இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினித்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது.
தமிழினத்தின் மேல் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர். உரிமைக்காகவும் தமது பாதுகாப்பிற்காகவும் தமது சுதந்திரத்திற்காகவும் போராட ஒரு இனத்திற்கு முழுஉரிமையும் சட்டத்தின்பாபல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமது பிராந்திய வல்லாதிக்கங்களை உறுதிப்படுத்துவதற்காய் தமிழின படுகொலையை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு முழு உந்து சக்தியாக இருந்தது இந்த தலைமறைவாக இருக்கும் பங்காளிகளே. தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமிழின படுகொலைப்பங்காளிகள் இன்னமும் வெளிப்படையாக இனங்காட்டப்படவில்லை என்பது தான் உண்மை.
மாவிலாற்றில் தொடங்கப்ட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எதிரியாலும் பிராந்திய வல்லாதிக்கங்களாலும் நகர்த்தப்ட்ட ராஜதந்திரங்களும் தமிழ் இனத்திற்கு எதிரான போரிற்கு அவர்கள் செய்த ஊக்கிவிப்பும் சாதாரணமானவையல்ல. மனிதாபிமான போர் என்று வாய்கூசாமல் சிங்கள அரசால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு போரை இந்த வேளையில் அதன் உண்மையை நிலையை வெளிப்படுத்துவதற்கு போதிய அளவு ஆதாரங்கள் இருந்தும் பிராந்திய வல்லாதிக்கத்தின் இருப்புக்கருதி பல வல்லரசு நாடுகள் மௌனமாக இருப்பதன் பின்னணி தமிழினப்படுகொலைக்கான போரில் அவர்களுக்கிருக்கும் முக்கியத்துவமே.
இந்த நிலையில் தமிழர்களாகிய நாங்கள் சிந்தித்து செயற்படவேண்டும். கொலையாளியை முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். அதன் பின் பங்காளிகளின் பொய் முகமூடிகள் தானாகவே கிழிக்கப்படும்.
இனப்படுகொலை
இனப்படுகொலை என்றால் என்ன? இனப்படுகொலை நடாத்திய அரசை எப்படி சட்டத்தின் முன் கையாளலாம்?; என்ற தெளிவான சிந்தனை எமக்கு இருக்கவேண்டும். ஒரு தேசிய இனம்இவகுப்புஇ மதம் சார்ந்Nhதரை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்யப்படும் அத்தனை வன்செயலும் இனப்படுகொலை என்ற வட்டத்திற்குள் அடங்கும். இந்த வன்செயல் எப்படிபட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்றில்லை எத்தனைபேர் பாதிக்கப்பட வேண்டும் என்றில்லைஇ சாமாதான காலத்திலும் நடைபெறலாம் போர்க்காலத்திலும் இந்தவன்முறை நடைபெறலாம். ஆக ஒரு இனக்குழுமத்தின் மேல் அந்த மக்களை அழிப்பதற்கு செய்யும் அத்தனை வன்முறைகளும் இனப்படுகொலை என்ற சட்ட சொல்லாடலினுள் தான் அடக்கப்படும். “உலக நீதிமன்று” என அழமக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2007 பெப்ரவரி 26ம் நாள் பொஸ்னியா தொடர்பான தீர்ப்பின் 293இ294 பந்திகளில் ஜெனோசைட் போன்ற இனப்படுகொலைக் குற்றத்திற்கு மில்லியன் கணக்கானோரை கொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்ட 7இ000 பொஸ்னிய முஸ்லிம்கள் இனப்படுகொலை குற்றமாக கணிப்பிடுவதற்கு போதுமானவர்கள் என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.
தமிழர் மீது நடந்த படுகொலைகள்
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சிங்கள அரசின் கைகளில் வழங்கப்பட்ட பின் படிப்படியாக தமிழர்களின் உரிமைப்பறிப்றிப்பும் தமிழர்கள் மீதான வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. 50 களில் நடந்த கலவரங்களும் 83 காலப்பகுதிகளில் நடந்த கலவரங்களும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே. இந்த படுகொலைகளில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இது வரை வெளிவரவில்லை என்பதோடு அது சம்மந்தமாக நியாயமான விசாரணைகள் நடைபெறவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர இந்தி ராணுவத்தின் வருகையும் அதன்பின் இந்திய மற்றும் சிறிலங்கா ராணுவத்தாலும் பல வழிகளில் கொலைசெய்யப்ட்ட மக்கள் தொடர்பில் புள்ளிவிரங்களினூடான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் 4இ000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்ட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த காலப்பகுதிளில் காணாமற்போன பல நூறு இளைஞர்கள் யுவதிகள் குறித்த தகவல்களும் இதுவரை இல்லை.
இரண்டு அரசாங்களினால் தமிழ் இனக்குழுமத்தின்; மீது நடாத்தப்ட்ட பல படுகொலைகளின் பின் தமிழர்கள் மீதான இன அழிப்பை சிறிலங்கா அரசு தனது கையில் எடுப்பதான செயற்பாடுகள் நடக்கின்றன. அதாவது தமிழர்கள் மீதான எல்லாவழியிலான இன அழிப்பையும் சிறிலங்கா அரசு முன்னின்று செய்ய அவர்களுக்கு பின்புல பலமான பங்காளிகள் இருக்கின்றனர்.
யுhழ்ப்பாணம் மீதான சிறிலங்கா ராணுவத்தின் படையெடுப்பின் போது நடைபெற்ற மக்கள் அவலம் என்பது தெற்காசியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மக்கள் அவலம் என்று சொன்னால் மிகையாகாது. யாழ்ப்பாணம் மீது செய்யப்ட்ட மாபெரும் படையெடுப்பில் மக்கள் ஆங்காங்கே செத்துவீழ்ந்தனர். பாடசாலைகள் இ தேவாலையங்கள் இ கோயில்களஇ;; மக்கள் கூடும் இடங்கள் என எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசு குண்டுவீசி மக்களை கொன்று குவித்தது. போதிய அளவு தொழினுட்ப வசதியின்மைஇ தொடர்பாடல் வசதியின்மையால் யாழ்ப்பாணத்தின் மீது செய்யப்பட்ட படையெடுப்பில் நடந்தேறிய இனப்படுகொலை பற்றிய தரவுகள் போதிய அளவு உலகத்திற்கு தெரியவரவில்லை. கொலைசெய்யப்ட்டோர் இ காணாமல் போனோர் இ படுகாயமடைந்தோர் என எண்ணுக் கணக்கற்று தமிழர்கள் பாதிக்கப்ட்டனர். தமிழ்ர்கள் மேல் நடந்தேறிய இனப்படுகொலைகளில் யாழ்ப்பாணத்தின் மீது சிறிலங்கா அரசு செய்த போரும் ஒன்று.
இந்த நிலையில் தமிழ்ர்கள் மீதான முழுவீச்சுடனான இனப்படுகொலைக்கான போர் மீண்டும் மாவிலாற்றில் இருந்து ஆரம்பிப்பட்டது. மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான போரில் மாத்திரம் 100இ000 ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரணம் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் கொல்லப்பட்டவர்கள் குறித்த எல்லா தகவல்களும் தகவல்கள் சேகரிக்கும் குழுவினருக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த போரில் கொல்லப்ட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். அங்கங்களை இழந்தனர்.
காயமடைந்தவர்களையும் கடத்திக்கொன்ற சிறிலங்கா அரசு
போர் முல்லைத்தீவுக்குள் குறுகிக்கிடந்த காலப்பகுதிகளில் கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவை சங்க உள்ளுர்பிரதிநிதிகளின் உதவியுடன் காயப்படும் ஒரு தொகுதியினர் திருகோணமலை புல்மோட்டைக்கும் மற்ற ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கும் அனுப்பப்ட்டனர். ஏராளமானோர் வெளியேற்றப்படுவதற்கான வாகன வசதியோ பாதுகாப்பு வசதியோ எதுவுமின்றி செத்துக் கொண்டே இருந்தனர். இந்த காலப்பகுதிகளில் காயமடைந்து வந்தவர்களையும் சிறிலங்கா அரசு தரம் பிரித்தது. வயது பாகுபாட்டில் தரம்பிரித்த அரசு பின் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்ற வகையில் தரம்பிரித்தது. தரம்பிரிக்கப்ட்டவர்கள் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் அனுராதபுரம் மற்றும் சிங்கள பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்ட்டனர். அப்படி மாற்றப்ட்ட யாருமே அந்த காலப்பகுதிகளில் திரும்பிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்டு வருபவர்களுடன் உறவினர்கள் பெரும்பாலும் வருவதில்லை. உறவினர்கள் வருவதற்கு வாகனத்தில் இடம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி யாருமற்று காயப்பட்டு வந்த உறவுகள் குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாது. அதனால் சிங்கள அரசு கச்சிதமாக தனது படுகொலை நடாத்தியது.
காயப்பட்டு மக்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் சிறிலங்கா ராணுவம் வவுனியா பிரதேசத்தில் மணல் ஏற்றும் டிப்பர் உரிமையார்கள் சிலரை தமக்கு சில பொருட்கள் ஏற்றுவதற்கென்று அவர்களை அழைத்துச் சென்றனர். கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் பின் இரவு நேரங்களில் காடுகளுக்கூடாக தமது டிப்பர் பணயித்ததாகவும் தாம் சொன்ன அவர்கள் தாம் வீடு திரும்பி டிப்பரை பார்த்த போது டிப்பரில் இருந்த மணலில் எல்லாம் ரத்தம் இருந்ததாக அந்த வாகன உரிமையாளர்கள் சொன்னார்கள். ஆக படுகொலை செய்யப்ட்ட பலர் காடுகளுக்குள் எரித்து அழிக்கப்ட்டுள்ளனர்.
தவிர சிறு காயப்பட்டு வந்த பலரின் அங்கங்கள் முழுமையாக அகற்றப்ட்டன. வவுனியா மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அப்போது வெளிடப்பட்டபோதும் ஓரிரு நாட்களில் பலர் அந்த வைத்தியசாலைகளில் இருக்கவில்லை. பலரை சிவில் உடையில் வந்து அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதை பார்த்தாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தார்கள். தமிழ் மக்கள் மீது நாடாத்தப்பட்ட இன அழிப்பின் உச்சக்கட்டம் இப்படி பல வழிகளிலும் நடந்தேறியிருக்கிறது.
முகாம்களின் நிலை
எந்த வசதியுமற்று வெட்டவெளிப்பிரதேசத்தில் முட்கம்பிகளால் வேலியிடப்பட்டு முழுநேர ஆயுதப் படையினரின் பாதுகாப்புடன் மக்கள் அடைக்ப்பட்டனர். வெளிமக்களின் நேரடித் தொடர்பை துண்டித்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தனிமைப்படுத்துவதில் சிறிலங்கா படையினர் முழுநேர கண்காணிப்பில் இருந்தனர். இராணுவ துணைக்குழுக்களின் உதவியுடன் இடம்பெர்ந்து வந்த மக்களை வடிகட்டிபிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா புலானாய்வுப் பிரிவினர் பகிரங்கமாக ஒலிபெருக்கிகளில் புலிகளின் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் சரணடையுமாறும் ஒரிரு நாட்களில் விசாரணை முடிந்துவிடும் என்றும் பின் அனைவரும் விடுவிக்கப்டுவர் என்றும் அறிவித்தனர். இதை நம்பிய மக்கள் மாணவர் முதலுதவிப் படையில் இருந்து எல்லைப்படைவரை அனைவரும் சரணடைந்தனர். ஏறத்தாள எல்லா இளைஞர் யுவதிகளுமே சிறிலங்கா புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு தம்மை பதிவு செய்தனர்.
தம்மை முதலே விடுதலைப்புலிகள் என இனம்காட்டிய ஒரு தொகுதியினரை சிறிலங்கா ராணுவம் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி வளாகத்தில் இருந்த முகாமில் அடைத்து வைத்திருந்தது. மற்றய ஒரு தொகுதியினரை ரஜரட்ட பிரதேச காட்டுப்பகுதிக்கு சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாற்றியதாக அங்கிருந்த சில பொலிஸ் அதிகாரிகள் கூறினர் ஆனால் அப்படி மாற்றப்பட்டவர்களின் பெயர்விபரங்களோ எண்ணிக்கையோ யாருக்கும் தெரியாது.
தவிர முகாம்களில் தமது பெயரை பதிவு செய்தவர்களை கைது செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறை அதில் இனங்காணப்பட்ட சில ஆயிரக்கணக்கானோரை ரகசிய முகாம்களுக்கு மாற்றியதோடு மிகுதி ஆயிரக்கணக்கானோரை புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் சிறைவைத்தனர். இதில் ரகசிய முகாம்களுக்கு மாற்றப்ட்டவர்கள் குறித்த எந்த தகவல்களும் இப்போது இல்லை.
இப்படி இடம்பெயர்ந்து வந்த மக்களை பல வழிகளில் பிரித்துவிட்டு தனது அழிப்பு வேலையை முடக்கிவிட்டது சிறிங்கா அரசு. வுpசாரணை என்ற பெயரில் இளைஞர் யுவதிகளை கைது செய்வதும் பின் “அவர்கள் கைது செய்யப்படவில்லை”இ “நாங்கள் அவர்களை காணவே இல்லையே” என்று சொல்வதுமாய் பல சம்பவங்கள் நடந்தேறியது இந்த முட்கம்பி முகாம்களில்.
முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வந்த நண்பனொருவனோடு பேசும் போது முகாமிற்குள் நடக்கும் பல வன்முறைகள் பற்றி சொன்னான். ஒரு நாள் இரவு கடும் வெட்கையாக இருந்ததால் தான் நீர்த்தொட்டியடிக்கு சென்றதாகவும் அப்போது இரண்டு கொட்டகைகள் கழித்து ஒரு கொட்டகையில் அழுகுரல் கேட்டதாகவும் தான் குளிக்கும் நீர்த்தொட்டியை மறைத்து கட்டப்பட்டிருந்த கிடுகுவேலிக்குள் ஒழிந்து நின்றதாகவும் அந்த நேரம் அந்த கொட்டகைக்குள் இருந்து ஒரு பெண்ணை ஆயுதம் தாங்கிய இரண்டு படையினர் கையை பிடித்து கொண்டு சென்றதாகவும் சொன்னான். ஆனால் கொண்டு செல்லப்பட்ட பெண் யார் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களிடம் விசாரிக்க முடியாதெனவும் அப்படி விசாரித்தால் தனக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும் சொன்னான். இப்படி முகாம்களுக்குள் நடந்தேறிய பல வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளும் வெளி உலகிற்கு தெரியவரவில்லை.
ஒருதடவை சிறிலங்கா துணைராணுவக் குழுவொன்றால் முகாமிலிருந்து கூட்டிச்செல்லப்பட்ட இரண்டு தமிழ் பெண்கள் இரண்டு நாட்களின் பின் விடுவிக்கப்ட் நிலையில் அவர்கள் முகாமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரையும் விசாரணை என்று அழைத்துச் சென்ற அந்த துணைராணுவக் குழு சிறிலங்கா புலனாய்வு படையதிகாரிகளுடன் இணைந்து அவர்களை கற்பழித்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த தகவலை தமக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துள்ளனர் அந்த யுவதிகள்.
நீதி கேட்டு முறையிட எந்த இடமும் இல்லாமலும் மீறி வெளியுலகத்திற்கு நடந்தஇ நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் அதனால் தமது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தலாலும் பல உண்மைகள் வெளிப்படாமல் இந்த மக்களுக்குள் புதைந்து கிடக்கிறது.
போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளும் உலகத்தின் பார்வையும்
சிறிலங்கா அரசானது ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தி முடித்துள்ள இனப்படு கொலையானது இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மேல் மேற்கொள்ளப்ட்ட மினப்பெரிய படுகொலை நிகழச்சி என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மாறிவருகிறது என்பதே இந்த ஜ.நா நிபுணர்குழு அறிக்கை.
உலகத்தின் ஓர் மூலையில் நடந்தேறிய மிகப்பெரிய படுகொலையின் ஆதாராங்களை திரட்டி பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் வெளியிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பியதில் சனல்4 மற்றும் அல்ஜசீரா ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது என்றே கூறலாம். கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்தியாவின் ஊடகங்களுக்கு தெரியாத பல உண்மைகளை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு நடாத்திய படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
வெளி அழுத்தங்கங்கள் அதிகரிக்கவே பெயரளவில் ஜ.நா செயலாளரால் உருவாக்கப்ட்ட நிபுணர்குழு சில விடையங்களை மிக தெளிவாக ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டிருந்தது. பாரபட்சமற்று வெளிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையானது சிறிலங்காவிற்கு பலவழிகளிலும் அழுத்தத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த நிபுணர்குழு அறிக்கையானது முழுமையானதல்ல என்பதை தமிழர்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பமே. இந்த நல்ல ஆரம்பத்தினூடாக எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்கூய சந்தர்ப்பம் பிறந்துள்ளது. போர்ப்பிரதேசத்தில் நடந்த சில குற்றங்களை மட்டுமே பேசியுள்ள நிபுணர்குழு அறிக்கை போர்க்காலங்களில் கைது செய்யப்ட்டவர்கள் காணமல் போனவர்கள் பற்றி பேசவேயில்லை என்றேபடுகிறது. ரகசிய முகாம்களில் சிறைவைக்கப்ட்டவர்கள் குறித்த வாதங்களை இந்த நிபுணர்குழு வைக்கவில்லை என்றே தெரிகிறது. தவிர 40 000 ற்கும் அதிகமாவர்கள் இறுதிக்கட்ட போரில் கொல்லப்ட்டிருக்கலாம் என கூறியிருக்கும் நிபுணர்குழு அறிக்கை அதை இனப்படுகொலை என்ற சொல்லினூடாக வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியுள்ளது.
பிராந்திய வல்லாதிக்கங்களின் மீது ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே “இனப்படுகொலை” என்ற சொல்லாடலை நிபுணர்குழு தவிர்த்திருப்பதாக தெரிகிறது.
மேற்குலகினால் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான ராஜதந்திர முரண்பாடுகள் மற்றும் போர்க்குற்ற நிலைப்பாடு தொடர்பான பனிப்போரும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்தியா வெகுவாகவே நம்பி இருந்தது. அதனால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்பாக எழுத்த அத்தனை அழுத்தங்களையும் போர்க்காலத்தில் சமாளித்து சிறிலங்காவின் இனப்படுகொலைப் போரை விரைவுபடுத்தியிருந்தது இந்தியா. தனது முகவர்கள் ஊடாக தமிழினத்தின் மீதான போரை கண்காணித்து கொண்டிருந்த இந்தியா தொழினுட்ப மற்று சிறப்பு படைப்பிரிவின் உதவியையும் நேரடியாக சிறிலங்காவிற்கு வழங்கியிருந்தது. அது போக போர் தொடர்பான சில கட்டளைகளையும் தனது முகவர்களினூடாக சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கியிருந்தது. இதன் வெளிப்பாடாகவே போர் முடிந்தவுடன் ஒரு செவ்வியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ “நாங்கள் இந்தியாவின் போரையே செய்து முடித்திருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.
இப்படி இந்தியாவின் மேற்பார்வையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்து முடித்துவிட்ட சிறிலங்கா ராஜதந்திர ரீதியில் இந்தியாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. போர் முடிந்த கையுடன் போர்க்குற்றவாளி என்ற பெயரில் மகிந்தவை கூண்டில் ஏற்றிவிட்டு இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பெரிதும் தீர்மானித்திருந்ததாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களைவிட பல போர்க்குற்ற ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருப்பதாகலுவம் சொல்லப்படுகிறது. இந்திய அரசு சிறிலங்காவிற்கு போர்க்காலத்தில் வழங்கிய கட்டளைகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றை சிறிலங்கா அரசு வைத்திருப்பதாகவும் இந்திய அரசு சிறிலங்கா மீது போர்க்குற்ற குற்றச்சாட்டை வைக்குமிடத்து தமிழினப்படுகொலையில் இந்தியாவிற்கிருக்கும் பங்கை சிறிலங்கா வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தினாலையே இந்தியா இன்று சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்தியா தொடரந்து இருக்கவிரும்புமா என்பது சந்தேகத்திற்குரியதே. சிறிலங்காவிற்கெதிரான போக்கை கடைப்பிடிக்காவிட்டாலும் சிறிலங்கா மீதான அழுத்தங்களுக்கெதிராய் இந்தியா செயற்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும.
புலம்பெயர்தமிழர்களின் போராட்டங்களின் வெற்றியும் தொடரந்து செய்ய வேண்டியவையும்
சிறிலங்கா மீது மேற்குலகத்தின் பார்வையை இயன்ற அளவு தெளிய வைத்ததோடு கடும் தொனியிலான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வைத்ததில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பென்பது அழப்பரியது. சுpறிலங்கா அரசுக்கெதிரான பிரச்சாரங்கள் போர்க்குற்றங்களை சேகரித்து சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தமை அரசியல் அதிகாரிகளை தெளிவடைய வைத்தமை இப்படி புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை செய்த போராட்டங்களின் ஒரு பலன்தான் இந்த ஜ.நா அறிக்கை என்று சொன்னால் மிகையாகாது.
இந்திய புலனாய்வு துறையினரின் கண்காணிப்பு சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இப்படி பல தடைகளை வென்று புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் நகர்ந்து இன்று ஜ.நா அறிக்கை வெளியிடக்கூடிய அழுத்தங்ளை பிரயோகிக்க கூடிய பெரும் சக்தியாக வளர்ந்து நிக்கிறது.
ஓன்றுபட்ட தமிழினமாய் புலம்பெயர்தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜதந்திர ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அரசியல் ரீதியான விடுதலைக்கு தொடர்ந்து போராடுவதுதான் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட இனப்படுகொலையில் படுகொலை செய்யப்ட் உறவுகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும். ஓன்று திரண்ட மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் உணர்த்துவோம்…. தமிழினமாய் எல்லோரும் ஒன்றுபடுவோம் தமிழர்களே.
ஆதி
13-06-2011
இதுகளை பெருமையா வேற சொல்லிக்கொள்ள முடிகிறது உங்களால்....இவற்றை வைத்துக்கொண்டு பார்த்தால் உங்களைச் சுற்றிய சூளலை மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர இது தமிழர்களின் புரட்சியாக தெரியா...து நண்பரே.
இவற்றையெல்லாம் (அசிங்கங்களை) எழுதிதான், தமிழர்கள் மீண்டும் தங்கள் புரட்சியை ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டுமா? தமிழர்கள் அவ்வளவு முட்டாள்களா? - ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்.
இதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற வேலைகள், இந்த நாட்டில் மட்டுமல்ல உலகம் முளுவது பயன்படுத்தப்படும் கொலையாயுதம் மதம். சிங்கள அரசியல்வாதிகள் பௌத்தத்தை வைத்துக்கொண்டு மக்களை தமிழர்களுக்கெதிராக தூண்டினால் - அதே பௌத்தத்தை அசிங்கப்படுத்தி அவர்களுக்கெதிராக தமிழ் அரசியல்வாதிகள் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள
தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்ய சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்" இவ்வளவுதானே இங்கே நீங்கள் சொல்ல வருவது. அதை தடுக்க சந்தியில் நின்று புத்தனை மல்லுக்கிளுத்தால் சரிவருமா?
நடுனிலையாய் நின்று எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைகள் , கோபங்களாகவும் அவலங்களாகவும் மட்டுமே தெரிகிறது...வீட்டுக்குள் நின்றுகொண்டு வீட்டின் குறை நிறைகளை சொல்ல முடியாது, அப்படிச் சொன்னால அது வெறும் பொறுக்காமல் வருகிற புலம்பலாகவே தோன்ன்றும். வெளியிலிருந்து பாருங்கள். அப்போது அதன் குறை நிறைகள் சரியாகத் தெரியும். அப்போது அதை சரியாக சொல்லமுடியும், எங்கள் நியாயங்கள் நீதியானதாக இருக்கும் அப்போதுதான் எங்களுக்கான நியாயமான நீதியை எதிர்பார்க்கமுடியும். நண்பனாக, வழ்த்துக்களுடன் - ப. அருள்நேசன்See More