Powered by Blogger.

Sunday, October 2, 2011

அடக்குமுறையில் சிக்கித்தவிக்கும் தமிழர் தாயகம்


தமிழர்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்த கையோடு தமிழர் தாயகப்பகுதியை அடிமைப்படுத்தும் பல வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுத்துவருகிறது. ஈபிடிபி போன்ற துணை ராணுவ குழுக்கள் மற்றும் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படும் அரச அதிகாரிகளினூடாக அடக்கு முறையின் வடிவங்களை பன்முகப்படுத்தியுள்ளது அரசு. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்ட்டாலும் மேலதிக அதிகாரங்களை ராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் வழங்கியுள்ள அரசாங்கம் தமிழர் தாயகப்பகுதியில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் அளவுக் மீறிய வகையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அதிகாரமும் வழங்கியுள்ளது.

அரச புலனாய்வுப்பிரிவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு "கிறிஸ் மனிதர்கள்" என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதிகளில் செய்த அடக்குமுறைகள் உச்சத்தை எட்டியிருந்தது. பல்கலைக்கழக மாணவிகளின் விடுதிக்குள் நுழையுமளவிற்கு அவர்களின் சேட்டைகள் உச்சம் பெற்றிருந்தன. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட "கிறிஸ் மனிதர்கள்" எனப்படும் நபர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்பதோடு அவர்கள் எவரையுமே நீதிமன்றில் பொலிசார் ஆயர்ப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பாலியல் மனநோயாளிகள் என்று கூறி தமிழ்மக்களை மடையர்களாக்கியது சிங்கள அரசு. "கிறிஸ் மனிதர்கள்" எனப்படுபவர்கள் வரும் இடங்களிலெல்லாம் மிக விரைவாகவே ராணுவம் வந்து அவர்களை காப்பாற்றிவிடுவது மட்டுமல்லாது பொதுமக்களையும் மிலேச்சத்தனமாக தாக்கிவரும் சம்பவங்களும் உச்சத்தை எட்டியிருந்தன. இந்த விடையத்தை இலங்கை வந்திருந்த அமெரிக்க அதிகாரி பிளேக்கிடம் எடுத்து சொல்லப்ட்டதன் பிற்பாடு சற்று தணிந்திருக்கிறது.

இப்படியான வன்முறைகளுக்கு பின்னணியில் ராணுவம் இருப்பது தெரிந்தும் யாழ் அரச அதிபர் ராணுவத்தின் மீது எந்த கண்டனத்தையோ அல்லது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றோ சொல்லாமல் "கிறிஸ் மனிதர்கள்" என்ற சம்பவங்களே யாழ்ப்பாணத்தில் நடைபெறவில்லை என்று கருத்துக் கூறியிருந்தார்.

தமிழர்களின் பாரம்பரியங்களை சிதைப்பது மட்டுமல்லாது தமிழர்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று சின்னங்களையும் சிதைத்தழிப்பதில் அரசு மும்மரமாக ஈடுபட்டுவருகிறது. சின்ன சின்ன கோயில்களை இடித்தழித்தல் அந்த இடத்தில் புத்தர் சிலையை வைத்தல் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் ராணுவ செறிவை அதிகரித்தல் பொதுமக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு ராணுவத்தின் பிரசன்னம் என மக்கள் திருப்பி பேச முடியாத அளவிற்கு அடக்குமுறையின் வடிவங்கள் உருவாக்கப்ட்டுவருகின்றன.

போரால் பாதிக்கபட்ட பெண்களை அச்சுறுத்தல் பள்ளி மாணவிகளுடன் சேட்டைவிடுதல் என ராணுவத்தின் அடாவடித்தனங்கள் நாழுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள இளைஞர்கள் தாராளமாக தமிழ் பெண்களுடன் சேட்டைவிடுதல் தமிழ் இளைஞர்களுடன் தகராறுகளில் ஈடுபடல் என நாழுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எங்கும் முறைப்பாடுகளை செய்ய முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தில் இருக்கும் "பன்சலை" ஒன்றிற்காக யாழ்ப்பாண கடைகளில் பிக்கு ஒருவர் கட்டாய காசுபறிப்பில் ஈடுபட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. தான் பொலிஸ் அனுமதி பெற்றுள்ளதாகவும் ரிக்ட்டின் விலை 1500 ரூபாய் எனவும் கட்டாயம் அனைவரும் வாங்க வேண்டுமெனவும் இந்த கொள்ளை பட்டப்பகில் நடைபெற்றுள்ளது. தனிச் சிங்களத்தில் அச்சிடப்பட்ட ரிக்கட்டுகள் வியாபாரிகளிடம் கொடுக்கப்ட்டுள்ளது.

சிங்கள இனத்தை சேர்ந்த யார் வேண்டுமென்றாலும் தமிழர்கள் மீது அதிகாரம் செலுத்தலாம் என்ற அடக்குமுறை வடிவத்தை நசுக்காக தமிழர் தாயகப்பகுதிக்கு நகர்த்தியிருக்கிறது சிங்கள அரசு. தமிழ் மக்களின் சிவில் பிரச்சினை குறித்து எந்த அக்கறையும் காட்டிக் கொள்ளதா ஈபிடிபி துணை ராணுவக் குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு யாழில் களம் அமைத்து கொடுப்பதில் மும்மரமாக ஈடுபட்டவண்ணம் உள்ளார். மாநகர சபைகளின் செயற்பாடுகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர் ஊழலும் தனது சுய வியாபாரத்தையும் செய்வதற்கான ஒரு வழியாகவே மாநனகர சபைகளை பயன்படுத்துகிறார்.

மக்கள் கேள்வி கேட்ட முடியாத நிலைக்கும் நீதிமன்றங்கள் செல்ல முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வெளியில் தெரியாத வகையில் அடக்முறைகளின் பயங்கரம் தலைவிரித்தாடுகிறது.

புலம்பெயர் தமிழர்களே!!
ஈழத்தில் நடந்து கொண்டிருக்க கூடிய அடக்குமுறையின் இப்படியான வடிவங்கள் குறித்து நீங்கள் மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ராஜதந்திரிகளுக்கு தொடர்ந்து தெளிவுபடுத்திக் கொண்டிருங்கள். மின்னஞ்சல்கள் அனுப்புங்கள். ஈழத்தில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் இணைய செய்திகளை வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருங்கள். ஈழத்தில் இருக்க கூடிய உங்கள் சொந்தங்களுடன் பேசும் பொழுது அரசியல் நிலவரம் குறித்தும் அறிந்து கொள்ளுங்கள். ஈழத்தில் இருக்கும் மக்கள் அடக்குமுறைக்குள் இருக்கிறார்கள். எது குறித்தும் வாய்திறக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் தான் தமிழ்மக்களின் நிலவரம் குறித்து ராஜதந்திகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் அத்தனை சந்தர்ப்பங்களையும் சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்ட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளும் உரிமை மறுப்புகளும் தொடர்ந்து சர்வதேசத்திற்கு தெரிவதோடு ஆக்க கூர்வமான நடவடிக்கைகளை எடுக்க தூண்டும். சிறிலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டிய அரசே தான் என்ற நிலை உருவாகும். தமிழ் மக்களின் விடுதலை சாத்தியமாகும்.

ஆதி
01-10-2011



No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP