அக்டோபர் மாதமளவில் மகிந்த ராஜபக்ஷ அவுஸ்ரேலியா வரவிருப்பதாக அறியப்படுகிறது. தன் நாட்டு சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கும் ஒரு அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ என்பதற்கப்பால் இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கு எதிராக பாரிய அளவிலான உரிமை மீறல்களையும் பயங்கரவாதங்களையும் மேற் கொண்ட ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் பாரிய படுகொலைகளை செய்து முடித்த மகிந்தராஜபக்ஷ அது குறித்த விசாரணைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. போர்க்குற்ற ஆதாரங்கள் பல வழிகளிலும் வெளிவந்த வண்ணம் இருக்க சனல் 4 இன் போர்க்குற்றம் தொடர்பான ஆவணப்படம் மேலும் சிறிலங்கா அரசின் இனப்படுகொலை குறித்த ஆதாரத்தை வலுவாக்கியுள்ளது. அய்.நாவின் நிபுணர்குழு அறிக்கையின் பிரகாரம் சிறிலங்கா அரசு திட்டமிட்ட வகையில் இனப்படுகொலையை நடாத்தி முடித்திருப்பது புரியும்.
மனித நேயம் மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகளுக்கு சென்று தன்னை ஒரு நிரபராதி என்று வெளி உலகிற்கு காட்டுவதற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ பல வழிகளிலும் முயன்று வருகிறார். இதை தமிழ் மக்கள் சாதகமாக பயன் படுத்தி மனித எனத்திற்கு எதிரான தமிழ் மக்கள் மீது இனப் படுகொலையை நடாத்தி முடித்த நபர்தான் இந்த சிறிலங்கா அரச தலைவர் என்பதை உலகத்திற்கு சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் மீது பாரிய அளவிலான இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிற ராஜபக்ஷ தலமையிலான அரசு இன்று தமிழ் மக்களை ராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்குள் உரிமை மறுப்புகளோடு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
தமிழரர் தாயகப்பகுதியில் அனைத்து சிவில் நிர்வாகங்களும் ராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதோடு தமிழ் மக்கள் மீது பாரிய குற்றச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தாங்கள் நினைத்தபாட்டிற்கு சிவில் நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தி முடக்க கூடிய அளவிற்கு ராணுவத்திற்கும் துணை ராணுவ குழுக்கழுக்கும் அதிகாரங்களை வழங்கியிருக்கிறது மகிந்தராஜபக்ஷ அரசு.
இப்படிப்பட்ட மகிந்தராஜபக்ஷ தான் இந்த மாதம் அவுஸ்ரேலியாவரவிருக்கிறார். கடந்த முறை லண்டன் சென்ற மகிந்தராஜபக்ஷவை தமிழ் மக்கள் சட்டரீதியில் அவரை அச்சுறுத்தி நாட்டைவிட்டு வெளியேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டிய அவுஸ்ரேலிய தமிழர் அமைப்புகள்.
அவுஸ்ரேலியாவரவிருக்கும் மகிந்த ராஜபக்ஷ யார் என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் ஒருமுறை உரத்து சொல்ல கூடிய சந்தர்ப்பமாக இதை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். அவுஸ்ரேலிய சட்டவரையறைக்குள் போர்க்குற்றவாளிமேல், மனித குலத்தின் மீது பாரிய குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மேல் எப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து விரைவாக செயற்பட வேண்டும். மகிந்த அவுஸ்ரேலியா வரவிருக்கும் திகதி நேரம் என்பவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்களை விரைவாக ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த மகிந்த ராஜபக்ஷ தண்டனை பெறும்வரை தமிழ் மக்கள் சும்மா விடப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கெதிராக நடந்த இனப்படுகொலை குறித்து அவுஸ்ரேலிய மக்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பம் இது. மகிந்தராஜபக்ஷ அரசை ஏன் நிராகரிக்கிறோம் என்பதையும் அவுஸ்ரேலிய அரசு இந்த இனப்படுகொலையாளிக்கு தண்டனை ஏன பெற்றுத்தரவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பமாக நாங்கள் இதை பயன்படுத்த வேண்டும். ஒன்றுபட்ட தமிழினமாக போர்க் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரி அவுஸ்ரேலிய அரசிடம் கேட்க வேண்டும்.
தமிழர் அமைப்புகள் சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து அவுஸ்ரேலியாவில் மனிதஉரிமை மீறல் குற்றவாளிக்கு போர்க்குற்றவாளிக்கு எப்படியான சட்ட அழுத்தங்களை கொடுக்க முடியும் என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் நகர்வுகளுக்கேற்றவாறு தமிழ் மக்கள் முற்றுகைகளை செய்ய வேண்டும்.
லண்டனில் இருந்து தமிழின படுகொலையாளி மகிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டது போல் அவுஸ்ரேலியாவிலும் நடக்க வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்கிளினதும் எதிர்பார்ப்பு.
ஆதி
30-09-2011