Powered by Blogger.

Saturday, September 22, 2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஞாபகப்படுத்துகிறோம்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் தமிழ் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை த.தே.கூ ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம்.

யாரும் எமக்கு பிச்சை போடத்தேவையில்லை..  உலக அரங்கில் எல்லோருக்குமான நீதியை எமக்கு தந்தால் போதும். சிங்களனுக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு ஒரு சட்டம் போதிக்கும் இந்திய வல்லூறுகளுக்கு கூட்டமைப்பு இனியும் தீனிபோட்டால் சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பை தமிழ் மக்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் தீவிர வேலைகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டிவரும்.

அய்.நா மன்றம் பக்கச்சார்பாக செயற்றபடுகிறது என்பதையும்... அய்.நா மன்றத்தின் சட்டதிட்டத்திற்கமைய தமிழ் மக்களின் இறையாண்மை நிலத்தை பிரித்து தர வேண்டும் என்பதை த.தே.கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். மாறாக தேசிய அரசியல் என்றும் சந்தர்ப்பவாத அரசியல் பற்றியோ அடிபணிவு அரசியலையோ தமிழ் மக்கள் மேல் திணிக்கும் வேலையை சம்மந்தன் அவர்கள் செய்ய கூடாது.

அமெரிக்க கோபுர தகர்ப்பிற்கு பின்னரான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இறையாண்மையை கருத்தில் கொண்டு மக்களின் விடுதலை விருப்பை ஏற்று நாடுகள் உருவாகியிருக்கின்றன. தவிர இன்று அரசியல் சமநிலை மற்றும் மக்களின் கொந்தளிப்பு நிலை உலகில் பெரும் மாற்றத்தை கண்டிருக்கிறது.

தமிழ்மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு சொல்வதும் அதன்பால் அரசியலை செய்வதும் தான் கூட்டமைப்பினது கடமை. தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேச சட்டத்தின் ஊடாக எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பதில்தான் கூட்டமைப்பு முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டுமே தவிர இந்திய ஊழல் வல்லூறுகளின் நலனிற்கேற்ப தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிக்க  கூட்டமைப்பு மக்கள் அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும் சம்மந்தன் அய்யா அவர்களே!!.

அடிபணிவு அரசியலையும் பிராந்திய வல்லாதிக்கங்களின் திணிப்பு அரசியலையும் த.தே.கூட்டமைப்பு செய்யுமானால் தமிழ் மக்கள் தமக்கு தேவையானதை வேறுவழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை கடந்தகால வரலாறுகளை வைத்து கூட்டமைப்பு அறிந்து கொள்ள வேண்டும்.


சாத்தியப்படாத ஒன்றையோ, உலக நீதியில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றையோ தமிழீழ மக்கள் கேட்கவில்லை என்பதை த.தே.கூட்டமைப்பு தெளிவுபடுத்தி தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு.
இநத்தியா என்பது சாக்கடை. தமது சொந்த மக்கள் மீது அக்கறையற்று மக்களின் பணங்களை சுரண்டி அதை வெளிநாடுகளில் வைப்பில் இட்டிருப்பவர்களும்... ஊழல் செய்து பெருத்துப் போய் இருப்பவர்களும்தான் இந்திய அரசியல். இந்த வல்லூறுகளுக்கு தமிழீழ மக்களுக்கு எது வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை கிடையாது. அது தேவையும் இல்லை.

சட்டத்தின்பால் பிரிந்து சென்று தனி அரசு அமைக்கும் உரிமை நூற்றாண்டு வரலாறுகளை கொண்ட தமிழீழ மக்களுக்கு இருக்கிறது.
இதன் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு சர்வதேச அரசியல் செய்ய வேண்டும். மாறாக மகிந்தருடன் தேசிய அரசியல் அமைப்பது.. இந்தியா சொல்லுது என்பதற்காக ஊப்புச் சப்பற்ற அதிகாரங்களுக்காக கதிரைகளை பெறுவது..  போன்ற சிந்தனைகளை தவிர்த்து கொள்ளுதல் தமிழ் மக்களின் அரசியலுக்கு ஆரோக்கிறமாக இருக்கும்.


ஆதி
23-9-12

தியாக தீபம் அண்ணன் லெப்.கேணல் திலீபன் # மீண்டும் மீண்டும் கற்பிக்கும் பாடங்கள்.


25 வருடங்களுக்கு முன், தமிழீழ போராட்டம் ஆயதப் போராட்டமாக முழு மூச்சாக தீவிரப்படுத்துவதற்கு முன்னர்  அகிம்சை தேசம் என்று எழுத்துவடிவில் இருக்கும் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக, தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ மக்களின் விடுதலைக்காக மிகப்பெரிய அகிம்சைப் போராட்டத்தை தமிழ் மக்கள் முன்னிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் நடாத்தியிருந்தனர்.

ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் தமிழீழ மக்களின் விடுதலைக்காக வீதியில் தவம் கிடந்தான் அண்ணன் திலீபன். குழந்தைகள் முதல் முதியவர் வரை அவனது இந்த உச்ச கட்ட போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தியிலும் தனது இலட்சியத்தில் இருந்து இம்மியளவும் விலகாது தமிழீழ மக்களின் கண்முன்னாலேயே தனது உயிரை சொட்டு சொட்டாக மாய்த்துக் கொண்டான்.

சாத்வீக போராட்டங்களால் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் போராடி தோற்றுப்போன தமிழீழ மக்களுக்கு ஆயுதப்போராட்டத்தைத் தவிர வேறெந்த தெரிவும் இருந்திருக்கவில்லை. எல்லைகளை மீட்க இளைஞர் யுவதிகள் ஆயுதங்களுடன் களத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை காலம் தமிழர்களுக்கு வழங்கியிருந்தது.

விரும்பியோ விரும்பாமலோ ஆயுதங்களை ஏந்தி தமிழின விடுதலைக்காக போராடிய அமைப்புகள் நாளடைவில் தமது சொந்த நலனை பாதுகாப்பதற்கே அந்த ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த நேரத்தில்தான் தமிழீழ மக்களின் தெரிவு "தமிழீழ விடுதலைப் புலிகள்" ஆக தோற்றம் பெறுகிறது. ஆரம்ப காலங்களில் உருவான அனைத்து இயக்கங்களையும் புறந்தள்ளிவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை பொத்தி பொத்தி பாதுகாக்க ஆரம்பித்தனர் தமிழீழ மக்கள். அதற்கான காரணங்கள் இவை தான்.

மற்றைய இயக்க தலைவர்களை தமது கட்டுப்பாட்டில் பொம்மையாக மாற்றி வைத்திருந்த இந்திய வல்லாதிக்கத்திற்கு தமிழீழ தேசிய தலைவர் மே.த.கு வே.பிரபாகரன் அவர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. அவரது இலக்கும் பயணமும் முழு வீச்சுடன் தமிழீழம் நோக்கியதாகவே இருந்தது. இதனால் எப்படியாவது விடுதலைப்புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்திய காட்டுமிராண்டி இராணுவத்தை தமிழீழத்திற்குள் நுழைத்திருந்தார் ராஜீவ்காந்தி.

தமிழீழ மக்களுக்கு ஆரம்ப காலங்களில் இந்தியா மீது நம்பிக்கையும் மதிப்பும் அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் நம்பிக்கையுடன் விளையாடக் கூடாது என்பதற்காக மக்கள் முன்னிலையிலேயே தமது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தனர் புலிகள். இந்திய காட்டுிராண்டி இராணுவத்தின் நோக்கத்தை விடுதலைப்புலிகள் அனுமானித்திருந்தாலும் மக்களின் நம்பிக்கைகாக தமது ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். ஆனால் சிறுது காலத்திலேயே ராஜீவ்காந்தியின் உத்தரவுக்கமைய இந்திய காட்டுமிராண்டி இராணுவம் தனது வேலை தொடங்கியது.

அமெரிக்க ராணுவம் "பிலிப்பைன்ஸ்" நாட்டை  எப்படி, ஏன் சீரழித்ததோ அதே நோக்கத்திலேய (பிறிதொரு பதிவில் இதுபற்றி ஒப்பிடுவோம்) இந்திய ராணுவம் தமிழீழ மக்கள் நிலத்தில் இறக்கபட்டிருந்த உண்மை அனைவருக்கும் புரிந்தது. இதனால் தமிழீழ மக்களுக்கு "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற தமது அமைப்பு ஆயுதம் ஏந்தியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.  ஆனாலும் விடுதலைப்புலிகள் அனை நிதானமாகவே கையாண்டிருந்தனர்.

இந்தியா பிரித்தானிய அரசிற்கெதிராக தான் எப்படி விடுதலை அடைந்ததாக சொல்கிறோ அதே வழியில் இந்திய வல்லாதிக்கத்திடம் இருந்து விடுதலைபெற புலிகள் தீர்மானிக்கின்றனர். ஆனால் அண்ணன் திலீபன் தியாக அகிம்சைப் போராட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிடும் முடிவை எடுக்கிறான்.

உலக வரலாற்றில்  இன விடுதலைக்காக நீராகாரம் எதுவுமின்றி அகிம்சைப் போராட்டம் நடாத்திய மக்கள் தமிழீழ மக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அகிம்சையால் விடுதலையடைந்ததாக பீற்றிக் கொள்ளும் இந்திய வல்லாதிக்கம் நீராகாரம் இன்றி அகிம்சைப்போராட்டம் நடாத்தி அணுவணுவாக உயிரை மாய்த்துக் கொண்ட தமிழீழ மக்களின் தியாக தீபம் அண்ணன் திலீபனின் குரலை செவிமடுக்கவில்லை. மாறாக தான் தமிழீழத்திற்குள் நுழைந்த நோக்கத்தை செயற்படுத்துவதிலேயே குறியாக இருந்தது.

இந்த நிலையில்தான் தமிழீழ மக்கள் இந்திய வல்லாதிக்கப்படையை சிதைத்தழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றர். சாத்தவீக போராட்டம், அகிம்சைப் போராட்டம் தோற்றுப்போன நிலையில் தமிழீழ மக்கள் ஆயுதப் போராட்டத்தை முழு மூச்சாக செயற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு காலம் தள்ளுகிறது.

தமிழீழ மக்களின் இன இருப்பையும் கலாச்சார விழுமியங்களையும் சிதைத்து ஒரு இனக் கலப்பையும் இன அழிப்பையும் உருவாக்க வந்த இந்திய பிசாசுகள் மீது முழுவீச்சான போராட்த்தை ஆயுதப்போராட்டமாக மாற்றியிருந்தனர் தமிழீழ மக்கள்.

தமிழீழ மண்ணில் கோரதாண்டவம் ஆடிய இந்திய பிசாசுகளை வேட்டையாடியதோடு இல்லாமல் அதை எய்தவனையும் பலி எடுத்தனர் தமிழீழ மக்கள்.

காந்தியம் என்பது ஒரு போலி என்பதையும் அகிம்சைவழி போராட்டங்கள் இந்திய வல்லாதிக்கத்துக்கு ஒரு பொருட்டல்ல என்பதையும் தமிழீழ மக்கள் 25 வருடங்களுக்கு முன்னரே உலகத்திற்கு தெரியப்படுத்தினர்.

இந்திய விசுவாசிகளே!!!!

இந்தியா என்பது அகிம்சையால் விடுதலைபெற்றது என்றால் திலீபனை என் இந்தியா சாகடித்தது?? இந்திய அரசிற்கெதிராய் அண்ணன் திலீபன் செய்த வன்முறையென்ன??
சுபாஸ்சந்திரபோஸ் ஆயுதத்தோடு போராடியும் காந்தியின் போராட்டத்திற்கு பிரித்தானியா மதிப்பளித்து வெளியேறிது என்று நம்பும் நீங்கள் 25 வருடத்திற்கு முன்பு இந்தியாவிற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடாத்திய திலீபனை இந்தியா சாகடித்ததை எப்படி கருதுகிறீர்கள்!!!

தமிழ்நாட்டில் இன்னமும் வெறித்தனமாக இந்தியத்தை நம்பும் சகோதர்களே!!!

25 வருடத்திற்கு முன்பு இந்திய அரசிற்கு எதிராக எந்த வன்முறையிலும் இறங்கியிருக்காத மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஒரு போராளியின் அகிம்சைப் போராட்டத்தை அணுவணுவாக ரசித்து சாகடித்தது காந்தியின் இந்திய தேசம் என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.

மக்களின் விடுதலை என்ற பெயரில் இறங்கி தமிழீழ மக்கள் மீது பாலியல் தாக்குதல்கள், கடத்தி கொலை செய்தல், வீதிகளில் சுட்டுக் கொல்லுதல், என பெரும் இன அழிப்பிற்காக கோரதாண்டவம் ஆடிய இந்திய வல்லாதிக்க பிசாசுகள் தான் உங்கள் ராணுவம் என்பதை ஞாகம் வைத்திருங்கள்.

ராஜீவ்காந்தி அன்றே பலியெடுக்கபடாமல் இருந்திருந்தால் 18 வருடங்கள் கழித்து தமிழீழ மக்களில் யாராவது ராஜீவ்காந்தியை பலி எடுத்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. ராஜீவ்காந்தி உலகில் இருந்து அகற்றப்பட வேண்டிய அசுரன்.

இந்தியா என்ற அராஜக நாடு மக்களின் அகிம்சைப் போராட்டங்களுக்கு எதிரான ஒன்று என்பதை 25 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ மக்கள் உலகிற்கு நிரூபித்து காட்டியிருந்தார்கள். ஆனாலும் அப்பாவி ஹிந்திய கோசக்காரர்கள் அதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை இருந்தாலும் 25 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் மக்களின் அகிம்சை போராட்டத்தை திலீபனின் இதே நாட்களில் அராஜக கரம் கொண்டு நசுக்கியிருக்கிறது இந்திய வல்லாதிக்கம்.

கூடம்குள அணு உலைக்கு எதிரான மக்களின் அகிம்சைப் போராட்டத்தின் மீது அதிகாரவெறித் தாக்குதல்களை நடாத்தி மக்களின் கோரிக்கைகளை சிறைவைத்துவிட்டு தனது வழமையான அராஜக பணிகளை இந்திய வல்லாதிக்க அரசு நிழ்த்திவருகிறது. அதே இந்திய காட்டுமிராண்டி அரசியல்வாதிகளும் இராணுவமும் காவல் துறையும் மக்களின் அகிம்சை போராட்டத்தை கேலி செய்வதோடு காறி உமிழ்ந்திருக்கிறார்கள். இந்த அவமானத்தை தமிழக மக்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது எதிர்வரும் காலத்திற்கு தான் தெரியும்.

எது எப்படி இருப்பினும்,
காந்தியம் என்ற போலி அகிம்சை முகமூடி தரிந்த ,இந்தியம் என்ற மனித குலத்திற்கு எதிரான தேசத்தின் உண்மை முகம் பற்பல சந்தர்ப்பங்களில் வெளிப்படிருந்தாலும் இதே நாட்களில் 25 வருடங்கள் கழித்து தமிழ்மக்களின் அகிம்சைப்போராட்டம் ஒன்று இந்திய அராஜக சக்திகளால் நசுக்கப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பதிவாகிறது.. காரணம் தமிழகத்தில் இன்னமும் போலிகளை நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகம் என்பதே தான்.
போலி ஹிந்தியத்தை உடைத்தெறிந்து தன்னலமிக்க இனமாக தமிழக மக்கள் திரள வேண்டும்.

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டம் தொடரும்... சாத்வீக போராட்டம் தோற்கடிப்பட்ட பின் அகிம்சை போராட்டமாக மாற்றம் எடுத்தது... அகிம்சைப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் ஆயுதப் போராட்டமாக பரினாமம் அடைந்தது... ஆயுதப்போராட்டத்தை சூழ்ச்சிகளால் அழித்திருந்தாலும் ஆயுதப்போராட்டம் அதிபயங்கர ஆயுதப்போராட்டமாகவோ... அதிபயங்கர தமிழீழ விடுதலைப்போராட்டமாகவோ மாற்றமெறடுக்கும்... இதை காலம் உருவாக்கும் என்பதே புரட்சிகளின் வரலாறு.

அண்ணன் திலீபன் மேல் சத்தியம் செய்வோம்.. "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

ஆதி
22-09-12

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP