Powered by Blogger.

Wednesday, December 12, 2012

இந்தியாவின் நேரடி வழிநடத்தலில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழனத்தின் மீதான அடுத்த இன அழிப்பு


தமிழர்களை எப்படி சித்திரவதை செய்து சிதைக்க வேண்டும் என்பதற்கான பிரதான பயிற்சியை சிங்கள ராணுவத்திற்கு இந்தியாதான் வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பலாத்காரமாக அச்சுறுத்தி கதறக்கதற இராணுவத்தில் இணைக்கபட்ட 100 பெண்களில் மூன்று நான்கு பேர் ஏற்கனவே தப்பி ஓடிவிட எஞ்சியவர்களில் 10 பேர்வரையில் மிக மோசமான உளவியல் பிரச்சினைகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபடப்டிருக்கின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் இராணுவத்திற்கென அச்சுறுத்தி கூட்டிச் சென்ற பெண்களுக்கே இந்த நிலை என்றால் கடத்தப்பட்டிருக்கும்.... கைது செய்யப்பட்டிருக்கும்.. அரசியல் கைதிகள்..விடுதலைப்புலி போராளிகளின் நிலை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழர் தாயகத்தில் அடக்கு முறைக்கு எதிராக எப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தாலும் முன்னிற்பவர்களை படிப்படியாக கைது செய்தோ அல்லது கடத்தியோ வதை முகாம்களுக்கு அனுப்பும்படி கோத்தபாய உத்தரவிட்டிருப்பதாக அறியப்படுகிறது.

போர்க்காலத்தில் மக்களுக்கு முகம் தெரியாத ராணுவத்தினரை ராணுவ தளபதிகளை பிரதேசங்களில் நிறுத்தி இளைஞர் யுவதிகளை வேட்டையாடும் உத்தியை கோத்தபாய ஏற்கனவே கையாண்டிருந்தார். அதே போன்றதான வேட்டையாடும் நடவடிக்கைக்கு கோத்தபாய உத்தரவிட்டிருப்பதாக அறியப்படுகிறது.

அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று வழிநடத்த கூடியவர்களை விரைவாக வேட்டையாடி முடிக்குமாறு இந்தியா வழங்கி ஆலோசனைதான் இது என்று நீண்டகாலமாக அரசியல் ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். (பர்மாவிலும் இதே போன்றதான வெறியாட்டத்தை தான் இந்தியா நடத்தியிருந்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்)

புலிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி புத்தகம் புத்தகமாக எழுதி விற்பனை செய்த யாருமே இன்று வாய்திறகக்கவில்லை என்பதையும் ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள்.

உண்மையிலேயே தமிழீழ விடுதலைகுறித்து அதீத அக்கறை இருந்தால் தமிழக மக்கள்.. புலம்பெயர் தமிழர்கள் உடனடியாக களத்தில் இறங்கி தொடர் போராட்டங்களை செய்யுங்கள். இந்த வன்முறைகளை காரணம் காட்டி அய்.நாவிடமும் வல்லரசுகளிடம் கேள்வி கேழுங்கள்.

2009 ற்கு பிறகு நேரடியாக இந்தியாவின் வழிகாட்டலில் இந்த வன்முறைகள் இந்திய அதிகாரிகளின் பார்வையிலேயே நடைபெறுகிறது.

புலிகளை அழிப்பது என்ற பெயரில் 2009 இல் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த சோனிய-கருணாநிதி கூட்டணி இன்று அரசாங்கத்திற்கு எதிராக போராடக் கூடியவர்களை வேட்டையாடும் ஓப்பரேசனை தொடங்கியிருக்கிறது.


எப்படி கையாளப்போகிறோம்?? இதை நின்று பேசி செய்ய முடியாது. இது அவசரமான அழைப்பு.. தயவு செய்து செயலில் இறங்குங்கள்.

எப்படிப்போராடுவது என்பது குறித்து 2009ற்கு பிறகு நிறைய விவாதம் நடத்திவிட்டீர்கள்.. தயவு செய்து இனியாவது செயலில் இறங்குங்கள்.


ஆதி
12-12-12

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP