"கிறிஸ் பூதங்கள்" என்ற பெயரில் மலையகத்தில் ஆரம்பித்த சிங்கள ராணுவ நகர்வு குருணாகல் தம்புள்ள உள்ளிட்ட பிரதேசங்கள் வழியாக கிழக்குமாகாணத்திற்குள் நுழைந்து மன்னார் கிளிநொச்சி பிரதேசங்களுக்கும் பரவியிருக்கிறது. இராணுவத்தின் இரத்த வெறியின் இன்னொரு பாகம் தான் இந்த நடவடிக்கை என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். ஆனால் கலையரசன் என்ற அரச முகவர் "இதுக்கும் இராணுவத்திற்கும் சம்மந்தம் இல்லை... தமிழ் ஊடகங்கள் மக்களை ஏமாற்றுகின்றன என்று சொல்லியிருந்தார்" அதிகபட்சமாக சென்று "இராணுவம் தான் சம்மந்தப்பட்டிருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள் என கேட்டிருந்தார்"
இந்த நிலையில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற அரசியல் கட்சியின் இணையத்தில் கிறிஸ் மனிதர்களுக்கும் இராணுவத்துக்குமிடையிலான தொடர்பு குறித்த செய்திகள் வரவே கலையரசன் தடுமாறிவிட்டார். உடனே ராணுவத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறி குறிப்பெழுதினார். "கிறிஸ் பூதங்கள்" பிரச்சினையை சரியாக கையாளதெரியாத அரசியல் இல்லை என்று சொன்னார். இங்கு நகைப்புக்குரியவிடையம் என்னவென்றால் "கிறிஸ் பூதங்கள்" தொடர்பாக மக்களிற்கு ஏற்பட்டிருக்கும் கோபம் அரசுக்கெதிராக திரும்பும் சாத்தியமமிருக்கிறது என்று நான் ஒரு இடத்தில் குறிப்பிடும் பொழுது அதை கேலி செய்திருந்தவர் இன்று இந்த கருத்து சம்மந்தமாக பதிவே எழுதியிருக்கிறார்.
வெளிநாடுகளில் இருந்து சிங்கள இனவெறியாட்டத்தை மறைப்பதற்கு பலவகையில் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. "கிறிஸ் பூதங்கள்" எனப்படுபவர்கள் சழூகவிரோதிகள் மட்டும்தானாம். அவர்களுக்கு இராணுவத்துடன் எந்த தொடர்புமில்லையாம் என்று இங்கிருந்து யோ.கர்ணன் சயந்தனுக்கு உறுதிப்படுத்தினாராம். அதை கலையரசன் நம்புகிறாராம்.
சிங்கள அரசின் வெறியாட்த்தை காப்பாற்ற தமிழர்கள்தான் இனவெறி பிடித்தவர்கள், என ஓதிக் கொண்டிருக்கும் கலையரசனுக்கு யோ.கர்ணன் என்ற ஊதுகுழல் பிரயோசனமாக பயன்படுகிறது. சிங்கள வெறியாட்டத்தை மறைப்பதற்கு, தடுமாற்றக் கருத்துகளையும் முன்னுக்கு பின் முரணான கருத்துகளையும் வெளியிட்டு வாசகர்களின் சிந்தனைகளை திசைதிருப்பி அதில் இருந்து சிங்கள ராணுவத்தின் மீதான பார்வையை விலக்குவதற்கான உளவியல் உத்தியைதான் கலையரசன் கையாண்டிருந்தார். ஆனால் அது எடுபடவில்லை.
மக்களின் கருத்துக்கள்
************************************************************************
இந்த பிசாசு கதைகளுக்கு முன் கத்தறகம பிரதேசத்தில் ஒரு யானைக்குட்டி பரிதாபமாக இறந்தது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?? மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏதோ வியாதியாம். அதனால் "பண்சல"விற்கு குட்டியீன்ற யானை ஒன்றை தானம் செய்ய வேண்டும் என்று பிக்குகள் கூறினராம். அதன் காரணமாக குட்டியீன்று சில நாட்களேயான தாய் யானையை குட்டியிடம் இருந்து பிரித்துச் சென்றது ராஜபக்சவின் அடியாள் கூட்டம். பால்குடிக்கும் யானைக்குட்டிக்கு சரியான உணவு வழங்கப்படாததால் குட்டி சில நாட்களில் இறந்து போனது.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர் தான் "கிறிஸ் பூத" கதைகள் வெளியாகின. புதையல் எடுப்பதற்காக நாமல் ராஜபக்ஷ தலமையிலான குழு நாடுமுழுவதும் இறக்கப்ட்டுள்ளது என்றும் அதனால் ஏற்படப்போகும் தளம்பலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களை வீடுகளுக்குள் முடக்கவேண்டும் என்பதும் தேவையான ஒன்று என்றகாரணத்தால் தான் இந்த "கிறிஸ் பூதங்கள்" உருவாக்கப்ட்டன என்று ஒரு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் "கிறிஸ் பூதங்கள்" இன் செயற்பாடுகள் மாற மாறவே மக்களிடத்தில் வேறுவகையான அச்சங்கள் உருவாகின. மக்களை உடல் ரீதியாக துன்புறுத்தும் அளவிற்கு "கிறிஸ் பூதம்" வளர்ந்துவிட்டபின்னர் தான் இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கிறது என்ற உண்மை மக்களுக்கு தெளிவுபட்டது. குருணாகல் தம்புள்ள உள்ளிட்ட பிரதேசங்களில் சில "கிறிஸ் பூதங்கள்" ஊர்மக்களால் கொலை செய்யப்ட்டன. பெண்கள் மட்டும் உள்ள வீடொன்றில் புகுந்த "கிறிஸ் மனிதர்" ஒருவர் அங்கிருந்த தாய் மற்றும் 3 பிள்ளைகளால் கத்தியால் குத்தி செய்யப்ட்டார். பூதத்தின் பிணத்தை எடுத்த பொலிஸார் வழக்குப்பதிவின்றி மறைத்துள்ளார்களாம். இப்படியான சம்பவங்களிற்கு பின்னர்தான் "யானைக்குட்டி இறந்த சம்பவத்துடன்" மக்கள் தொடர்புபடுத்தி யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார்ப்பகுதிகளில் மக்களிடையில் பேசப்படும் கதைகள் வித்தியாசமானது. மகிந்தவின் வியாதிக்கான ரத்தத்தை எடுப்பதற்காக தான் இந்'த பிசாசுகள் களமிறக்கப்ட்டுள்ளதாக இங்குள்ள மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்களை துன்புறுத்தியபடி இலக்கு முஸ்லீம் மக்களாகவே இருக்கிறது என்று கூறுகிறார்கள். முஸ்லிம் மக்கள் "பன்றி" இறைச்சி சாப்பிடுவதில்லை எனவே முஸ்லிம் பெண்களின் "இரத்தம்" தான் மாந்திரிகத்திற்கு நல்லது என்ற அடிப்படையில் தான் வன்முறை இடம்பெறுகிறது என்று நம்புகிறார்கள்.
மன்னார் பகுதியில் முஸ்லிம் பெண்களின் மார்பகங்கள் கிழிக்கப்ட்டதாக சில மக்கள் சொல்கிறார்கள்.
இவையனத்தும் மக்களின் கருத்துக்கள்.
இனி இதை அரசியல் ரீதியாக அணுகினால் காரணம் என்னவாக இருக்க கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்ற எனது கருத்துகளை பதிவு செய்கிறேன்.
***************************************************************************************
இந்த கிறிஸ் பூதத்தின் பின்னணியில் இருக்க கூடிய அரசியல் மற்றும் ராணுவ முக்கியத்துவம் குறித்து பலர் பேசிவிட்டதால் பேசப்படாத சில விடையங்களை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்.
சிறிலங்கா அரசைப்பொறுத்தவரை பலவகைப்பட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தவிர உள்நாட்டு அரசியல் நெருக்கடியும் கூடிக் கொண்டுவருகிறது. குடும்ப அரசியலால் ஆழும் கட்சிக்குள்ளும் சிங்கள மக்கள் மத்தியிலும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இறுக்கமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷ அரசால் சுரண்டப்படும் நாட்டின் வளங்கள் ஊழல்கள் குறித்த செய்திகள் மக்களிடையில் பரவ ஆரம்பித்திருக்கிறது. அரசு மீது அதிருப்தியடையும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களிற்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அரசை தக்க வைப்பதற்கும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அடக்கி வைப்பதற்கு அரசிற்கு தேவை ஏற்பட்டுள்ளது.
சிங்கள பிரதேசங்களில் ஆரம்பித்த இந்த வன்முறைக் குழு நாசுக்காக தமிழர் தாயகப்பகுதிக்கு பரவியிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் காலக்கெடு முடியவும்.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்போம் எனவும் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஒருவேளை அந்த நடவடிக்கை மக்களை ஒன்றுதிரட்டி சாத்வீக போராட்டமாக கூட்டமைப்பு நடவடிக்கையில் இறங்கும் திட்டமேதும் இருக்குமோ என்ற அச்சத்திலும் தமிழ் மக்களை குழப்புவதற்காக வீடுகளில் அடக்குவதற்குவதற்காகவும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவருவதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்று நம்புகிறேன்.
தவிர இராணுவம் சோர்வடைந்த நிலையில் அரசு மீது அதிருப்தி அடையும் நிலைக்கு தள்ளப்ட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இனவெறியூட்டப்பட் ராணுவத்தை தமிழ் மக்கள் மீது சீண்டிக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கலாம். தமிழ் மக்கள் மீதான சீண்டல்களை சிங்கள ராணுவம் எப்பொழும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அரசு மீதான சிந்தனைகளை நீக்கி தமிழ் மக்கள் மீதான வெறித்தனத்திற்கு ராணுவத்திற்கு வடிகாலிட்டு கொடித்திருக்கிறது அரசு.
ஆனால் அரசு நினைத்தளவை விட மக்கள் ஆக்கிரோசமாக மாறியிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் அரசியல் செய்த காலத்தில் மக்கள் இராணுவத்தின் காவலரண்களையும் ராணுவ கடைகளையும் எரித்திருந்தனர். ஆனால் இன்று எந்த பக்க பலமும் இன்றி மக்கள் வெறித்தனமாகியது அரசிற்கு நிட்சயமாக அதிர்ச்சியளித்திருக்கும். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப்பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ராணுவம் மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல்கள் பகிஸ்கரிப்புகளில் தமிழ் மக்களும் பெருமளவிலாக ஈடுபட்டதும் தமிழ் மக்கள் மீதான வன்முறையை கண்டித்து ராணுவம் மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல்கள் மற்றும் பகிஸ்கரிப்புகளில் முஸ்லீம் மக்கள் ஈடுபட்டதும் அரசிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இதன் காரணமாக தான் முஸ்லிம் அரச அதிகாரிகளை கொண்டு தமிழ் முஸ்லிம் மக்களிடையில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை முடக்கியிருந்தது. ஆனால் மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.
எது எப்படியிருப்பினும் மட்டக்களப்பில் இராணவ பதிவு ஆரம்பிக்கபட்டிருக்கிறது. இளைஞர்களை கண்காணிப்பதற்கான அரச முகவர்கள் விரிவாக்கப்ட்டுள்ளனர். இருந்தும் ராணுவம் மற்றும் பொலிஸ் மீது மக்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது சிங்கள அரசிற்கு மேலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ராணுவத்தினூடாக சிங்கள அரசு செய்துவரும் இந்த வெறித்தனத்தை வெளிக் கொணர அனைவரும் செயற்பட வேண்டும்.
வீடுகளில் ஆண்களற்ற குடும்பங்களிற்கு சென்று பெண்களோடு சீண்டும் வன்முறையில் ஈடுபடும் வெறிபிடித்த சிங்கள இராணுவம்தான் இந்த பிசாசுகள் என்பதை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். சிங்கள அரசின் இந்த ரத்த வேட்டைநாய்களை உலக அளவில் காட்டி சிங்கள அரசின் கொரூர முகத்தை வெளிக்காட்ட வேண்டும். அதற்கு இங்குள்ள மக்களை தொடர்பு கொண்டு கருத்துகளை பதிவு செய்து பதிவுகளை எழுதுங்கள்.
குறிப்பு: பாதிக்கப்ட்ட மக்களின் மனநிலையை புரியாமல் அவர்களின் கருத்துகளை அறியாமல் "துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்" என்று கதையெழுதி விடுதலை்பபோராட்ட தலைவரை கேவலப்படுத்திய யோ.கர்ணன் சொன்னார் அது சமூக விரோதிகள் மட்டும் தான் என்று என்பது போன்றானசாட்சியங்களை (!!!!) வைத்து கட்டுரைகள் எழுதாதீர்கள். எட்டாம்கட்டை கோட்டைகட்டி அம்பலப்பெருமாள் பிரதேசங்களில் பூநகரி நாச்சிக்குடா முழங்காவில் போன்ற பிரதேசங்களில் ராணுவம் செய்துவரும் அட்டூழியம் இந்த யோ.கர்ணன்களுக்கு தெரியப்போவதில்லை. மல்லாவி உள்ளிட்ட பிரதேசங்களில் ராணுவத்தால் மக்கள்படும் துன்பங்கள் இந்த யோ.கர்ணன்களுக்கு தெரியப்போவதில்லை. ஷோபாசக்தி குழுமத்தினால் தனது கதைகள் புத்தகமடிக்கப்பட வேண்டும் என்பதற்காக கலையரசனும் யோ.கர்ணனும் பிதற்றும் அளவை சகிக்க முடியாமல் இருக்கிறது. மக்களின் மனநிலையை அறிவதற்கு எந்த முயற்சியும் இவர்கள் எடுப்பதாக தெரியவில்லை. இங்குள்ள மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு கலையரசன் யோ.கர்ணன் சொன்னதை கேட்பாராம்.. சனங்களின் சாட்சியாக யோ.கர்ணன் கதையெழுதி புத்தகமடிப்பாராம்..
ஆதி
22-08-2011

No comments:
Post a Comment