Powered by Blogger.

Tuesday, October 16, 2012

வலி தெரியாமல் அழிக்கப்படும் தமிழ் இனம்

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டுவதற்கான இந்தியாவின் திட்டங்கள் திரை மறைவில் மிக விரைவாக நடந்தேறியிருப்பதாகவே தெரிகிறது... இதை சும்மா விட்டால் அப்துல் கலாம் வந்து திறக்கும் பொழுது எல்லோரும் "ஆ..." என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்துல் கலாமின் ஆலோசனையில் ஏங்கனவே பெளத்த பாடசாலை ஆரம்பிக்கபட்டு சிங்கள கலாச்சார உடையில் தமிழ்ச்சிறுவர்களுக்கு "சிங்கள பெளத்தம்"

கற்பிக்கப்படுகிறது. (சிங்கள பெளத்தத்தின் அடிப்படையே திரிக்கப்பட்ட அரசியல் கதைகள் தான்).

யாழில் சிங்கள பெளத்த கலாச்சார மண்டபத்தை கட்டும் இந்தியா அம்பாந்தோட்டையில் "தமிழ் இந்து கலாச்சார" மண்டபத்தையும் பேருவளையில் "தமிழ் இஸ்லாம் கலாச்சார" மண்டபத்தையும் கண்டியில் "தமிழ் கிரிஸ்தவ" கலாச்சார மண்டபத்தையும் இதே பிரமாண்டத்துடன் கட்டுமா??

திரை மறைவில் செய்வது ஒன்று... த.தே.கூட்டமைப்பை கூப்பிட்டு சொல்வது ஒன்று.. புலனாய்வுப்பிரிவினரை வைத்து கதைகள் அவிழ்த்துவிடுவது இன்னொன்றுமென இந்திய காட்டேறி அரசு தமிழினத்தின் இருப்பை தமிழீழத்தில் இல்லாது செய்வதற்கான பல வழிகளை திறந்துவிட்டிருக்கிறது.

தமிழனம் வித்தியாசமான அரசியல் போருக்குள் சிக்குண்டுகிடக்கிறது. வலி தெரியாமல் தமிழினம் கூறுபோட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர் இளையோர்களே!!! இன்று உண்மையாக செயற்படும் தமிழர் அமைப்புகளே!!!!

எப்படிக் கையாளப்போகிறீர்கள். இவற்றை இங்கிருந்து கொண்டு கையாள முடியாது. காணிப்பறிப்பிற்கெதிராக வன்னயில் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.. யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கிறது!!! மட்டக்களப்பில் அத்துமீறல்கள் நடக்கிறது.. திருகோணமலை அமைதியாக இருக்கிறது.... இது தான் நிலை. அச்சம் சூழ்ந்து கிடக்கிறது. வலி தெரியாமல் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படியான நிகழ்வுகளை விரைவாக ஆவணப்படுத்தி சர்வதேசப்படுத்துங்கள். பிரச்சினைகளை ஆறவிடாதீர்கள்.

ஆதி


16-10-2012

Saturday, September 22, 2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஞாபகப்படுத்துகிறோம்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் தமிழ் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை த.தே.கூ ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம்.

யாரும் எமக்கு பிச்சை போடத்தேவையில்லை..  உலக அரங்கில் எல்லோருக்குமான நீதியை எமக்கு தந்தால் போதும். சிங்களனுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டம் போதிக்கும் இந்திய வல்லூறுகளுக்கு கூட்டமைப்பு இனியும் தீனிபோட்டால் சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பை தமிழ் மக்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் தீவிர வேலைகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டிவரும்.

அய்.நா மன்றம் பக்கச்சார்பாக செயற்றபடுகிறது என்பதையும்... அய்.நா மன்றத்தின் சட்டதிட்டத்திற்கமைய தமிழ் மக்களின் இறையாண்மை நிலத்தை பிரித்து தர வேண்டும் என்பதை த.தே.கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். மாறாக தேசிய அரசியல் என்றும் சந்தர்ப்பவாத அரசியல் பற்றியோ அடிபணிவு அரசியலையோ தமிழ் மக்கள் மேல் திணிக்கும் வேலையை சம்மந்தன் அவர்கள் செய்ய கூடாது.

அமெரிக்க கோபுர தகர்ப்பிற்கு பின்னரான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இறையாண்மையை கருத்தில் கொண்டு மக்களின் விடுதலை விருப்பை ஏற்று நாடுகள் உருவாகியிருக்கின்றன. தவிர இன்று அரசியல் சமநிலை மற்றும் மக்களின் கொந்தளிப்பு நிலை உலகில் பெரும் மாற்றத்தை கண்டிருக்கிறது.

தமிழ்மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு சொல்வதும் அதன்பால் அரசியலை செய்வதும் தான் கூட்டமைப்பினது கடமை. தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச சட்டத்தின் ஊடாக எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பதில்தான் கூட்டமைப்பு முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டுமே தவிர இந்திய ஊழல் வல்லூறுகளின் நலனிற்கேற்ப தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிக்க  கூட்டமைப்பு மக்கள் அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் சம்மந்தன் அய்யா அவர்களே!!.

அடிபணிவு அரசியலையும் பிராந்திய வல்லாதிக்கங்களின் திணிப்பு அரசியலையும் த.தே.கூட்டமைப்பு செய்யுமானால் தமிழ் மக்கள் தமக்கு தேவையானதை வேறுவழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை கடந்தகால வரலாறுகளை வைத்து கூட்டமைப்பு அறிந்து கொள்ள வேண்டும்.


சாத்தியப்படாத ஒன்றையோ, உலக நீதியில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றையோ தமிழீழ மக்கள் கேட்கவில்லை என்பதை த.தே.கூட்டமைப்பு தெளிவுபடுத்தி தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு.
இநத்தியா என்பது சாக்கடை. தமது சொந்த மக்கள் மீது அக்கறையற்று மக்களின் பணங்களை சுரண்டி அதை வெளிநாடுகளில் வைப்பில் இட்டிருப்பவர்களும்... ஊழல் செய்து பெருத்துப் போய் இருப்பவர்களும்தான் இந்திய அரசியல். இந்த வல்லூறுகளுக்கு தமிழீழ மக்களுக்கு எது வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை கிடையாது. அது தேவையும் இல்லை.

சட்டத்தின்பால் பிரிந்து சென்று தனி அரசு அமைக்கும் உரிமை நூற்றாண்டு வரலாறுகளை கொண்ட தமிழீழ மக்களுக்கு இருக்கிறது.
இதன் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு சர்வதேச அரசியல் செய்ய வேண்டும். மாறாக மகிந்தருடன் தேசிய அரசியல் அமைப்பது.. இந்தியா சொல்லுது என்பதற்காக ஊப்புச் சப்பற்ற அதிகாரங்களுக்காக கதிரைகளை பெறுவது..  போன்ற சிந்தனைகளை தவிர்த்து கொள்ளுதல் தமிழ் மக்களின் அரசியலுக்கு ஆரோக்கிறமாக இருக்கும்.


ஆதி
23-9-12

தியாக தீபம் அண்ணன் லெப்.கேணல் திலீபன் # மீண்டும் மீண்டும் கற்பிக்கும் பாடங்கள்.


25 வருடங்களுக்கு முன், தமிழீழ போராட்டம் ஆயதப் போராட்டமாக முழு மூச்சாக தீவிரப்படுத்துவதற்கு முன்னர்  அகிம்சை தேசம் என்று எழுத்துவடிவில் இருக்கும் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ மக்களின் விடுதலைக்காக மிகப்பெரிய அகிம்சைப் போராட்டத்தை தமிழ் மக்கள் முன்னிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் நடாத்தியிருந்தனர்.

ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் தமிழீழ மக்களின் விடுதலைக்காக வீதியில் தவம் கிடந்தான் அண்ணன் திலீபன். குழந்தைகள் முதல் முதியவர் வரை அவனது இந்த உச்ச கட்ட போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தியிலும் தனது இலட்சியத்தில் இருந்து இம்மியளவும் விலகாது தமிழீழ மக்களின் கண்முன்னாலேயே தனது உயிரை சொட்டு சொட்டாக மாய்த்துக் கொண்டான்.

சாத்வீக போராட்டங்களால் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் போராடி தோற்றுப்போன தமிழீழ மக்களுக்கு ஆயுதப்போராட்டத்தைத் தவிர வேறெந்த தெரிவும் இருந்திருக்கவில்லை. எல்லைகளை மீட்க இளைஞர் யுவதிகள் ஆயுதங்களுடன் களத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை காலம் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது.

விரும்பியோ விரும்பாமலோ ஆயுதங்களை ஏந்தி தமிழின விடுதலைக்காக போராடிய அமைப்புகள் நாளடைவில் தமது சொந்த நலனை பாதுகாப்பதற்கே அந்த ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த நேரத்தில்தான் தமிழீழ மக்களின் தெரிவு "தமிழீழ விடுதலைப் புலிகள்" ஆக தோற்றம் பெறுகிறது. ஆரம்ப காலங்களில் உருவான அனைத்து இயக்கங்களையும் புறந்தள்ளிவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை பொத்தி பொத்தி பாதுகாக்க ஆரம்பித்தனர் தமிழீழ மக்கள். அதற்கான காரணங்கள் இவை தான்.

மற்றைய இயக்க தலைவர்களை தமது கட்டுப்பாட்டில் பொம்மையாக மாற்றி வைத்திருந்த இந்திய வல்லாதிக்கத்திற்கு தமிழீழ தேசிய தலைவர் மே.த.கு வே.பிரபாகரன் அவர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. அவரது இலக்கும் பயணமும் முழு வீச்சுடன் தமிழீழம் நோக்கியதாகவே இருந்தது. இதனால் எப்படியாவது விடுதலைப்புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்திய காட்டுமிராண்டி இராணுவத்தை தமிழீழத்திற்குள் நுழைத்திருந்தார் ராஜீவ்காந்தி.

தமிழீழ மக்களுக்கு ஆரம்ப காலங்களில் இந்தியா மீது நம்பிக்கையும் மதிப்பும் அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் நம்பிக்கையுடன் விளையாடக் கூடாது என்பதற்காக மக்கள் முன்னிலையிலேயே தமது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தனர் புலிகள். இந்திய காட்டுிராண்டி இராணுவத்தின் நோக்கத்தை விடுதலைப்புலிகள் அனுமானித்திருந்தாலும் மக்களின் நம்பிக்கைகாக தமது ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். ஆனால் சிறுது காலத்திலேயே ராஜீவ்காந்தியின் உத்தரவுக்கமைய இந்திய காட்டுமிராண்டி இராணுவம் தனது வேலை தொடங்கியது.

அமெரிக்க ராணுவம் "பிலிப்பைன்ஸ்" நாட்டை  எப்படி, ஏன் சீரழித்ததோ அதே நோக்கத்திலேய (பிறிதொரு பதிவில் இதுபற்றி ஒப்பிடுவோம்) இந்திய ராணுவம் தமிழீழ மக்கள் நிலத்தில் இறக்கபட்டிருந்த உண்மை அனைவருக்கும் புரிந்தது. இதனால் தமிழீழ மக்களுக்கு "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற தமது அமைப்பு ஆயுதம் ஏந்தியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.  ஆனாலும் விடுதலைப்புலிகள் அனை நிதானமாகவே கையாண்டிருந்தனர்.

இந்தியா பிரித்தானிய அரசிற்கெதிராக தான் எப்படி விடுதலை அடைந்ததாக சொல்கிறோ அதே வழியில் இந்திய வல்லாதிக்கத்திடம் இருந்து விடுதலைபெற புலிகள் தீர்மானிக்கின்றனர். ஆனால் அண்ணன் திலீபன் தியாக அகிம்சைப் போராட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிடும் முடிவை எடுக்கிறான்.

உலக வரலாற்றில்  இன விடுதலைக்காக நீராகாரம் எதுவுமின்றி அகிம்சைப் போராட்டம் நடாத்திய மக்கள் தமிழீழ மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அகிம்சையால் விடுதலையடைந்ததாக பீற்றிக் கொள்ளும் இந்திய வல்லாதிக்கம் நீராகாரம் இன்றி அகிம்சைப்போராட்டம் நடாத்தி அணுவணுவாக உயிரை மாய்த்துக் கொண்ட தமிழீழ மக்களின் தியாக தீபம் அண்ணன் திலீபனின் குரலை செவிமடுக்கவில்லை. மாறாக தான் தமிழீழத்திற்குள் நுழைந்த நோக்கத்தை செயற்படுத்துவதிலேயே குறியாக இருந்தது.

இந்த நிலையில்தான் தமிழீழ மக்கள் இந்திய வல்லாதிக்கப்படையை சிதைத்தழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றர். சாத்தவீக போராட்டம், அகிம்சைப் போராட்டம் தோற்றுப்போன நிலையில் தமிழீழ மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மூச்சாக செயற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு காலம் தள்ளுகிறது.

தமிழீழ மக்களின் இன இருப்பையும் கலாச்சார விழுமியங்களையும் சிதைத்து ஒரு இனக் கலப்பையும் இன அழிப்பையும் உருவாக்க வந்த இந்திய பிசாசுகள் மீது முழுவீச்சான போராட்த்தை ஆயுதப்போராட்டமாக மாற்றியிருந்தனர் தமிழீழ மக்கள்.

தமிழீழ மண்ணில் கோரதாண்டவம் ஆடிய இந்திய பிசாசுகளை வேட்டையாடியதோடு இல்லாமல் அதை எய்தவனையும் பலி எடுத்தனர் தமிழீழ மக்கள்.

காந்தியம் என்பது ஒரு போலி என்பதையும் அகிம்சைவழி போராட்டங்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு ஒரு பொருட்டல்ல என்பதையும் தமிழீழ மக்கள் 25 வருடங்களுக்கு முன்னரே உலகத்திற்கு தெரியப்படுத்தினர்.

இந்திய விசுவாசிகளே!!!!

இந்தியா என்பது அகிம்சையால் விடுதலைபெற்றது என்றால் திலீபனை என் இந்தியா சாகடித்தது?? இந்திய அரசிற்கெதிராய் அண்ணன் திலீபன் செய்த வன்முறையென்ன??
சுபாஸ்சந்திரபோஸ் ஆயுதத்தோடு போராடியும் காந்தியின் போராட்டத்திற்கு பிரித்தானியா மதிப்பளித்து வெளியேறிது என்று நம்பும் நீங்கள் 25 வருடத்திற்கு முன்பு இந்தியாவிற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடாத்திய திலீபனை இந்தியா சாகடித்ததை எப்படி கருதுகிறீர்கள்!!!

தமிழ்நாட்டில் இன்னமும் வெறித்தனமாக இந்தியத்தை நம்பும் சகோதர்களே!!!

25 வருடத்திற்கு முன்பு இந்திய அரசிற்கு எதிராக எந்த வன்முறையிலும் இறங்கியிருக்காத மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஒரு போராளியின் அகிம்சைப் போராட்டத்தை அணுவணுவாக ரசித்து சாகடித்தது காந்தியின் இந்திய தேசம் என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.

மக்களின் விடுதலை என்ற பெயரில் இறங்கி தமிழீழ மக்கள் மீது பாலியல் தாக்குதல்கள், கடத்தி கொலை செய்தல், வீதிகளில் சுட்டுக் கொல்லுதல், என பெரும் இன அழிப்பிற்காக கோரதாண்டவம் ஆடிய இந்திய வல்லாதிக்க பிசாசுகள் தான் உங்கள் ராணுவம் என்பதை ஞாகம் வைத்திருங்கள்.

ராஜீவ்காந்தி அன்றே பலியெடுக்கபடாமல் இருந்திருந்தால் 18 வருடங்கள் கழித்து தமிழீழ மக்களில் யாராவது ராஜீவ்காந்தியை பலி எடுத்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. ராஜீவ்காந்தி உலகில் இருந்து அகற்றப்பட வேண்டிய அசுரன்.

இந்தியா என்ற அராஜக நாடு மக்களின் அகிம்சைப் போராட்டங்களுக்கு எதிரான ஒன்று என்பதை 25 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ மக்கள் உலகிற்கு நிரூபித்து காட்டியிருந்தார்கள். ஆனாலும் அப்பாவி ஹிந்திய கோசக்காரர்கள் அதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை இருந்தாலும் 25 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் மக்களின் அகிம்சை போராட்டத்தை திலீபனின் இதே நாட்களில் அராஜக கரம் கொண்டு நசுக்கியிருக்கிறது இந்திய வல்லாதிக்கம்.

கூடம்குள அணு உலைக்கு எதிரான மக்களின் அகிம்சைப் போராட்டத்தின் மீது அதிகாரவெறித் தாக்குதல்களை நடாத்தி மக்களின் கோரிக்கைகளை சிறைவைத்துவிட்டு தனது வழமையான அராஜக பணிகளை இந்திய வல்லாதிக்க அரசு நிழ்த்திவருகிறது. அதே இந்திய காட்டுமிராண்டி அரசியல்வாதிகளும் இராணுவமும் காவல் துறையும் மக்களின் அகிம்சை போராட்டத்தை கேலி செய்வதோடு காறி உமிழ்ந்திருக்கிறார்கள். இந்த அவமானத்தை தமிழக மக்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது எதிர்வரும் காலத்திற்கு தான் தெரியும்.

எது எப்படி இருப்பினும்,
காந்தியம் என்ற போலி அகிம்சை முகமூடி தரிந்த ,இந்தியம் என்ற மனித குலத்திற்கு எதிரான தேசத்தின் உண்மை முகம் பற்பல சந்தர்ப்பங்களில் வெளிப்படிருந்தாலும் இதே நாட்களில் 25 வருடங்கள் கழித்து தமிழ்மக்களின் அகிம்சைப்போராட்டம் ஒன்று இந்திய அராஜக சக்திகளால் நசுக்கப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பதிவாகிறது.. காரணம் தமிழகத்தில் இன்னமும் போலிகளை நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகம் என்பதே தான்.
போலி ஹிந்தியத்தை உடைத்தெறிந்து தன்னலமிக்க இனமாக தமிழக மக்கள் திரள வேண்டும்.

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டம் தொடரும்... சாத்வீக போராட்டம் தோற்கடிப்பட்ட பின் அகிம்சை போராட்டமாக மாற்றம் எடுத்தது... அகிம்சைப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் ஆயுதப் போராட்டமாக பரினாமம் அடைந்தது... ஆயுதப்போராட்டத்தை சூழ்ச்சிகளால் அழித்திருந்தாலும் ஆயுதப்போராட்டம் அதிபயங்கர ஆயுதப்போராட்டமாகவோ... அதிபயங்கர தமிழீழ விடுதலைப்போராட்டமாகவோ மாற்றமெறடுக்கும்... இதை காலம் உருவாக்கும் என்பதே புரட்சிகளின் வரலாறு.

அண்ணன் திலீபன் மேல் சத்தியம் செய்வோம்.. "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

ஆதி
22-09-12

Wednesday, August 22, 2012

கவின் மலர் அந்தோனியின் இன்னொரு லீனாமணிமேகலை

"கவின்மலருடன் பழகினாலும் நாங்கள் அவதானமாகதான் இருக்கிறோம்" என்று தமிழ்நாட்டை சேர்ந்த சில எழுத்தாளர்கள் சொன்ன பிறகே எழுதி வைத்திருந்த இந்த பதிவை வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.


தமிழ்நாடு என்பது சிறிலங்காவை விட பெரியதும் தமிழீழத்தைவிட எத்தனையோ மடங்கு பெரியதும் கூட. இந்த பெரும் நிலப்பரப்பிற்குள் ஆயிரம் சாதிகள்.. சாதிக் கட்சிகள்.. இதுவரை அறிந்திராத பிரிவினைகள் வகுப்புகள்... தமிழ்நாட்டின் உள் சித்தார்ந்தம் தெரியாததால் அங்கு நடக்கும் அநியாயங்களை போக்கை கண்டுபிடிப்பது சிரமம். தெரியாத ஒன்றை விமர்சனத்திற்குள்ளாக்குவதும் ஆபத்து என்ற காரணத்தால் இதுவரை தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களிற்கு பெரியளவில் முன்னிநிலைப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இருப்பினும்.. இன்று தமிழ்நாடு "நாம் தமிழர்கள்" என்ற உத்வேகத்தோடு புரட்சிக்கு வெடித்தெழும் நிலை எல்லா மட்டங்களிலும் ஊடறுத்து பரவுவதாகவே தெரிகிறது. இந்த நிலையில் தமிழர் இன இருப்பிற்கு எதிராக தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒட்டியிருக்கும் இந்திய ஏஜன்டுகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் எழுந்துள்ளது.

எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்குள் ஒட்டியபடி ஈழ ஆதரவு சக்திகளுக்குள் ஊடுருவி ஈழவிடுதலைப் போராட்டத்த சக்திகளுக்குள் பிழவுகளை ஏற்படுத்த அல்ல ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஈகப்பிறவிகளை எங்களால் இலகுவாக இனம் காட்ட முடியும்.

இது முற்று முழுதாக கவின்மலர் என்ற ஈனப்பிறவியை இனம் காட்டுவதற்காக எழுதும் பதிவே!!


லீனாமணிமேகலை என்ற ஷோபாசக்தியின் ஊதுகுழுல் பற்றி ஏற்கனவே நிறைய பதிவுகள் வெளியாகிவிட்டன. இலக்கிய மட்டத்தில் கவருவதற்கு ஒன்றும் தனிப்பட்ட முறையில் வசதி கொள்ள இன்னொன்றுமாய் செய்து பிழைப்பு நடத்தும் லீனாமணிமேகலையின் முகமூடி கிழிக்கபட்டுவிட்டது. பெண்ணியம் என்று நிமிடத்திற்கு நிமிடம் பேசும் இவர் "ஈழத்து தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்படுவதை ஒரு வன்முறையாக பார்க்காமல் உளவியல் ரீதியாக அணுக வேண்டும்" என்று சொன்ன கறுப்பி நவா என்ற அவரின் நண்பரின் கருத்தை ஏற்றுக் கொண்டவர்.மிக மோசமான ஆபாச கவிதைகளை எழுதும் இவர் உண்மையில் பெண்ணியவாதியா என்பதும்.. இவருடைய தனிப்பட்ட வாழ்விலும் எப்படிப்பட்ட கேவலமானவர் எனவும் தமிழக இலக்கிய மட்டம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது என்று தெரியும்.



இந்த வரிசையில் இருந்த ஷோபாசக்தியின் மற்றொரு ஊதுகுழலான கவின்மலரின் உண்மை முகமும் ஒவ்வொரு சம்பவங்களிலும் கிழிந்து கிழிந்து இன்று முற்றாக கிழிக்பட்டுவிட்டது.. அல்லது எஞ்சியிருக்கும் முகமூடியின் மிச்சத்தையும் முழுமையாக கிழித்தெறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவரும் பெண்ணியம் ஆணாதிக்கம் குறித்து அதிகளவில் பேசுபவர். ஆனால் இவரது உயிர் நட்புகளை பார்த்தீர்களேயானால் ஈழத்தை சேர்ந்த ஷோபாசக்தி உள்ளிட்ட சிலர். இவர்கள் யார்!!!
ஷோபாசக்தி என்பவர் எந்த வயிதிலான பெண்களையும் விட்டுவைத்ததில்லை. திருமணமான திருமணமாகி கணவரை பிரிந்த இப்படி பல பெண்களோடு பழகி அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த (சிலர் தாமாகவே போனதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்) ஒரு அயோக்கிய ராஸ்கல். இதே போன்ற ஒரு பேர்வழிகள் தான் மற்றையவர்களும்.
ஆணாதிக்கம் என புலம்பும் கவின்மலர் பெண்களை சீரழித்தவர்களின் நட்பாயும் அவர்களின் ஊதுகுழலாயும் இருப்பது அவர்பற்றிய சந்தேகத்திற்கு முதலாவது காரணம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கெதிராக பல வகையான ஒட்டுக் குழுக்கள் பணத்தை கொடுத்து களம் இறக்கட்டுள்ளன. இதே போல் தமிழ்நாட்டிலும் எழுச்சிகளை தடுக்கவும் எழுச்சிகளை உருவாக்க கூடிய தரப்புக்களிற்குள் குழப்பற்களை உருவாக்குவதற்கும் என பலர் இந்திய புலனாய்வு அமைப்புகளாலும் களம் இறக்கபட்டுள்ளன.

எழுத்தாளர் குழுமங்கள் சமூக செயற்பாட்டாளர் குழுமங்கள் என மக்களுடன் சம்மந்தப்பட்ட பல குழுமங்களுக்குள் கவின்மலர் போன்ற பணத்திற்காகவோ பிழைப்பிற்காகவோ வேலை செய்யக் கூடிய புல்லுருவிகள் களம் இறக்கட்டுள்ளன.

இவர் போன்றவர்களால் புரட்சிகளை தடுக்க முடியாது என்ற போதும், ஒன்றுபட்ட இலட்சியத்திற்காய் போராடுபவர்களுக்கிடையில் பிழவுகளை ஏற்படுத்துவது.. அதனூடாக அவர்களின் திட்டங்களை கண்டறித்து புலனாய்வு அமைப்புகளிற்கு தெரியப்படுத்துவது போன்றவையே இவர்களின் செயற்பாடுகள்.

தன்னை பெரும் சமூக செயற்பாட்டாளராக காட்டிற்க கொள்வதற்கு பல வகையான உத்திகளை கவின்மலர் மேற்கொண்டுவருவது நீங்கள் அறிந்திருப்பீர்கள். வீதிகளில் விழிப்புணர்வு செய்வது போன்று.. மேம்பாட்டு திட்டங்களில் பங்குகொள்வது போன்றதான புகைப்படங்களை பக்காவக பிரசுரித்து தன்மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்வதற்கு அவர் பல வழிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு விடையத்தில் இவர் நடந்து கொண்ட விதத்தை ஞாபகப்படுத்தி பாருங்கள்.. முல்லைப்பெரியாறு அணை விடையத்தில் கேரளாவில் இருந்து தமிழர்கள் துரத்தப்படுவதற்கு எதிராக தமிழகத்தில் இளைஞர்கள் திரண்டனர். மலையாளிகளை துரத்த வேண்டும் என்ற ஆக்குரோத்தில் அவர்கள் ஈடுபட்டதை கவின் மலர் "காட்டுமிராண்டித் தனம்" என்று சொன்னதோடு அதை மிகப்பெரிய வன்முறையாக எழுதினார் அதற்கு ஒத்து ஊதுவதற்கு ஒரு 100 பேர் கூடினார்கள்.. ஆனால் கேரளாவில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யபட்ட போது எந்த எதிர்பபையுமோ அல்லது அதற்கு எதிரான கோசங்களையோ கவின் மலர் கூவவில்லை. அவர் அதை செய்ய முடியாத அளவிற்கு செயற்பாட்டளவில் கட்டுப்படுத்தபட்டிருக்கிறார் என்பதே உண்மை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 3 அப்பாவிகளை இவர் "இவர்கள் கொலையாளிகள் தான் ஆனால் 20 வருடங்களின் பின் மரண தண்டனை பெரும் தண்டனை" என்ற தொனிப்பொருளில் ஷோபாசக்தி கொன்னதை ஆதரித்ததோடு அதை பகிர்ந்து ம் இருந்தார். இந்த பிரச்சினையில் தமிழகமே உணர்ச்சி பொங்க எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் உண்ணாவிரதங்களிலும் ஈடுபட்டிருந்த நேரம்.. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இவர் ஒரு பதிவு எழுதி பிரச்சினைக்குள்ளாகியவர் என்று கேள்ளிப்பட்டேன்.

இப்படி கவின் மலர் யார் என்பது பல சந்தர்பங்களில் சாதுவாக வெளியாகியிருக்கிறது.

******************************************

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலத்திலேயே மண்கடத்தல், பெண்களுடனான பிரச்சினைகள், மற்றும் மாற்று இயக்க பரப்புரைகளை விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் செய்தல் என ஈடுபட்ட ஷோபாசக்தியில் புலிகளுக்கு சந்தேகம் வரவே அவர் இங்கிருந்து தப்பி வெளிநாட்டிற்கு ஓடியவர். வேறொரு அமைப்பின் புல்லுருவியாக இணைந்து, தான் இணைக்கட்டிருந்த அணிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி சமனிநிலையை குழப்புவதே ஷோபாசக்தியின் நோக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட புல்லுருவி இன்று தனது முகவரியாக "முந்நாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்" என்று போடுவதன் உள்நோக்கமும் அதை கவின்மலர் தூக்கிப்படித்தபடி தமிழகம் எங்கும் அலையும் நோக்கமும் அனைவருக்கும் இலகுவாக விளங்கும்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தப்பியோடிய காலத்தில் இருந்தே சிங்கள அரச ஒட்டுக்குழுக்களுடன் நேரடி வழிகாட்டலில் இயங்கிவருபவர் ஷோபாசக்தி. குறிப்பாக முஸ்லீம் ஜிகாத் அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பவர். தமிழமெங்கும் முஸ்லீம் ஜிகாத் அமைப்புகள் செய்த படுகொலைகளை மறைத்து முஸ்லீம்கள் வெளியேற்றபட்டதையும் காத்தான் குடிபடுகொலையையும் இவர் பல மட்டங்களில் பரப்புரை செய்துவந்துள்ளார் (இந்த பரப்புரையை யார் கணக்கிலெடுத்தார் என்பதற்கப்பால் இவர் யார் என்பதை சொல்ல வேண்டி தேவை இருக்கிறது)
இதே போல் தான் கவின் மலரும்... இந்துத்துவாதத்தை எதிர்ததல் எனும் பெயரில் பல இடங்களில் முஸ்லீம் ஜிகாத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்.
இந்துக்களிடையில் சாதிகள் அதிகம் என்று தொனிப்பட இவர் ஒரு இடத்தில் கருத்துப் பதிவு செய்திருந்தார் ஆனால் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கும் சாதியை பற்றி ஏற்றத்தாள்வுகளை பற்றி வாய்திறக்கவே இல்லை.

நான் மதங்களை ஆதரிப்பவன் அல்ல ஆனால் ஒரு மத்ததை எதிர்தத்தல் டஎனும் பெயரில் இன்னொரு மதத்தை ஆதரிக்க முடியாது. (சிறிலங்காவில் கரையோர முஸ்லீம், கண்டி முஸ்லீம், காத்தாங்குடி முஸ்லீம், அம்பாறை முஸ்லீம், படித்த முஸ்லீம், படிக்காத முஸ்லீம், என பல தரப்பட்ட ஏற்றத்தாள்வுகள் அவர்களுக்கிடையில் இருக்கிறது என்பது வேறு விடையம்)

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களால் சோடிக்கட்டு மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் 3 அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற சொல்லி இயலா கட்டத்தில் தன்னை ஆகுதியாக்கினாள் தியாகி செங்கொடி. அவளை இன்று தமிழனம் புலிக் கொடி போர்த்தி வணங்கி வருகிறது.
இப்படிப்பட பெண் தியாகியை "யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவள் இருளர் பெண்தான்" என்று ஆதிக்க சாதி வெறிச் கூச்சல் போட்டிருக்கிறார் கவின்மலர்.
தான் இன்ன சாதி என்று தனது அடையாளமாக போட மறைத்தபடி செங்கொடியை இந்த சாதிப் பெண் என்று தனிமைப்படுத்தும் முயற்சியில் கவின்மலர் வெறித்தனமாக ஈடுபட்டதன் நோக்கம் ஏன் என்பது வெளிப்படை உண்மை.

முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளின் உயிர் வேள்விக்கு பின் தமிழகத்தில் அதிகளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஒரு ஆட்சியே தூக்கி வீசப்பட்டிருக்கிறது என்பதை தாண்டி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்திய அரசை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. அந்த வகையில் செங்கொடியின் மிகப்பெரிய உயிர்த்தியாகம் தமிழர்களிடையில் என்றுமில்லாத அளவு அரசை எதிர்க்கும் வைராக்கியத்தை தூண்டியிருக்கிறது. ( "இது போன்ற" தற்கொடைகளை நான் ஏற்கவில்லை ஆனாலும் இந்த தியாகத்தின் பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பேச வேண்டியதாக இருக்கிறது).இந்த நிலையில் செங்கொடியை வணங்கும் அல்லது செங்கொடியை ஒரு ஆயுதமாக ஏந்தியபடி தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும், போராடப் போகும் தமிழர்களிடத்தில் சாதிவாரியான பிரிவினையை ஏற்படுத்தி அவர்கிளின் பலத்தை சிதறடிக்க வேண்டிய தேவை இந்திய அரசின் புலனாய்வு ஏஜன்டுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை எந்த மட்டத்தில் இருந்து செயற்படுத்துவது என்பதையே கவின்மலர் போன்ற சில புல்லுருவிகள் செய்வதாகபடுகிறது.
காரணம் செங்கொடி தலைவர் பிரபாகரனையும் புலிக் கொடியையும் நெஞ்சினில் குத்தியபடி நடனம் ஆடியவள். தமிழீழ தேசிய தலைவரை மிக ஆழமாக நேசித்தவள் என்பது அவளை பற்றிய குறிப்பு ஒன்றில் படித்திருக்கிறேன். இப்படியிருக்க விடுதலைப்புலிகளை தாறுமாறாக விமர்சித்துவரும் கவின்மலர் செங்கொடி குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே தெரிகிறது. எது எப்படி இருப்பினும் கவின் மலரின் நோக்கம், ஒன்று திரழும், சாதியின்றி மதபேதமின்றி அடிமைத்தனமான மாற்றான் அரசியல் இன்றி  தமிழின உணர்வோடு சிறுக சிறுக ஒன்று திரண்டு கொண்டிருக்கும், ஒன்று திரட்டிக் கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளுக்கிடையில் குழப்பங்களையும் மக்களுக்கிடையில் குழப்பங்களையும் ஏற்படுத்துவதே.



இன்று உலக அளவில் தமிழனத்தின் பலத்தை அடக்குவதற்கு பல வழிகள் திறக்கப்ட்டுள்ளன. ஆட்பலம் பெரும் பணப்பலம் கொண்ட இனத்திற்கு ஒரு தனிநாடே இல்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக எப்படி பல புல்லுருவிகள் இறக்பட்டுள்ளனவோ அதே போல் தமிழக எழுச்சியை அடக்குவதற்கும்.. அதை வேவு பார்த்து குழப்புவதற்கும் இந்திய மற்றும் தமிழக புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் களம் இறக்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எழுத்தாளர் மட்டத்தில் ஒட்டியிருக்கும் கவின்மலர் போன்ற புல்லுருவிகளை அப்புறப்படுத்துங்கள்.



ஆதி
22-08-12

இந்த பதிவிற்கு பின் என்னை முகப்புத்தகத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு கவின்மலரே அல்லது அவரை சார்ந்த புல்லுருவிக் கூட்டங்களோ முனையலாம். எப்படி இருப்பினும் முகப்புத்தகத்தில் நான் பதிவு செய்தவையின் Backup எடுத்து வைத்திருக்கிறேன் . பதிவுகளை எனது வலைப்பதிவிலும் பார்க்கலாம்.

Sunday, June 24, 2012

நாம்தமிழர் கட்சி ஆவணமும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு போடப்பட்டிருக்கும் சுருக்கும்


முகநூல் மற்றும் இணைய தளங்களில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் பற்றிய பல விமர்சனங்களும் ஆய்வுகளும் கருத்துரையாடல்களும் விதண்டாவாத வியாக்கியானங்களும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
 தமிழீழ போராட்ட வலிகளினது ஆழம் தெரியாமல் ஈழ ஆதரவு அல்லது நடுநிலை என்ற பெயரில் அல்பத்தனமான விமர்சனங்களை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் "நாம் தமிழர்" கட்சி குறித்தும் தமிழீழ மக்கள் ஏன் அவதானமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை நியாயமான முறையில் வைக்காமல் வெறுமனே தமிழீழ கொடியில் இருக்கும் புலியை தமது கொடியில் பாவித்திருக்கிறார்கள், பெரியாரை குறை சொல்லி இருக்கிறார்கள், தமிழீழ கருத்துகளை தமது ஆவணத்தில் உள்ளடக்கி தமிழ் நாட்டு அதிகார அரசியல் நோக்கி நகருகிறார்கள் என்ற ஆதங்க வெளிப்பாடுகளை மட்டுமே சொல்லியிருக்கிறார்களே தவிர ஆவணம் எந்த விதத்தில் போராட்டத்தை நசுக்க போகிறது என்று பேசவில்லை.
 கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தப்பி ஓடி சிங்கள துணைராணுவ குழுவாக உருவெடுத்து "தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்" என்ற கட்சியை ஆரம்பித்தது. அதன் கொடிக்கும் தமிழழீழ தேசிய கொடியில் இருக்கும் புலியையே பாவித்தது. அப்போது விடுதலைப்புலிகளின் தலமைச் செயலகம் அது பற்றி ஆட்சேபனை தெரிவிக்காது கணக்கில் எடுக்காமல் இருந்தது. காரணம் தமழீழ மக்கள் தெளிவான போராட்ட அரசியலில் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விடையம் அப்படியிருக்கையில் தேவையில்லாத விடையங்களிற்கு விளங்கங்கள் சொல்ல தேவையில்லை என்ற படியால்.

அப்படியிருக்கையில் "நாம் தமிழர்" கட்சிக் கொடியில் அதே புலியை பாவித்திருப்பது குறித்து நாங்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை.
 விடுதலைப்புலிகளை தடை செய்திருக்கும் பல மேற்குலக நாடுகளில் இன்று தமிழீழ தேசிய கொடியையும் தமிழீழ தேசிய தலைவரையும் அணைத்தபடி வீதிகளில் மக்கள் போராட்டங்கள் செய்கிறார்கள். அதை அந்தந்த அரசாங்கங்கள் தடைசெய்யவில்லை காரணம் தமிழீழ தேசிய கொடியும் தமிழீழம தேசிய தலைவரும் தமிழர்களின் அடையாளம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டு வருகிறது என்பதோடு தமிழீழம் தமிழர்களின் தாயகம் என்பதையும் ஏற்றுக் கொண்டு வருகிறது. அதை விரும்பியோ விரும்பாமலோ இந்திய வல்லரசும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு காலம் நெருக்கிக் கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழீழம் என்ற சொல்லோ மே..கு வே.பிரபாகரன் என்ற பெயரோ சட்டரீதியாக தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றாக இந்தியாவில் இல்லை என்ற நிலையும் உருவாகியிருக்கிறதென்றே சொல்லலாம்.
 இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் எப்படி தமிழீழ போராட்டத்திற்கு சுருக்குப் போடுகிறது என்று எண்ணுவீர்கள்.
 ஆவணத்தின் 115ம் பக்கத்தில் மாவீரர் நாள் அன்று மாவீரத் தெய்வங்களின் கல்லறை மீது தமிழ் மக்கள் உறுதி எடுக்கும் பாடலின் உறுதி மொழிகளை "நாம் தமிழர்" கட்சி தனது உறுப்பினர்களுக்கான உறுதி மொழியாக அறிவித்திருக்கிறது.
தமிழ் மக்களின் (தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் காவியமாகியிருக்கிறார்கள்) உணர்வுகளிற்கு மதிப்பளிக்காமல் தெய்வமாக மதித்துவரும் மாவீர்களின் கல்லறைமேல் குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட மணித்துளியில் சத்தியம் செய்யும் ஒரு புனிதமான தருணத்தில் பாவிக்கப்படும் உறுதிமொழிக்கு மதிப்பளிக்காமல் அரசியல் உறுதிமொழியாக அதை பரிந்துரை செய்திருப்பது கீழ்த்தரமான செயல் என்பதற்கப்பால் இந்த உறுதி மொழியை தமது அரசியல் ஆவணத்தில் இணைத்து இந்தியாவில் மிகப்பெரிய சூழ்ச்சிச் சுருக்கை "நாம் தமிழர்" கட்சி போராட்டத்திற்கெதிராய் அரங்கேற்றியிருக்கிறதா என்ற அச்சம் இன்று தமிழீழ மக்களிடையில் பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கு வைக்கோஅய்யாவையும் நெடுமாறன் அய்யாவையும் காரணம் காட்டி வந்த இந்திய அரசின் கபடத்தனத்தை சட்டரீதியாக வென்று விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான முழுவீச்சான செய்பாடுகளை இந்தியாவில் மேற்கொண்டுவருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி, மாவீரத் தெய்வங்கள் மேல் செய்யும் சத்தியபிரமானத்தை தமது கட்சி ஆவணத்தில் இணைத்து தம்மை விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக விடுதலைப்புலிகளை தொடரந்து இந்தியாவில் தடை செய்து தமிழீழ போராட்த்தை சிதைப்பதற்கான நடவடிக்கையா என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியாது.

மாவீர்கள் மேல் ஒரு புனிதமான தருணத்தில் செய்யப்படும் சத்தியத்தை தமது அரசியல் கட்சி ஆவணத்தில் இணைத்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமில்லாது இதன் பின்னணியில் இந்தியாவில் காலம்பூராகவும் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான வேலையை நாசுக்காக "நாம் தமிழர்" கட்சி செய்து வருகிறதா என்ற அதிரச்சிகரமான சந்தேகமும் எழுகிறது.

"நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் "தமிழக அரசியல்" பற்றிய கருத்துக்கள் குறித்து எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் அது பரந்துபட்ட பல விருட்சங்களை கொண்ட அரசியல். அதன் ஆழம் எமக்கு தெரியாது. அதனால் "கட்சி ஆவணத்தை" வைத்துக் கொண்டு அதன் அரசியல் போக்கு குறித்து விவாதிக்க கூடிய அரசியல் அறிவு "தமிழீழ மக்களுக்கு" குறைவென்றே சொல்லலாம். அதனால் அதுபற்றி நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை.

"நாம் தமிழர்" கட்சி ஆவணமெங்கும் தமிழீழ போராட்ட ஆதரவுக் கருத்துக்களும் தேசிய தலைவருக்கு கொடுத்திருக்கும் போற்றுதலுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.

ஆனாலும் 107 ம் பக்கத்தில் தேசியத்தலைவருக்கு "பெரும்பாகரன்" என்று "அடைப்புக் குறிக்குள்" விளக்கம் சொல்லப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம். காரணம் தேசிய விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்கள் அப்பெயரினூடே சொல்லப்பட வேண்டும். இந்த ஆவணத்தை வாசித்த தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது எதிர்காலத்தில் "மே..கு வே.பெரும்பாகரன்" என்று எழுதி குழப்பகரமான ஆவணங்களை உருவாக்கி வரலாற்று அழிப்பை மேற்கொள்ள கூடிய அபாயம் இருப்பதாகவே தெரிகிறது.பிரபாகரன் என்பதன் "அர்த்தம் இதுதான்" என்று எழுதுவது வேறு பிரபாகரன் என்ற பெருக்கு "அடைப்புக் குறிக்குள்" இன்னொரு பெயர் எழுதுவதன் அரத்தம் வேறு என்பதை "நாம் தமிழர்" கட்சி ஆவண உருவாக்கலில் ஈடுபட்டவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ போராட்டமும், விடுதலைப்புலிகள் அமைப்பும், தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களின் மானம்,சொத்து,உயிர். அதனால் தான் இத்தனை தியாகங்களை செய்து வருகிறார்கள். தடைசெய்யப்பட்ட தேசங்கள் எங்கும் தமிழீழ வரைபடத்தையும், தமிழீழ தேசிய கொடியையும், தமிழீழ தேசியத் தலைவர் படத்தையும் தம்மோடு அணைத்தபடி போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொலிஸ் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்க கட்டுப்பாடுகளுக்குள்ளும் இதை செய்து வருகிறார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தது போன்றதான கட்சிகளை உருவாக்காமல் அது மக்களின் உணர்வாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிழீழ தேசியம் அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையும் அதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.

இப்படிப்பட்ட தருணத்தில் இந்தியாவிலும் அதை செய்வதற்கான வேலைகளை பல உணர்வாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உறுதிமொழி இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது.

தமிழர்கள் எங்கெங்கு இருந்தாலும் மாவீரத்தெய்வங்களின் மேல் புனிதமான அந்த தருணத்தில் ஒட்டுமொத்த இனமாக உறுதியெடுக்கும் வாசகத்தை அரசியல் நோக்கத்திற்காக பாவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழனத்தின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவது என்பற்கப்பால் இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்து தமிழீழ விடுதலைப்போராட்த்திற்கு தடை ஏற்படுத்துவதுதான் காரணமென்றால் "நாம் தமிழர்" கட்சியிடம் மன்றாடிக் கேட்கிறோம் தயவு செய்து அதை செய்யாதீர்கள்.

================================================================
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல் தமிழ் நாட்டை சேர்ந்த சிலர் "நாம் தமிழர்'" கட்சிக்கு எதிராக பேசி ஈழத்தமிழர் போராட்டத்திற்கு தாங்கள் எப்பொழும் ஆதரவு போன்றதான முகமூடி  அணிந்து கொண்டு கோமாளியாட்டம் போடுகிறார்கள்.
விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை பொறுத்தவரை, "தமிழீழம் தான் எங்கள் இலக்கு விடுதலைப்புலிகள்தான் எங்கள் அமைப்பு" என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினையை பேசி நாற்காலி அரசியல் செய்த,செய்யும் பல தமிழ்நாட்டு வல்லூறுகளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைக்கோ அய்யா போன்றவர்களும் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் எடுத்த எடுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சில காழ்ப்புணர்ச்சிக் காரர்களின் கூச்சல்களுக்கமைவாக நாங்களும் சீமானை எதிர்ப்பது தேவையற்ற செயல் என்பதற்கப்பால் முட்டாள் தனம் என்று கூட சொல்லலாம்.

"நாம் தமிழர்" கட்சி உள்நோக்கோடு செயற்படுகிறாதா?? விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்வதற்கான உத்தியா இது??" என்ற எமது அச்சத்தை நாங்கள் முன் வைக்கலாம். அவர்களது "நியாயமான" பதில்களை பொறுத்து தமிழர்கள் நாங்கள் "சேர்ந்து நடப்பதா" அல்லது "விலகி நடப்பதா" என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

எதை நிராகரிப்பதற்கும் எங்களிடம் தீர்க்கமான காரணங்கள் இருக்க வேண்டும். (விடுதலைப்புலிகள் எழுந்தமானமாகவும், எடுத்த எடுப்பிலும், உறுதியான காரணங்கள் எதுவுமின்றியும்.. எவரையும், எந்த கட்சியையும் நிராகரித்தது கிடையாது. தமிழர்கள் எப்பொழும் தெளிவாக இருக்க வேண்டும்)


ஆதி

24-06-2012

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP