டெயினர்களில் "ஹெரோயின்" போதைப்பொருளை பாகிஸ்தானில் இருந்து சிறிலங்காவிற்கு கொழும்புத் துறைமுகத்தால் கொண்டு வந்தவர்களே சுதந்திரமாக திரிய கஞ்சா கடத்தியதாக "சந்தேகத்தின்" பெயரில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை அழித்திருக்கிறது சிறிலங்கா நீதி.
சிறிலங்காவைப் பொறுத்தவரை நீதிமன்று என்பது அரசாங்க புறோக்கர் நிலையமாகவே பல சந்தர்பங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீதான மரண தண்டனையின் பின்னணியில் பெரும் அரசியல் திட்டம் இருக்கலாம் என்பது எனது கணிப்பு. காரணம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் தமிழகத்தவர்கள். இந்த மரண தண்டனையை எதிர்ந்து தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரியாத ஒன்றல்ல. இருந்தும் "சந்தேகத்தின்" பெயரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்திருப்பதன் அரசியல் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதை பாருங்கள்.
1. முக்கியமாக காரணம் வரப்போகும் ஆண்டில் நடக்கப் போகும் அரச அதிபர் தேர்தலில் ராஜபக்சக்களின் செல்வாக்கிற்கு இந்தியா செய்ய வேண்டிய உதவிகள்
2. பாகிஸ்தான் உளவாளி "என்று றோவால் சொல்லப்படும்" இலங்கைத்தமிழரான அருணை சிறிலங்க அரசு தம்மிடம் விசாரணைக்கு தரும்படி கேட்டும் இந்தியா கொடுக்காமை (ஏன் குடுக்கல!!!!!)
இப்படி இன்னும் சில அரசியல் செல்வாக்கு காரணங்கள் இருக்கலாம்.
இந்த காரணங்களுக்கும் தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம்.
பாகிஸ்தானியர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு போதைவஸ்து கடத்துவதாக இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் இதுவரை இந்தியாவால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இந்தியாவில் இருந்துதான் சிறிலங்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அதை தமிழக மீனவர்கள்தான் செய்கிறார்கள் போலவும் சிறிலங்கா நீதிமன்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பானது இராஜதந்திர மட்டத்தில் இரு அரசுகளுக்கிடையில் நடக்கும் பனிப்போராகும்.
தவிர தமிழகத்தில் கைது செய்யப்பட்ட அருண் உண்மையில் யார்!!
சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூரகத்தை உளவு பார்க்க றோவால் செட்டப் செய்யப்பட்ட ஏஜன்டா??
இல்லை உண்மையில் பாகிஸ்தான் உளவாளியா??
இல்லை சிறிலங்கா உளவாளியா!!
அல்லது சிறிலங்காவின் செயற்பாடுகளை உளவு பார்க்க றோவால் ஒழுங்கு செய்யப்பட்ட செட்டப்பா!!! ஏன் இந்தியா அருணை சிறிலங்கா அதிகாரிகள் விசாரிக்க மறுக்கிறது. இந்திய புலனாய்வுத்துறையால் செய்யப்பட்ட செட்டப்பாக இருந்தால் அதன் தாக்கமும் ராஜதந்திர ரீதியில் மீனவர் மரணதண்டனை விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்றே தோணுகிறது.
சிறிலங்காவில் மரண தண்டனை நடைமுறையில் இல்லாவிட்டாலும் எதிரியின் காலில் விழுந்தாவது அப்பாவிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும்.
இந்தியாவின் மற்றைய மாநில பிரஜைகளை இச்திய அரசு கையாழும் விதமும் தமிழகத்தவர்களை கையாழும் விதமும் வெவ்வேறானவை. காரணம் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எல்லோருமே ஊளல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்கள்.
7 கோடி தமிழக தமிழனுக்கு எதிரியோடு மோதக்கூடிய தலைவன்/தலைவி இல்லை. சினிமாவில் வில்லன்களை பறந்து பறந்து அடிக்கும் ஹீரோக்கள்தான் தமிழகத்திற்கு பொருத்தமான தலைவர்கள் என தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.
#மீனவர்களை மீட்போம்
ஆதி
01-11-2014