Powered by Blogger.

Monday, May 23, 2011

புத்தருக்கு முதலில் மூத்திரம் அடிப்பது யார்??

இன்று தமிழ் மக்களை பொறுத்தவரை புத்தரை ஒரு ஞானியாகவும் பெளத்தத்தை ஒரு மதமாகவும் பார்க்கும் மனநிலை தாண்டி "பெளத்தம்" என்பது ஒரு இன அழிப்பு குறியீடாகவே பார்க்கின்றனர்.

வன்னியில் புத்த சிலைகளை கண்டால் குழந்தைகள் மிரளுகிறார்கள்...அரச மரங்களை கண்டால் "எப்ப இதில புத்தர கொண்டுவந்து வைக்கப்போறாங்களோ!!!" என்ற வெறுப்பு ஏக்கம் மக்களிடத்தில் பரவிக்கிடக்கிறது. சிங்கள அரசானது இன அழிப்பை ஆயுதத்தாலும் இனக்கலப்பு மற்றும் இனப்பரம்பல் சிதைப்பை பெளத்த்தாலும் செய்து வருகிறது.

கட்டாய கொண்டாட்டங்களும் உயர் நீதிமன்ற விதிகளை தாண்டிய ஒலிபரப்புகளும் ஆயுதப்படையின் பாதுகாப்புமென பெளத்தம் தமிழ் மக்களின் மீதான இனச்சிதைப்பை செய்யும் மிகப்பெரிய அரச இயந்திரமாக உருவெடுத்துள்ளது...அதில் புத்தன் அரக்கனாகவும் சிங்கள சிப்பாய்கள் அரக்கனின் பாதுகாவலர்களாகவும் மாற்றம் பெற்றுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பிக்குவை கண்டால் "சிங்கள மொட்டையன்"  என்று காறி உமிழ்கிறார்கள். இது யாராலும் பயிற்றிவிக்கப்ட்டதல்ல.. பெற்றோர்கள் வீடுகளில் பேசுவதை அவர்கள் பெளத்தத்தின் மீது காட்டும் வெறுப்பை சிறுவர்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தவிர அண்மையில் ஒரு இளைஞர் கூட்டம் இப்படி ஒரு பந்தையம் கட்டியது "இண்டைக்கு அதில இருக்கிற புத்தருக்கு முதலில் மூத்திரம் அடிக்கிறதாரு??"

தங்களின் இயலாமை காட்டுவதற்கு சிறுவர்களும் இளைஞர்களும் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்.

பெளத்தம் என்ற தியான நெறியை மதம் ஆக்கியதும்  அந்த மத வெறியால் இன்னொரு இனத்தை அழிப்பதும் சிங்களம் தான்...  சிறிலங்காவை பொறுத்தவரை பெளத்தம் ஒரு என்பது ஒரு மத தீவிரவாத அமைப்பு...

ஆதி
22-5-2011


 முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட கருத்தூட்டல்கள் கீழே..


· · Share · Delete
    • Pathinathan Arulnesan
      உங்களுக்கு யார் இதெல்லாம் வந்து சொல்றாங்கள்?...ஹா ஹா ஆ,

      இதுகளை பெருமையா வேற சொல்லிக்கொள்ள முடிகிறது உங்களால்....இவற்றை வைத்துக்கொண்டு பார்த்தால் உங்களைச் சுற்றிய சூளலை மட்டும்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர இது தமிழர்களின் புரட்சியாக தெரியா...து நண்பரே.

      இவற்றையெல்லாம் (அசிங்கங்களை) எழுதிதான், தமிழர்கள் மீண்டும் தங்கள் புரட்சியை ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டுமா? தமிழர்கள் அவ்வளவு முட்டாள்களா? - ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்.

      இதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற வேலைகள், இந்த நாட்டில் மட்டுமல்ல உலகம் முளுவது பயன்படுத்தப்படும் கொலையாயுதம் மதம். சிங்கள அரசியல்வாதிகள் பௌத்தத்தை வைத்துக்கொண்டு மக்களை தமிழர்களுக்கெதிராக தூண்டினால் - அதே பௌத்தத்தை அசிங்கப்படுத்தி அவர்களுக்கெதிராக தமிழ் அரசியல்வாதிகள் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் உருவான போராட்டம் இறுதியில் கொலைவெறிபிடித்து தனது இனத்தையே தின்று அழிந்துவிட்டது. இப்போது எந்த நோக்கத்திற்காக அதே தூண்டல்களை தொடர்கிறீர்கள். நீங்கள் முதலில் யாருக்காக எழுதுகிறீர்கள்?...வரப்போகிற அடுத்த மெசியா யார்?

      தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை செய்ய சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்" இவ்வளவுதானே இங்கே நீங்கள் சொல்ல வருவது. அதை தடுக்க சந்தியில் நின்று புத்தனை மல்லுக்கிளுத்தால் சரிவருமா?

      நடுனிலையாய் நின்று எழுதுங்கள். உங்களுடைய வார்த்தைகள் , கோபங்களாகவும் அவலங்களாகவும் மட்டுமே தெரிகிறது...வீட்டுக்குள் நின்றுகொண்டு வீட்டின் குறை நிறைகளை சொல்ல முடியாது, அப்படிச் சொன்னால அது வெறும் பொறுக்காமல் வருகிற புலம்பலாகவே தோன்ன்றும். வெளியிலிருந்து பாருங்கள். அப்போது அதன் குறை நிறைகள் சரியாகத் தெரியும். அப்போது அதை சரியாக சொல்லமுடியும், எங்கள் நியாயங்கள் நீதியானதாக இருக்கும் அப்போதுதான் எங்களுக்கான நியாயமான நீதியை எதிர்பார்க்கமுடியும். நண்பனாக, வழ்த்துக்களுடன் - ப. அருள்நேசன்
      See More
    • ஆதி ஆதித்யன்
      இது யார் சார்பான தூண்டுதலோ போராட்டத்திற்கான அறைகூவலோ கிடையாது நண்பரே!!! எங்களை சுற்றி நடக்கும் அக்கிரமங்களும் சமூகத்தில் நடக்கும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் இந்த பதிவு. இனி வரும் காலங்களில் வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களிற்கு மக்களுக...்கு யாரும் அறை கூவல் விடுக்க வேண்டிய தேவைகள் இல்லை. மாறாக மக்களின் இயலாத்தன்மையும் அதனால் அதிகாரங்களுக்கெதிராய் மக்கள் கூனிக்குறுகி சிந்திக்கும் முறைகளையும் நாங்கள் பேசியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது... இங்கு நான் எழுதி அத்தனை விடையங்களும் இப்பொழுது எமது சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பவை மட்டுமே!!! ....See More
      Yesterday at 12:20pm · · 1 personVasudevan Kanagasabai likes this.
    • ஆதி ஆதித்யன் இங்கு எந்த அசிங்கங்களினூடாகவும் பிரச்சினைகளை சொல்லவில்லை..... அன்றாட எமது வாழ்வில் பாவிக்கும் சொற்பிரயோகங்கள் மட்டுமே பாவித்திருக்கிறேன்... ....
      Yesterday at 12:24pm ·
    • Pathinathan Arulnesan ம்ம் :)
      Yesterday at 12:36pm · · 1 personLoading...
    • Ajith Sajith sariyaga sonnirkal aathi
      Yesterday at 3:42pm ·
    • Kirishanth Selvanayagam
      சரியாக சொன்னீர்கள் அண்ணா.. உங்களின் இந்தப் பதிவு நிச்சயம் தேவை.. சிறுவர்கள் தங்கள் இயலாமையை இப்படியாவது காட்டுகிறார்கள்.. இது ஒரு அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் நடக்கும் வழமையான ஒன்று தான்... இதே போலத் தான் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெர...ிக்கப்படைகள் மீது சிறுவர்கள் கல்லால் எரிந்து தங்கள் எதிர்ப்பைக் கட்டுகிறார்கள்.., இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீனியச் சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது ஒளிந்து நின்று கவண் மூலம் கல்வீச்சு நடாத்துகிறார்கள்... விடுதலை மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில் தங்கள் வெறுப்பை எங்களின் தம்பிகளும் இப்படிக் காட்டுகிறார்கள்... அதில் தப்பில்லையே..........!See More
      Yesterday at 5:47pm · · 1 person

Thursday, May 19, 2011

ஈழத்தில் ராஜபக்ஷ செய்து கொண்டிருக்கும் அரசியல் நகர்வுகள்



போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு சர்வதேச அழுத்தங்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் திரை மறைவில் தனது தொடர்ச்சியான இருப்பிற்கான அடித்தளங்களை ராஜபக்ச கச்சிதமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார். 

ஏதிர்க்கட்சிகளின் வலுவை சிதைப்பதுஇ சிறுபான்மையினரின் குரலை அடக்குவது என்று பல நிகழ்ச்சி நிரல்களின் கீழ் அவரின் நடவடிக்கைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. “ஒரு கட்சி ஆட்சி” அதாவது “மன்னராட்சி” முறையிலான நடவடிக்கைகளுக்கு மகிந்த ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இன்றுள்ள அரசியல் அமைப்பின்பிரகாரம் முழுஅதிகாரமும் மத்திய அராங்கத்திடமே குவிந்துள்ளது. அதிலும் ஜனாதிபதிக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆதிகாரமிக்க நீதிமன்றங்களின் தீர்ப்பில் கூட தலையிடக்கூடிய வகையில் ராஜபக்ஷவின் கையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த தலமையிலான ராஜபக்ஷ குடும்பம் இன்று சிறிலங்காவின் முக்கிய வர்த்தக மையங்கள் உட்பட உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக கேந்திர மையங்களை  தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பெரும் பணப்புழக்கத்தில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தை எதிர்த்து ஒரு பெட்டிக்கடை கூட நடாத்த முடியாத நிலையில் சிறிலங்காவின் நிலை மாறிவருகிறது.

வௌ;வேறு கட்சிகளில் மக்களால் தெரிவு செய்யப்ட்டவர்கள் கூட இன்று ராஜபக்ஷவின் அதிகாரத்தாலும் பணத்தாலும் விலைக்கு வாங்கப்பட்டு ராஜபக்ஷ கட்டுப்பாட்டில் வைக்கப்ட்டுள்ளனர். இதனால் பலம் மிக்க எதிர்க்கட்சிகள் எதுவுமற்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குடும்ப ஆட்சியை வலுவாக நிறுவியுள்ளது. 

சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் நட்ப்பு வைத்துள்ள மகிந்த ராஜபக்ஷ மன்னராட்சி தொடர்பில் அரபு நாடுகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மன்னராட்சியை உருவாக்குவதற்கு தேவையான காரணிகள் மற்றும் அதிலுள்ள சிக்கல்கள்இ சட்ட தேவைகள் குறித்தும் தமது அதிகாரிகளை அரபு நாடுகளுக்கு அனுப்பி ஆராய்ந்து வருகிறார்.
எப்படியான அரசியல் முறமையை அவர் கையாண்டாலும் தமிழர்களின் உரிமைப்பிரச்சினை அவருக்கு மிகப்பெரிய தலையிடியாக தொர்ந்து கொண்டே இருக்கும் என்று நன்கறிந்த மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினரின் அரசியல் குரலை நசுக்கும் நடவடிக்கைகளிலும் மிக மும்மரமாக ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆழும் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை தேர்தலினூடாக தெரிந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷஇ வடக்கு கிழக்கு பகுதிகளில் தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்கு துணை ராணுவக் குழுக்களை களம் இறக்கியுள்ளார். இவர்களுக்கு பக்கபலமாக ஆயுதம் தாங்கிய படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். போர்க்குற்றம் தொடர்பில் ஜ.நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை எப்படியும் சிதைத்துவிடவேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்றே தெரிகிறது. இந்தியாவினூடாக தமிழ் தேசியக் சுட்டமைப்பிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பது அல்லது நேரடியாக தமிழ் தேசிய சுட்டமைப்பு ஊறுப்பினர்களை அச்சுறுத்தி அடக்குவது என்ற நிலைப்பாட்டில் ராஜபக்ஷ இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆதன் தொடர்ச்சியாகதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் உதவியாளர்கள் தாக்கப்படுவதும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதும்.

தவிர இன்று தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்வென்றாலும் சரி நிறுவன நிகழ்ச்சிகள் என்றாலும் சரி ராணுவத்தின் பிரசன்னம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுpறிலங்கா ராணுவத்தின் பிரசன்னம் இன்றி எந்த நிகழ்ச்சிகளும் தமிழர் தாயகப்பகுதிகளில் நடாத்த முடியாது என்ற நிர்ப்பந்தம் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் திணிக்கப்பட்டுள்ளது. தமது சுய அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து எந்த பிரச்சினையுமின்றி ராஜபக்ஷ தாளத்திற்கு ஆடும் ஈ.பி.டி.பி கட்சிஇ தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிஇ கருணாகுழு உட்பட அத்தனை துணை ராணுவக் குழுக்கழுமே தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ் மக்களின் அரசியல் குரலை அடக்குவதற்கு மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் தாயகப்பிரதேசங்களில் இருந்து மண் உட்பட அத்தனை வளங்களையும் தென்னிலங்கைக்கு பலவந்தமாக திருடி அனுப்புவதில் இந்த துணை ராணுவ குழுக்கள் இயங்குவதோடு பாதுகாப்பிற்கு சிறிலங்காவின் ஆயுதம் தாங்கிய படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுபோக கல்வி நடவடிக்கைகள்இ அதிகாரிகள் இடமாற்றங்கள்இ அரச அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களிலும் இந்த துணைராணு குழுக்களின் பிரசன்னத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு தமிழ் மக்களின் நலன் குறித்து பேசும் அத்தனை குரல்களும் முடக்கப்ட்டு வருகிறது.
தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும் உள்ளுராட்சி மன்றங்கள் நேரடியாக மாகாண ஆளுனரினதும் மத்திய அரசாங்கத்தினதும் கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசாங்கம் தான் நினைப்பதை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. அதை தட்டிக்கேட்கும் நிலை யாருக்கும் வழங்கப்படுவதில்லை. அதுபோக யாழ்ப்பாணத்தின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது. என்னதான் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி அரச அதிகாரியாக இருந்தாலும் சரி யாழ்ப்பாண ராணுவ தளபதியின் அனுமதியின்றி ஒரு பட்டம் கூட பறக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்ட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசக்கூடிய அத்தனை வழிகளும் ராணுவ இயந்திரத்தால் அடைக்கப்ட்டுள்ளது. 

சிறுபான்மையினரின் குரலை அடக்குவதன் மூலம் ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி நகர்வுகளை தீவிரப்படுத்தலாம் என நம்புகிறது அரசு. போர் முடிந்து 2 வருடங்கள் கடந்து வரும் நிலையில் அவரகாலச்சட்டம் உட்பட பல கெடுபடிகள் நீங்கப்படாமைக்கான காரணம் ராஜபக்ஷ தலமையிலான குடும்பாட்சியை உறுதிப்படுத்துவதற்கே.

புலம்பெயர் தமிழர்களின் கைகளில் வழங்கப்ட்டுள்ள தமிழர் போராட்டங்கள்           
ஈழத்தில் தமிழ் மக்களின் குரல்கள் அத்தனையும் ராணுவ இயந்திரத்தால் அடக்கப்ட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தான் முழுவீச்சுடன் தமிழர் உரிமைப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கெதிரான பாரிய மனித படுகொலையை சிறிலங்கா அரசு செய்து முடித்து இன்று 2 வருடங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க கூடிய பாரிய போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் செய்யவில்லை என்றே தெரிகிறது. ஜ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஆதாரமாக வைத்து சிறிலங்கா அரசிற்கெதிரான போராட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசிற்கெதிரான கோஷங்கள் எழுப்பப்பட வேண்டும். இராணுவ அதிகாரிகளாக இருந்து இன்று சிறிலங்காவின் ராஜதந்திரிகளாக முகமூடி தரித்துள்ளவர்களை இனங்கண்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு தமிழர் உரிமைப்பிரச்சினையில் நேரடியாக சர்வதேசத்தை தலையிடும் படி கோரி போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் நடாத்துவதினூடுதான் எமது விடுதலைப்போராட்டம் இன்னமும் முடியவில்லை என்று உலகிற்கு எடுத்துக்காட்ட முடியும். எம்மீதான கொடூர இனப்படுகொலையை சிறிலங்கா அரசு நிகழ்த்தி இரண்டு வருடங்கள் கழியும் இந்த நிலையில் விடுதலை பெறும் வரை போராடுவோம் என சபதம் எடுப்போம் உறவுகளே!!   


ஆதி
10-05-2011


Tuesday, May 17, 2011

மே18 – தமிழினத்தின் மீது நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை



இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினித்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது. 


தமிழினத்தின் மேல் நடைபெற்ற இந்த இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளியாக சிறிலங்கா அரசு இனங்காணப்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் இன்னமும் தலைமறைவாகவே இருக்கின்றனர். உரிமைக்காகவும் தமது பாதுகாப்பிற்காகவும் தமது சுதந்திரத்திற்காகவும் போராட ஒரு இனத்திற்கு முழுஉரிமையும் சட்டத்தின்பாபல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமது பிராந்திய வல்லாதிக்கங்களை உறுதிப்படுத்துவதற்காய் தமிழின படுகொலையை நடாத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு முழு உந்து சக்தியாக இருந்தது இந்த தலைமறைவாக இருக்கும் பங்காளிகளே. தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமிழின படுகொலைப்பங்காளிகள் இன்னமும் வெளிப்படையாக இனங்காட்டப்படவில்லை என்பது தான் உண்மை.

மாவிலாற்றில் தொடங்கப்ட்ட போர் முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எதிரியாலும் பிராந்திய வல்லாதிக்கங்களாலும் நகர்த்தப்ட்ட ராஜதந்திரங்களும் தமிழ் இனத்திற்கு எதிரான போரிற்கு அவர்கள் செய்த ஊக்கிவிப்பும் சாதாரணமானவையல்ல. மனிதாபிமான போர் என்று வாய்கூசாமல் சிங்கள அரசால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு போரை இந்த வேளையில் அதன் உண்மையை நிலையை வெளிப்படுத்துவதற்கு போதிய அளவு ஆதாரங்கள் இருந்தும் பிராந்திய வல்லாதிக்கத்தின் இருப்புக்கருதி பல வல்லரசு நாடுகள் மௌனமாக இருப்பதன் பின்னணி தமிழினப்படுகொலைக்கான போரில் அவர்களுக்கிருக்கும் முக்கியத்துவமே. 


இந்த நிலையில் தமிழர்களாகிய நாங்கள் சிந்தித்து செயற்படவேண்டும். கொலையாளியை முதலில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும். அதன் பின் பங்காளிகளின் பொய் முகமூடிகள் தானாகவே கிழிக்கப்படும்.

இனப்படுகொலை
இனப்படுகொலை என்றால் என்ன? இனப்படுகொலை நடாத்திய அரசை எப்படி சட்டத்தின் முன் கையாளலாம்?; என்ற தெளிவான சிந்தனை எமக்கு இருக்கவேண்டும். ஒரு தேசிய இனம்இவகுப்புஇ மதம் சார்ந்Nhதரை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்யப்படும் அத்தனை வன்செயலும் இனப்படுகொலை என்ற வட்டத்திற்குள் அடங்கும். இந்த வன்செயல் எப்படிபட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்றில்லை எத்தனைபேர் பாதிக்கப்பட வேண்டும் என்றில்லைஇ சாமாதான காலத்திலும் நடைபெறலாம் போர்க்காலத்திலும் இந்தவன்முறை நடைபெறலாம். ஆக ஒரு இனக்குழுமத்தின் மேல் அந்த மக்களை அழிப்பதற்கு செய்யும் அத்தனை வன்முறைகளும் இனப்படுகொலை என்ற சட்ட சொல்லாடலினுள் தான் அடக்கப்படும். “உலக நீதிமன்று” என அழமக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2007 பெப்ரவரி 26ம் நாள் பொஸ்னியா தொடர்பான தீர்ப்பின் 293இ294 பந்திகளில் ஜெனோசைட் போன்ற இனப்படுகொலைக் குற்றத்திற்கு மில்லியன் கணக்கானோரை கொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்ட 7இ000 பொஸ்னிய முஸ்லிம்கள் இனப்படுகொலை குற்றமாக கணிப்பிடுவதற்கு போதுமானவர்கள் என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.


தமிழர் மீது நடந்த படுகொலைகள்
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சிங்கள அரசின் கைகளில் வழங்கப்பட்ட பின் படிப்படியாக தமிழர்களின் உரிமைப்பறிப்றிப்பும் தமிழர்கள் மீதான வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. 50 களில் நடந்த கலவரங்களும் 83 காலப்பகுதிகளில் நடந்த கலவரங்களும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே. இந்த படுகொலைகளில் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இது வரை வெளிவரவில்லை என்பதோடு அது சம்மந்தமாக நியாயமான விசாரணைகள் நடைபெறவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தவிர இந்தி ராணுவத்தின் வருகையும் அதன்பின் இந்திய மற்றும் சிறிலங்கா ராணுவத்தாலும் பல வழிகளில் கொலைசெய்யப்ட்ட மக்கள் தொடர்பில் புள்ளிவிரங்களினூடான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் 4இ000 ஆயிரத்திற்கும்  அதிகமான மக்கள் படுகொலை செய்யப்ட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த காலப்பகுதிளில் காணாமற்போன பல நூறு இளைஞர்கள் யுவதிகள் குறித்த தகவல்களும் இதுவரை இல்லை.
இரண்டு அரசாங்களினால் தமிழ் இனக்குழுமத்தின்; மீது நடாத்தப்ட்ட பல படுகொலைகளின் பின் தமிழர்கள் மீதான இன அழிப்பை சிறிலங்கா அரசு தனது கையில் எடுப்பதான செயற்பாடுகள் நடக்கின்றன. அதாவது தமிழர்கள் மீதான எல்லாவழியிலான இன அழிப்பையும் சிறிலங்கா அரசு முன்னின்று செய்ய அவர்களுக்கு பின்புல பலமான பங்காளிகள் இருக்கின்றனர்.

யுhழ்ப்பாணம் மீதான சிறிலங்கா ராணுவத்தின் படையெடுப்பின் போது நடைபெற்ற மக்கள் அவலம் என்பது தெற்காசியாவில் 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மக்கள் அவலம் என்று சொன்னால் மிகையாகாது. யாழ்ப்பாணம் மீது செய்யப்ட்ட மாபெரும் படையெடுப்பில் மக்கள் ஆங்காங்கே செத்துவீழ்ந்தனர். பாடசாலைகள் இ தேவாலையங்கள் இ கோயில்களஇ;; மக்கள் கூடும் இடங்கள் என எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசு குண்டுவீசி மக்களை கொன்று குவித்தது. போதிய அளவு தொழினுட்ப வசதியின்மைஇ தொடர்பாடல் வசதியின்மையால் யாழ்ப்பாணத்தின் மீது செய்யப்பட்ட படையெடுப்பில் நடந்தேறிய இனப்படுகொலை பற்றிய தரவுகள் போதிய அளவு உலகத்திற்கு தெரியவரவில்லை. கொலைசெய்யப்ட்டோர் இ காணாமல் போனோர் இ படுகாயமடைந்தோர் என எண்ணுக் கணக்கற்று தமிழர்கள் பாதிக்கப்ட்டனர். தமிழ்ர்கள் மேல் நடந்தேறிய இனப்படுகொலைகளில் யாழ்ப்பாணத்தின் மீது சிறிலங்கா அரசு செய்த போரும் ஒன்று. 
இந்த நிலையில் தமிழ்ர்கள் மீதான முழுவீச்சுடனான இனப்படுகொலைக்கான போர் மீண்டும் மாவிலாற்றில் இருந்து ஆரம்பிப்பட்டது. மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான போரில் மாத்திரம் 100இ000 ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரணம் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் கொல்லப்பட்டவர்கள் குறித்த எல்லா தகவல்களும் தகவல்கள் சேகரிக்கும் குழுவினருக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த போரில் கொல்லப்ட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். அங்கங்களை இழந்தனர்.


காயமடைந்தவர்களையும் கடத்திக்கொன்ற சிறிலங்கா அரசு
போர் முல்லைத்தீவுக்குள் குறுகிக்கிடந்த காலப்பகுதிகளில் கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவை சங்க உள்ளுர்பிரதிநிதிகளின் உதவியுடன் காயப்படும் ஒரு தொகுதியினர் திருகோணமலை புல்மோட்டைக்கும் மற்ற ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கும் அனுப்பப்ட்டனர். ஏராளமானோர் வெளியேற்றப்படுவதற்கான வாகன வசதியோ பாதுகாப்பு வசதியோ எதுவுமின்றி செத்துக் கொண்டே இருந்தனர். இந்த காலப்பகுதிகளில் காயமடைந்து வந்தவர்களையும் சிறிலங்கா அரசு தரம் பிரித்தது. வயது பாகுபாட்டில் தரம்பிரித்த அரசு பின் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்ற வகையில் தரம்பிரித்தது. தரம்பிரிக்கப்ட்டவர்கள் மேலதிக சிகிச்சை என்ற பெயரில் அனுராதபுரம் மற்றும் சிங்கள பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்ட்டனர். அப்படி மாற்றப்ட்ட யாருமே அந்த காலப்பகுதிகளில் திரும்பிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்டு வருபவர்களுடன் உறவினர்கள் பெரும்பாலும் வருவதில்லை. உறவினர்கள் வருவதற்கு வாகனத்தில் இடம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி யாருமற்று காயப்பட்டு வந்த  உறவுகள் குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாது. அதனால் சிங்கள அரசு கச்சிதமாக தனது படுகொலை நடாத்தியது.

காயப்பட்டு மக்கள் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் சிறிலங்கா ராணுவம் வவுனியா பிரதேசத்தில் மணல் ஏற்றும் டிப்பர் உரிமையார்கள் சிலரை தமக்கு சில பொருட்கள் ஏற்றுவதற்கென்று அவர்களை அழைத்துச் சென்றனர். கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் பின் இரவு நேரங்களில் காடுகளுக்கூடாக தமது டிப்பர் பணயித்ததாகவும் தாம் சொன்ன அவர்கள் தாம் வீடு திரும்பி டிப்பரை பார்த்த போது டிப்பரில் இருந்த மணலில் எல்லாம் ரத்தம் இருந்ததாக அந்த வாகன உரிமையாளர்கள் சொன்னார்கள். ஆக படுகொலை செய்யப்ட்ட பலர் காடுகளுக்குள் எரித்து அழிக்கப்ட்டுள்ளனர். 

தவிர சிறு காயப்பட்டு வந்த பலரின் அங்கங்கள் முழுமையாக அகற்றப்ட்டன. வவுனியா மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டவர்களின் பெயர்விபரங்கள் அப்போது வெளிடப்பட்டபோதும் ஓரிரு நாட்களில் பலர் அந்த வைத்தியசாலைகளில் இருக்கவில்லை. பலரை சிவில் உடையில் வந்து அம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதை பார்த்தாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தார்கள். தமிழ் மக்கள் மீது நாடாத்தப்பட்ட இன அழிப்பின் உச்சக்கட்டம் இப்படி பல வழிகளிலும் நடந்தேறியிருக்கிறது.

முகாம்களின் நிலை
எந்த வசதியுமற்று வெட்டவெளிப்பிரதேசத்தில் முட்கம்பிகளால் வேலியிடப்பட்டு முழுநேர ஆயுதப் படையினரின் பாதுகாப்புடன் மக்கள் அடைக்ப்பட்டனர். வெளிமக்களின் நேரடித் தொடர்பை துண்டித்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தனிமைப்படுத்துவதில் சிறிலங்கா படையினர் முழுநேர கண்காணிப்பில் இருந்தனர். இராணுவ துணைக்குழுக்களின் உதவியுடன் இடம்பெர்ந்து வந்த மக்களை வடிகட்டிபிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா புலானாய்வுப் பிரிவினர் பகிரங்கமாக ஒலிபெருக்கிகளில் புலிகளின் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் சரணடையுமாறும் ஒரிரு நாட்களில் விசாரணை முடிந்துவிடும் என்றும் பின் அனைவரும் விடுவிக்கப்டுவர் என்றும் அறிவித்தனர். இதை நம்பிய மக்கள் மாணவர் முதலுதவிப் படையில் இருந்து எல்லைப்படைவரை அனைவரும் சரணடைந்தனர். ஏறத்தாள எல்லா இளைஞர் யுவதிகளுமே சிறிலங்கா புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு தம்மை பதிவு செய்தனர்.
தம்மை முதலே விடுதலைப்புலிகள் என இனம்காட்டிய ஒரு தொகுதியினரை சிறிலங்கா ராணுவம் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி வளாகத்தில் இருந்த முகாமில் அடைத்து வைத்திருந்தது. மற்றய ஒரு தொகுதியினரை ரஜரட்ட பிரதேச காட்டுப்பகுதிக்கு சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மாற்றியதாக அங்கிருந்த சில பொலிஸ் அதிகாரிகள் கூறினர் ஆனால் அப்படி மாற்றப்பட்டவர்களின் பெயர்விபரங்களோ எண்ணிக்கையோ யாருக்கும் தெரியாது. 

தவிர முகாம்களில் தமது பெயரை பதிவு செய்தவர்களை கைது செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறை அதில் இனங்காணப்பட்ட சில ஆயிரக்கணக்கானோரை ரகசிய முகாம்களுக்கு மாற்றியதோடு மிகுதி ஆயிரக்கணக்கானோரை புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் சிறைவைத்தனர். இதில் ரகசிய முகாம்களுக்கு மாற்றப்ட்டவர்கள் குறித்த எந்த தகவல்களும் இப்போது இல்லை. 

இப்படி இடம்பெயர்ந்து வந்த மக்களை பல வழிகளில் பிரித்துவிட்டு தனது அழிப்பு வேலையை முடக்கிவிட்டது சிறிங்கா அரசு. வுpசாரணை என்ற பெயரில் இளைஞர் யுவதிகளை கைது செய்வதும் பின் “அவர்கள் கைது செய்யப்படவில்லை”இ “நாங்கள் அவர்களை காணவே இல்லையே” என்று சொல்வதுமாய் பல சம்பவங்கள் நடந்தேறியது இந்த முட்கம்பி முகாம்களில்.

முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வந்த நண்பனொருவனோடு பேசும் போது முகாமிற்குள் நடக்கும் பல வன்முறைகள் பற்றி சொன்னான். ஒரு நாள் இரவு கடும் வெட்கையாக இருந்ததால் தான் நீர்த்தொட்டியடிக்கு சென்றதாகவும் அப்போது இரண்டு கொட்டகைகள் கழித்து ஒரு கொட்டகையில் அழுகுரல் கேட்டதாகவும் தான் குளிக்கும் நீர்த்தொட்டியை மறைத்து கட்டப்பட்டிருந்த கிடுகுவேலிக்குள் ஒழிந்து நின்றதாகவும் அந்த நேரம் அந்த கொட்டகைக்குள் இருந்து ஒரு பெண்ணை ஆயுதம் தாங்கிய இரண்டு படையினர் கையை பிடித்து கொண்டு சென்றதாகவும் சொன்னான். ஆனால் கொண்டு செல்லப்பட்ட பெண் யார் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களிடம் விசாரிக்க முடியாதெனவும் அப்படி விசாரித்தால் தனக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும் சொன்னான். இப்படி முகாம்களுக்குள் நடந்தேறிய பல வன்முறைகளும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளும் வெளி உலகிற்கு தெரியவரவில்லை. 
ஒருதடவை சிறிலங்கா துணைராணுவக் குழுவொன்றால் முகாமிலிருந்து கூட்டிச்செல்லப்பட்ட இரண்டு தமிழ் பெண்கள் இரண்டு நாட்களின் பின் விடுவிக்கப்ட் நிலையில் அவர்கள் முகாமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரையும் விசாரணை என்று அழைத்துச் சென்ற அந்த துணைராணுவக் குழு சிறிலங்கா புலனாய்வு படையதிகாரிகளுடன் இணைந்து அவர்களை கற்பழித்து அதை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த தகவலை தமக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு சொல்லிவிட்டு தற்கொலை செய்துள்ளனர் அந்த யுவதிகள்.
நீதி கேட்டு முறையிட எந்த இடமும் இல்லாமலும் மீறி வெளியுலகத்திற்கு நடந்தஇ நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை வெளிப்படுத்தினால் அதனால் தமது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய உயிர் அச்சுறுத்தலாலும் பல உண்மைகள் வெளிப்படாமல் இந்த மக்களுக்குள் புதைந்து கிடக்கிறது.




போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளும் உலகத்தின் பார்வையும்
சிறிலங்கா அரசானது ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தி முடித்துள்ள இனப்படு கொலையானது இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மேல் மேற்கொள்ளப்ட்ட மினப்பெரிய படுகொலை நிகழச்சி என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மாறிவருகிறது என்பதே இந்த ஜ.நா நிபுணர்குழு அறிக்கை.

உலகத்தின் ஓர் மூலையில் நடந்தேறிய மிகப்பெரிய படுகொலையின் ஆதாராங்களை திரட்டி பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் வெளியிட்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பியதில் சனல்4 மற்றும் அல்ஜசீரா ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது என்றே கூறலாம். கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்தியாவின் ஊடகங்களுக்கு தெரியாத பல உண்மைகளை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்தி தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு நடாத்திய படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

வெளி அழுத்தங்கங்கள் அதிகரிக்கவே பெயரளவில் ஜ.நா செயலாளரால் உருவாக்கப்ட்ட நிபுணர்குழு சில விடையங்களை மிக தெளிவாக ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டிருந்தது. பாரபட்சமற்று வெளிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையானது சிறிலங்காவிற்கு பலவழிகளிலும் அழுத்தத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்த நிபுணர்குழு அறிக்கையானது முழுமையானதல்ல என்பதை தமிழர்கள் ஆகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் ஆரம்பமே. இந்த நல்ல ஆரம்பத்தினூடாக எல்லாவற்றையும் வெளிப்படுத்தக்கூய சந்தர்ப்பம் பிறந்துள்ளது. போர்ப்பிரதேசத்தில் நடந்த சில குற்றங்களை மட்டுமே பேசியுள்ள நிபுணர்குழு அறிக்கை போர்க்காலங்களில் கைது செய்யப்ட்டவர்கள் காணமல் போனவர்கள் பற்றி பேசவேயில்லை என்றேபடுகிறது. ரகசிய முகாம்களில் சிறைவைக்கப்ட்டவர்கள் குறித்த வாதங்களை இந்த நிபுணர்குழு வைக்கவில்லை என்றே தெரிகிறது. தவிர 40 000 ற்கும் அதிகமாவர்கள் இறுதிக்கட்ட போரில் கொல்லப்ட்டிருக்கலாம் என கூறியிருக்கும் நிபுணர்குழு அறிக்கை அதை இனப்படுகொலை என்ற சொல்லினூடாக வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியுள்ளது.

பிராந்திய வல்லாதிக்கங்களின் மீது ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே “இனப்படுகொலை” என்ற சொல்லாடலை நிபுணர்குழு தவிர்த்திருப்பதாக தெரிகிறது. 
மேற்குலகினால் சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான ராஜதந்திர முரண்பாடுகள் மற்றும் போர்க்குற்ற நிலைப்பாடு தொடர்பான பனிப்போரும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. 


சிறிலங்காவில்  விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என இந்தியா வெகுவாகவே நம்பி இருந்தது. அதனால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்பாக எழுத்த அத்தனை அழுத்தங்களையும் போர்க்காலத்தில் சமாளித்து சிறிலங்காவின் இனப்படுகொலைப் போரை விரைவுபடுத்தியிருந்தது இந்தியா. தனது முகவர்கள் ஊடாக தமிழினத்தின் மீதான போரை கண்காணித்து கொண்டிருந்த இந்தியா தொழினுட்ப மற்று சிறப்பு படைப்பிரிவின் உதவியையும் நேரடியாக சிறிலங்காவிற்கு வழங்கியிருந்தது. அது போக போர் தொடர்பான சில கட்டளைகளையும் தனது முகவர்களினூடாக சிறிலங்கா அரசிற்கு இந்தியா வழங்கியிருந்தது. இதன் வெளிப்பாடாகவே போர் முடிந்தவுடன் ஒரு செவ்வியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ “நாங்கள் இந்தியாவின் போரையே செய்து முடித்திருக்கிறோம்” என்று சொல்லியிருந்தார்.


இப்படி இந்தியாவின் மேற்பார்வையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை செய்து முடித்துவிட்ட சிறிலங்கா ராஜதந்திர ரீதியில் இந்தியாவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. போர் முடிந்த கையுடன் போர்க்குற்றவாளி என்ற பெயரில் மகிந்தவை கூண்டில் ஏற்றிவிட்டு இலங்கையை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பெரிதும் தீர்மானித்திருந்ததாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களைவிட பல போர்க்குற்ற ஆதாரங்கள் இந்திய அரசிடம் இருப்பதாகவும் ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருப்பதாகலுவம் சொல்லப்படுகிறது. இந்திய அரசு சிறிலங்காவிற்கு போர்க்காலத்தில் வழங்கிய கட்டளைகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றை சிறிலங்கா அரசு வைத்திருப்பதாகவும் இந்திய அரசு சிறிலங்கா மீது போர்க்குற்ற குற்றச்சாட்டை வைக்குமிடத்து தமிழினப்படுகொலையில் இந்தியாவிற்கிருக்கும் பங்கை சிறிலங்கா வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தினாலையே இந்தியா இன்று சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்தியா தொடரந்து இருக்கவிரும்புமா என்பது சந்தேகத்திற்குரியதே. சிறிலங்காவிற்கெதிரான போக்கை கடைப்பிடிக்காவிட்டாலும் சிறிலங்கா மீதான அழுத்தங்களுக்கெதிராய் இந்தியா செயற்படுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும.
  

புலம்பெயர்தமிழர்களின் போராட்டங்களின் வெற்றியும் தொடரந்து செய்ய வேண்டியவையும்  
சிறிலங்கா மீது மேற்குலகத்தின் பார்வையை இயன்ற அளவு தெளிய வைத்ததோடு கடும் தொனியிலான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள வைத்ததில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பென்பது அழப்பரியது. சுpறிலங்கா அரசுக்கெதிரான பிரச்சாரங்கள் போர்க்குற்றங்களை சேகரித்து சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தமை அரசியல் அதிகாரிகளை தெளிவடைய வைத்தமை இப்படி புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை செய்த போராட்டங்களின் ஒரு பலன்தான் இந்த ஜ.நா அறிக்கை என்று சொன்னால் மிகையாகாது.


இந்திய புலனாய்வு துறையினரின் கண்காணிப்பு சிறிலங்கா புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் இப்படி பல தடைகளை வென்று புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் நகர்ந்து இன்று ஜ.நா அறிக்கை வெளியிடக்கூடிய அழுத்தங்ளை பிரயோகிக்க கூடிய பெரும் சக்தியாக வளர்ந்து நிக்கிறது. 


ஓன்றுபட்ட தமிழினமாய் புலம்பெயர்தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜதந்திர ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அரசியல் ரீதியான விடுதலைக்கு தொடர்ந்து போராடுவதுதான் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட இனப்படுகொலையில் படுகொலை செய்யப்ட் உறவுகளுக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும். ஓன்று திரண்ட மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை சிங்களத்திற்கும் உலகிற்கும் உணர்த்துவோம்…. தமிழினமாய் எல்லோரும் ஒன்றுபடுவோம் தமிழர்களே.


ஆதி
 13-06-2011

    


Thursday, April 21, 2011

உலக கிண்ண கிரிக்கட் போட்டியும் சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியயலும்


உலக கிண்ண கிரிக்கட் போட்டியும் சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியயலும்

நடந்து முடிந்த உலக கிண்ண கிரிக்கட் போட்டியினூடாக சிறிலங்கா அரசு மிகப்பெரிய அரசியல் நகர்வை தமிழ் மக்களிடையில் பலவழிகளிலும் நகர்த்தி முடித்திருக்கிறது. புலம் பெயர் தமிழர்களை விட ஈழத்தில் உள்ள தமிழ் மக்களிடையில் தனது அரசியல் நிலைப்பாட்டை நகர்த்துவதற்று உலக கிண்ண கிரிக்கட்டை பெரிதும் சிறிலங்கா அரசு பாவித்தது என்பது மறுக்கப்பட்வியலாத ஒன்று. எந்த அளவிற்கு அது வெற்றியளித்தது என்பதற்கப்பால் சிறிலங்கா அரசு விளையாட்டினூடாக  நகர்த்திய அரசியல் என்பது சாதாரணமாக எடைபோட முடியாது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.                        

"விளையாட்டும் அரசியலும் வேறு வேறு" என்ற தொனிப் பொருளினூடு சிறிலங்கா அரசு தனது அரசியல் நகர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதை சில தமிழர்கள் ஆமோதித்ததோடு சிறிலங்கா கிரிக்கட்டை ஆதரிப்பதற்கான தமது நிலைப்பாட்டை "விளையாட்டும் அரசியலும் வேறு வேறு " என்ற கொள்கையினூடு நியாயப்படுத்தியும் இருந்தனர். அவர்களின் அரசியல் புரிதலின்மை மற்றும் தூரநோக்கற்ற சிந்தனைகளால் சிறிலங்கா அரசின் நிலைப்படு பல வழிகளிலும் தமிழ் மக்களிடையில் திணிக்கபட்டது. எப்படி திணிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள முன் விளையாட்டுகளினூடு தமது தேசிய இனத்திற்காய் போராடிய தேசிய அணி வீரர்களை பற்றி நாம் கட்டாயம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். சிம்பாவே கிரிக்கட் அணியின் முக்கிய வீரர் ஹென்றி ஒலங்காவினதும் குத்துச்சண்டை வீரர் முகமது அலி அவர்களிருவரினதும் வரலாறுகள் இதற்கு சிறந்த உதாரணம் என்று கருதுகிறேன். 2003ம் ஆண்டு நடந்த உலக கிண்ண கிரிக்கட் ஆட்டத்தில் ஹென்றி ஒலங்கா தனது இனத்திற்காக தன்னால் இயன்ற முற்று முழுதான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த நாட்களில் அவர் கூறிய வசனங்கள் இன்றும் எப்படி விளையாட்டினூடு அரசியல் நகர்த்தப்படுகிறது என்பதற்கு மிகப்பபெரிய எடுத்துக்காட்டாகும்.

நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(ஊசiஉமநவ) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும்இ எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களைஇ படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் இ எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னிஇ இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பைஇ உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)

என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுதுஇஇ பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படஇ ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

—– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

இந்த வீரர்கள் தமது இனத்துக்கெதிரான அரசின் நிலைப்பாட்டை,அடக்குமுறைகளை தத்தமது ஸ்தானத்தில் இருந்து எதிர்த்தார்கள். தம்மால் இயன்றவரை போராடினார்கள். இன்று நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு தமக்கெதிரன அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொணர்ந்தார்கள். இந்த போராட்டம் விளையாட்டினூடாகத் தான் நடந்தேறியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிம்பாவேயில் ஒரு இனத்திற்கெதிராக மாபெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பிட்டிருக்கின்றது என்ற சேதியை, அந்த வீரன் போட்டியில் கறுப்பு பட்டி அணியும் வரை அறிந்திராத அனைவருக்கும் சொன்னான். அது தான் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம். தனது இனத்திற்கெதிரான ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு அந்த வீரன் எடுத்துக் கொண்ட ஆயுதம் விளையாட்டு என்பது மட்டும் போதுமானது அரசியல் எப்படியெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு.

அரசியல் என்பது தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத்திலும் மட்டும் தான் செய்வதன்று. அப்படிப்பட்ட அரசியல்கள் அரசியல்வாதிகளால் செய்யபட்டும் அரசியல். மக்கள் மயப்படுத்தப்ட்ட அரசியல் வித்தியாசமானது. தமது அபிலாசைகளை எந்தவழிகளிலெல்லாம் சொல்ல முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது தான் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல். தமிழ் மக்களுக்கு இன்று தேவையானது மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல். "விளையாட்டும் அரசியலும் வேறு வேறு" என்று சொல்லப்படுவதே ஒரு அரசியல் தான் என்று புரிந்து கொள்ளும் மக்களின் அரசியல் தான் இன்று தமிழ் மக்களுக்கு தேவை.

சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியல்
சிறிலங்கா அரசானது உலக கிண்ண கிரிக்கட் காலப்பகுதியில் தமிழ் ஊடகங்கள், பேஸ்புக் மற்றும் ருவீட்டர் என்பவற்றினூடாக தனது நகர்வுகளை விஸ்தரித்திருந்தது. சிறிலங்காவை பொறுத்தவரை சிறிலங்காவின் அத்தனை தமிழ் ஊடகங்களையும் இந்த நடவடிக்கைக்கு பாவித்திருந்தது சிறிலங்கா அரசு. வானொலி, தொலைக்காட்சி,தினசரிப்பத்திரிகைகள் வாராந்த மற்றும் மாதாந்த எழுத்து ஊடகங்களை மட்டுமல்லாது வலைப்பதிவுளிலும் தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியிருந்தனர். "I am Sri lanka" என்ற வசனமும் சிங்க கொடியும் எல்லா இடங்களிலும் பொறிக்கபட்டிருந்தன. சிறிலங்கா எமது தாய்நாடு, அரசியலும் விளையாட்டும் வேறு வேறு என்று எல்லா இடங்களிலும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டடுக்கொண்டிருந்தன. தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கபட்டுக்கிடக்கும் தேசத்தில். சிறிலங்கா எமது தாய்நாடு என்பது திணித்தலினூடாக மாபெரும் அரசியல் நகர்வை சிறிலங்கா அரசு திட்டமிட்டிருந்தது என்பது தான் வெளிப்படை உண்மை. தமிழ் மக்களை கொன்று குவித்து வெற்றி விழா கொண்டாடியபோது தமிழ் மக்கள் புறக்கணித்த சிங்க கொடியை தமிழ் மக்களை கொண்டாட வைத்தல் என்பது அரசியல் அன்று வேறெதாய் இருக்க முடியும்? விடுதலைப்புலிகள் களத்தில் இருந்தபோது கொண்டாடப்படாத உலக கிண்ணங்கள்,தேசிய கொள்கைகள் ஏன் இப்பொழுது தமிழ் மக்களிடத்தில் கொண்டாடப் பண்ணுவதற்காக அரும்பாடுபடவேண்டும்? சிறிலங்கா என்ற தேசத்தில் எது நடந்தாலும் அது உள்வீட்டுப்பிரச்சினை, தவிர எல்லா மக்களும் சிறிலங்கா தேசியத்தை கொண்டாடுகிறார்கள் என்ற செய்தி உலக நாடுகளுக்கு சொல்லப்பட் வேண்டும் என்பதிலையே சிறிலங்கா அரசு இந்த உலக கிண்ண கிரிக்கட்டில் முற்று முழுதாக ஈடுபட்டது என்பதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.   

மனித உரிமை மீறல்கள்,தமிழர் தாயகப்பகுதியில் நடக்கும் நிலப்பறிப்புகள், கைதுகள்,கடத்தல்கள், கப்பம் கோரல்கள், பாலியல் பலாத்காரங்கள் இப்படி சிறிலங்கா அரசு செய்துவரும் அனைத்து அடாவடித்தனங்களும் இந்த உலககிண்ண கிரிக்கட் காலத்தில் மக்களை சென்றடையாது தடுத்து மக்களின் மனநிலையை திசைதிருப்புவதினூடாக அரசுக்கெதிரான மக்களின் போக்கை கணிசமான அளவு தடுத்துவிடலாம் என்றே அரசு நம்பியது. அது சிறிதளவேனும் வெற்றியளித்திருக்க வேண்டும். காரணம் போர்க்குற்ற ஆதாராங்கள், கடந்த சில நாட்களுக்குள் நடந்தேறிய படுகொலைகள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படாமல் நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்ட சட்டவாக்கல்கள் இப்படி தமிழ் மக்களுக் கெதிரான பாரிய செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களில் பலர் "சிறிலங்கா கிரிக்கட்ட தோற்பதற்கு சூதாட்டம் காரணமா"என்ற விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். 

எதிரிக்கு சிறிது இடைவெளிவிட்டாலும் அவன் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டுவிடுவான். அது ஆயுதப்போராட்டம் என்றாலும் சரி அரசியல் போராட்டம் என்றாலும் சரி. சலுகைகள் இலவசங்கள் இப்படி பலவற்றை வழங்கியும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கெதிரான நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியிருந்தனர். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களால் செய்யப்பட்ட மிக்பெரிய அரசியல் அது. அதை விட இந்த மக்களால் எதுவும் செய்யமுடியாது. தமிழ் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ளாவிடினும் இராணுவ வேலிக்குள் தனக்கெதிராய் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசிற்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அரசிற்கு இப்போதுள்ள பிரச்சினை புலம்பெயர் தமிழர்கள் செய்யும் அரசியல் நகர்வுகளை சிதைப்பது. அல்லது தற்காலிகமாகவேனும் புலம்பெயர் தமிழர்களின் அரசியலை திசை திருப்பி தன்னை சுதாதரித்துக் கொள்வது. அரசு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை புலம் பெயர் தமிழ்மக்களின் மனநிலையை மாற்றுவதுடன் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது. 

"சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்ப்பதனால் தமிழீழத்தை பெற்றுவிடலாம் என நாடுகடந்து ஒப்பாரி வைக்கும் தமிழர்கள்" என்று சிறிலங்கா வானொலி ஒன்றின் மிகப்பிரபலமான தமிழ் அறிவிப்பாளர் ஒருவர் தனது பேஸ்புக் மற்றும் ருவீட்டர் நிலைச் செய்தியல் போட்டிருந்தார். இது தான் அரசு எதிர்பார்த்த அரசியல். தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகளை சிதைப்பது இப்படியான சொல்லாடல்களினூடுதான்.சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்த்தல் என்பது, உலக கிண்ண கிரிக்கட் எனும் உலக அரங்கில் சிங்கள அரசால் நசுக்கபடும் தமழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைகள் குறித்து பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. தவிர சிறிலங்கா கிரிக்கட்டடை எதிர்பதால் தமிழீழம் கிடைக்கும் என்பதல்ல. "நான் சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்க்கிறேன்" என்று சொன்னால் நீ சிறிலங்கன் தானே ஏன் உனது நாட்டின் கிரிக்கட்டை எதிர்க்கிறாய் என்று இன்னொரு நாட்டு நண்பன் என்னிடம் கேட்பான். அவனுக்கு நான் காரணத்தை சொல்வேன். "ஓ... இப்படியெல்லாம் சிறிலங்கா அரசு செய்கிறதா" என்று ஏங்கிப்போவான். நாளை "உன் வீட்டுக்காரர் நலமாக இருக்கிறார்களா" என்று கேட்பான். இது தான் விளையாட்டினூடாக நாங்கள் உலகிற்கு சொல்ல வேண்டிய செய்தி. விளையாட்டை மட்டுமல்ல சிறிலங்காவின் பிரபலமான எதை புறக்கணிக்கும் போதும் எம்மீதான அடக்குமுறைகள் குறித்து இன்னொரு நாட்டுக்காரனுடன் பேசும் வெளியொன்று உருவாகிறது. எமது பிரச்சினைகளை உலக மயமாக்க வேண்டும். எமது உரிமைகளை பெற்றுத்தாருங்கள் என்று எங்கெங்கெல்லாம் இருக்கிறோமோ அங்கங்கெல்லாம் வீதிக்கிறங்கும் போது அந்த நாட்டுமக்கள் எம்மோடு கை கோர்க்க வேண்டும். அந்த மக்கள் மயப்படுத்தப்ட்ட அரசியல் தான் இன்று தமிழ் மக்களுக்கு தேவை.


தமிழ் மக்களை எண்ணுக்கணக்கற்று கொன்று குவித்து பிணங்களின் மேல் ஏறி நின்று வெற்றி விழாக் கொண்டாடிய போது எல்லா சிங்களவர்களும் நெஞ்சினில் குற்றியிருந்த சிங்க கொடியினை தான் எங்களில் பலர் உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் போது குற்றியிருந்தார்கள். எப்படி முடிகிறது இந்த மனிநிலை? இனத்திற்காய் ஆக குறைந்தது ஒரு விளையாட்டை கூட நிராகரிக்க திராணியற்ற இனமா நாம்? இலங்கையன் என்று சொல்வதற்கு சமஉரிமை தகுதி கூட இல்லாத தமிழர்கள் ஏன் சிங்க கொடியினை கொண்டாட வேண்டும்? அது அருவருப்பாக இல்லையா? மாத்தறையில் ஒருவனுக்குள்ள உரிமையின் எல்லை வன்னியில் இருக்கும் எனக்கும் வேண்டும். அதுவரை சிங்க கொடியை நிராகரித்துக் கொண்டே இருப்போம்.யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை இப்படி எல்லா இடங்களிலும் நிராகரித்துக் கொண்டே இருப்போம். அந்த கொடியை கொண்டாடும் எல்லோருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்ல் வேண்டும். உரிமைகளே வழங்கப்படாத போது அவனது கொடியினை கொட்டாடுவது வெட்கமாயிராது?சிறிலங்கா அரசால் ஏதிலிகளாக்கப்ட்டு இன்னொரு நாட்டின் தயவுடன் வாழும் புலம் பெயர் தமிழர்களில் பலரும் சிங்கக் கொடியை தூக்கியவாறு சிறிலங்கா கிரிக்கட் என்று அலைந்து திரிந்தது பெரும் வியப்புக்குள்ளாக்கியிருந்தது. சிறிலங்கா கொடியினை பாடசாலையில் வைத்து எரித்து தான் தமிழர்களுக்கான போராட்டம் புதிய பரிமானம் பெற்றது. பாடசாலை மாணவனாக இருந்தபோதே பாடசாலையில் வைத்து சிங்க கொடியை கொழுத்தும் அளவிற்கு சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட வன்முறைகளை கட்டவிழ்த்திருற்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். 


எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேறும் வரை,எமக்கு நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை யாராவது தட்டிக் கேட்கும் வரை,எம்மால் முடிந்த அளவு நாங்கள் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதை தவிர வேறெந்த வழிகளிலும் தமது அரசியல் அபிலாசைகளை பேசமுடியாத அளவிற்கு ஈழம் வாழ் தமிழ் மக்கள் தள்ளபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த போராட்டங்கள் புலம் பெயர் தமிழ் மக்களினூடாக தான் நகர்த்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை புலம்பெயர் தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் சிறிலங்கா மீதான நிராகரிப்புகளை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் ஏன் நிராகரிக்கிறோம் என்ற காரணம் உலகமயப்படுத்தப்பட வேண்டும். எமது காரணங்கள் எல்லா மக்களுக்கும் தெரியுமிடத்து எமது போராட்டங்களுக்கு பெரும் பக்கபலமாக அது அமையும். சிறிலங்கா கிரிக்கட்டை நிராகரிப்பதால் தமிழீழம் கிடைக்குமா என்ற முட்டாள்த்தனமான விவாதங்களை விடுத்து இப்படியான சந்தர்ப்பங்களில் எமது அரசியலை பேசக்கூடிய வெளிகளை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். மற்றய இனங்கள் எப்படி தமது அரசியல் போராட்டங்களை நகர்த்தி வெற்றிகண்டன என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் மயப்படுத்த போராட்டங்களிற்கு எந்த ஆதிக்க சக்தியும் ஆட்டம் காணும். சிறிலங்கா அரசை தொடர்ந்து நாங்கள் நிராகரிப்பதினூடு உலகம் நிட்சயமாக ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். அதை யாராலும் மறுக்க முடியாது. இனத்திற்காய் எம்மால் இயன்றவரை போராடுவோம். போராடும் வழிகளாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வோம்.  அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் இனத்திற்காக அதன் மக்கள் உலகெல்லாம் இருந்து போராடினார்கள் என்ற வரலாற்றை பதிவு செய்வோம்.

ஆதி

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP