இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் தமிழ் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை த.தே.கூ ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம்.
யாரும் எமக்கு பிச்சை போடத்தேவையில்லை.. உலக அரங்கில் எல்லோருக்குமான நீதியை எமக்கு தந்தால் போதும். சிங்களனுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டம் போதிக்கும் இந்திய வல்லூறுகளுக்கு கூட்டமைப்பு இனியும் தீனிபோட்டால் சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பை தமிழ் மக்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் தீவிர வேலைகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டிவரும்.
அய்.நா மன்றம் பக்கச்சார்பாக செயற்றபடுகிறது என்பதையும்... அய்.நா மன்றத்தின் சட்டதிட்டத்திற்கமைய தமிழ் மக்களின் இறையாண்மை நிலத்தை பிரித்து தர வேண்டும் என்பதை த.தே.கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். மாறாக தேசிய அரசியல் என்றும் சந்தர்ப்பவாத அரசியல் பற்றியோ அடிபணிவு அரசியலையோ தமிழ் மக்கள் மேல் திணிக்கும் வேலையை சம்மந்தன் அவர்கள் செய்ய கூடாது.
அமெரிக்க கோபுர தகர்ப்பிற்கு பின்னரான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இறையாண்மையை கருத்தில் கொண்டு மக்களின் விடுதலை விருப்பை ஏற்று நாடுகள் உருவாகியிருக்கின்றன. தவிர இன்று அரசியல் சமநிலை மற்றும் மக்களின் கொந்தளிப்பு நிலை உலகில் பெரும் மாற்றத்தை கண்டிருக்கிறது.
தமிழ்மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு சொல்வதும் அதன்பால் அரசியலை செய்வதும் தான் கூட்டமைப்பினது கடமை. தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச சட்டத்தின் ஊடாக எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பதில்தான் கூட்டமைப்பு முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டுமே தவிர இந்திய ஊழல் வல்லூறுகளின் நலனிற்கேற்ப தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிக்க கூட்டமைப்பு மக்கள் அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் சம்மந்தன் அய்யா அவர்களே!!.
அடிபணிவு அரசியலையும் பிராந்திய வல்லாதிக்கங்களின் திணிப்பு அரசியலையும் த.தே.கூட்டமைப்பு செய்யுமானால் தமிழ் மக்கள் தமக்கு தேவையானதை வேறுவழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை கடந்தகால வரலாறுகளை வைத்து கூட்டமைப்பு அறிந்து கொள்ள வேண்டும்.
சாத்தியப்படாத ஒன்றையோ, உலக நீதியில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றையோ தமிழீழ மக்கள் கேட்கவில்லை என்பதை த.தே.கூட்டமைப்பு தெளிவுபடுத்தி தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு.
இநத்தியா என்பது சாக்கடை. தமது சொந்த மக்கள் மீது அக்கறையற்று மக்களின் பணங்களை சுரண்டி அதை வெளிநாடுகளில் வைப்பில் இட்டிருப்பவர்களும்... ஊழல் செய்து பெருத்துப் போய் இருப்பவர்களும்தான் இந்திய அரசியல். இந்த வல்லூறுகளுக்கு தமிழீழ மக்களுக்கு எது வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை கிடையாது. அது தேவையும் இல்லை.
சட்டத்தின்பால் பிரிந்து சென்று தனி அரசு அமைக்கும் உரிமை நூற்றாண்டு வரலாறுகளை கொண்ட தமிழீழ மக்களுக்கு இருக்கிறது.
இதன் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு சர்வதேச அரசியல் செய்ய வேண்டும். மாறாக மகிந்தருடன் தேசிய அரசியல் அமைப்பது.. இந்தியா சொல்லுது என்பதற்காக ஊப்புச் சப்பற்ற அதிகாரங்களுக்காக கதிரைகளை பெறுவது.. போன்ற சிந்தனைகளை தவிர்த்து கொள்ளுதல் தமிழ் மக்களின் அரசியலுக்கு ஆரோக்கிறமாக இருக்கும்.
ஆதி
23-9-12