நான் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளன்.
குறிப்பு : தமிழரசுக் கட்சியோ எந்தவொரு தனிக் கட்சி ஆதரவாளனோ அல்ல. தமிழ்ச் சனத்திற்காக எல்லா தமிழ்க் கட்சிகளும் இணைக்கப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளன்.
செய்தி: "த.தே.கூட்டமைப்பு" பெயரில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அனந்தியை "தமிழரசுக் கட்சி" உறுப்புரிமையில் இருந்து நீக்கியது.
#தனிக் கட்சியாக பதிவு செய்யாத த.தே.கூ உடையும் என்பது எனது எதிர்வு கூறல்.
இன்று தமிழரசுக் கட்சியில் இருப்பவர்களில் சம்மந்தர் தவிர்ந்த எல்லோரும் த.தே.கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாகிய பின்னர் உள்வாங்கப்பட்டவர்களே.
---------------------------------------------------------------------------------------------
-சின்ன வரலாற்றுக் குறிப்பு:
ஆயுதப் போராட்டம் தொடங்கியதற்கும் அது பின்னர் அழிந்ததற்கும் மிக மூல காரணம் தமிழரசுக் கட்சி என்ற மேட்டுக்குடிக் கும்பல்.
எப்போதும் தனது "கொழும்புச் சொத்து" மற்றும் "தன் சார்ந்த" என்று இயங்கும் இந்த கும்பல்கள் தான் தமிழினத்தின் எல்லா இருப்புகளையும் அழித்தன.
1.இராமநாதன் தனது கொழும்பு சொத்தை காப்பதற்காக தமிழனத்தை அடகு வைத்து "தமிழ் பேசும்" இனத்தை பிரித்தான்.
2.அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் பின்னர் த.விடுதலை கூட்டணி பின்னர் தமிழரசுக் கட்சி என அரசியல் கட்சிகள் தோன்றின. மலையக மக்களின் பிராஜா உரிமையை பறித்தார்கள் (தனி மனித அரசியல் செல்வாக்கிற்காக எடுக்கபட்ட பிரஜா உரிமை பறிப்பின் முடிவின் போது, வடகிழக்கு மக்களின் கருத்து கேட்கப்படவில்லை)
3.இந்திய சார்பு தமிழரசுக் கட்சி தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய இளைஞர்களை உசுப்பியது. பண்டாரநாயக்கா காலத்திலிருந்து, சிங்களவாதத்தை போல் தமிழ் தேசிய வாதத்தை ஊட்டியது. இந்தியா தான் எல்லாம் போதனையை ஊட்டியது.
4. இளைஞர்கள் அரசியல் நோக்கி சிந்திக்க தூண்டப்பட்டார்கள்.. அரசியல் வாதிகளின் நோக்கங்களை தெரிந்து இளைஞர்கள் தமக்கான பாதையை தேர்வு செய்தார்கள். இயக்கங்கள் உருவாகின.
5.தன் அரசியல் நோக்கத்திற்காக பிரசாரம் செய்த தமிழரசுக் கட்சி, விழிப்படைந்த இளைஞர்கள் சுயமாக செயற்பட ஆரம்பிப்பதை விரும்பவில்லை. அதனால் இந்தியாவிடம் முறையிடுகிறது. இளைஞர் குழுக்கள் எப்போதும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற உறுதியை இந்தியா வழங்குகிறது.
6. கால ஓட்டம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. ஆயுதப் பயிற்சி எடுத்து அரசியல் பாதையை தெரிவு செய்த இளைஞர் குழு ஒன்று தன்னை முழுமையாக பலப்படுத்தி இந்திய-தமிழரசுக் கட்சி என்ற வளையத்திற்குள் இருந்து வெளியே வருகிறது. அது இந்தியா என்ற வல்லரசை எதிர்க்கவும் தயாராகிறது.
7. தனது அரசியல் இருப்பை உறுதி செய்வதற்காக பேசியவை தனி அரசியலாக உருவெடுக்கும் என்று கற்பனையிலும் நினைத்திராத தமிழரசுக் கட்சி இளைஞர் குழுக்களை அழிக்க என்னவும் செய்ய தயாராகிறது.
8. இந்தியாவுடன் இணைந்து எல்லா குழுக்களுக்குள்ளும் ஊடுருவி அழிக்கிறது.
9. எல்லோர் மீதும் சந்தேகத்துடனும் பாதுகாப்புடனும் இருந்த புலிகள் அணிக்குள் தமிழரசுக் கட்சியும் இந்தியாவும் ஊடுருவ முடியாமல் 30 வருடங்கள் கடக்கின்றன.
10. ரணிலுடனான சமாதான காலம் உருவாகிறது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட புலிகள் ஆவலாக இருக்கிறார்கள்.
11. இந்தியா வெறுப்புக் காட்டினாலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்தியா புலிகளுக்குள் ஊடுருவுகிறது. அரசியல் பக்கத்தில் தமிழசுக் கட்சி ஊடுருவுகிறது.
12. 35 வருடகால பழியை தீர்த்துக் கொள்ளதமிழரசுக் கட்சி முடிவெடுக்கிறது. புலிகளை அழிப்பதற்கான அத்தனை அரசியல் வேலைகளையும் செய்கிறது. சம்மந்தன் வயசாகி அதற்கு பொறுப்பும் எடுக்கிறார்.
13. பேச்சு வார்த்தைகளில் தம்மை உள்வாங்காமையால் ஏமாற்றம் அடைந்த தமிழரசுக் கட்சி இந்தியாவுடன் இணைந்து புலிகளை அழிக்க திட்டம் போடுகிறது.
14. இதனை புரிந்து கொண்ட புலிகள் ஆயுதப் பயிற்சியில் இருந்த மற்றைய குழுக்களையும் தமிழரசுக் கட்சியோடு இணைத்து அரசியல் ரீதியாக தமிழீழத்திற்கு இருந்த அச்சத்திற்கு "சிறிய" தடுபரணை உருவாக்குகிறார்கள்.
15. இருந்தாலும் தமிழரசுக் கட்சி, தன் கட்டுப்பாட்டில் இருக்க முடியாத புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கதிர்காமருடன் இணைந்து எல்லா இடங்களிலும் புலிகளை அழிக்க தடை செய்ய கோருகிறது.
16. உச்சக் கட்டமாக போர் காலத்தில் "இன அழிப்பு" பருவாயில்லை புலிகளை எப்படியாவது அழித்து விடுங்கள் என்ற உடன் படிக்கைக்கு சம்மந்தர் உப்புதல் அளிக்கிறார்.
17. புலிகள் நிர்வாக கட்டமைப்பில் இருந்து மௌனித்த பின்னர் இன்று புலிகளால் உருவாக்கபட்ட த.தே.கூட்டமைப்பு செயல்படுகிறது.
18. தமிழரசுக் கட்சி சுயமாக இயங்கினால் மக்களால் புறக்கணிக்கபடும் என்று தெரிந்த சம்மந்தர் தலமையிலான தமிழரசுக் கட்சி தன்னைப் பலப்படுத்துவதற்காக த.தே.கூட்மைப்பை தனிக் கட்சியாக பதியாமல் இழுத்தடிக்கிறது.
19. தனது அரசியல் தாண்டி இனம் என்று எவர் செயற்பட்டாலும் தமிழரசுக் கட்சி தடை செய்யும்.
ஆதி
18-01-2015