா சிறிலங்காவின் எண்ணை வளம் குறித்து அக்கறை செலுத்திக் கொண்டிருந்தது. அது போக திருகோணமலையில் "இந்தியன் ஓயில்" நிறுவனத்தையும் விரிவுபடுத்துவதற்கான முழு முயற்சியில் இறங்கியிருந்தது.

சமாதான காலத்தை பயன்படுத்தி திருகோணமலையில் தமது சாதகபாதக விடையங்கள் மற்றும் இந்தியன் ஒயிலை எப்படி நிரந்தரமாக கொண்டுவருவது இலங்கை எண்ணைவளம் (தமிழீழ பிரதேசத்தில் தான் காணப்படுகிறது) எப்படிப்பட்டது என்பது பற்றியதான புலனாய்வு மற்றும் ஆராய்ச்சி வேலைகளில் இறங்கியது இந்தியா.

தவிர திருகோணமலை என்பது புவியியல் ரீதியில் மிக பாதுகாப்பான துறைமுக தளம். திருகோணமலை துறைமுகத்திற்குள் இலகுவில் யாரும் நுழைந்து தாக்குதல் நடாத்திவிட முடியாது. இயற்கையான ஏராளமான காப்பரண்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் நேரடியாக சென்று தாக்குவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று அல்ல. அதனால் தான் திருகோணமலை துறை முகத்திற்கு வல்லரசுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் திருகோணமலை துறைமுகத்தை தாக்கி கைப்பற்றுவதற்கு விடுதலைப்புலிகள் பிறிதொரு வழியை கண்டுபடித்தார்கள். அதாவது எறிகணைகள் மூலம் துறைமுகத்தை கட்டுப்படுத்துவது.

திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு "குரங்குபாஞ்சான்" பகுதி அச்சுறுத்தலான பிரதேசம் என்று இந்தியா மற்றும் சிறிலங்கா படைகள் நினைத்துக் கொண்டிருக்க விடுதலைப்புலிகள் திருகோணமலை துறைமுகத்தை "சம்பூர்" இல் இருந்து தாக்கினார்கள். அதற்கு முதல் இந்திய சிங்கள அரசுகள் செய்த வேலை பார்ப்போம்.



ஜிகாத் குழுவை இறக்கிய சிறிலங்கா அரசு

திகோணமலை துறைமுக கடற்கரையை அண்டிய கிராமங்களை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டில் அல்லது தமக்கு சாதகமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது இந்தியா.

சமாதான ஒப்பந்தம் கைசாத்திட்ட காலப்பகுதிகளில் "ஜிஹாத்" என்ற முஸ்லீம் தீவிரவாதப் படையை மூதூருக்குள் செயற்பட இறக்கியது சிங்கள அரசு. "ஜிஹாத்" என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பு சிறிலங்காவில் செயற்படுவது இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும். மூதூருக்குள் "ஜிஹாத்" அமைப்பு பெருமெடுப்பில் செயற்பட ஆரம்பித்தது.  ஆயுத போக்குவரத்துகள் மற்றும் பயிற்சி முகாம்கள் என ஜிஹாத் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும் பொழுது விடுதலைப்புலிகள் ஜிஹாத் அமைப்பின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட பலரை ஒரே நாளில் அழித்தார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்தது இந்திய மற்றும் சிங்கள அரசுகள். விடதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் இவ்வளவு நேரத்தியாக செயற்பட்டு கொண்டிருப்பது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியையும் அவமானத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.

"ஜிஹாத்" அமைப்பின் அத்தனை விடையத்தையும் அலசி வைத்திருந்த விடுதலைப்புலிகள் நிட்சயமாக இந்தியாவின் நரித்தனம் பற்றி அறிந்தே வைத்திருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டது இந்தியா.

விடுதலைப்புலிகளை வலிய போருக்கு இழுக்கும் நோக்கில் கடற்புலிகள் மீது வலிந்த தாக்குதல்களும்..தரையில் ஏராளமான படுகொலைகளையும் செய்து கொண்டிருந்தனர் சிறிலங்கா படையினர்.

இதன் தொடர்ச்சியாக தான் மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களும் நிலத்தில் படுக்க வைத்து தலையில் சுடப்பட்டுத்தான் கொலை செய்யப்பட்டிருந்தனர்

இருந்தாலும் விடுதலைப்புலிகள் சமாதான ஒப்பந்தத்தை முறித்து களத்தை திறக்கும் நோக்கில் இருக்கவில்லை.


சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட Action Faim நிறுவன ஊழியர்களில் ஒரு பகுதியினர்

 சம்பூர், மூதூர், மாவிலாறு ஏன் முக்கியம்

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை இந்த சமாதான ஒப்பந்தத்தினூடாக தீர்வை பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். கட்டுப்பாட்டு பிரதேசங்கள் இயல்பு நிலையில் இருந்தது. மக்கள் போர் பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தலுக்கும் உட்படுத்தப்படவில்லை. போராளிகள் பெருமளவானோர் அரசியல் களப்பணிகளில் இருந்தனர். தவிர தமிழீழ அரச கட்டுமாண பணிகள் தான் பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிர்வாக கட்டமைப்புகளை சரியான முறையில் நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது தான் இந்தியாவை அச்சம் கொள்ள வைத்தது.

இந்தியாவை பொறுத்தவரை சம்பூர் மூதூர் பிரதேசங்கள் திருகோணமலை துறை முக பாதுகாப்பிற்காக தேவைப்படுகிறது. தவிர தனது எண்ணை போக்குவருத்துகளுக்கும் முக்கியமான பிரதேசம்.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரை கடற்புலிகள் மிகப்பெரும் பலம் வாய்ந்த படை அமைப்பாக வளர்ச்சியடைந்திருந்தனர். திருகோணமலைத் தளம் மீது விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலை தொடுத்தால் வட முனைகளில் இருந்து திருகோணமலைத் தளத்தை சுற்றி வளைக்க கூடிய பலமும் வளங்கல்களை சரியான முறையில் செய்ய கூடிய பலமும் கடற்புலிகளிடம் இருந்தது.

கிழக்கில் புலிகள் பலமாக இருக்கும் சந்தர்ப்பத்தில்  வட முனையில் சிறிலங்கா அரசால் களம் திறக்கபட்டால்  நிட்சயமாக யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய ஒட்டுமொத்த சிங்கள படைகளும் பிணமாக வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆக திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்புதான் வடக்கில் நிலை கொண்டிருந்த அத்தனை சிங்கள இராணுவத்தினதும் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க கூடிய தளம். அதே நேரத்தில் திருகோணமலைத் தளத்தை விழடுதலைப்புலிகள் எறிகணை மூலம் கட்டுப்படுத்தும் வளர்சியை கண்டிருக்கிறார்கள். அதனால் திருகோணமலை தளத்தை சுற்றியுள்ள இடங்களில் இருந்து புலிகளை அகற்றியே ஆக வேண்டும் எனள்ற நிலையை இந்திய சிங்கள படைகள் எடுக்கின்றன.

கருணா சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தன் பின்னர் கருணாகுழுவின் தளம் தமிழ் நாட்டில் இருந்தது அனைவரும் அறிந்த விடையம். அதை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒழுங்குபடுத்தி கொடுத்தார் அல்லது கண்டும் காணமல் இருந்தார் என்பது அப்பொழுது வந்திருந்த சலசலப்புகள்.

போரை அவசர அவசரமாக தயார்ப்படுத்திக் கொண்டிருந்த இந்திய சிங்களப் படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம் தான் அமெரிக்க ராஜதந்திரி "ரொபேட் பிளேக்" இன் திருகோணமலை விஜயம்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்திய நயவஞ்சக படைகளால் சிங்களப் படைகளுக்கு சதி தீட்டிக் கொடுக்கப்படுகிறது. கருணா ஒட்டுக் குழுவை பாவித்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டுப்பகுதிக்குள் ஊடுருவி "ரொபேட் பிளேக்" திருகோணமலையில் வந்திறங்கும் சமயம் "ரொபேட் பிளேக்" வந்திறங்கிய மைதானத்திற்கு எறிகணைத் நடாத்தப்படுகிறது. அமெரிக்க அரசு அதிர்ச்சிக்குள்ளாகிறது. இதன் பின் என்னமாதிரயான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் என்று நீங்களே அறிவீர்கள்.

இது விடுதலைப்புலிகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. தமது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒட்டுக் குழுக்கள் தாக்குதலை நடாத்தியிருக்கின்றன என்று அறிவிக்க முடியாது. அதனால் "ரொபேட் பிளேக்" இன் திருகோணமலை விஜயம் பற்றி தமக்கு முன்கூட்டி அறிவித்திருக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டனர். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.

புலிகள் மாவிலாற்று தண்ணீரை மூடிவைத்தது போருக்காக அல்ல. அந்த நேரத்தில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த சிங்களக் குடியேற்றங்கள் மீது நெருக்குவாரத்தை ஏற்படுத்த மட்டுமே.

மாவிலாற்றின் அமைவிடம்


போர் தொடங்கியதற்கு காரணமாக சொல்லப்படும் பூட்டப்பட்ட மாவிலாற்று அணை

போரை தொடக்கியவிதம்

அணையை திறப்பதற்கு என்று போரை தொடக்கி இருந்தாலும் அறிகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் எல்லாம் மக்கள் குடியிருப்புகள் மீது தான் நடாத்தப்பட்டன.

சிங்கள பிக்குகள் தலமையில் இந்த போர் தொடங்கும் பொழுது இந்திய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகள் கொழும்பில் இருந்தனர். இந்திய படைகள் திருகோணமலையில் இறங்கியிருந்தது.

போர் முன்னேறியவிதமும் இறுதிப்போரில் வெளிப்பட்ட உண்மைகளும்

மூதூர் சம்பூர் உள்ளிட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு கடற்கரை கைப்பற்றப்பட்டது.

உண்மையில் விடுதலைப்புலிகள் போர் பற்றிய நிலைப்பாட்டிலோ அல்லது அதற்கான தயார்படுத்தலிலோ ஈடுபட்டிருந்தால் நிட்சயமாக ஆயுதங்களை முதலே இறக்கியிருப்பார்கள். கடலில் அழிக்கப்பட்டதாக கூறப்படும் 7 கப்பல்களும் சமாதான காலத்திலேயே இறங்கியிருக்கும்.

ரொபேட் பிளேக் பயணத்தின் போது நடாத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ராஜதந்திர மட்டத்தில் பெரும் நெருக்கடியை விடுதலைப்புலிகளுக்கு கொடுத்திருந்தது. அதை சிறந்த முறையில் கையாளக்கூடிய வகையில் யாரும் இருந்திருக்கவில்லை. அதன் பிறகு இருந்த விடுதலைப்புலிகளின் சிறந்த ராஜதந்திரியான அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீது படுகொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த இழப்புகளின் பின்னர் சர்வதேச மட்டத்தில் புலிகள் அரசியல் நகர்வுகளை சிறந்த முறையில் கொண்டுசெல்வதற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றுதான்.

சரி விடையத்திற்கு வருவோம்.
இறுதிக்கட்ட போரில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் புல்மோட்டை பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.அதாவது முல்லைத்தீவு கரையில் இருந்து புல்மோட்டைக்கு இலகுவாக காயப்பட்டவர்கள் கொண்டுவரப்பட்டனர். இது தான் காரணம். மாவிலாற்றை மையப்படுத்தி போரை தொடங்கிவிட்டு சம்பூர் உள்ளிட்ட கடற்கரைகளினூடாக எல்லா கிழக்கு கடற்கரைககளையும் கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்தை இந்தியாதான் கொடுத்தது.

காயப்பட்டவர்களை பராமரிக்கவென மருத்துவ குழுவொன்றை கருணாநிதி (இந்தியா) அனுப்புவதாக அறிவிக்கிறார். அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசக்கூடியவர்கள். அவர்கள் புல்மோட்டையில் தான் செயற்படுகிறார்கள்.

புல்மோட்டைக்கு கொண்டுவரப்படும் காயப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டனர். சிறிய சிறிய காயங்களுக்கே அங்கங்களை அகற்றுகின்றனர் இந்த கருணாநிதியின் மருத்துவ குழு. தவிர இளம் வயதுடைய ஆண்கள் பெண்கள் பற்றிய தகவல்கள் எந்த இடத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்? எப்படியான தாக்குதல்கள் நடைபெறுகின்றன? இவர்களுக்கு என்ன என்ன தகவல்கள் தெரியும் என்ற அடிப்படையில் இந்த மருத்துவ குழு ஆட்களை இனம் காண்கிறது. அதன் பின் பலர் காணமல் போகிறார்கள். சிலர் அனுராதபுரம் இராணுவ முகாம்களுக்கு மாற்றப்படுகிறார்கள்.

இதே நிலைதான் வவுனியா வைத்தியசாலையிலும் நடந்தது.

கருணாநிதியின் சம்பவங்கள்

1. உண்ணாவிரம் இருக்கிறார்.. அன்று மாலையே அறிவிக்கிறார் ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று

2. தமிழீழமத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த படுகொலையை மறைப்பதற்கு அல்லது தமிழக மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக தனது தொலைக்காட்சிகளில் களியாட்ட நிகழ்வுகளை நடாத்துகிறார்.

3. இன அழிப்புக்கு எதிராக கியர்ந்தெழுந்த தமிழக உணர்வாளர்களை சிறையில் அடைக்கிறார்.

4. பின்னர் முதலமைச்சர் பதவி தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்.

5. தமிழீழம் என்பது சாத்தியமில்லை என்று சொன்ன கருணாநிதி தமிழீழம் என்பதை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு "டெசோ" மாநாடு பற்றி அறிக்கை விடுகிறார்.

6. மீண்டும் ஈழ ஆதரவு பற்றி அறிக்கை விடுகிறார்.

சினிமாக்களில் காட்டப்படும் அதே பாணியிலான அரசியல் பித்தலாட்டம் தான் இது.


தமிழீழத்தில் சமாதான முன்னெடுப்புக்கள் சிதைக்கபட்டு எப்படி போர் தொடங்கப்பட்டது என்பதும்.. போர் காலத்தில் எவ்வகைளான அழிவுகள் (கொத்துக் குண்டுகள் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் இரசாயண ஆயுத பாவனை) எப்படி ஏற்படுத்தப்பட்டன என்பதும் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.

இந்திய படைகள் நவீன தொழினுட்பத்துடன் நேரடியாக சிங்களப்படைகளுடன் களத்தில் இருந்திருக்காவிட்டால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும் என்பது தான் உண்மை.

மிக மோசமான அழிவாயுதங்களுடன் சண்டையை செய்யும் உத்தியையும் அதை பயன்படுத்தும் முறையையும் இந்திய இராணுவம் தான் நேரடியாக செய்தது என்பது பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆனந்தபுரச் சமரில் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் செத்துவிழ எஞ்சியவர்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். அதன் பின்னர் இந்திய இராணுவம் தான் இரசாயண ஆயுத தாக்குதலை செய்தது என்று அதில் பங்குபற்றியிருந்த சிங்கள இராணுவத்தினன் ஒருவன் சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எது எப்படி இருப்பினும் இந்தியா ஒரு பெரும் படுகொலையை சிங்கள இராணுவத்தினூடாக நடாத்தி முடித்திருக்கிறது. இதில் கருணாநிதிக்கும் நேரடி பங்கிருக்கிறது.
காலம் இவற்றை கட்டாயம் அவிழ்க்கும். காலம் பிந்தினாலும் உண்மைகள் கட்டாயம் வெளிப்படும்.


பத்திரிகைச் செய்திகள்... நடந்த..நடக்கும் சம்பவங்களை வைத்து எந்தவொரு தமிழீழ பொதுமகனாலும் விளங்கிக் கொள்ளக் கூடிய விடையங்கள் தான் இவை. தவிர இப்படிப்பட்ட சம்பவங்களின் தொடர்ச்சியாக தான் தமிழீழ மக்கள் சிலரை இனம் கண்டுகொள்கிறார்கள்.

2009 ற்கு பிறகு தமிழ் நாட்டில் உருவாகிய தமிழீழ வேட்கை உணர்வும் தமிழீழ மக்கள் மீதான அளவு கடந்த அக்கறையும் இந்திய மற்றும் சிங்கள அரசுகளை கலகக்கம் கொள்ள செய்தது. அதை திசை திருப்புவதற்காக தான் தலைவரையும் விடுதலைப்போராட்டத்தையும் கருணாநிதி தன் வாயாலையே பல தடவைகள் பழித்திருக்கிறார்.. கேலி செய்திருக்கிறார்.

தமிழீழம் மீது இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது குரல் கொடுக்காத பல தமிழக ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் "புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" என்ற கருத்துப்பட கட்டுரைகளை எழுதினார்கள்.. பலர் "முன்னாள் போராளிகள்" என்ற அடை மொழியினூடாக புத்தகங்கள் அடித்து வெளியிட்டனர். கருத்தரங்குகளை நடாத்தினர்.

அந்த செயற்திட்டத்தில் சொல்லும் அளவிற்கு வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகிய தமிழீழம் பற்றியதான உணர்வு வேறொரு தளத்திற்கு கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2009 ற்கு பிறகு தமிழீழ மக்களின் விடுதலை பற்றியோ அல்லது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி கேள்வி எழுப்பியோ ஒட்டுமொத்த தமிழகம் திரண்டுவிடாமல் இருப்பதற்கு அத்தனை வேலைகளையும் கருணாநிதி-சோனியா அரசு தெளிவாக மேற்கொண்டது.

அது எப்படி என்றும் நான் எழுத தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இதைவிட விரிவாவும் சம்பவங்களை சுட்டிக் காட்டியும் தொடந்து விளங்கப்படுத்த வேண்டிய நிலை இல்லை என்று நினைக்கிறேன். அப்படி செய்தால் நாங்களெல்லாம் முட்டாள்கள் என்று அர்த்தம்.

குறிப்பு:-

இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூரகத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலா தூரம் வெறும் 200 மீட்டரும் இருக்காது.

தூதரகத்தில் வேலைசெய்பவர்கள் கருணாநிதி அரசுடன் சம்மந்தப்பட்டவர்கள். இங்கு நடக்கும் எல்லா அராஜகங்களும் கருணாநிதி கும்பலுக்கு தெரியும் .

சிங்கள இந்திய அரசு செய்த இனப் படுகொலையை அய்.நா தண்டிக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே. 2009 மே 18 ற்கு பிறகு இங்கு நடந்த எல்லா இன அழிப்பு கருவிகளும் இந்த உலகம் அறியும்.

ரொபேட் பிளேக்கின் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தியது புலிகள் இல்லை என்பதும் அவர்கள் இப்பொழுது அறிந்திப்பார்கள்.

கதைகள் இலக்கியம்,சினிமா,மாநாடு அது இது என்று உப்புச்சப்பற் விதத்தில் இதுவரை சுழன்று கொண்டிருக்கும் தமிழனம் ஒன்று திரண்டு எப்பொழுது வீதிக்கு இறங்கும்?? இந்த இலக்கிய தளம் என்ற போர்வையில் தமிழீழ அரசியலை பேசும் போக்கை உருவாக்கியதே இந்திய உளவுத்துறைதான்.

பர்மா போராட்டம் இப்படித்தான் நசுக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை பாவித்த உத்தி இது தான். தெரியாவிட்டால் வரலாற்றை எடுத்து படியுங்கள் .


ஈபிடிபியின் கொலை அச்சுறுத்தல் கடிதம் ஒன்று

ஆதி
23-12-12

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP