வடக்கில் முக்கிய நிர்வாக நகரமாக காணப்படும் யாழ்குடாநாட்டை சிங்கள கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. சட்டவிரோதமான அத்துமிறல்கள், வெளிப்படையான இனவாத நடவடிக்கைகள், இராணுவ மற்றும் பொலிஸ் அச்சுறுத்தல்கள், நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் என சிறிலங்கா அரசின் சிங்கள மேலாதிக்க போக்கு விபரிக்க முடியா த அளவு தலைவிரித்தாடுகிறது.
அரச பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி சிங்கள அத்து மீறல்களை கூட கேட்க முடியாத ஒரு கோழைக் கட்சியாக இருந்து கொண்டு அப்பாவி தமிழ் மக்களை மிரட்டி தமது அரசியல்களை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வருடம் ஆரம்பித்து கடந்த இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் பல்வேறு வகையான சிங்கள ஆதிக்க நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. யாழ் மாநாகர சபையின் உப தலைவராக செயற்படும் றீகன் என்பவர் சாவகச்சேரி நீதிமன்றினால் இனங்காணப்பட்ட கொலை சந்தேக நபர். அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிப்பதில் நேரடியாக அரசின் அழுத்தம் பாவிக்கப்பட்டது மட்டுமல்லாது உப தலைவர் பதவியையும் செயற்குழு எடுத்த முடிவுக்கு மாறாக அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. உப தலைவர் பதவியை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கு வழங்க செயற்குழு முடிவெடுத்திருந்தது. அதன் பிரகாரம் நடப்பு 2011 ற்கான உப தலைவர் (மேயர்) பதவி ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தும் செயற்குழு அறிக்கையில் றீகனின் பெயரே வந்துள்ளது. இது சிறிலங்கா அரசின் நேரடி தலையீடு என விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போல்.... யாழ் நகர் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டியது யாழ் மாநகர சபை. கட்டிடம் கட்டுவதற்கான நிலம் மற்றும் சூழலை கருத்தில் கொண்டே அனுமதிகள் வழங்கப்பட்டுகின்றன. ஆனால் புல்லுக்குளம் மூடப்பட்டுள்ள பகுதியில் எந்த பரிசோதனையோ அனுமதியோ இன்றிஅவசர அவசரமாக 5 மாடிக்கட்டிடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பித்துள்ளன. அந்த கட்டடத்தை கட்டும் நிறுவனம் பசீல் ராஜபக்ஷவின் நிறுவனமாம். மாதாந்த கூட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர், எதிர்கட்சிகளால் ஏற்படும் சில விவாதங்களை தடுப்பதற்காக வேலை ஆரம்பித்த பின்னர் அந்த நிறுவனத்தை யாழ் மாநகர சபையில் பதிவு செய்துள்ளது மட்டுமல்லாது அனுமதி பத்திரத்தையும் தயாரித்து எடுத்துள்ளது. அந்த கட்டிடம் கட்டி முடிந்த பின்னர் மக்கள் பாவனைக்கு வரும் பொழுது அது எப்போது இடிந்து விழும் என்று யாராலும் கணிக்க முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இத்தனை நடவடிக்கையும் சிங்கள மேலலாதிக்க போக்கே தவிர வேறொன்றுமாய் இருக்க முடியாது.
இது போக நேற்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஆசிரியர் வளையாட்டுப் போட்டியில் சிங்கள மேலாண்மை ஆதிக்கமும் சிங்கள இனவாதமும் தலைவிரித்தாடியது. தமிழ் நடுவர்களால் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை ஏற்க முடியாது என மறுத்த சிங்களவர்கள் அதை ஆட்சேபித்து அரசியல் தலையீடுகளையும் புகுத்தினர். இதனால் விரக்தியடைந்த பல தமிழ் ஆசிரியர்கள் விளையாட்டு நடுவர் நிலையில் இருந்தும் விளையாடுவதில் இருந்தும் விலகினர். இயக்கம் இல்லாததால தானே இந்த ஆட்டம் ஆடுறீங்கள் என வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர். உச்சக்கட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கெதிரான புள்ளி சேர்ப்பிற்காக இராணுவத்தினரை ஆசிரியர்கள் போல் விளையாட களம் இறக்கினர் சிங்கள மாகாணங்கள். இருந்தும் வடமாகாணங்களை சேர்ந்த வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண ஆசிரியர்கள் இது தமிழ் சிங்கள பிரச்சினை என வெறிகொண்டு விளையாடியது அனைத்துப் போட்டிகளிலும் தெரிந்தது. இறுதியில் வடமாகாணம் பாரிய புள்ளி வித்தியாசத்துடன் வெற்றி பெற்றது பலருக்கு சங்கடத்தையும் உருவாக்கியிருந்தது. போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்களர் ஒருவரை மாத்தறையில் இருந்து தொலைபேசிமூலம் யாழில் விளையாடவைக்க சிங்களனால் முடியுது ஆனால் தமிழ் அரசியல்வாதிகளால் எதுவும் முடியாது என எல்லா தமிழர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். புலிகள் இருந்திருந்தால் இப்படி இவர்களால் செய்யமுடியுமா என்ன என குமுறிக் கொண்டிருந்தனர்.
அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுபோட்டியில் வழங்கப்ட்ட மடல் தனிச் சிங்களத்தில் |
தவிர நேற்று தமிழீழ தாய் பார்வதி அம்மாவினுடைய இறுதிக்கிரிகைகளுக்கு புறப்பட தயாராக இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மறித்த சிறிலங்கா அரசு பலரை துப்பாக்கி முனையில் மிரட்டியுமுள்ளது. ஆண்கள் பெண்கள் என பலரும் இறுதிக் கிரியைக்கு செல்ல தயாராக இருந்த வேளை இந்த சிங்கள இனவாதப்போக்கும் சிறிலங்கா ராணுவத்தின் ஆயுத அச்சுறுத்தலும் புலிகளின் வருகை குறித்த தேவையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக இளைஞர்கள் முதல் வெளி இளைஞர்கள் வரை "இயக்கம் வராட்டிசரிவராது" என்று பேசும் அளவிற்கு தமிழ் பிரதேசங்களில் சிங்கள மேலாதிக்கம் புற்று நோய் போல் வளர்ந்து கொண்டிருக்கிறது.
யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்விகற்கும் மாணவன் ஒருவன் பல கெட்டபழக்கங்கள் கொண்டவனாயும் அடாவடித்தனம் மிக்கவனாகவும் இருப்பததோடு மற்றய மாணவர்களுக்கும் இடையூறு விழைவித்துக் கொண்டிருக்கிறானாம். வெளிநாட்டுப்ப பணம் அவனுக்கு வருவதால் எப்போதும் பெரும் பணத்தொகையை தன்னோட வைத்துன் கொண்டிருக்கும் அந்த சிறுவன் ஆசிரியர்களையே மிரட்டுகிறானாம். அதனால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலையை விட்டு நீக்கியது நிர்வாகம். அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி முக்கியஸ்தருடன் பாடசாலை வந்த சிறுவன் எந்த மறுதலிப்புமின்றி பாடசாலையில் சேர்க்கப்ட்டுள்ளான்.
இயக்கம் இருந்திருந்தா இந்த மாதிரி காவாலிகளையெல்லாம் வடிவா திருத்தி போட்டு அனுப்புவாங்கள் இப்ப என்ன செய்யிறது என்று புலிகள் பற்றிய வெற்றிடத்தை மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த செய்தி சிறிலங்கா அரசின் சிங்கள மேலாதிக்கத்திற்கு தமிழ் மக்களால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு சமிஞ்சையே. புலிகளின் மீள் பிரவேசம் எந்தவழியிலும் வரலாம் என்று தமிழ் மக்கள் சிங்கள அரசிற்கு கூறியுள்ள செய்திதான் இந்த உச்சக் கட்ட பொறுமை.
"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "
தேசியத் தலைவர் வே.பிரபாகரன்
ஆதி
23-02-2011